கேள்வி பதில்

முஹம்மத் அவர்களின் கேள்விக்கு பதில் 2009/8/21

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் ஏர்வாடி சிராஜுதீன் அவர்களே,

ரமழான் மாதத்திற்க்கான conjunction(நேர்கோடு) நடந்த இடம் ஆப்பிரிக்காவின் பகுதியில் சுமார் 1002HRS(UT) நடந்தது.இப்பொழுது என்னுடைய கேள்வி என்னவென்றால்,

Conjunction (நேர்கோடு) அகும் வரை,அதற்க்கு மேற்க்கே உள்ள உள்ள பகுதிகள் ஷாபான் மாதத்தில் தானே இருக்கும்.அப்படியானால் முதலில் நாம் எப்படி எவ்வாறு ரமழானை முதலில் தொடங்க முடியும் .நேர்கோடு வந்த் இடத்திற்கு அப்புறம் உள்ள பகுதிகள் தானே முதலில் தொடங்க வேண்டும்.இது சரியா?

அன்புடன்.

முஹம்மத்.

அஸ்ஸலாமு அலைக்கும்

அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும் பெருமையும், அவனுடைய தூதர் மீது அல்லாஹ்வின் அருளையும் பிரார்த்தித்து என்னுடைய எழுத்தை துவக்குகின்றேன்.

சகோதரர் முகமது சஃபீக் அவர்களுக்கு

தங்கள் சிறப்பான ஒரு கேள்வியை கேட்டள்ளீர்கள். இதன் மூலம் தாங்கள் இஸ்லாம் கூறும் சந்திர நாட்காட்டி முறையை புரிந்து கொண்ட ஒரு சகோதரர் என நினைக்கிறேன்.

நேர்கோட்டில் சூரியன் சந்திரன் பூமி வந்ததன் பிறகு சந்திரன் புதிய சுற்றை துவங்குகிறது.

திருக்குர்ஆனில் கூறுவது போல் “55:17 இரு கிழக்கு திசைக்கும் இறைவன் அவனே இரு மேற்கு திசைக்கும் இறைவன் அவனே.

இந்த வசனத்திலிருந்து இரண்டு கிழக்கு திசைகள் இரண்டு மேற்கு திசைகள் உள்ள ஒரு பகுதி உலகில் உள்ளது எனபதும் அல்லாஹ் கூறுவதை நினைவில் வைக்கவும்.

தற்போது நான் உங்களுடைய கேள்விக்கு வருகிறேன்.

//Conjunction (நேர்கோடு) அகும் வரை,அதற்க்கு மேற்க்கே உள்ள உள்ள பகுதிகள் ஷாபான் மாதத்தில் தானே இருக்கும்.அப்படியானால் முதலில் நாம் எப்படி எவ்வாறு ரமழானை முதலில் தொடங்க முடியும்//

சந்திரன் தன்னுடைய மன்ஸில்கள் மூலம் ஒரு தேதியை அறிவிக்கும் போது இரண்டு திகதிகள் இரண்டு கிழமைகள் இருக்கும் என்பது தான் உண்மையான விஷயம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை பார்வையிடவும். அதாவது டோங்காவில் சந்திரன் நேர்கோட்டிற்கு வந்து புதிய சுற்றை ஆரம்பிக்கும் சமயத்தில் அங்கு வியாழன் இரவு 11.00 மணி ஷஃபான் மாதத்தின் 29வது நாள்,

அடுத்து சமோவாவில் சந்திரன் நேர்கோட்டிற்கு வந்து புதிய சுற்றை ஆரம்பிக்கும் அதே சமயத்தில் அங்கு புதன் இரவு 11.00 மணி

ஷஃபான் மாதத்தின் 28வது நாள், அடுத்து சென்னையில் வியாழன் மாலை 3.30 மணி ஷஃபான் மாதத்தின் 29 வது நாள்.

பிறை பிறந்தநாள் வியாழன் 1430 ஷஃபான் மாதம் 29 வது நாள் உலக நேரம் காலை 10.00 மணி

இத்துடன் இணைத்துள்ள இணைப்பிலும் இந்த விபரம் அடங்கியுள்ளது.

Location Local time Time zone

Nukualofa (Tonga) Thursday, August 20, 2009 at 23:00:00 UTC+13 hours SHABAAN 29

Apia (Samoa) Wednesday, August 19, 2009 at 23:00:00 UTC-11 hours SHABAAN 28

Chennai (India – Tamil Nadu) Thursday, August 20, 2009 at 15:30:00 UTC+5:30 hours SHABAAN 29

Corresponding UTC (GMT) Thursday, August 20, 2009 at 10:00:00

சந்திரனின் நேர்கோடு 1430 ஷஃபான் 29

மேலும் திருக்குர்ஆனின் 2:189 வசனத்தில் அல்லாஹ் ஒரு விஷயத்தை விவரிக்கிறான்.

2:189 (நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள் நீர் கூறும்: ‘அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை. ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர்¢ எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

நீங்கள் இந்த வசனத்தை நன்கு ஆராய கடமைப்பட்டுள்ளீர்கள். கேள்வி? //அல்லாஹ்வின் தூதரிடம் மக்கள் நபியே பிறைகள் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள்.//

அல்லாஹ்வின் பதில்கள்: 1 // பிறைகள் மக்களுக்கு தேதியை அறிவிப்பவை.//

2.// ஹஜ்ஜிற்கான தேதியை அறிவிப்பவை.//

3.// பிறை தேதியை அறிவிக்கும் போது அதை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும்?//

மூன்றாவது பதிலை நாம் சிந்திக்க முடியாதவாறு இதில் நபி(ஸல்) காலத்தில் நடந்த ஒரு நிகழ்வுகளை அடைப்பு குறியிட்டு எழுதிவைத்ததால் நம்மில் அதிகமானோர் இது ஹஜ் சம்மந்தப்பட்ட வசனம் என அதை ஆய்வு செய்யாமல் உள்ளனர்.

//வீட்டிற்கு முறையான வாசல் வழியாக நுழையுங்கள். பின்புறமாக வந்து நுழையாதீர்கள்// என அல்லாஹ் கூறுகின்றான்.

இங்கு உள்ள “வீடுகளுக்குள்” என்ற மொழிபெயர்பை இப்படி வாசித்து பாருங்கள்

//வசிக்கும்பகுதிகளுக்குள் (பிறை தேதியை அறிவிக்கும் சமயத்ததில்) நீங்கள் முன்வாசல் வழியாக நுழையுங்கள். பின்புறமாக நுழையாதீர்கள் அதில் உங்களுக்கு எந்த புண்ணியமும் இல்லை//

நாம் வசிக்கும் பகுதிகளில் மேற்புறம் எது? வாசல் எது? என்பதை நாம் தற்போது தீர்மானித்தால் உங்கள் கேள்விக்கு விடை கிடைதத்துவிடும்.

பூமியின் சுற்று கிழக்கு நோக்கி இருப்பதால் தான் நமக்கு எல்லா சூரியன் சந்திரன் போன்றவைகள் கிழக்கில் உதிப்பது போல் தோற்றமளிக்கிறது. எனவே கிழக்கு பகுதியில் உளளவர்கள் முன்வாசலில் உள்ளவர்கள். மேற்புறம் என அல்லாஹ் கூறும் பின்வாசலில் நுழைபவர்கள் மேற்கு பகுதியில் உள்ளவர்கள்.

தற்போது உங்கள் கேள்விக்குள் நுழைவோம்.

சந்திரன் நேர்கோட்டில் இருக்கும் போது வியாழக்கிழமையில் உள்ளவர்கள் ஷஃபான் 29 லும், புதன்கிழமையில் உள்ளவர்கள் ஷஃபான் 28 லும் இருந்தார்கள். தற்போது யார் முதலில் வாசலில் நுழைவார்கள் என்பதை நீங்கள் சிந்திக்கவும். வியாழக்கிழமையை முடித்து வெள்ளிக்கிழமையில் யாரெல்லாம் நுழைகிறார்களோ அவர்கள் அனைவரும் 1430 ரமளானின் முதல் நோன்பை ஆரம்பிக்க வேண்டும். பின்வாசலில் ஷஃபான் 28 ல் புதன்கிழமையில் இருந்தவர்கள் வியாழக்கிழமைக்குள் நுழைந்து ஷஃபான் 29 ஆம் நாளை பூர்த்தி செய்து விட்டு வெள்ளிக்கிழமை 1430 ஆம் வருடத்தின் ரமளானின் முதல் நோன்பை துவக்குவார்கள். பின்வாசலில் உள்ளவர்கள் நோன்பை துவக்கும் போது முன்வாசலில் ஏற்கனவே வெள்ளிக்கிழமை நோன்பை ஆரம்பித்தவர்கள் சனிக்கிழமை ரமளான் மாதத்தின் இரண்டுவது நோன்பில் இருக்க வேண்டும்.

இதில் மக்கள் ஏதேனும் தவறு செய்து சனிக்கிழமை நோன்பை ஆரம்பித்திருந்தால், அவர்களுக்கு ரமளான் மாதம் 28 நோன்புகளே கிடைக்கும். அவர்கள் ஷவ்வால் மாதத்தின் நோன்பு வைக்க தடைசெய்யப்பட்ட முதல் நாள் பெருநாளை கொண்டாடிய பிறகு ஒரு நோன்பை பிடித்து ரமளானின் விட்ட நோன்பை பூர்த்தி செய்ய கடமைப்பட்டுள்ளார்கள்.

என்னுடைய பதில் உங்களுக்கு தெளிவை ஏற்படுத்தவில்லை என்றால் மீண்டும் கேட்க்கவும். சத்தியத்தை மக்களுக்கு புரியும் படி எடுத்து சொல்லவும், அதை புரிந்தவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை மேன்மையடைச் செய்யவும், மேலும் எனக்கும் உங்களுக்கும் கல்வி ஞானத்தை அல்லாஹ் அதிகப்பத்தவும், பிரார்த்திக்கும் உங்கள் அன்புச் சகோதரன்

சிராஜ்

ஏர்வாடி

வ அலைக்கும் ஸலாம்,

சகோதரரே,

உங்களின் கீழ்க்கண்ட வழக்கம் எனக்கு மேலும் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

நீங்கள் நேர்கோடு பற்றி கூறியுள்ளதை படித்ததில்,அது ஒரே நாளில் இருமுறை அல்லது அதற்க்கு மேலும் நடப்பது போல் எனக்கு தெரிகிறது.இது எவ்வாறு சாத்தியம்?. அல்லது நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த நேரங்கள் நேர்கோடு நடந்த பொழுது அந்த பகுதியுள் இருந்த நேரங்களா?

மேலும் இந்த ரமழான் மாதத்திற்கான நேர்கோடு நடந்த இடம் ஆபிரிக்காவில் அல்லவா?

நீங்கள் என் சமோவா மற்றும் டாங்கோ என்று கூறியுள்ளீர்கள்.மேலும் இந்த இரு பகுதிகளும் மிக அருகாமையில் உள்ளது.அப்படியிருக்க எவ்வாறு ஒரு நாள் நேர வித்தியாசம் வருகிறது என்பதை எனக்கு விளக்கவும்.

அன்புடன்,

முஹம்மத்.

dateMon, Aug 24, 2009 at 5:55 PM

subjectRe: {TMB} Re: பிறைபற்றிய கேள்விக்கு பதில் / சகோதரர் முஹம்மத் சஃபீக்

mailed-bygmail.com

hide details Aug 24

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பான சகோதருக்கு,

முதல் மெயிலில் தாங்கள் கேள்வி?

//என்னுடைய கேள்வி என்னவென்றால், Conjunction(நேர்கோடு) அகும் வரை,அதற்க்கு மேற்க்கே உள்ள உள்ள பகுதிகள் ஷாபான் மாதத்தில் தானே இருக்கும்.அப்படியானால் முதலில் நாம் எப்படி எவ்வாறு ரமழானை முதலில் தொடங்க முடியும் .நேர்கோடு வந்த் இடத்திற்கு அப்புறம் உள்ள பகுதிகள் தானே முதலில் தொடங்க வேண்டும்.இது சரியா?//

தவறு!!!! நேர்கோட்டிற்கு சந்திரன் வந்து புதிய சுற்றை ஆரம்பிக்கும் பொழுது உலகில் என்ன நிலை நடக்கிறது என்பதை புரிய வைக்கத்தான் விபரமாக எழுதினேன். எனவே கிழக்கே இருப்பவர்கள் நோன்பை ஆரம்பிக்க வேண்டும். மேற்கே உள்ளவர்கள் அவர்கள் இயற்கையாகவே அந்த நாளுக்குள் நுழைந்து விடுவார்கள் என்பதை தான் விளக்கியிருந்தேன். இந்த விபரம் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

//அது ஒரே நாளில் இருமுறை அல்லது அதற்க்கு மேலும் நடப்பது போல் எனக்கு தெரிகிறது.இது எவ்வாறு சாத்தியம்?. அல்லது நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த நேரங்கள் நேர்கோடு நடந்த பொழுது அந்த பகுதியுள் இருந்த நேரங்களா?//

இந்த நேரங்கள் சந்திரன் நேர்கோட்டிற்கு வந்த நேரத்தில் பூமியில் கிழக்கும் மேற்கும் சந்திக்கும் இடங்களின் நிலைமையும் இந்தியாவில் இருக்கும் நமது நிலையையும் விளக்கியிருந்தேன்.

நேர்கோட்டிற்கு வரும் நிகழ்வை தாங்கள் சந்திரன் தேய்பிறையிலிருந்து வளர்பிறையாக மாறும் நிகழ்வு என புரிந்து கொள்ளுங்கள்.

இன்னும் சுலபமாக புரிந்து கொள்ள பிறையை ஒரு குழந்தையாக கற்பனை செய்துக்கொள்ளுங்கள். குழந்தை பிறந்த இடம் தான் அது. இதை பிறந்த நாள் என கூறுவோம்.

தற்போது நமக்கு மாதத்தின் முதல் நாள் எது என்பதை தான் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு குழந்தை வியாழக்கிமை காலை 10 மணிக்கு ஆப்பிரிக்காவில் பிறந்துவிட்டது. அது பிறந்த செய்தி அறிந்து அந்த குழந்தை பிறந்த வீட்டிற்கு ஒரு மணிநேரம் கழித்து சென்று உங்களுக்கு எப்போது குழந்தை பிறந்து என்று கேட்டால் பிறந்து ஒரு மணிநேரம் ஆகிவிட்டது என பதிலளிப்பார்கள். இரவில் ஒருவர் அதே வீட்டிற்கு சென்று கேட்டால் அவர் கூறுவார் இன்று காலையில் பிறந்தது என்பார். மறுநாள் பஜ்ருக்கு பிறகு சென்று கேட்டால் நேற்று பிறந்தது என்பார். அந்த குழந்தைக்கு முதல் நாள் வெள்ளிக்கிழமை தான் என்பது தற்போது உங்களுக்கு புரியும்.

வியாழக்கிழமை பிறந்த நாள் என கூறுவோம் (Day of Birth or Date of Birth) வெள்ளிக்கிழமை (First Day of Birth).

நபி(ஸல்) அவர்கள் பிறந்த குழந்தைக்கு ஏழாவது நாள் மொட்டை அடிக்க சொன்னார்கள் என்பதை நாம் அறிவோம். நீங்கள் பிறந்த நாளை முதல் நாள் என கணக்கிட்டால் ஆறாவது நாளிலேயே மொட்டை அடித்து சுன்னதை தவறவிடுவீர்கள் என்பதை நினைவில் வைத்தால் இந்த விஷயம் உங்களுக்கு சரியாக ஞாபகத்தில் இருக்கம். ஒரு குழந்தை வியாழக்கிழமை பிறந்தால் அடுத்த வாரம் அதே வியாழக்கிழமை தான் அந்த குழந்தைக்கு ஏழாவது நாள். பிறந்த நாள் என்றுமே 0 (zero) வாக இருக்கும்.

இதிலிருந்து தாங்கள் புரிய வேண்டியது என்னவென்றால் ஒரு குழந்தை ஆப்பிரிக்காவில் பிறந்தால் அதை இந்தியாவிலோ ஆஸ்திரேலியாவிலோ மற்றும் அமெரிக்காவிலோ பிறந்ததாக நாம் கூற மாட்டோம். அந்த குழந்தை பிறந்தது ஆப்பிரிக்காவில் மட்டும் தான். அந்த குழந்தையின் பிறப்பை உலகில் எங்கு போய் பதிவு செய்தாலும் அந்த குழந்தை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு 1430 வருடம் ஷஃபான் மாதத்தின் 29 நாளில் பிறந்ததாகத்தான் பதிவு செய்து வைத்து தகவல் தர வேண்டும். ஏன் என்றால் UNIVERSAL TIME 10.00 மணி என்பது ஆஃபிரிக்கா தான். அங்கு தான் இந்த குழந்தை பிறந்த நிகழ்வு நடைபெற்றது. வேறு எங்கும் நடைபெற முடியாது.

இதன் அடிப்படையில் ஊர் ஊருக்கு பிறை பிறக்காது என்ற உண்மை தாங்களுக்கு புரிந்திருக்கும். பிறை என்பது ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளிலும் வித்தியாசமான இடங்களில் பிறக்கும். அதை பற்றிய முழு விபரமும் நமது வெயீடான `ஹிஜ்ரா நாட்காட்டியில் வலப்பக்கத்தில் வெளியிட்டிருக்றோம். அதை முழமையாக காண http://www.islamkalvi.com/hijracalendar/1430/index.html இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

//மேலும் இந்த ரமழான் மாதத்திற்கான நேர்கோடு நடந்த இடம் ஆபிரிக்காவில் அல்லவா?//

ஆம் ஆப்பிரிக்காவில் தான்.

நாம் பிறை பிறக்கும் நேரத்தை அதனால் தான் UTC (உலக நேரம்) யில் குறிப்பிடுகிறோம். அந்த நேரம் ஒரு குறிப்பிட்ட (place of birth) இடத்தை தான் குறிக்கும். அதனால் நாம் கணக்கின் அடிப்படையில் பிறை எங்கு பிறக்க போகிறது என்பதை முன் கூட்டியே தெரிவித்து விட முடியும். உலகில் தற்போது மக்கள் மஃரிப் நேரத்தில் நின்று கொண்டு மேற்கே மறையக் கூடிய பிறையைப்பார்த்து பிறை பிறந்து விட்டது என கூறுகிறார்கள். அவர்கள் வாயால் அவர்கள் உண்மையே கூறுகிறார்கள். அது ஏற்கனவே எங்கேயோ பிறந்து விட்டது என்பதுதான் உண்மை. “இதோ பிறை பிறக்கிறது என்று நிகழ்காலத்தில் யாராவது சொல்ல கேட்டவர்கள் இருக்கிறார்களா”? அது அவர்கள் இடத்தில் பிறந்ததாகவும் ஒவ்வொரு ஊராரும் நினைக்கிறார்கள். அல்லாஹ்வின் வேதத்தை பின்பற்றுபவர்கள் இன்னும் அதிகமாக சிந்தித்தால் இது போன்ற பிரச்சினைகளை முடிவிற்கு கொண்டுவரலாம். பிறை பிறக்கும் சமயத்தில் எத்தனையோ ஊர்கள் முதல் நாளில் நுழைந்திருப்பார்கள். பிறை பிறந்தன் பின் தெரிவித்தால் அவர்களுக்கு மாதத்தின் முதல் நாள் ஒவ்வொரு மாதமும் கிடைக்காமல் ஆகிவிடும். அவர்களுக்கு கணக்கை தவிர வேறு வழியே கிடையாது என்பதுதான் உண்மை. அல்லாஹ் தன் திருமறையில் “எவர்கள் அம்மாதத்தை அடைகிறாறோ அவர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்” 2:185 என்ற வசனத்திற்கும் அர்த்தமில்லாமல் போய்விடும்.

//நீங்கள் என் சமோவா மற்றும் டாங்கோ என்று கூறியுள்ளீர்கள்.மேலும் இந்த இரு பகுதிகளும் மிக அருகாமையில் உள்ளது.அப்படியிருக்க எவ்வாறு ஒரு நாள் நேர வித்தியாசம் வருகிறது என்பதை எனக்கு விளக்கவும்.//

சகோதரரே! சிந்தியுங்கள். உலகில் நாம் வாழந்து கொண்டிருக்கிறோம். நாம் வாழும் உலகில் என்ன நிகழ்வுகள் நடக்கிறது என்பது அதிகமானோர் அறியாமல் இருக்கிறார்கள். அதை அறிந்தவர்கள் பிறருக்கு சொன்னால் அவர்களை கேவலப்படுத்தி சமுதாயத்தில் இருந்து புறந்தள்ளுகிறார்கள். பூமி உருண்டை என்பதும் கிழக்கு நோக்கி சுற்றிக்கொண்டிருப்பதும் இதில் இருந்து நாம் அறிந்து கொள்ளும் உண்மை.

அவர்கள்தான் உலகதேதி மாறும் இடத்தில் இருக்கிறார்கள். உலகில் எப்போதும் இரண்டு நாட்கள் இரண்டு தேதிகள் இருந்து கொண்டேதான் இருக்கும் என்பதும், இரண்டு கிழக்கிற்கும், மேற்கிற்கும் அவனே இறைவன் என்ற வசனத்தை உண்மைபடுத்தும் இடமும் இதுதான். எனவே

http://www.islamkalvi.com/portal/?p=940 இந்த லிங்கை கிளக் செய்து படித்தால் கேள்விக்கான விடை பற்றிய விபரம் உள்ளது. புரியவில்லை என்றால் மீண்டும் கேட்கவும்.

பூமியின் ஓட்டம் சந்திர சூரிய ஓட்டங்களை அறிந்து கொள்ள கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

மற்றவை உங்கள் பதில் கண்டு

இப்படிக்கு

சிராஜ் ஏர்வாடி

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர்கள் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விளக்கம் தந்து உதவும் படி கேட்டுகொள்கிறேன்..

இத்தாவை பொறுத்தவரை அல்லாஹ் “திருமறையில் ‘உங்கள் பெண்களில் எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (இனி கருவுறுவாளா) என்று சந்தேகப்பட்டால் அப் பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாத பெண்களுக்கும் ‘இத்தா’ காத்திருக்கும் தவணை மூன்று மாதங்களாகும். (அல் குர்ஆன் 65:4)”

#) அல்லாஹ் இத்தா விசயத்தில் நேரடியாக விளக்கம் அளித்துள்ளான்.. (அனைவரும் ஏற்று தான் ஆக வேண்டும்.)

நீங்கள் பிறை பார்த்தால் நோன்பு வையுங்கள், அடுத்த பிறையைப் பார்த்தால் நோன்பை விட்டு விடுங்கள், மேகம் (பிறையை) உங்களுக்கு மறைத்து விடுமானால் (ரமளானையும் ஷாஃபானையும்) முப்பது நாட்களாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி)நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ, தாரகுத்னீ, இப்னுஹிப்பான், இப்னுகுஸைமா, ஹாகீம்.

#) அதே போல தானே பிறை விசயத்தில் நபி (ஸல்) அவர்கள் நேரடியாக விளக்கம் அளித்துள்ளார்கள்.(இதையும் நாம் ஏற்று தானே ஆக வேண்டும்..)அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான். அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.

1.) அல்லாஹ் ஆராய சொல்கின்றான். உண்மை தான், இதை தான் ஆராய சொல்கின்றான் என்று எப்படி நாம் முடிவு செய்ய முடியும்..?

மற்றும்

2.) நபி (ஸல்) அவர்கள் விளக்கம் கொடுத்த பின்பும் நாம் அந்த விஷயத்தை ஆராய்கின்றோம் என்று சொல்லி (நபி (ஸல்) காலத்தில் ஒரு நடைமுறை, இப்பொழுது ஒரு நடைமுறை) என்று மாற்றி அமைப்பதற்கு நமக்கு எவ்வாறு அதிகாரம் வரும்..?

3.) நபி (ஸல்) அவர்கள் விளக்கம் தந்த பின்னும்., ஒரு விஷயத்தை பற்றி நாம் ஆராய்வது தான் உண்மை என்று நாளை அல்லாஹ்-விடத்திலே எவ்வாறு நாம் முறையிட முடியும்…?

வஸ்ஸலாம் .

அப்துல் காதர்.அ 2009/8/21 Mohamed Safiq



த.த.ஜ குற்றச்சாட்டுகளுக்கு ஹிஜ்ரி கமிட்டியின் பதில்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்........

நெல்லை ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்தும், ஓரிறைக் கொள்கை அடிப்படையில் அதோடு சேர்ந்து செயல்படும் அதிகமான கொள்கை சகோதரர்களும், பிறைவிஷயத்தில் குர்ஆன் கூறும் கணக்கின் அடிப்படையில் அமைந்த சந்திர நாட்காட்டியை உறுதியாக நடைமுறைபடுத்தி வருகின்றனர். மேலும், அந்த ஜமாஅத் மற்றும் அதோடு இணைந்து செயல்படும் சகோதரர்களின் கட்டுக்கோப்பை எப்படியாவது சீர்குலைத்திடவேண்டும் என்று பலமுறை முயற்சித்தும், அதில் படுதோல்வி அடைந்து கொண்டேயிருக்கும் மேற்படியார்களின் உச்சகட்ட விரக்தியின் வெளிப்பாடுதான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் TNTJ (த.த.ஜ) ஏர்வாடி கிளை சார்பாக வெளியிடப்பட்ட “பிறை ஓர் விளக்கம்” என்ற பிரசுரம். அதில் 'ஹிஜ்ரா கமிட்டி என்ற மூளை வரண்ட கூட்டத்தினருக்கு பதில்' என்று உப தலைப்பிட்டு ஹிஜ்ரி 1434 ரமளான் மாதம் அவதூறு பிரசுரமாக வெளியாகியது. அதற்கு ஹிஜ்ரி கமிட்டியின் பதில்கள் பின்வருமாறு:-

மூளையை அதிகமாக உபயோகித்தால் மூளை வரண்டு போகுமா? அல்லது மூளையை உபயோகப்படுத்தாமல் இருந்தால் மூளை வரண்டு போகுமா? என்பதை ஆய்வு செய்து நாம் உண்மையை எழுதினாலும் கூட இவர்கள் நாம் என்ன ஆய்வு செய்துள்ளோம் என்பதை சிந்திக்க மாட்டார்கள். ஏனென்றால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத் தலைவர் ஒவ்வொரு விஷயத்திலும் எப்படி விளங்க வேண்டும் என கூறியுள்ளாரோ அதற்கு மாற்றமாக இவருடைய முகல்லிதுகள் எதையும் விளங்க மாட்டார்கள். இந்நிலையில் இவர்கள் பிறறைப் பார்த்து “சிந்தித்து செயல்படு” என கூறுவது வேடிக்கையிலும் வேடிக்கைதான். அதனால் யாருக்கு மூளை வரண்டுவிட்டது என்பதைப்பற்றிய ஆராய்ச்சியில் இறங்காமல் அவருடைய முகல்லிதுகள் (தலைவரை கண்மூடி பின்பற்றுபவர்கள்) தலைவரின் இணையத்தளத்தில் இருந்து அப்படியே காப்பியடித்து நம்மிடம் கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதற்கான பதில்களை மட்டும் தற்போது பார்ப்போம்.

4:59 வசனத்தை குறிப்பிட்டு உதாரணமாக என்ற வார்த்தையுடன் பிரசுரத்தை நேரடியாக ஆரம்பித்துள்ளனர். ஒரு விஷயத்தை கூறிவிட்டு அதற்கான உதாரணத்தை கூறுவதுதான் மனித இயல்பு. இவர்கள் உதாரணம் என்று கூறி பிரசுரத்தை ஆரம்பித்திருப்பது விந்தைதான்.

//உதாரணமாக தொழுது கொண்டு இருக்கும் போது காற்று பிரிந்து விட்டால் மீண்டும் உளு செய்து தொழ வேண்டும். அப்போதுதான் தொழுகை அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப் படும். ஒருவர் சிந்தித்து உளு செய்வதை விட காற்று பிரிந்த இடத்தை கழுவுவதுதான் சிறந்தது என்று முடிவு செய்து மீண்டும் தொழுதால் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படுமா? உலக அளவில் இது சரிதான். ஆனால் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது. // த.த.ஜ முகல்லிதுகளின் உதாரணம் 1

ஹிஜ்ரி கமிட்டியின் பதில்

தொழுது கொண்டிருக்கும் போது காற்று பிரிந்தால் மீண்டும் ஒளு செய்வதா? காற்று பிரிந்த இடத்தை கழுவுவதா? என்ற முரண்பாடும், மூளை வரண்ட சிந்தனையும் இதுவரை யாருக்கும் தோன்றியது இல்லை. ஒரு வேளை தத்தமது பகுதி, மாவட்ட பிறை, மண்டலப்பிறை, மாநிலப்பிறை என்று தன்னுடைய பிறை நிலைபாட்டை அவ்வப்போது மாற்றிக் கொண்டிருக்கும் த.த.ஜ தலைவருக்கும் அவருடைய முகல்லிதுகளுக்கும் காற்று பிரியும் விஷயத்திலும் முரண்பாடு ஏற்பட்டிருக்கலாம்.

மேலும், புரிந்து கொள்வதற்கு ஒரு உதாரணமாக மேற்படியாரின் அரைக்கால் டவுஸர் ஃபத்வாவை இங்கு நினைவூட்டுகின்றோம். அதாவது தொழுகையில் தனது தொடை தெரியுமளவிற்கு டவுஸர் போட்டு தொழலாம், அவ்வாறு தொழுதால் தொழுகை கூடும் என்பது சில ஆண்டுகளுக்கு முன்னர் மேற்படியார் ஆய்வுசெய்து (!) கண்டுபிடித்ததாகும். மேற்படியாரின் ஆய்வு வாய்வுகளைப் பற்றி நாம் இங்கு குறிப்பிடவில்லை. மார்க்கத்தின் சட்டமாக ஒரு விஷயத்தை மக்களுக்கு பிரச்சாரம் செய்தால் அதை முதலில் அவரோ அல்லது அந்த ஆய்வை சரிகாண்பவர்களோ அதை நடைமுறைப்படுத்திக் காட்டவேண்டும் என்பதே அவரது கொள்கை.

மேற்படியாரோ அல்லது அந்த ஆய்வை சரிகாணும் அவரின் முகல்லிதுகளோ (தக்லீத் வாதிகள்) என்றாவது தங்களது தொடை தெரியுமளவிற்கு அரைக்கால் டவுஸர் போட்டு தொழுது காட்டியுள்ளார்களா? சற்று எண்ணிப்பாருங்கள். இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் முதலில் இந்த ரமழானிலேயே இரவுத் தொழுகையிலாவது இவ்வாறு டவுஸரோடு தொழுது காட்டட்டும். அதன் பிறகு பிறை ஆய்வை பற்றி பேசட்டும். நெல்லை ஏர்வாடி பிறை விவாதத்தில் மக்கள் கேட்ட கேள்வியால் ஏற்கனவே கழன்ற டவுஸரை இன்னும் சரிசெய்யாத நிலையில், பிறையை புறக்கண்களால் பார்த்துவராத, பிறைபற்றிய அறிவு கொஞ்சம்கூட இல்லாத இவர்கள், பிறை ஓர் விளக்கம் என்று பிரசுரம் வெளியிட்டு பிறைபற்றி மக்களுக்கு விளக்க நினைத்தது இந்த நூற்றாண்டின் நகைச்சுவைதானே.

இஸ்லாமிய சட்ட அடிப்படையில், ஒருவன் மலஜலம் கழித்துவிட்டு, கழுவிவிட்ட பிறகும் கூட ஒளு செய்தால் தான் அவனுக்கு தொழுகை கூடும் என்ற அடிப்படை அறிவே இல்லாதவர்கள் தான் இது போன்ற உதாரணங்களை கூறி மக்களை முட்டாளாக்கப் பார்க்கின்றார்கள். மேலும் அவர்களுடைய ஃபத்வாவைப்பாருங்கள். உலக அளவில் ஒருவனுக்கு காற்றுப் பிரிந்தால், காற்றுப்பிரியும் இடத்தை மட்டும் கழுவிவிட்டு தொழுவதுதான் சரி எனவும் அவர்கள் கூறிவிட்டு, அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதாலேயே நாங்கள் ஒளு செய்கின்றோம் எனவும் கூறியுள்ளனர்.

அவர்கள் இவ்வாறு கூறுவதிலிருந்து, காற்று பிரியும் விஷயத்தில் ஒளு செய்ய சொல்லும் அல்லாஹ்வின் சட்டம் உலக அளவில் தவறானதுதான் இருந்தாலும் அல்லாஹ் சொல்லிவிட்ட தால் நாங்கள் செய்கின்றோம் என அல்லாஹ்விற்கே பாடம் சொல்லி கொடுக்கின்றார்கள். நவூது பில்லாஹ்.

அவர்கள் கூறும் 4:59 வசனத்தின் படி ஹிஜ்ரி கமிட்டி அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மட்டுமே கட்டுப்பட்டு செயலாற்றுகிறது என்பதை எங்கள் ஆய்வுகளை WWW.MOONCALENDAR.IN என்ற எங்கள் இணையத்தளத்தில் பார்த்து விளங்கிக்கொள்ளலாம். ஆனால் இவர்களோ தன்னுடைய தலைவர் பிறை விஷயத்தில் தவறு செய்கின்றார் என்று தெளிவாக தெரிந்தும் 4:59 குர்ஆன் வசனத்திற்கேற்ப அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படாமல், அதிகாரமில்லாத தங்கள் இயக்கத்தினுடைய தலைவருக்கு மட்டும் கட்டுப்படுவது எவ்வாறு அந்த வசனத்தை பின்பற்றுவதாகும்?

ருஃயத் என்பது சந்திரனின் காட்சியை அடிப்படையாக கொண்டு கண்ணால் தகவலால் அறிவால் ஆய்வால் கணக்கீட்டால் அறிந்து கொள்வது போன்ற விரிவான பொருளை தரும் பதம்தான் என்று நமது பிரசுரத்தில் வெளியிட்டிருந்தோம். அதற்கு அவர்களின் இரண்டாவது உதாரணமான ஊசி போன கதையைப் பார்ப்போம்.

//உதாரணமாக ஊசி என்ற பொருள் உள்ளது. இந்த ஊசிக்கும் பல நிலை உள்ளது. ஒரு மருத்துவரிடம் சென்றால் அவர் பயன்படுத்தும் ஊசி வேறு ஒரு டெய்லரிடம் சென்றால் அவரிடத்தில் அந்த ஊசி வேறு. ஒரு சாக்கு தைப்பவரிடம் சென்றால் அவரிடத்தில் அந்த ஊசி வேறு. இவ்வாறு ஊசிக்கு பல பயன்பாடு உள்ளது. இப்போது மருத்துவர் என்றால் இந்த மாதிரி ஊசியைத்தான் பயன்படுத்துவார். டெய்லர் என்றால் இந்த மாதிரி ஊசியைத்தான் பயன்படுத்துவார் என்பதை விளங்கிக் கொள்வோம். அதுபோல் ருஃயத் என்பதற்கு நபி(ஸல்) அவர்கள் என்ன பொருள் கொடுத்தார்கள் என்பதை வைத்துதான் முடிவு செய்ய வேண்டும்.// த.த.ஜ முகல்லிதுகளின் உதாரணம் 2

ஹிஜ்ரி கமிட்டியின் பதில்

ஊசி கதையில் மூன்று நபர்களைப்பற்றி குறிப்பிடுகின்றார்கள். மூன்றும் ஊசிதான் ஆனால் அவர்கள் பயன்படுத்தும் விதம் வெவ் வேறு என கூற வருகின்றார்கள். ஆனால் அவர்கள் மூன்று நபரும் ஊசியை கொண்டு குத்தியே தங்கள் காரியத்தை முடிக்கின்றனர். மருத்துவர் உடலில் குத்துவார். டெய்லர் துணியில் குத்துவார். சாக்கு தைப்பவர் சாக்கில் குத்துவார். மூன்று ஊசியும் இங்கே குத்தும் வேலைத்தான் செய்கின்றது. அதுபோல் ருஃயத் என்ற பதம் சந்திரனின் காட்சியை அறிந்து படித்தரங்களான தேதியை முடிவு செய்ய வேண்டும் என்ற ஒரே வேலையை செய்வதற்காகத்தான் அல்லாஹ் படைத்ததாக கூறுகின்றான். ஊசியை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்ப ஊசியின் பருமன் வித்தியாசப்பட்டாலும் ஊசியின் பணி குத்தும் பணிதான். அதைக்கொண்டு வேறு பணியாற்ற முடியாது.

எனவே கண்ணால் தகவலால் அறிவால் ஆய்வால் கணக்கீட்டால் அறிந்து சரியான தேதியை கண்டுபிடிக்கும் பணியைத்தான் சந்திரனின் ருஃயத் (காட்சி) மூலம் நாம் செய்ய முடியும்.

த.த.ஜ. வின் ஹதீஸ் 1.

حدثنامسدد،وخلفبنهشامالمقرئ،قالا : حدثناأبوعوانة،عنمنصور،عنربعيبنحراش،عنرجل،منأصحابالنبيصلىاللهعليهوسلمقال : اختلفالناسفيآخريوممنرمضان،فقدمأعرابيان،فشهداعندالنبيصلىاللهعليهوسلمباللهلأهلاالهلالأمسعشية، “ فأمررسولاللهصلىاللهعليهوسلمالناسأنيفطروا “ *. سننأبيداود - كتابالصومبابشهادةرجلينعلىرؤيةهلالشوال - حديث : ‏2005‏

ரமளானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது இரு கிராம வாசிகள் வந்து நேற்று மாலை பிறைப்பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும் பெருநாள் தொழுகை தொழும் திடலுக்கு செல்லுமாறும் மக்களுக்குக் கட்டளையிட்டனர். அறிவிப்பவர் : ரிப்யீ பின் ஹிராஷ் நூல்: அபுதாவூத் த.த.ஜ வின் ஹதீஸ் 1 லிருந்து த.த.ஜ முகல்லிதுகள் எழுப்பும் கேள்விகள்

கேள்வி 1. ருஃயத் என்ற பதத்திற்கு கணக்கிடுதல் என்ற பொருள் இருந்தால் ஏன் மக்களிடம் கருத்து வேறுபாடு வரவேண்டும். அவர்கள் அழகான முறையில் கணக்கிட்டு தொழுது இருக்கலாமே? என கேள்வி எழுப்புகின்றனர்.

கேள்வி 2. நேற்றுமாலை பிறை பார்த்தோம் என நபி(ஸல்) அவர்களிடம் கூறியதால் அவர்கள் கண்ணால் பிறை பார்த்தார்கள் என்பது தானே ருஃயத்திற்கு அர்த்தமாகும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

த.த.ஜ ஹதீஸ் 1 க்கு ஹிஜ்ரி கமிட்டியின் பதில்

இவர்கள் எடுத்து வைக்கும் ரிப்யீ பின் ஹிராஷ் அறிவிக்கும் இந்த செய்தி முர்ஸல் என்ற வகையை சேர்ந்ததாகும். முர்ஸல் என்றால் நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட நபரை மறைத்து நபியவர்களிடம் நேரடியாக கேட்காத நபர் அறிவிப்பதாகும். மேலும் ஸஹாபாக்கள் மற்றும் தாபியீன்களின் கூற்று மார்க்க ஆதாரமாகாது என்று மேடைக்கு மேடை முழங்கும் இவர்கள் தலைவர், சரியான அறிவிப்பாளர்கள் வரிசையைக் கொண்ட ஸஹீஹான ஹதீஸ்களைக்கூட தமது சிந்தனைக்கு ஒத்துவரவில்லை என்ற காரணத்தைச் சொல்லி ழயீஃப் என்று சுலபமாக தட்டிவிடும் நிலையில், பிறை விஷயத்தில் மட்டும் இந்த முர்ஸலான அறிவிப்பு உட்பட பல பலஹீனமான அறிவிப்புகளைக் கூட தமது பிறைநிலைபாட்டிற்கு தக்க ஆதாரங்களாகத் தூக்கிப் பிடிக்கும் இரகசியம்தான் என்ன? என்பதைப்பற்றி மக்களே இவர்களிடம் நீங்களே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதை ஒரு வாதத்திற்காக ஆதாரமாக கொள்ளலாம் என்று வைத்துக்கொண்டாலும் கூட இது கணக்கை வலியுறுத்தும் செய்தியாகவே உள்ளது.

அவர்கள் எடுத்து வைக்கும் ஹதீஸ் ஆதாரத்தில் அவர்கள் கூறுவது போல் ருஃயத் என்ற பதமே இல்லை. அவர்களின் ஹதீஸ் ஆதாரத்தை நாங்கள் இப்பிரசுரத்தில் அரபு மூலத்துடனும், அவர்கள் பிரசுரத்தில் உள்ள மொழிபெயர்ப்பையும் கொடுத்துள்ளோம். ருஃயத் என்ற பதம் அவர்களுடைய ஆதாரத்தில் எங்குள்ளது என்பதை அவர்கள் தான் மக்களிடம் காட்டி கொடுக்க வேண்டும்.

கணக்கிடுதல் என்ற பொருள் ருஃயத்திற்கு இருந்தால், கருத்துவேறுபாடு ஏன்வந்தது என்ற கேள்வியை இவர்கள் தற்போது எழுப்புகின்றார்கள்? உண்மையில் இந்த கேள்வியை நாங்கள்தான் அவர்களிடம் கேட்டுவருகின்றோம். நபி(ஸல்) அவர்கள் பிறை பார்க்காமல் நோன்பு நோற்காதீர்கள் என்று கூறிவிட்டார்கள். எனவே நாங்கள் பிறையை பார்த்தே நோன்பு நோற்போம் பெருநாள் கொண்டாடுவோம் என்று கூறுபவர்கள் மத்தியில் ஏன் கருத்து வேறுபாடு வரவேண்டும்? என ஹிஜ்ரி கமிட்டி ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு இதுவரை யாரும் பதில் தரவில்லை.

எனவே அவர்களிடம் நாம் மீண்டும் கேட்கின்றோம். பிறை பார்க்காவிட்டால் முப்பதாவது நாள் என முழுமைப்படுத்த நபியவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள் என கூறும் த.த.ஜ வினர் தான், அவர்கள் பதிந்துள்ள அறிவிப்பில் வரும் அந்த மக்கள் ஏன் நபியின் சொல்லை புறக்கணித்து தங்கள் மத்தியில் கருத்துவேறுபாடு கொண்டிருந்தனர் என்பதை மக்கள் மன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும் என ஹிஜ்ரி கமிட்டி த.த.ஜவினரைப் பார்த்து கேட்கின்றது?

அந்த செய்தியில் உள்ள கருத்துவேறுபாடு கொள்ளும் மக்களுக்கு முன்கூட்டியே இன்று முதல் நாள் தான் என்பது எவ்வாறு தெரிய வந்தது? ஒரு சாரார் இன்று மாதத்தின் முதல் நாள்தான் என்று கூறியிருந்தால் தானே அங்கு கருத்து வேறுபாடு வரமுடியும் ? முன்கூட்டியே மாதம் முடியும் கணக்கை ஒரு சாரார் அறிந்திருந்ததாலேயே மற்றொரு சாராருடன் கருத்துவேறுபாடு கொண்டிருக்க முடியும்?

அவர்கள் பதிந்துள்ள இந்த செய்தியில் வரும் நேற்று மாலை பிறை பார்த்தோம் என்ற பதமே இவர்களுடைய நாளின் ஆரம்பம் மஃரிப் தான் என்ற கொள்கையை தவிடு பொடியாக்குகின்றது என்பதை நாளின் ஆரம்பம் பஜ்ர் தான் என்பதைப்பற்றி த.த.ஜவினர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கூறும் போது விரிவாக காணலாம்.

த.த.ஜ ஹதீஸ் 2

சந்தேகத்துக்குரிய நாளில் (ஷஃபான் முப்பதாம் நாளில்) யார் நோன்பு நோற்கின்றாறோ அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார். அறிவிப்பவர்: அம்மார் ரழி நூல்: ஹாக்கிம்.

த.த.ஜ ஹதீஸ் 2 க்கு ஹிஜ்ரி கமிட்டி பதில்

இவர்கள் பதியும் ஹாகிம் என்ற கிதாபில் உள்ள இந்த செய்தி பலஹீனமான செய்தியாகவே இருந்தும், இவர்கள் எவ்வாறு ஆதாரமாக கொள்கின்றார்கள் என்பதை அவர்கள் விளக்க கடமைப்பட்டுள்ளார்கள். மேலும், இதில் ஷஃபான் முப்பதாம் நாளில் என்று மொழியாக்கம் செய்து அடைப்புக் குறிக்குள் கொண்டுவந்துள்ளார்கள். முப்பதாம் நாள் என்ற வார்த்தையை நுழைத்து இந்த செய்தியை திசை திருப்ப முயற்சி செய்துள்ளார்களா? திசைதிருப்ப மட்டும் சுயஅறிவை பயன்படுத்த வேண்டுமா? என்பதை த.த.ஜ வினர் தெளிவுபடுத்த வேண்டும். இவர்கள் அல்லாஹ்வின் சந்திர நாட்காட்டியை பொய்ப்படுத்துவதற்காக, பொய்யாக புனையப்பட்ட, பலஹீனமான செய்திகளை, தவறாக மொழிபெயர்த்து, தங்களுடைய தவறான நிலைபாட்டிற்காக மக்கள் மீது திணிக்கின்றனர்.

மேலும் அவர்களுடைய பிரசுரத்தில் வெளியிட்டுள்ள முதல் இரண்டு அறிவிப்புகளையும் நாம் உற்று நோக்கும் போது அதில் ' ருஃயத் ' என்ற பதமே இல்லை என்பதோடு அதன் மூலச் சொல்லில் இருந்து உருவான பதங்களும் கூட அந்த செய்திகளில் இல்லை. எனினும் அவர்கள் ருஃயத் என்ற பதம் அந்த செய்தியில் உள்ளதாக நினைத்து ருஃயத்தைப்பற்றி அறியாமையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்தோ பரிதாபம். தக்லீத் வாதிகளான இந்த முகல்லிதுகளின் நிலை மிகவும் வருந்தத்தக்கதாகவே உள்ளது.

எனவே நாம் சொல்வதையாவது சுயஅறிவைக்கொண்டு சிந்திப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ருஃயத் என்ற பதத்திற்கு அறிவால் ஆய்வால் தகவலால் என்ற அர்த்தங்களை நாம் சுயமாக கூறவில்லை. ருஃயத் என்ற மூலச் சொல்லில் இருந்து பிறந்த ரஆ, தரா போன்ற சொற்கள் சுமார் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த பதங்களை அல்லாஹ் எந்த அர்த்தத்துடன் பயன்படுத்தி யிருக்கின்றானோ அந்த பொருளையே நாமும் இந்த பதத்திற்கு வைக்கின்றோம். மேலும் ருஃயத் (காட்சி) பற்றி தெளிவாக அறிந்துகொள்ள நமது இணையத்தளமான றறற.அடிடிஉயடநனேயச. ல் பிறையும் புறக்கண்ணும் என்ற தலைப்பிடப்பட்ட கட்டுரையை படித்துப்பார்க்கவும்.

ஆகவே ருஃயத் என்ற பதத்திற்கு அறிவால் ஆய்வால் தகவலால் என்ற அர்த்தங்கள் கொடுக்கக் கூடாது என்று கூறிய இவர்களால் எந்த குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தையும் அவர்கள் பிரசுரத்தின் மூலமாக சமர்ப்பிக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

அடுத்து நமது பிரசுரத்தில் 'கும்ம' என்ற பதம் மறைக்கும் பொழுது என்ற பொருளை கொண்டுள்ளது என கூறியிருந்ததை தவறு என வாதிட்டு த.த.ஜவினர் என்ன பதில் கூறியுள்ளார்கள் என்பதையும், என்னென்ன கேள்விகளை எழுப்பியுள்ளார்கள் என்பதையும் பார்ப்போம்.

த.த.ஜ வினர் 'கும்ம' என்ற பதத்திற்கு மறைக்கும் பொழுது என நாம் கூறியுள்ளதை மறுத்து எழுப்பியுள்ள கேள்விகளும் குற்றச்சாட்டுகளும் கீழ்வருமாறு:-

த.த.ஜ குற்றச்சாட்டு. 1 ஹிஜ்ரி காலண்டர் என்று பார்க்க ஆதாரமில்லாத ஒன்றை நிலைநாட்டும் இந்த கூட்டத்தினர் வெறும் கேள்விகளாகவே கேட்பார்கள் இதற்கு இதுதான் அர்த்தம் என்று ஆதாரத்துடன் வாதத்தை எடுத்து வைக்க மாட்டார்கள்.

ஹிஜ்ரி கமிட்டியின் பதில்:

குர்ஆனிலும் ஹதீஸ் கிதாபிலும் இருந்து எடுத்துவைத்த நமது ஆதாரங்களை கண்டு மிரண்டு போய்தானே நமக்கு எதிராக ஆதாரமற்ற ஹதீஸ்களையும், பிறைக்கு சம்மந்தமில்லாத குர்ஆன் வசனங்களையும் பிரசுரித்து மக்களை திசை திருப்பும் நோக்கில் அவசர அவசரமாக ஒரு பிரசுரத்தை இறக்கினார்கள். மேலும் நாம் எடுத்து வைத்த ஆதாரங்களை நடுநிலையோடு ஆய்வு செய்துப் பார்த்திருந்தால் ஹிஜ்ரி காலண்டர் என்று பார்க்க ஆதாரமில்லாத ஒன்றை நிலைநாட்டுகின்றோம் என்ற மழுப்பல் வாதத்தை இவர்கள் வைத்திருக்கவே முடியாது.

ஹிஜ்ரி கமிட்டியினராகிய நமது நிலைபாட்டை இதுவரை நாம் வெளியிட்ட அனைத்து பிரசுரங்களிலும், நமது இணையத் தளமான www.mooncalendar.in இலும், தெளிவான ஆதாரத்தோடு தான் வெளியிட்டுள்ளோம். மேலும் எங்களின் ஆதாரத்தில் ஏதாவது பலஹீனமான செய்திகளையோ, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையோ ஸஹாபாக்கள் காலத்தில் நடந்த சம்பவங்களையோ அல்லது தவறான மொழிபெயர்ப்புகளையோ எங்களை அறியாமல் தந்திருந்து, நாங்கள் அதை தவறு என அறிந்து கொண்டாலோ அல்லது சுட்டிக்காட்டப்பட்டாலோ உடனடியாக எங்களை திருத்திக்கொள்ளும் பக்குவத்தில் நாங்கள் இன்றுவரை இருக்கின்றோம் என்பதை அல்லாஹ்வே நன்கறிவான்.

ஒரு நிலைபாட்டில் உள்ளவர்களிடம் அது சார்ந்த கேள்விகளை கேட்டால், அந்த நிலைபாட்டில் அவர்கள் உண்மையானவர்களாகவும் உறுதியானவர்களாகவும் இருந்தால், அதற்கான பதிலை அறிவுப்பூர்வமான முறையிலும் குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸிற்கு உட்பட்ட நிலையிலும் பதில் அளிப்பது அவர்களின் மீது கடமை. அவர்களுடைய நிலைபாடு தவறானதாகவும், உறுதியற்ற நிலையையும் கொண்டதாகவே இருப்பதாலும், நமது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் இது போன்று அவர்கள் வசைபாடி பிரசுரம் வெளியிட்டு வருகின்றார்கள். இதுவே தக்லீதுவாதிகளின் இனிய பண்பு (?)

'கும்ம' என்ற பதத்தை பற்றிய த.த.ஜ வின் கேள்விக்கு ஹிஜ்ரி கமிட்டியின் பதில்: 'கும்ம' என்ற பதத்திற்கு மேகமூட்டம் என்றுதான் மொழிபெயர்க்க வேண்டும் என கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக நான்கு வசனங்களை குறிப்பிட்டுள்ளனர். 2:57, 7:160, 25:25, 2:201 அவர்கள் எடுத்து வைக்கும் குர்ஆன் வசனங்களில் அவர்கள் கூறும் 'கும்ம' என்ற பதம் இல்லையென்பதை தெளிவாக அறிந்தும் மக்களை ஏமாற்றி திசை திருப்புவதற்காகவே இந்த பிரசுரத்தை அவசர அவசரமாக வெளியிட்டுள்ளதை நாம் அறிய முடிகின்றது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 2:201 வசனத்தில் அவர்கள் தவறாக விளங்குவதற்கு கூட வாய்ப்பில்லாத அளவிற்குரிய வசனமாகும். ஏனென்றால், மற்ற மூன்று வசனங்களில் 'ஙமாம்' என்ற சொல் உள்ளது. சத்தியத்தை மக்கள் அறிந்து அவர்களிடம் கேள்வி எழுப்பும் போது 'கும்ம' என்ற பதம் வேறு 'ஙமாம்' என்ற பதம் வேறுதான், நாங்கள் தவறுதலாக மொழியாக்கம் செய்து விட்டோம் என அவர்கள் நிலையில் இருந்து நழுவி விடுவார்கள். அது அவர்களுக்கு கைவந்த கலை தான் என்பதை அனைவரும் அறிந்தே வைத்துள்ளோம்.

அதே சமயம் த.த.ஜ வினர் பதிந்த 2:201 வசனமோ நாம் அல்லாஹ்விடம் அதிகமாக கேட்கும் ''ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா' என்ற துஆ சம்மந்தப்பட்ட வசனமாகும். இதில் அவர்களுடைய ஆதாரமான 'ஙமாம்' என்ற பதம் உள்ளது என்று கூறி எவ்வாறு பதிவிட முடியும் என்று சிந்திக்கும் சாதாரண அறிவு கூட அவர்களுக்கு இல்லையோ என்று நாம் நினைக்கும் அதே வேளையில், இவர்கள் இதுபோல் சம்மந்தமில்லாத வசனங்களை கூட பதிந்து, மக்களை திசை திருப்ப முயற்சிப்பார்கள் என்பதை மட்டும் இதிலிருந்து தெளிவாக நாம் விளங்கிக் கொள்ளலாம்.

அரபியில் உள்ள வார்த்தையின் வேர்சொல்லைப்பற்றிய சாதாரண மொழி அறிவு கூட இல்லாத மௌலவிகள் இவர்கள் இயக்கத்தில் இருக்கின்றார்கள் என்பது அவர்களின் கேள்வியில் இருந்தும் குற்றச்சாட்டில் இருந்தும் நமக்கு நன்றாக புரிகின்றது. ஏனெனில் ''கும்ம' என்ற பதத்திற்கு மறைத்தல் என்ற அர்த்தம் இருக்கின்றது என நாம் கூறினால், 'ஙமாம்'(Gamaam)என்ற வார்த்தைக்கு மேகம் என்ற அர்த்தம் உள்ளது என்று கூறி 'ஙமாம்'; என்ற வார்த்தை வரும் வசன எண்களை அவர்கள் பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளனர். கும்ம (Gamaam) என்ற பதத்திற்கும் 'ஙமாம்' என்ற பத்தத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லாத போது இதை ஆதாரமாக காட்டுகின்றார்களே இவர்களின் ஆய்வுத்திறமை மக்களை மெய்சிலிர்க்க வைக்கின்றது. அந்தோ பரிதாபம்!

'ஙமாம்'என்ற பதம் 'கும்ம' என்ற பதத்திலிருந்தோ 'கும்ம' என்ற பதம் 'ஙமாம்' என்ற பதத்திலிருந்தோ வந்தது என்று அரபி மொழி இலக்கணம் படித்த யாரும் சொல்லவே மாட்டார்கள். இதை ஒரு ஆதாரமாக இவர்கள் எவ்வாறு காட்ட முடிந்தது. தவறான நிலைபாட்டை நியாயப்படுத்த இவர்கள் காட்டும் ஆதாரங்கள்தான் பலஹீனமாக இருக்கின்றது என்று நினைத்தால், இவர்களின் மொழியறிவும் கூட மிகவும் பலஹீனமானதாகவே இருக்கின்றது என்பதை இவர்கள் பிரசுரத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. த.த.ஜவினருக்கு அல்லாஹ் நடுநிலையோடு சிந்திக்கும் ஆற்றலை தந்தருளட்டும்.

நாளின் ஆரம்பம் எப்போது? என்பதற்கு த.த.ஜ எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு ஹிஜ்ரி கமிட்டியின் பதில்.

நாளின் துவக்கம் ஃபஜ்ர் என்று இவர்களாகவே ஒப்புக் கொண்டதை பாருங்கள். இவர்களின் நோட்டீஸ் பக்கம் 1 ல் ஆதாரமாக காட்டியுள்ள ஹதீஸ் 1 ல் ரிப்யீ பின் ஹிராஷ் இன் அறிவிப்பாக அபூதாவூதில் இடம்பெறும் முர்ஸலான செய்தியில் கிராம வாசிகள் வந்து நேற்று பிறையைப்பார்த்தோம் என்று சாட்சி சொன்னார்கள் என உள்ளது.

கிராம வாசிகள் நேற்று மாலை பிறை பார்த்தார்கள் என்றால் இவர்கள் நிலைப்பாட்டின் படி மஃரிப் நேரத்தில் பிறை பார்த்திருப்பர். நாளின் துவக்கம் மஃரிப் என்றால், நேற்று மாலை என்ற வாசகம் இடம் பெறக்கூடாது. இன்று மாலை பிறைப் பார்த்தார்கள் என்றுதானே இடம்பெற்றிருக்க வேண்டும். எனவே இந்த ரிப்யீ பின் ஹிராஷ் என்ற செய்தியிலேயே நாளின் துவக்கம் ஃபஜ்ர் தான் என்று உறுதியாகின்றது.

அடுத்து நாளின் துவக்கம் மஃரிப் என்பதற்கு இவர்கள் காட்டும் ஆதாரங்களை பார்ப்போம்.

நாளின் துவக்கத்திற்கு த.த.ஜ காட்டும் ஹதீஸ் 1

லைலத்துல் கத்ர் இரவு பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் யார் விளக்கம் கேட்பது என்று பேசிக்கொண்டோம். இது ரமலான் மாதம் 21 ம் நாள் காலையில் நடந்தது நான் புறப்பட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மஹ்ரிப் தொழுகையில் பங்கு கொண்டேன். லைலத்துல் கத்ர் பற்றி கேட்டுவர என்னை பனூ ஸலமா கூட்டத்தினர் அனுப்பியதைத் தெரிவித்தேன். இது எத்தனையாவது இரவு என்று கேட்டனர். 22 ஆம் இரவு என்று நான் குறிப்பிட்டேன் இது தான் அந்த இரவு என்று கூறினார்கள். பின்னர் திரும்பி வந்து அடுத்த இரவும் எனக் கூறி 23 ஆம் இரவைக் குறிப்பிட்டனர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரழி) நூல்: அபூதாவூத் 1171

இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசையில் ஆபித் பின் இஸ்ஹாக் மற்றும் இப்றாஹீம் பின் தஹ்மான் ஆகிய இருவரும் பலஹீனமானவர்கள் என்று ஹதீஸ்கலை வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். எனவே இதுவும் முற்றிலும் பலஹீனமான செய்தியாகவே உள்ளது.

குறிப்பு: மேலும் இவர்கள் அரபி மொழியறிவிலும் குறையுடையவர்களாக இருப்பதால், லைலத் என்ற பதத்தை இரவு என இங்கு தவறாக மொழிபெயர்த்து மக்களை திசை திருப்புகின்றனர். இவர்கள் தலைவரே லைலத் என்ற பதத்திற்கு நாள் என்ற அர்த்தம் உள்ளது என்று கூறியதை கீழ்கண்ட இணைய இணைப்பில் சென்றுபார்க்கவும்.

http://mooncalendar.in/index.php?option=com_content&view=article&id=195:siraj-vs-pj-&catid=60:2012-03-31-13-49-52&Itemid=95

நாளின் துவக்கத்திற்கு த.த.ஜ காட்டும் ஹதீஸ் 2

ஒவ்வொரு வியாழனின் மாலை வெள்ளி இரவன்று ஆதமுடைய மக்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படும் (அப்போது) குடும்ப உறவை முறித்தவனின் அமலை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரழி) நூற்கள்: அஹ்மத் 9883 அல் அதபுல் முஃப்ரத் (61)ஷீஅபுல் ஈமான் (7056)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஹஸ்ரஜ் பின் உஸ்மான் ஸஃதி என்பவர் பலஹீனமானவர். ஆகவே இந்த செய்தி அறிவிப்பாளர் வரிசையில் உள்ள குறைபாட்டினால் ழயீஃப் ஆன அதாவது பலஹீனமான செய்தியாகும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஏர்வாடி கிளை என்ற பெயரிட்டுள்ள இயக்கம் தங்களுடைய கொள்கை பிரகடனமாக குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை கொண்டே செயல்படுகின்றோம் என கூறி வருகின்றனர். இவர்களின் பிரசுரத்தில் ஆதாரமாக காட்டியுள்ள குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ் ஆதாரங்களையும் ஆராய்ந்து பார்க்கும் போது, குர்ஆன் வசனங்களை முன்னுக்கு பின் மாற்றியும், பலஹீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையும் ஆதாரமாகக் கூறி விளக்கம் கொடுத்து மக்களை வழிகேட்டிற்கு அழைத்து செல்லும் பணியைத்தான் செய்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது.

ஒரு செய்தி குர்ஆனுக்கு மோதுவதாக தன் அறிவுக்கு தென்பட்டால் அந்த செய்தி ஆதாரப்பூர்வமானதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என வாதிடும் இந்த த.த.ஜ வினர் இந்த பிறை விஷயத்தில் வரும் குர்ஆன் வசனங்களை ஆய்வுக்கே உட்படுத்தாமல், அதை கண்டும் காணாமல் விட்டுவிட்டு, பலஹீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை தன்னிலைப் பாட்டிற்கு எவ்வாறு ஆதாரமாக கொள்கின்றார்கள் என்பது சாதாரண மக்களுக்கு கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களுடைய நிலைபாட்டை நாம் ஆராயும் போது, த.த.ஜ உடைய இயக்கத் தலைவரின் நிலைபாடு தவறாக இருந்தாலும், அதை மழுப்பி மக்களை தங்கள் இயக்கத்தில் தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கிலும், குர்ஆன் ஹதீஸ் என்ற பெயரில் தங்களின் தவறான நிலைப்பாட்டை நியாயப்படுத்தவும் இவ்வளவு பெரிய ஹதீஸ் ஆய்வு மோசடியை செய்துள்ளனர் என்றே விளங்குகின்றது.

மேலும், இவர்களும் உடன்படும் விஷயத்தில் கூட தமிழகத்தின் அனைத்து அமைப்புகளும் ஒன்று சேர்ந்து போராட அழைக்கும் போது நாங்கள் தனித்துவத்துவமான தவ்ஹீத் வாதிகள் எங்கள் போராட்ட களம் தனித்துவமாகவே இருக்கும் என்று கூறி மற்றவர்களுடன் சேர்ந்து போராட்டம் செய்ய மறுக்கும் இவர்கள், பெருநாள்கள் (பிறை) விஷயத்தில் மட்டும், இவர்களே வழிகேடர்கள், முஷ்ரிக்குள், காஃபிர்கள், என்று விமர்சிக்கின்ற சுன்னத் வல் ஜமாஅத்தினரோடு ஒரே நாளில் பெருநாள் கொண்டாடும் மர்மம் தான் என்னவோ? டவுன் காஜிக்கும் இவர்களுக்கும் இடையில் உள்ள மறைமுக ஒப்பந்தம்தான் என்னவோ? டவுன் காஜியின் அறிவிப்பிற்கு மாற்றமாக தனித்து ஒரு நாள் பெருநாள் கொண்டாடிய த.த.ஜ. அவர்களுடைய பெருநாள் திடலுக்கு தொழுகை நடத்த வந்தபோது, சுன்னத் வல் ஜமாஅத்தினர் யாருமே அவர்களுடைய பெருநாள் திடலிற்கு பெருநாள் தொழ வராததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். அந்த பெருநாள் தினத்திற்கு பின் சுன்னத் ஜமாஅத்தினர் நமது பெருநாள் திடலுக்கு வராவிட்டால் நமது நிலைமை கவலைக்கிடமாகிவிடும் என்பதை த.த.ஜ வினர் உணர்ந்து கொண்டனர். அந்த பெருநாள் தினத்தில்தான் அவர்களுடைய இயக்கத்தினர் எத்தனை பேர் த.த.ஜ இயக்க தலைவரின் பிறை நிலைபாட்டில் இருக்கின்றனர் என்பதையும் அறிந்து மேலும் அதிர்ச்சியடைந்தனர். ஆகவே இந்த நிலை தொடர்ந்து விட்டால் தங்களின் சாயம் வெளுத்துவிடும் என்ற பயத்தினால் ஒவ்வொரு வருடமும் பிறை அறிவிப்பு செய்வதற்கு காலதாமதம் ஏற்படுத்தி காஜி அறிவித்த பிறகே இவர்கள் பிறையைப்பற்றி அறிவித்து வருகின்றார்கள்.

அடுத்ததாக, இவர்கள் குறிப்பிடும் 41:9-12 வசனங்களில் எந்த இடத்திலும் நாளின் துவக்கம் மஃரிப் தான் என்று அல்லாஹ் கூற வில்லை. அல்லாஹ் அந்த வசனத்தில் சூரியனையோ சந்திரனையோ பகலையோ இரவையோ பற்றியும் குறிப்பிடவே இல்லை.

அவர்கள் குறிப்பிட்ட அந்த வசனத்திற்கும் இவர்கள் கொடுக்கும் விளக்கத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை அந்த வசனத்தை படித்துபார்ப்பவர்கள் நன்கு புரிந்து கொள்ளலாம்.

சூரியன் சந்திரன் பகல் இரவு பற்றி அல்லாஹ் கூறும் எத்தனையோ வசனங்கள் இருந்தும் அவைகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இந்த வசனத்தை காட்டுவதின் நோக்கம் என்ன என்பது புரியாத புதிராக உள்ளது.

மேலும் இரவு என்ற பதம் முன்னாலும், பகல் என்ற பதம் பின்னாலும் அமைக்கப்பட்ட ஒரு வசனத்தை அல்லாஹ் இறக்கியதை வைத்து இரவு தான் முன்னால் வந்துள்ளது அதனால் இரவில் இருந்துதான் நாளின் ஆரம்பம் என்று யாரும் கூறவே முடியாது. ஏன்என்றால், ஒரு நாளை கணக்கிட்டால் தான் ஒரு மாதத்தை கணக்கிட முடியும், ஒரு மாதத்தை கணக்கிட்டால் தான் வருடத்தை கணக்கிட முடியும்.

ஒரு நாளை எங்கிருந்து எவ்வாறு கணக்கிட வேண்டும் என்பதை அல்லாஹ்வே தெளிவுபடுத்தியதை நீங்கள் அல்குர்ஆனில் இருந்து பார்த்தால் நாளின் ஆரம்பத்தை பஜ்ரிலிருந்துதான் கணக்கிட வேண்டும் என்ற ஹிஜ்ரி கமிட்டியின் நிலைபாடு சரியானது என்பதை மக்களே நீங்கள் விளங்கிக்கொள்ள இயலும்.

அல்லாஹ் என்ன கூறுகின்றான் என்பதை பாருங்கள்.

இரவையும், பகலையும் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம். இரவின் அத்தாட்சி மங்கிடச் செய்தோம். உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற் காகவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் பகலின் அத்தாட்சியை பிரகாசமாக்கினோம். மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கின்றோம். அல்குர்ஆன் 17:12

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் ஆண்டுகளின் எண்ணிக்கையையும், கணக்கையும் அறிந்து கொள்வதற்காகவே பகலை பிரகாசமாக்கினோம் என கூறியுள்ளதிலிருந்து கணக்கிடும் முறைக்காக அல்லாஹ் ஒரு வசனத்தை நேரடியாகவே தந்துள்ளதை நாம் விளங்கிக்கொள்ளலாம். ஆண்டுகளின் எண்ணிக்கையும் கணக்கையும் அறிந்து கொள்ள ஒரு நாளை எதிலிருந்து துவங்க வேண்டும் என்பதை அல்லாஹ் கூறியே ஆக வேண்டும் என்பதால் தான் அல்லாஹ் பகலில் இருந்து கணக்கை துவங்க நமக்கு உத்தர விட்டுள்ளான். எனவேதான் ஹிஜ்ரி கமிட்டி பகலின் ஆரம்பமான ஃபஜ்ர் நேரத்திலிருந்து நாட்களை துவங்கி, அதனடிப்படையில் மாதத்தையும், வருடத்தையும் கணக்கிட்டு மக்கள் மன்றத்தில் சமர்ப்பித்து பிரச்சாரம் செய்து வருகின்றது.

நாளின் ஆரம்பம் ஃபஜ்ர் தான் என்பதற்கு ஹிஜ்ரி கமிட்டி சமர்ப்பிக்கும் ஹதீஸ் ஆதாரம்

உங்களில் ஒருவர் அறிந்த நிலையில் தன் மனைவியை அடிமையை அடிப்பது போல் அடிக்கின்றார். பின்னர் அந்நாளின் இறுதியில் அவளுடன் அவர் படுக்க நேரிடலாம். அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ ரழி நூல் புஹாரி 4942 தாரமி 2123

மேற்கண்ட செய்தியில் மின் ஆகிரி யவுமிஹி என்ற வாசகத்தை நபி (ஸல்) பயன்படுத்தியுள்ளார்கள். இதற்கு அந்த நாளில் ஒரு பகுதியான இறுதியில் என்று பொருள். மின் என்னும் வார்த்தை ஒரு பகுதி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நாளின் கடைசி பகுதி இரவுதான் என்பது தெளிவாகின்றது. அப்படியானால் முதல் பகுதி பகல் இரண்டாம் பகுதி இரவு. அதன் ஆரம்ப பகுதி பஜ்ர் ஆகும்.. ஃபஜ்ருதான் நாளின் ஆரம்பம் என்பதற்கு ஆதாரமாக சரியான தரத்ததில் அமைந்த இந்த செய்தி கூடுதல் வலு சேர்க்கின்றது.

த.த.ஜ பிரசுரத்தில் ஹிஜ்ரி கமிட்டியின் கேள்வி - 4 என குறிப்பிட்டு அவர்கள் எழுதிய பதிலுக்கு ஹிஜ்ரி கமிட்டியின் பதில்

மேலும் நாம் சூரியனை கணக்கிட்டு தொழுகை நேரத்தை முன்கூட்டியே தீர்மானிக்கும் போது சந்திரனை கணக்கிட்டு நமது நோன்பு பெருநாட்களை ஏன் அமைத்துக்கொள்ளக்கூடாது என்பதை சந்திரனுக்கு ஒரு நிலைபாடு சூரியனுக்கு ஒரு நிலைபாடா என்று நாம் மேலும் கேட்டிருந்தோம்.

சூரியன் விஷயத்தில் கணிக்கலாம் சந்திரன் விஷயத்தில் கணிக்க கூடாது என்ற முடிவை த.த.ஜ வினர் நபியின் வழிகாட்டுதலின் படியே எடுத்துள்ளதாக பதில் அளித்துள்ளனர். அவர்கள் நபியின் வழிகாட்டுதல் படித்தான் அந்த முடிவை எடுத்தார்களா? என்பதை அலசுவோம்.

முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். கணிப்பு என்பதும் கணக்கு என்பதும் ஒன்றல்ல. கணிப்பு என்பது தோராயமானது கணக்கு என்பது சரியான துல்லியமான திட்ட மிடுதல். சூரியன் விஷயத்தில் இன்று யாரும் கணித்து தொழுவதில்லை கணக்கிட்டுதான் தொழுகின்றோம். இவர்கள் கூற்றுப்படி கணித்தல் என்று சொன்னால் உறுதி செய்யப்படாத தோராயமான நேரத்திலேயே தொழுகின்றோம் என்று தான் அர்த்தம்.

உதாரணத்திற்கு ஒரு ஆட்டை மேலோட்டமாக புறக்கண்ணால் பார்த்து இதில் இத்தனை கிலோ இறைச்சி இருக்கலாம் என்று சொல்வது கணிப்பு ஆகும். அதே ஆட்டை அறுத்து அதன் இறைச்சியை எடுத்து எடை போட்டு பின்னர் இது இத்தனை கிலோதான் என்று சொல்வது கணக்கீடு ஆகும். (நாம் கணக் கீட்டுக்கும் கணிப்புக்கும் உள்ள வித்தியாசத்தை பலமுறை எடுத்துக் கூறியும் திரும்ப திரும்ப கணிப்பு என்ற பதத்தையே த.த.ஜ வினர் வேண்டுமென்றே சொல்லியும், எழுதியும் வருகின்றனர் என்பதை தெரியப்படுத்துகிறோம்)

ஆகவே கணித்தல் (ழன்னுன்) என்று சொல்வது கணக்காகவே இருக்கமுடியாது ஏனென்றால் கணித்தல் என்பதே அனுமானம் தான். கணக்கு (அல்-ஹிஸாப்) என்பது துல்லியமாக கணக்கிடும் முறைக்கு கூறப்படும் வார்த்தையாகும். எனவே கணக்கு என்று கூறுவதே சரியான பொருளை தரும் பதமாகும். சூரியனால் ஏற்படும் நிழலின் அளவை துல்லியமாக அறிந்து கணக்கிட்டு கொண்டதின் அடிப்படையில் தான் முன்கூட்டியே தொழுகை நேர அட்டவணையை தயார் செய்து இன்று நாம் தொழுது வருகின்றோம்.

சூரியனால் ஏற்படும் நிழலைப் பார்த்து தொழுத நேரத்தில் கூட முன்கூட்டியே கணக்கிட முடியாத நிலைதான் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்தது. கணிக்க முடிந்த அதே கால கட்டத்தில் கூட அவர்களால் சூரியனின் நிழலைப்பெற முடியாத நிலை ஏற்பட்டபோது கணிக்க முடியாமலும் இருந்தார்கள் என்பதை நாம் பல செய்திகளின் மூலமாக அறிந்து கொள்ள முடிகின்றது. தற்போது நாம் வாழும் காலத்தில் சூரிய நிழலைப் பார்த்து கணிக்க முடியும் போதும், முடியாத நிலை ஏற்படும் போதும், நாம் ஏற்கனவே பலவருடங்களுக்கு கணக்கிட்டு எழுதிவைத்துள்ள அட்டவணையில் உள்ள கணக்கை பார்த்து சரியான நேரத்தில் தொழுதுவருகின்றோம். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய நிழலைப் பார்த்து கணிக்க முடியாத நாட்களில் எவ்வாறு தொழுதார்கள்? நாம் இன்று முன்கூட்டியே கணக்கிட்ட தொழுகை நேர அட்டவணையைப் பார்த்து சரியான நேரத்தில் தொழுவது போல நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் தொழுதார்களா? என்பதற்கு த.த.ஜ சகோதரர்கள் பதில் தர வேண்டும்.

மேலும் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரியன் மறைந்திருந்த நேரத்தில் அவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை கீழ்காணும் செய்திகள் நமக்கு விளக்குகின்றது.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பை நிறைவு செய்த பின்னர் சூரியன் தென்பட்டது என அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்கள். நூல் புகாரி 1959

முன்கூட்டி கணக்கிட்டு நோன்பை நிறைவு செய்யும் இந்த காலகட்டத்தில் நமக்கு இப்படி ஒரு சம்பவம் ஏற்படுமா? மக்களே சிந்திக்க வேண்டும். இன்று சூரியனை மேகம் மறைத்திருக்கும் போது நாம் முன்கூட்டியே அவர்களைப் போல் நோன்பு நிறைவு செய்யலாமா?

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பயணத்தில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் ரமளான் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறையும் முன் ஒரு மனிதரிடம் நபி(ஸல்) அவர்கள், 'இறங்கிச் சென்று எனக்காக மாவு கரைப்பீராக!' என்று கூறினார்கள். அந்த மனிதர், 'இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் முடிவடையட்டுமே!' என்றார். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'இறங்கிச் சென்று மாவு கரைப்பீராக!' என்று கூறினார்கள். அதற்கவர், 'பகல் இன்னும் எஞ்சியிருக்கிறதே! மாலை நேரம் முடிவடையட்டுமே, இறைத்தூதர் அவர்களே!' என்றார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள், 'இறங்கிச் சென்று மாவு கரைப்பீராக' என்று கூறினார்கள். மூன்றாம் முறையில் அவர் இறங்கிவந்து நபி(ஸல்) அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி(ஸல்) அவர்கள் அருந்தி விட்டுத் தம் கையால் கிழக்கு நோக்கி சைகை செய்தவாறு, ' இரவு இங்கிருந்து முன்னோக்கி வருவதை நீங்கள் கவனித்தால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யட்டும்' என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரழி) அறிவித்தார்கள். நூல்: புஹாரி 5297, முஸ்லிம் 2007

அதே போல் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரனின் படித்தரங்களின் காட்சியை அடிப்படையாகக் கொண்டு கிழமைகளுக்கு தேதிகளை நிர்ணயித்தார்கள். சந்திரனின் காட்சியை பெறமுடியாத நாட்களில் அவர்கள் எவ்வாறு தேதிகளை நிர்ணயித்தார்கள்? என்பதையும் நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். தொழுகை நேரத்தை கணக்கிட முடியாவிட்டாலும் பகல் இரவு முடிந்து மீண்டும் பகல் வரும் போது நாள் மாறிவிட்டது என்பதை இலகுவாக எண்ணிக்கொண்டு வந்து மாதத்தை கணக்கிட முடியும். பல மாதங்கள் தொடர்ந்து மழைக்காலமாக இருந்தால் கூட மீண்டும் சந்திரனின் காட்சியை பெறும்போது இன்று இன்ன தேதி என்பதை சந்திரனின் படித்தரங்களில் இருந்து கணக்கிட்டு தேதியை சரி செய்து கொள்ளும் நிலையும் இருந்து வந்தது.

எனவே பல வருடங்களுக்கு நாம் சூரியனை பார்க்க முடியா விட்டாலும் இன்று தொழுகை அட்டவணையை கொண்டு தொழுவதைப்போல், சந்திரனை பல மாதங்கள் பார்க்க முடியாவிட்டாலும், கணக்கிட்டு எழுதப்பட்ட பல வருடங்களின் நாட்காட்டி தரவுகளை (புள்ளிவிபரங்களை) கொண்டு நாம் மாதங்களை துல்லியமாக ஆரம்பிக்க முடியும் என்பதை இத்தருணத்தில் சுட்டிக்காட்டிக்கொள்கின்றோம்.

சூரியக் கணக்கை அறிந்து கொள்ள முடியும் என்றால், சூரிய கணக்கை அறிந்து கொள்ளக் கூடிய அதே காலக்கட்டத்தில் சந்திர கணக்கையும் அறிந்து கொள்ள முடியும் தானே என்பது கூட த.த.ஜ சகோதரர்களுக்கு புரியவில்லையா? அல்லது புரியாதது போல் நடிக்கின்றார்களா? அல்லாஹ் சூரியனும் சந்திரனும் கணக்கின் அடிப்படையிலே இருக்கின்றன என்பதைத்தான் 55:5 அல்குர்ஆன் வசனத்தில் தெளிவுபடுத்துகின்றான்.

மேலும் சந்திரனின் படித்தரங்களை கொண்டு பல வருடங்களின் கணக்கை அறிந்து கொள்ள முடியும் என்பதை நாம் நம்முடைய சுய கருத்தாக இங்கே கூறவில்லை. அல்லாஹ்வின் வார்த்தையின் அடிப்படையிலேயே சொல்கின்றோம். வசனம் எண்.10:5 “வருடங்களின் எண்ணிக்கையும் கணக்கையும் நீங்கள் அதைக்கொண்டு கற்றுக் கொள்வதற்காக” என்று சொல்கின்றான். அல்லாஹ் இவ்வாறு ஒரு வார்த்தையை சொல்லவில்லை என்றால் சந்திர கணக்கு என்ற இந்நிலைப்பாட்டை நாமும் எடுத்துக்கொண்டிருக்கவே மாட்டோம்.

எனவே சந்திரனை கணக்கிட்டு செயல்பட தெளிவான அல்லாஹ்வுடைய அனுமதி குர்ஆனில் இருந்தும், நாம் இந்த கணக்கை ஏற்காமல் இந்த கணக்கைப்பற்றி சிந்திக்காமல், பலஹீனாமான இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை வைத்துக் கொண்டு பிறைப்பார்த்து நோன்பு வைக்கவேண்டும் மேகமூட்டம் இருந்தால் முப்பதாக பூர்த்தி செய்ய வேண்டும் என்பன போன்ற தவறான மொழிபெயர்ப்பை கொண்ட பிறைக்கணக்கிற்கு மாற்றமான நிலைப்பாட்டில் இருந்து விலகாமல் இருந்தால், அல்லாஹ்வின் கோபப்பார்வைக்கு ஆளாக நேரிடும் என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

//உதாரணமாக இந்தியாவில் சூரியன் மறையும் நேரத்தில் சவூதியில் மாலை 4 மணியாக இருக்கும். இந்தியாவில் சூரியன் மறைந்து விட்டது என்று சவூதியில் உள்ளவர்கள் நோன்பு திறப்பது கிடையாது. நமது பகுதியில் சூரியன் எப்போது மறையும் என்பதை கவனித்தே நோன்பு திறக்கின்றோம், தொழுகின்றோம் இதே அளவுகோலைத்தான் பிறை விஷயத்திலும் கொள்ள வேண்டும்// த.த.ஜ ஏர்வாடி கிளை

இந்தியாவில் உள்ள நாம் நோன்பு திறந்தபின் தான் சவூதி மக்கள் நோன்பு திறப்பார்கள் என்பது உண்மைதான். த.த.ஜ வின் கூற்று உண்மையானால் நாம் கேட்கும் கேள்விக்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள். இவர்கள் நோன்பு திறப்பதற்கு அளவு கோலாக வைக்கும் அதே இரண்டரை மணிநேர வித்தியாசத்தில் தானே சவூதிக்கும் இந்தியாவிற்கும் மாதத்தின் முதல் நாள் ஆரம்பித்து இருக்க வேண்டும். அவ்வாறு ஆரம்பிக்காமல் சவூதி முதல் நாளை ஆரம்பித்து இருபத்தொன்றரை மணிநேரம் கழித்து தானே இந்தியாவில் உள்ள த.த.ஜ வினர் 1434 ரமளான் மாதத்தை ஆரம்பித்தனர்? அதாவது புதன்கிழமை (10.07.2013)அன்று சவூதி நோன்பை ஆரம்பித்தார்கள். த.த.ஜ வினர் வியாழக்கிழமை (11.07.2013)அன்று ஆரம்பித்தனர்.

இவர்கள் கூறிய நோன்பு திறப்பதற்குரிய இரண்டரை மணி நேர வித்தியாச அளவு கோலை நோன்பை ஆரம்பிக்க அவர்கள் ஏன் பயன்படுத்தவில்லை. இவர்கள் தங்களது கூற்றில் உண்மையாளர் களாக இருந்தால் சவூதிக்கு இரண்டரை மணிநேரம் முன்னதாகவே ரமளானின் முதல்நாளை ஆரம்பித்திருக்க வேண்டுமல்லவா?

மேலும், சவூதி நம்மைவிட இரண்டரை மணி நேரம் பின்தங்கி யுள்ளது என்பது உணமைதான். நாம் மஃரிபு தொழுத பிறகு தான் அவர்கள் மஃரிபு தொழுகின்றார்கள். நாம் நோன்பு திறந்த பிறகு தான் அவர்கள் நோன்பு திறப்பார்கள். ஆனால், நோன்பு மற்றும் பெருநாள்களின் விஷயத்தில் மட்டும் த.த.ஜவினரை விட அவர்கள் முந்திச் சென்று விடுகின்றனர். இவ்வாறு முந்திச் செல்வது பூகோள ரீதியாகவும், குர்ஆன் சட்ட அடிப்படையிலும் மிகவும் தவறானதே.

ஏன்என்றால், நமக்கும் சவூதிக்கும் தொழுகை நேரத்தில் வித்தியாசம் உள்ளது உண்மைதான். அதை நாம் மறுக்கவில்லை. அந்த வித்தியாசம் நேரத்தின் அடிப்படையில் தானே தவிர, நாட்களின் அடிப்படையில் அல்ல. உதாரணமாக 3.8.2013 அன்று வெள்ளிக்கிழமை. பகல் ஒரு மணிக்கு ஜூம்ஆ வை நாம் நிறைவு செய்து விட்டோம். நாம் அன்றைய தினம் 3:30 மணியை அடையும் போதுதான் சவூதியில் ஜூம்ஆ நடைபெறும். அந்த நாளில் சவூதியில் உள்ளவர்கள் ஜூம்ஆ தொழுவதற்கு பதிலாக வியாழக்கிழமை என்றோ சனிக்கிழமை என்றோ கூறி லுஹர் தொழுகையை தொழமாட்டார்கள். நமக்கு ஜூம்ஆ உடைய நாள் தான் (3.8.2013)சவூதிக்கும் ஜூம்ஆ உடைய நாள். உலகத்தின் அனைத்து நாடுகளுக்கும் ஜும்ஆ உடைய நாள் அதுதான். இன்று நமக்கும் நாளை சவூதிக்கும் நேற்று இலங்கைக்கும் ஜூம்ஆ உடைய நாள் வராது. அதே போல் பிறை கணக்கீட்டின் படி எந்த நாளில் பெருநாள் தினமோ (புதன்கிழமை- 7.8.2013) அந்தநாள் தான் உலகம் முழுவதும் பெருநாள் தினமாகும். எனவே இரு நாடுகளுக்கிடையில் நேர வித்தியாசம் வருமே தவிர நாட்களின் வித்தியாசம் வரவில்லை. இந்த அறிவு கூட அவர்களுக்கு இல்லையா? அல்லது தெரிந்து கொண்டே மறைக்கின்றார்களா? ஆகவே த.த.ஜவினர் நம்மை நோக்கி கேள்வியெழுப்பியதை போலவே தொழுகைக்கு கூறிய அதே அளவுகோலைத்தான் பிறை கணக்கிற்கும் நாங்கள் எடுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். த.த.ஜ வினரோ தங்களின் அளவு கோலை வாயால் சொல்வதைத் தவிர செயல்பாட்டிற்கு வரும்போது முரண்பட்டு செயல்படுவார்கள். ஏன் அவ்வாறு செய்கின்றார்கள் என்பதை அல்லாஹ்வே மிக அறிந்தவன்..

இது உங்கள் ஆய்வின் பிழையா, அல்லது ஊரோடு அல்லது சுன்னத் வல் ஜமாஅத்தினருடன் சேர்ந்து பெருநாள் கொண்டாடி ஒத்துப்போக வேண்டும் என்கின்ற உங்கள் இயக்கத்தின் மறைமுக கொள்கை உடன்பாடா?

ஆகவே மனோ இச்சையின் பிரகாரம் இவர்கள் கூறும், மாதத்தின் 30வது நாள் மேற்கு திசையில், மஃரிப் நேரத்தில், பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்ப்பது தான் தீர்வு என எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் கூறி, தானும் குழம்பி, மக்களையும் குழப்பி, தவறான நாளில் நோன்பை ஆரம்பித்து, பெருநாளை கொண்டாடி, மக்களை வழி கெடுக்கும் இந்த கும்பல் பிறை விஷயத்தில் வரும் ஹதீஸ்களில் மிகப்பெரிய மோசடிகளை செய்துள்ளது என்பதை நாம் பல முறை சுட்டிக் காட்டிவிட்டோம். இவர்களை கண்மூடி பின்பற்றும் மக்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்.

மார்க்கத்திற்கு முரணான ஒரு செயல்பாட்டை மக்களிடம் திணிப்பதற்காக தவறான செய்திகளையும், தவறான மொழி பெயர்ப்புகளையும் துணிச்சலாக ஆதாரமாக காட்டுகின்றனர் என்றால், இவர்கள் மற்ற மார்க்க விஷயத்தில் சொன்ன, எழுதிய, தீர்வு வழங்கிய, அனைத்தும் எந்த தரத்தில் இருக்கும் என்பதை மக்களே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். மனித குல நாட்காட்டி பிரச்சினைக்கும், இஸ்லாமியர்களின் தற்போதைய பிறை பிரச்னைக்கும், சரியான தீர்வு கூறாமல், இஸ்லாமியர்களை வழிகெடுக்கும் இந்த மோசடி ஃபத்வா கும்பலிடமிருந்து அல்லாஹ் மனித சமுதாயத்தை பாதுகாப்பானாக. பிறை விஷயத்தில் ஏற்பட்ட குழப்பதிற்கு ஒரே ஒரு மகத்தான தீர்வு சந்திரனின் படித்தரங்களை அடிப்படையாக கொண்ட சந்திர காலண்டரை ஏற்று நடைமுறைப் படுத்துவதுதான்.

ஆகவே சரியான நாளில் நோன்பு வைத்து சரியான நாளில் பெருநாள் கொணடாட கூடிய மக்களாக இறைவன் நம்மை ஆக்கியருள் புரிவானாக.

த.த.ஜ வுடைய விவாத சவடாலில் நமது நிலைபாடு

இவர்களின் குர்ஆன் திரிபுகளையும், பலஹீனமான செய்திகளை ஆதாரமாக பயன்படுத்தியதையும் நாம் அவர்களுடைய பிரசுரத்தில் இருந்து தெளிவுபடுத்தியிருந்தோம். குர்ஆனிலிலும் ஹதீஸிலும் பொய் சொல்லும் இவர்கள் விவாத அழைப்பு விஷயத்திலும் பொய் கூறும் செயலையே செய்து வருகின்றனர். ஹிஜ்ரி கமிட்டியின் பிறை நிலைபாட்டை ஆதரிப்பவர்களில் பலர் தற்போதைய த.த.ஜ தலைவரின் பல நேரடி விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளனர். த.த.ஜ வின் நேரடி விவாத அரங்குகளில் இதுவரை ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும், பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காமல் விவாதத்தை திசைதிருப்பி நேரத்தை வீணடிக்கும் இவர்களின் தந்திரங்களையும் கருத்தில் கொண்டு இவர்களிடம் நேரடி விவாதம் நடத்துவதால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது என்று அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்டோம்.

ஆகையால், எழுத்து மூலமான நேரடி இணையத்தள விவாதம் தான் கருத்து வேறுபாடுகளுக்கு சரியான தீர்வுதரும் என்பதை நாங்கள் உணர்கின்றோம். ஒரே மேடையில் நேரடிவிவாதம் நடத்த வேண்டாம் என நாங்கள் கூறுவது பயந்ததினால் அல்ல, ஏனென்றால் இவர்களுக்கு பிறை விஷயத்தில் எந்த ஒரு நிலையான நிலைபாடும் அறவே கிடையாது. மேலும், இவர்கள் கண்மூடி பின்பற்றும் இவர்களுடைய தலைவர் ''எங்களுடைய வாதம் கூட கேள்விக்குறி தான்' என்று இலங்கையில் கூறினார். (mooncalendar.in/index.php?option=com_content&view=article&id=299:pj-ilankai-pirai-naam-parkum-pirai-moonnam-pirai&catid=60:2012-03-31-13-49-52&Itemid=95)

எனவே இவர்கள் கண்மூடி பின்பற்றும் இவர்களின் தலைவரே பகிரங்கமாக இவ்வாறு ஒப்புக்கொண்ட பிறகு நாங்கள் ஏன் இவர்களிடம் விவாதிக்க பயப்பட வேண்டும்.

த.த.ஜ வை பல காலமாக எழுத்து மூலமான விவாதத்திற்கு ஹிஜ்ரி கமிட்டி அழைத்து வருகின்றது. நமது அழைப்பையும் இருட்டடிப்பு மற்றும் திரிபும் செய்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் இவர்கள், கழுத்தை கொடுத்தாலும் எழுத்தை கொடுக்க கூடாது என்ற பழமொழிக்கேற்ப எழுத்து மூலமான நேரடி இணையத்தள விவாத முறைக்கு அஞ்சி பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி ஒழிந்து விட்டனர். எனவே இந்த பிரசுரத்தை வெளியிட்ட த.த.ஜ ஏர்வாடி கிளை சகோதரர்கள் துணிவிருந்தால் அவர்களுடைய தலைவரை எழுத்து மூலமான இணையத்தள விவாதத்திற்கு நம்மிடம் ஒப்பந்தம் செய்ய அழைத்துவரட்டும் என இப்பிரசுரம் மூலம் அறைகூவல் விடுக்கின்றோம்.

எனவே ஹிஜ்ரி கமிட்டியின் இந்த அறைகூவலை ஏற்று நமது எழுத்து மூலமான நேரடி இணையத்தள விவாதத்திற்கு வருகின்றார்களா? அல்லது பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி ஒழியப்போகின்றார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இன்ஷாஅல்லாஹ்.

பெருநாள் அறிவிப்பு:

சந்திர கணக்கீட்டின் படி ஹிஜ்ரி 1434 உடைய ரமளான் மாதம் செவ்வாய்கிழமை துவங்கி ஐந்தாவது செவ்வாய்க்கிழமையுடன் 29 நாட்களாக நிறைவடைகின்றது. எனவே எதிர்வரும் புதன்கிழமை (7.8.2013) அன்று ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும். பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பதற்கு நபி(ஸல்) தடை(ஹராம்) விதித்துள்ளார்கள். எனவே அனைவரும் அன்று பெருநாள் தினத்தை கொண்டாடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

பெருநாள் தொழுகை அறிவிப்பு:

தொழுகை நேரம்: 7:00 மணி

தொழுகை நடைபெறுமிடம்: அல்ஹுதா மெட்ரிக் பிரைமரி பள்ளி (9வது தெரு) ஏர்வாடி

இந்தியாவின் மற்ற பகுதிகளிலும், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் சந்திர கணக்கீட்டின் அடிப்படையில் பெருநாள் தொழுகை நடைபெறும் இடங்களை அறிய எங்கள் இணையத் தளமான www.mooncalendar.in சென்று அறிந்து கொள்ளவும்.

இவண்

Hijri Committee இந்திய ஹிஜ்ரி கமிட்டி

160/101, வடக்கு மெயின்ரோடு, ஏர்வாடி

Websites : www.mooncalendar.in, www.hijricalendar.com, www.hijracalendar.in.

Mobile : 99626 22000, 99626 33000, 99626 44000, 99624 77000, 99626 33844,

95007 94544, 99943 44292, 93440 96221, 94439 55333, 94432 55643, 99524 14885, 99945 16368.



நேரம் வித்தியாசப்படுவதால் ஒரு நாளுக்குரிய தேதி மாறுபடுமா?

கேள்வி : பெருநாள் கொண்டாட வேண்டும். உதாரணமாக இந்தியாவின் வடக்கு பகுதியிலுள்ள ஜெய்ப்பூரையும், தெற்குப் பகுதியிலுள்ள காயல்பட்டினத்தையும் எடுத்துக் கொள்வோம். ஜெய்ப்பூருக்கும், காயல்பட்டினத்திற்கும் அட்சரேகை மாறுபட்டிருப்பதால் பிறையின் காட்சி நேரத்தில் மிகுந்த நேர வித்தியாசம் வரும், அதனால் நோன்பும், பெருநாளும் மாறுபடத்தான் செய்யும் என்கிறார்களே இதற்கு உங்கள் பதில் என்ன?

பதில் : உலக முஸ்லிம்கள் 24 மணிநேரங்கள் கொண்ட ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்கிட வேண்டும் என்று நாம் கூறுவதை 'ஒரே நேரத்தில்' நோன்பை நோற்க வேண்டும் என்று நாம் கூறுவதாக மீண்டும் மீண்டும் திரித்துக் கூறி வருகின்றனர்.

ஜெய்ப்பூரில் ஃபஜ்ரு தொழுகை தொழும் அதே மணிநேர நிமிடத்தில் காயல்பட்டினத்தில் நாம் ஃபஜ்ரு தொழுகையைத் தொழுவாமா என்றால் அதற்கு வாய்ப்பில்லை. சில நிமிட நேரங்கள் வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்யும். அதைப்போல ஜெய்ப்பூரில் சூரியன் மறையும் அதே நேரத்தில் காயல்பட்டினத்தில் சூரியன் மறைவது இல்லைதான். ஆனால் மேற்படி இரண்டு ஊர்களுக்குமிடையே நேர வித்தியாசம் இருக்குமே அல்லாமல் நாள் வித்தியாசம் என்பது இல்லை. இதற்கு ஜெய்ப்பூர் என்ன தமிழ்நாட்டிற்குள்ளேயே இந்தகைய நிமிட நேர வித்தியாசங்கள் வரத்தான் செய்யும். ஆனால் தேதி மாறுபடுவதில்லை.

அதாவது ஜெய்ப்பூருக்கும், காயல்பட்டினத்திற்கும் வெள்ளிக்கிழமை என்பது ஒரு தேதிக்குள்தான் வருகிறது. ஜெய்ப்பூருக்கும், காயல்பட்டினத்திற்கும் தனித்தனியாக இரண்டு தேதிகளில் வெள்ளிக்கிழமை வருவதில்லை. வெள்ளிக்கிழமை என்ற 24 மணிநேரங்கள் கொண்ட அந்த ஒருநாளுக்குள்ளேயே ஜெய்ப்பூர், காயல்பட்டினம் முஸ்லிம்கள் உட்பட உலக முஸ்லிம்கள் அனைவரும் ஜூம்ஆ தொழுகையை தொழுது விடுகிறோம். இந்நிலையில் 'அட்சரேகை (Latitude)', 'பிறையின் காட்சி நேர வித்தியாசம்' என்றெல்லாம் எழுதி கஷ்டமான கேள்வியை கேட்டு விட்டதாக காண்பிப்பதில் யாருக்கும் எந்தப் பயனுமில்லை. ஒரு தீர்க்கரேகையில் (Longitude) அல்லது ஒருநாட்டில் உள்ள இரண்டு ஊர்கள் வடக்கு, தெற்கமாக அமைந்திருந்தால் அவற்றின் அட்சரேகையின் மதிப்பளவீடு வித்தியாசமாக இருப்பது இயற்கையே. அவரவருக்கு நோன்பு வரும்போதுதான் நோன்பு நோற்க வேண்டும் என்று புரிந்துகொண்டு காயல்பட்டினத்தில் ஒருநாளிலும், ஜெய்ப்பூரில் அதற்கு அடுத்த நாளிலும் நோன்பைத் துவங்கலாம் என்ற போதிப்பது ஏன்? என்று கேட்கிறோம். அவரவருக்கு பெருநாள் வரும்போதுதான் பெருநாள் கொண்டாட வேண்டும் என்று கூறிக்கொண்டு மேற்படி இரு ஊர்களிலும் வெவ்வேறு நாட்களில் பெருநாள் கொண்டாடுவது ஏன்? என்றுதான் கேட்கிறோம்.

பிறையின் காட்சி நேரத்தில் நேர வித்தியாசம் வரும் என்பதால், மேற்படி இரு ஊர்களுக்கும் வெள்ளிக்கிழமை என்ற ஒருநாளுக்குள் தெரியும் பிறை வெவ்வேறு தேதிகளைக் காட்டுமா? சற்று சிந்திப்பீர். நேர வித்தியாசம் என்பதையும், நாள் வித்தியாசம் என்பதையும் ஏன் இவர்களால் இன்னும் புரிந்து கொள்ள இயலவில்லை? தமிழ்நாட்டிற்குள்ளேயே வக்த்துகளில் இத்தகைய நிமிட நேர வித்தியாசங்கள் வருத்தானே செய்கிறது. அப்படி வருவதால் இவர்களின் இயக்கத்தவர்களும், இவர்களை இயக்குபவர்களும் தமிழ்நாட்டிற்குள் இரண்டு வெவ்வேறு நாட்களில் வித்தியாசப்பட்டு பெருநாள் கொண்டாடட்டும். செய்வார்களா?

அவரவர்களுக்கு நோன்பும், பெருநாளும் என்பதுதான் மார்க்கம் எனப் புரிந்து கொண்டதால்தான் பிறைகள் விஷயத்;தில் மாநில அளவு, ஒரு நாட்டளவு மற்றும் சர்வதேசம் என்று பிறை பார்க்கும் எல்லைகளை தாங்களாகவே நிர்ணயித்துக் கொண்டு வேறுபட்டுள்ளனர்.

இன்னும் சவுதியில் தெரியும் பிறையானது, பூமியை ஒரு ரவுண்டு சுற்றி இந்தியாவுக்குள் வந்து, நம் கண்களுக்குத் தெரிய வேண்டுமானால் இருபத்து ஒன்றரை (21.30) மணிநேரம் ஆகும் என்பதுதான் இவர்களது தலைவரின் பிறை நிலைப்பாடு. ஆக பிறை விஷயத்தில் சவுதி அரேபியாவைவிட இந்திய நாடு, ஒரு நாள் பின்தங்கி உள்ளது என்பதே இவர்களின் பிறை நிலைப்பாடும், நம்பிக்கையும் ஆகும். அப்படியானால் ஹிஜ்ரி 1436-இன் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையை சவுதி அரேபியா கடந்த 2015 செப்டம்பர் 24-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தொழுதார்கள். இவர்களது இயக்கமும் அதே செப்டம்பர் 24-ஆம் தேதி வியாழக்கிழமை பெருநாள் தொழுகையை தொழுதது ஏன்? சவுதிக்கும் இவர்களுக்கும் ஒரே நாளில் கடந்த ஹஜ்ஜூப் பெருநாள் அமைந்தது எப்படி? தவறிழைத்தது யார்? நம்மை விமர்சிக்கும் முன்னர் இதையாவது இவர்கள் சிந்திக்கட்டும்.

நேரம் வித்தியாசப்படுவதால் ஒரு நாளுக்குரிய தேதி மாறுபடுமா?

கேள்வி : அவரவருக்கு நோன்பு வரும்போதுதான் நோன்பு நோற்க வேண்டும், அவரவருக்கு பெருநாள் வரும்போதுதான் பெருநாள் கொண்டாட வேண்டும். உதாரணமாக இந்தியாவின் வடக்கு பகுதியிலுள்ள ஜெய்ப்பூரையும், தெற்குப் பகுதியிலுள்ள காயல்பட்டினத்தையும் எடுத்துக் கொள்வோம். ஜெய்ப்பூருக்கும், காயல்பட்டினத்திற்கும் அட்சரேகை மாறுபட்டிருப்பதால் பிறையின் காட்சி நேரத்தில் மிகுந்த நேர வித்தியாசம் வரும், அதனால் நோன்பும், பெருநாளும் மாறுபடத்தான் செய்யும் என்கிறார்களே இதற்கு உங்கள் பதில் என்ன?

பதில் : உலக முஸ்லிம்கள் 24 மணிநேரங்கள் கொண்ட ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்கிட வேண்டும் என்று நாம் கூறுவதை 'ஒரே நேரத்தில்' நோன்பை நோற்க வேண்டும் என்று நாம் கூறுவதாக மீண்டும் மீண்டும் திரித்துக் கூறி வருகின்றனர்.

ஜெய்ப்பூரில் ஃபஜ்ரு தொழுகை தொழும் அதே மணிநேர நிமிடத்தில் காயல்பட்டினத்தில் நாம் ஃபஜ்ரு தொழுகையைத் தொழுவாமா என்றால் அதற்கு வாய்ப்பில்லை. சில நிமிட நேரங்கள் வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்யும். அதைப்போல ஜெய்ப்பூரில் சூரியன் மறையும் அதே நேரத்தில் காயல்பட்டினத்தில் சூரியன் மறைவது இல்லைதான். ஆனால் மேற்படி இரண்டு ஊர்களுக்குமிடையே நேர வித்தியாசம் இருக்குமே அல்லாமல் நாள் வித்தியாசம் என்பது இல்லை. இதற்கு ஜெய்ப்பூர் என்ன தமிழ்நாட்டிற்குள்ளேயே இந்தகைய நிமிட நேர வித்தியாசங்கள் வரத்தான் செய்யும். ஆனால் தேதி மாறுபடுவதில்லை.

அதாவது ஜெய்ப்பூருக்கும், காயல்பட்டினத்திற்கும் வெள்ளிக்கிழமை என்பது ஒரு தேதிக்குள்தான் வருகிறது. ஜெய்ப்பூருக்கும், காயல்பட்டினத்திற்கும் தனித்தனியாக இரண்டு தேதிகளில் வெள்ளிக்கிழமை வருவதில்லை. வெள்ளிக்கிழமை என்ற 24 மணிநேரங்கள் கொண்ட அந்த ஒருநாளுக்குள்ளேயே ஜெய்ப்பூர், காயல்பட்டினம் முஸ்லிம்கள் உட்பட உலக முஸ்லிம்கள் அனைவரும் ஜூம்ஆ தொழுகையை தொழுது விடுகிறோம். இந்நிலையில் 'அட்சரேகை (Latitude)', 'பிறையின் காட்சி நேர வித்தியாசம்' என்றெல்லாம் எழுதி கஷ்டமான கேள்வியை கேட்டு விட்டதாக காண்பிப்பதில் யாருக்கும் எந்தப் பயனுமில்லை. ஒரு தீர்க்கரேகையில் (Longitude) அல்லது ஒருநாட்டில் உள்ள இரண்டு ஊர்கள் வடக்கு, தெற்கமாக அமைந்திருந்தால் அவற்றின் அட்சரேகையின் மதிப்பளவீடு வித்தியாசமாக இருப்பது இயற்கையே. அவரவருக்கு நோன்பு வரும்போதுதான் நோன்பு நோற்க வேண்டும் என்று புரிந்துகொண்டு காயல்பட்டினத்தில் ஒருநாளிலும், ஜெய்ப்பூரில் அதற்கு அடுத்த நாளிலும் நோன்பைத் துவங்கலாம் என்ற போதிப்பது ஏன்? என்று கேட்கிறோம். அவரவருக்கு பெருநாள் வரும்போதுதான் பெருநாள் கொண்டாட வேண்டும் என்று கூறிக்கொண்டு மேற்படி இரு ஊர்களிலும் வெவ்வேறு நாட்களில் பெருநாள் கொண்டாடுவது ஏன்? என்றுதான் கேட்கிறோம்.

பிறையின் காட்சி நேரத்தில் நேர வித்தியாசம் வரும் என்பதால், மேற்படி இரு ஊர்களுக்கும் வெள்ளிக்கிழமை என்ற ஒருநாளுக்குள் தெரியும் பிறை வெவ்வேறு தேதிகளைக் காட்டுமா? சற்று சிந்திப்பீர். நேர வித்தியாசம் என்பதையும், நாள் வித்தியாசம் என்பதையும் ஏன் இவர்களால் இன்னும் புரிந்து கொள்ள இயலவில்லை? தமிழ்நாட்டிற்குள்ளேயே வக்த்துகளில் இத்தகைய நிமிட நேர வித்தியாசங்கள் வருத்தானே செய்கிறது. அப்படி வருவதால் இவர்களின் இயக்கத்தவர்களும், இவர்களை இயக்குபவர்களும் தமிழ்நாட்டிற்குள் இரண்டு வெவ்வேறு நாட்களில் வித்தியாசப்பட்டு பெருநாள் கொண்டாடட்டும். செய்வார்களா?

அவரவர்களுக்கு நோன்பும், பெருநாளும் என்பதுதான் மார்க்கம் எனப் புரிந்து கொண்டதால்தான் பிறைகள் விஷயத்;தில் மாநில அளவு, ஒரு நாட்டளவு மற்றும் சர்வதேசம் என்று பிறை பார்க்கும் எல்லைகளை தாங்களாகவே நிர்ணயித்துக் கொண்டு வேறுபட்டுள்ளனர்.

இன்னும் சவுதியில் தெரியும் பிறையானது, பூமியை ஒரு ரவுண்டு சுற்றி இந்தியாவுக்குள் வந்து, நம் கண்களுக்குத் தெரிய வேண்டுமானால் இருபத்து ஒன்றரை (21.30) மணிநேரம் ஆகும் என்பதுதான் இவர்களது தலைவரின் பிறை நிலைப்பாடு. ஆக பிறை விஷயத்தில் சவுதி அரேபியாவைவிட இந்திய நாடு, ஒரு நாள் பின்தங்கி உள்ளது என்பதே இவர்களின் பிறை நிலைப்பாடும், நம்பிக்கையும் ஆகும். அப்படியானால் ஹிஜ்ரி 1436-இன் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையை சவுதி அரேபியா கடந்த 2015 செப்டம்பர் 24-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தொழுதார்கள். இவர்களது இயக்கமும் அதே செப்டம்பர் 24-ஆம் தேதி வியாழக்கிழமை பெருநாள் தொழுகையை தொழுதது ஏன்? சவுதிக்கும் இவர்களுக்கும் ஒரே நாளில் கடந்த ஹஜ்ஜூப் பெருநாள் அமைந்தது எப்படி? தவறிழைத்தது யார்? நம்மை விமர்சிக்கும் முன்னர் இதையாவது இவர்கள் சிந்திக்கட்டும்.

சகோதரர் ஷாகுல் ஹமீது அவர்களின் கேள்விக்கு பதில்?

2009/8/25 shahul hameed

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்புச்சகொதரர்களே ,

ஏன் இந்த ஆராய்ச்சி நமக்கு ரசூல்(ஸல்) சொல்கிற படி பிறை பார்த்து நோன்பு வைங்க அதை விட்டுவிட்டு இப்படி ஆராய்ச்சி இறங்கினால் இத்தா விற்கு ஏன் நான்கு மாதம் என்ற கேள்வி வரும் எனேன்றால் பெண்ணின் வயத்தில் குழந்தை இருக்கா அல்லது இல்லையா என்று உடனே இப்போது சொல்லமுடியும்.

fromAbdul Kadar

ccMohamed Safiq

dateTue, Aug 25, 2009 at 10:33 AM

subject{TMB} Re: பிறைபற்றிய கேள்விக்கு பதில் / சகோதரர் முஹம்மத் சஃபீக்

அஸ்ஸலாமு அலைக்கும்

பெண்ணின் வயத்தில் குழந்தை இருக்கா அல்லது இல்லையா என்று உடனே இப்போது சொல்லமுடியும்

பிறகு ஏன் இத்தா விற்கு ஏன் நான்கு மாதம்….?

—- இதே கேள்வியை நான் சில jaqh நண்பர்களிடம் கேட்டேன். அவர்கள் சரியாக பதில் தராத காரணத்தினால் தான் நான் அவர்களின் பிறை பற்றிய தெளிவுரை-யை ஏற்று கொள்ளவில்லை.

—-யாரேனும் மேல உள்ள கேள்விக்கு சரியான விளக்கம் கொடுத்தால், இன்ஷா அல்லாஹ் இன்னும் பல மக்கள் jaqh-ன் பிறை விஷயத்தை பின்பற்றுவார்கள்.

thanks with salaam

Abdul Kadar.A

சென்னை

fromAERO TRAVELS

toshahul.1982@gmail.com,

tamilmuslimbrothers@googlegroups.com

dateTue, Aug 25, 2009 at 12:26 PM

subjectRe: {TMB} Re: பிறைபற்றிய கேள்விக்கு பதில் / சகோதரர் முஹம்மத் சஃபீக்

mailed-bygmail.com

hide details Aug 25

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பான சகோதர் ஷாகுல் அவர்களுக்கு

தாங்கள் ஒன்றை நினைவில் வைக்கவும். அல்லாஹ் எங்கு சிந்திக்க சொல்கிறோனோ அங்கு நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்.

இத்தாவை பொறுத்தவரை அல்லா`ஹ் திருமறையில் ‘உங்கள் பெண்களில் எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (இனி கருவுறுவாளா) என்று சந்தேகப்பட்டால் அப் பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாத பெண்களுக்கும் ‘இத்தா’ காத்திருக்கும் தவணை மூன்று மாதங்களாகும். (அல் குர்ஆன் 65:4)

இங்கு நீங்கள் சொல்லும் போல் குழந்தை கருவறையில் இருக்கிறதா? இல்லையா? என்பதை அறியத்தான் இத்தா என்பது தவறானது என்பதை இந்த வசனத்தில் இருந்து நீங்கள் படிப்பினை பெறலாம்.

மேலும் அல்லாஹ் அல்குர்ஆன் 10வது அத்தியாயம் 5 வசனத்தில் என்ன கூறுகின்றான் என்பதை படித்து பார்த்தீர்களானால் நமக்கு இந்த ஆய்வின் அவசியம் உங்களுக்கு புரியலாம் என நினைக்கிறேன்.

அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான். அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.

அறிவை உபயோகப்படுத்த அல்லாஹ்வின் உத்தரவு வந்ததினால் தான் இவ்வளவு ஆராய்ச்சியும் செய்யவேண்டிய கட்டாயத்தில் ஆகிவிட்டோம்.

மேலும் அல்லாஹ்வுடைய படைப்பான சந்திரனை கொண்டு மட்டுமே நாட்காட்டி (calendar) தயாரிக்கப்பட்டு உலக மக்களால் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே நம்முடைய இந்த ஆய்வின் இன்னொரு முக்கிய அம்சமாகும்.

விளக்கும் போதும் என நினைக்கிறேன். தெளிவு கிடைக்கவில்லை என்றால் தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு

தங்கள் அன்புச்சகோதரன்

சிராஜ் ஏர்வாடி

fromAERO TRAVELS

toakadarabdul87@gmail.com,

tamilmuslimbrothers@googlegroups.com

dateTue, Aug 25, 2009 at 2:13 PM

subjectRe: {TMB} Re: பிறைபற்றிய கேள்விக்கு பதில் / சகோதரர் முஹம்மத் சஃபீக்

mailed-bygmail.com

hide details Aug 25

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பான சகோதர் அப்துல்காதர் அவர்களுக்கு,

தாங்கள் ஒன்றை நினைவில் வைக்கவும். அல்லாஹ் எங்கு சிந்திக்க சொல்கிறோனோ அங்கு நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்.

இத்தாவை பொறுத்தவரை அல்லாஹ் “திருமறையில் ‘உங்கள் பெண்களில் எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (இனி கருவுறுவாளா) என்று சந்தேகப்பட்டால் அப் பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாத பெண்களுக்கும் ‘இத்தா’ காத்திருக்கும் தவணை மூன்று மாதங்களாகும். (அல் குர்ஆன் 65:4)”

இங்கு நீங்கள் சொல்வது போல் குழந்தை கருவறையில் இருக்கிறதா? இல்லையா? என்ற காரணத்திற்காக மட்டும் அல்லாஹ் இத்தாவை ஆக்கவில்லை, என்பதை மேற்குறிப்பிடப்பட்ட வசனத்தில் இருந்து அறியலாம். குழந்தை பெறமுடியாதவர்களுக்கும் இத்தா கடமையாக உள்ளது என்பதை கருத்தில் கொண்டால் உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்துவிடும்.

மேலும் அல்லாஹ் அல்குர்ஆன் 10வது அத்தியாயம் 5 வசனத்தில் என்ன கூறுகின்றான் என்பதை படித்து பார்த்தீர்களானால் நமக்கு இந்த ஆய்வின் அவசியம் உங்களுக்கு புரியலாம் என நினைக்கிறேன்.

அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான். அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.

அறிவை உபயோகப்படுத்த அல்லாஹ்வின் உத்தரவு வந்ததினால் தான் இவ்வளவு ஆராய்ச்சியும் செய்யவேண்டிய கட்டாயத்தில் ஆகிவிட்டோம்.

மேலும் அல்லாஹ்வுடைய படைப்பான சந்திரனை கொண்டு மட்டுமே நாட்காட்டி (calendar) தயாரிக்கப்பட்டு உலக மக்களால் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே நம்முடைய இந்த ஆய்வின் இன்னொரு முக்கிய அம்சமாகும்.

விளக்கும் போதும் என நினைக்கிறேன். தெளிவு கிடைக்கவில்லை என்றால் தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு

தங்கள் அன்புச்சகோதரன்

சிராஜ் ஏர்வாடி

2009/8/25 Abdul Kadar

- Show quoted text -

அஸ்ஸலாமு அலைக்கும்

பெண்ணின் வயத்தில் குழந்தை இருக்கா அல்லது இல்லையா என்று உடனே இப்போது சொல்லமுடியும்

பிறகு ஏன் இத்தா விற்கு ஏன் நான்கு மாதம்….?

—- இதே கேள்வியை நான் சில jaqh நண்பர்களிடம் கேட்டேன். அவர்கள் சரியாக பதில் தராத காரணத்தினால் தான் நான் அவர்களின் பிறை பற்றிய தெளிவுரை-யை ஏற்று கொள்ளவில்லை.

—-யாரேனும் மேல உள்ள கேள்விக்கு சரியான விளக்கம் கொடுத்தால், இன்ஷா அல்லாஹ் இன்னும் பல மக்கள் jaqh-ன் பிறை விஷயத்தை பின்பற்றுவார்கள்.

– thanks with salaam

Abdul Kadar.A சென்னை

2009/8/25 shahul hameed

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச்சகொதரர்களே ,

ஏன் இந்த ஆராய்ச்சி நமக்கு ரசூல்(ஸல்) சொல்கிற படி பிறை பார்த்து நோன்பு வைங்க அதை விட்டுவிட்டு இப்படி ஆராய்ச்சி இறங்கினால் இத்தா விற்கு ஏன் நான்கு மாதம் என்ற கேள்வி வரும் எனேன்றால் பெண்ணின் வயத்தில் குழந்தை இருக்கா அல்லது இல்லையா என்று உடனே இப்போது சொல்லமுடியும்

fromshahul hameed

toAERO TRAVELS

cctamilmuslimbrothers@googlegroups.com

dateWed, Aug 26, 2009 at 2:11 AM

subjectRe: {TMB} Re: பிறைபற்றிய கேள்விக்கு பதில் / சகோதரர் முஹம்மத் சஃபீக்

mailed-bygmail.com

hide details Aug 26

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பு சகோதரர் அவர்களே

உங்கள் கேள்வியில் இருந்தே நான் ஒரு கருத்தை சொல்கிறேன்

நீங்கள் சொல்வது போல் மாதவிடாய் நின்ற பெண்ணுக்கும் இத்தா உண்டு என்பதில் நமக்கு நெருடல் இருந்தாலும் அல்லாஹ் செல்லிவிட்டான் என்பதற்காக அதை நிச்சயமாக அதை ஏற்கத்தான் செய்யணும் எனென்றால்

” அல்லாஹ் உம் அவனது தூதரும் ஒரு காரியத்தில் முடிவெடுத்துவிட்டால் அதில் சொந்த அபிப்ராயம் கொள்ள யாருக்கும் உரிமை இல்லை அவ்வாறு கொள்வராயின் அவர்கள் பகிங்கர வழிகேட்டில் உள்ளனர்” – அல் குர் ஆன்

ஆக பிறை விசயத்தில் நாம் சொந்த அபிப்ராயம் கொண்டு கணிப்பு க்கு நீங்கள் மேற்கோள் காட்டிய வசனத்தை ஆதாரமாக கொள்ள முடியாது

அது காலம் கட்டி தான் என்றே மெசேஜ் யை தான் தருகிறது தவிர கணிப்புக்கு ஆதாரம் அதில் இல்லை.

fromAERO TRAVELS

toshahul hameed

cctamilmuslimbrothers@googlegroups.com

dateWed, Aug 26, 2009 at 8:26 AM

subjectRe: {TMB} Re: பிறைபற்றிய கேள்விக்கு பதில் / சகோதரர் முஹம்மத் சஃபீக்

mailed-bygmail.com

hide details Aug 26

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பான சகோதரர் ஷாகுல் அவர்களே!

திருக்குர்அனின் வசனம் 10:5 ல் உள்ள வாசகத்தை சற்று படித்துபாருங்கள்

ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்.

நீங்கள் ஒரு மாதத்திற்கான பிறையையே தற்போது சரியாக கணக்கிட முடியாதவாகளாக இருக்கிறீர்கள். அல்லாஹ்வோ சந்திரனின் படித்தரங்கள் மூலம் ஆண்டுகளின் எண்ணிக்கை என பன்மையில் கூறுவதையும், அதுவும் எதிர்கால வினையிலும் அறிவிப்பது தான் இந்த வசனத்தின் சிறப்பம்சம்.

சந்திரன் பற்றி சுமார் 28 இடங்களில் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அனைத்தையும் படித்து ஒரு முடிவிற்கு வரவும்.

அதில் இருந்து உங்களுக்கு சிந்திக்க முடியவில்லை என்றால் மறுமையில் அதை அல்லாஹ் தீர்பளிக்கும் போது நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். யார் மீது இந்த மார்க்கத்தை திணிப்பது எங்கள் நோக்கமல்ல. சீர்திருத்தை ஏற்படுத்துவததே நமது பணியாக உள்ளது என்பதை சிந்திக்கவும்.

மற்றவை பின்

இப்படிக்கு

சிராஜ் ஏர்வாடி

fromshahul hameed

akadarabdul87@gmail.com

dateFri, Aug 28, 2009 at 6:55 PM

அஸ்ஸலாமு அலைக்கும்

அல் குர் ஆன் 65 : 4 யில் அல்லாஹ் என்ன சொல்கிறான் “….கர்ப்பிணி பெண்களின் காலக்கெடு அவர்கள் பிரசவிப்பதாகும்…”

கணவன் மரணிக்கும் போது மனைவி நிறை மாத கர்பிணியாக இருந்து கணவன் இறந்த அன்றே பிரசவித்து விட்டால் அவளுக்கு இத்தா ஏதும் கிடையாது

கணவன் மரணிக்கும் போது மனைவி முதல் மதக்கருவை சுமந்தால் அவள் பிரசவிக்கும் வரை மறுமணம் (இத்தா) செய்யக்கூடாது. அதற்கு எட்டு அல்லது ஒன்பது மாதம் ஆகலாம். இதுதான் இந்த வசனத்திலிருந்து விளங்கும் சட்டம்.

இதில் வயற்றில் வரும் கரு தான் முக்கிய இடம் வகிக்கிறது

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர் சாகுல் அவர்களுக்கு,

நான் குர்ஆனில் இருந்து எடுத்த வசனம் இதுதான். நீங்கள் மேலே உள்ளதை விட்டுவிட்டால் எப்படி சரியாகும். சிந்தியுங்கள் செயல்படுங்கள்

65:4. மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், ‘இத்தா”(வின் தவணை) மூன்று மாதங்களாகவும், தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (‘இத்தா”வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும், மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்.

இப்படிக்கு

சிராஜ் ஏர்வாடி

fromshahul hameed

toAERO TRAVELS

cctamilmuslimbrothers@googlegroups.com

dateSun, Aug 30, 2009 at 5:39 PM

subjectRe: {TMB} Re: பிறைபற்றிய கேள்விக்கு பதில் / சகோதரர் முஹம்மத் சஃபீக்

mailed-bygmail.com

hide details Aug 30

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பு சகொதரே

65 : 4 இறை வசனத்தில் மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் மூன்று மாதம் இத்தா என்று அல்லாஹ் சொல்வது உண்மைதான்

அதற்கு காரணம்

1.கணவனை இழந்த அல்லது விவாகரத்து பெற்ற பெண்கள் மறுமணம் செய்ய மாதவிடாய் நிற்காத நிலையில் அது நின்று விட்டதாக பொய் சொல்ல வாய்ப்பு உள்ளது இதை தவிர்க்க

2.மாதவிடாய் நின்று விட்டது அந்த பெண்களுக்கு மட்டுமே தெரியும் விஷயம், சமுதாயத்திற்கு தெரிய

அப்படி இல்லையெனில் அடுத்தவன் குழந்தைக்கு இன்னொருவன் தகப்பன் ஆகும் நிலை ஏற்படும்.

பீஜேவுக்கு மூளை வரண்டது ஏன்?

(ஹிஜ்ரி கமிட்டி குழுமத்தில் சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள் "இவர் என்ன சொல்ல விரும்புகின்றார்?" என்ற தலைப்பில் பதிந்த பதிவிற்கு பீஜே அவர்கள் நேரடியாக பதில் அளிக்காமல், ஒரு நாளின் ஆரம்பம் பஜ்ரு என்பதை மறுத்தும், ஹிஜ்ரி கமிட்டியை வழக்கம்போல் கடுமையான வார்த்தைகளை கொண்டு விமர்ச்சித்தும் பீஜே தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள கட்டுரைக்கு பதில்)

அன்பின் சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......

கடும்கோபம் கொப்பளிக்க, ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று ஹிஜ்ரிகமிட்டிக்கு பதில் என பீஜே புனைந்துள்ள அந்த அபத்தக் கருத்துக்களை நாமும் பார்வையிட்டோம். ஹிஜ்ரி கமிட்டியினர் மூளை வரண்டவர்கள், குழப்பவாதிகள், வரட்டுக் கும்பல், விவாதம் என்றவுடன் பின்னங்கால் பிடரியில் பட ஓடுபவர்கள் என்றெல்லாம் பீஜே தனக்கே உரித்தான பாணியில் நம்மீது இட்டுக்கட்டியுள்ளார்.

கண்ணாடியின் முன்னின்று தனது கோர முகத்தைப் பார்த்துவிட்டு ஹிஜ்ரி கமிட்டியினரும் தன்னைப் போன்றுதான் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு நம்மை இழிவுபடுத்தியிருப்பது கண்டு பரிதாபப்படுகிறோம். அவருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். இப்பதில் பதிவு சற்று நீளமாக ஆகிவிட்டதை பொறுத்துக்கொண்டு, பொறுமையாக இறுதிவரை படிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

பீஜே நிதானம் இழந்து நம்மை திட்டியுள்ளது எத்தகைய ஆச்சரியத்தையும் நமக்கு ஏற்படுத்திடவில்லை. காரணம் சங்கைக்குரிய மலக்குகள் முதல் கண்ணியத்திற்குரிய நபிமார்கள் உட்பட இறைபொருத்தம் பெற்ற ஸஹாபாக்கள் வரை தனது வன்மப் பேச்சுக்களால் அவர்களை சிறுமைப்படுத்தி இழிவுபடுத்தியவர்தான் இந்த பீஜே என்பதும், தனது கோரசிந்தனையின் உச்சகட்டமாக எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீனாம் அல்லாஹ்வின் சிஃபத்துகள் மீதே கைவைத்து வல்ல அல்லாஹ்வையே கேவலப்படுத்தியவர்தான் இந்த பீஜே என்பதையும் தமிழ்பேசும் முஸ்லிம்கள் நன்கு அறிந்தே வைத்துள்ளனர்.

குர்ஆன் வலியுறுத்தும் பிறை கணக்கீட்டை மக்களிடம் எடுத்துச் சொல்லும் ஹிஜ்ரி கமிட்டியை இவர் விமர்சிக்க எள் முனையளவும் தகுதியற்றவர். காரணம் அல்லாஹ் தஹஜ்ஜத் வேளையில் அடிவானத்திற்கு இறங்குகிறான் என்ற விஷயத்தை பற்றி பேசும்போது அல்லாஹ் அப்படி இறங்கினால் அர்ஷ் காலியாகிவிடும் என்று கூறியவர்தானே இந்த பீஜே. இவ்வாறு அல்லாஹ்வையே பலவீனப்படுத்தி, அவருடைய வரட்டு சிந்தனையில் உருவான கொள்கைகளை தவ்ஹீதின் பெயரால் தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய சீமான் பீஜேயின் அபத்தங்களையும் பித்தலாட்டங்களையும் நாங்கள் விளக்கித்தான் உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. அத்தகைய பித்தலாட்டங்களில் ஒன்றுதான் பல பரிணாம வளர்ச்சிகள் பெற்று அடிக்கடி மாறிக் கொண்டிருக்கும் இவரின் பிறை நிலைபாடும் ஆகும்.

இன்னும் மலக்குகள் அல்லாஹ்விடம் ஆட்சேபனை செய்தார்கள், நபி தாவூது (அலை) அடுத்தவரின் நிலத்தை அபகரித்து இருக்கக் கூடும், குர்ஆனின் வசனங்களில் நிச்சயமாக என்ற பொருளைத்தரும் வாசகங்கள் வெறும் அரபு பேச்சு வழக்குகள்தான் அதை மொழி பெயர்க்கத் தேவையில்லை, சுவர்க்கம் நரகம் படைக்கப்படவில்லை, அவ்வாறு படைக்கப்பட்டிருந்தாலும் அது ஒரு உதாரணத்திற்கு படைக்கபட்டது தான், அந்த சுவர்க்கமும் அழிந்துவிடும். காரணம் (குல்லு மன் அலைஹா ஃபான்) 55:26-27 வசனங்களில் அல்லாஹ்வின் முகத்தைத் தவிர அனைத்தும் அழிந்து போகக்கூடியதே என அல்லாஹ் கூறுகின்றான், என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து தனக்கு மூளை வரண்டுவிட்டது என்பதை தெளிவாக நிரூபித்தவரே இந்த பீஜே. ஹிஜ்ரிகமிட்டியினராகிய நாம் இவரோடு பிறைபற்றிப் விவாதம் செய்யப் பயப்படுவதாக இன்று சிறுபிள்ளைத்தனமாக விமர்ச்சித்திருப்பது 21ம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற நகைச்சுவை எனலாம்.

கடந்த 2000 ம் ஆண்டு ஏர்வாடி பிறைவிவாதத்தில் முகத்திரை கிழிக்கப்பட்டது யாருக்கு என்பதையும், பிறை உட்பட மார்க்க விஷயத்தில் குழப்பம்செய்யும் பெரும் குழப்பவாதி யார்? மூளை வரண்டது யாருக்கு? என்பதையும் மக்கள் தெளிவாகவே விளங்கி வைத்துள்ளனர்.

நெல்லை ஏர்வாடி பிறை விவாதத்தில் கடும் தோல்வியுற்ற பீஜே இன்று கோபப்படுவது போன்றே அன்றும் விவாத ஏற்பாட்டாளர்கள் மீது அபூஅப்தில்லாவை அழைத்து வந்தது ஏன்? என்று சினம் கொண்டது இன்றும் எங்களுக்கு பசுமையாக நினைவில் இருக்கிறது. விவாதம் நடத்தி அந்த சிடிக்களை விற்று மார்க்க பிழைப்பு நடத்தும் பீஜே 2000 ஏர்வாடி பிறை விவாத சீடியை வெளியிடாமல் மறைக்கும் அளவிற்கு அவரை அல்லாஹ் கேவலப்படுத்தினான் என்பது பழைய தவ்ஹீது சகோதரர்களுக்கு நன்கு தெரியும், பீஜேயின் தற்போதைய ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

அல்லாஹ்வை எத்தகைய பலஹீனமும் அற்றவன் என்று நம்புவது முதல் அவனது மலக்குமார்களை, வேதங்களை, ரஸூல்மார்களை நம்பவேண்டிய அடிப்படையில் நம்புவது உட்பட ஜக்காத் போன்ற இஸ்லாமிய அடிப்படை விஷயங்கள் வரை ஆட்டம் கண்டுவிட்ட இந்த பீஜேயிடம் விவாதித்துதான் நமது பிறை நிலைபாட்டை நிலை நாட்டிடவேண்டும் என்ற நிர்பந்தம் முஸ்லிம்களாகிய நமக்கு இல்லை. யாருடைய கொள்கை சரி தவறு என்பதை உறுதிப்படுத்த மாற்றுக்கொள்கையினருடன் விவாதம் செய்துதான் மார்க்கத்தை நிலைநாட்ட வேண்டும் என முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வோ தூதரோ எந்த ஒரு கட்டளையையும் இடவில்லை.

நபித்தோழரை கிருமினல் என்று நாக்கூசாமல் கூறிய இந்த பீஜேவிற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் எத்தகைய உரிமையும் கோரமுடியாது. மக்கள் மறதியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஹிஜ்ரி கமிட்டி இவரோடு விவாதம் செய்யப் பயப்படுகிறது என இன்று பொய்ப்பிரச்சாரம் செய்யும் இந்த பீஜே, கடந்த 2000ம் ஆண்டு நடைபெற்ற ஏர்வாடி பிறைவிவாதத்திலும், அதன்பின்னர் 2005ல் மதுரையில் நடைபெற்ற பிறை விவாதத்திலும் தனது தோல்வியை பகிரங்கமாக மக்கள் மத்தியில் முதலில் ஒப்புக்கொள்ளட்டும். அதன்பின் ஏற்கனவே விவாதத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு, பீஜே ஒப்புக்கொள்ளாமல், பொய்களை கூறி இழுத்தடித்துக் கொண்டிருக்கும் எழுத்து மூலமான இணையத்தள விவாத அழைப்பை ஏற்றுக்கொள்ளட்டும்.

மேலும், அன்பின் சகோதர சகோதரிகளே! நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று பீஜே சொன்னாரா? என்ற அவரது பதிவில் உள்ளவைகளை வரிக்கு வரி ஆய்வு செய்வோம்.

//ஹிஜ்ரா கமிட்டி என்ற பெயரில் செயல்படும் மூளை வரண்ட கூட்டத்தினருக்கு மார்க்கமும் தெரியவில்லை. விஞ்ஞானமும் தெரியவில்லை. அபத்தங்களின் ஒட்டு மொத்த தொகுப்பாக அவர்களின் வாதங்கள் அமைந்துள்ளன. இது குறித்து விவாதம் செய்ய அழைத்தால் பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் எடுக்கின்றனர். பரேலவிகளும் பல ஆண்டுகள் போக்கு காட்டிய சைபுத்தீன் ரஷாதியும் கூட பகிரங்க விவாதத்துக்கு தயாராக இருக்கும் போது இவர்கள் ஓட்டம் பிடிப்பதில் இருந்து இவர்களின் அறிவுத்திறனை அறிந்து கொள்ளலாம். // Online PJ

'அண்ணே பின்னிட்டீங்க போங்க' என்று இதை படிக்கும் இவரது ரசிகர்களுக்கு உணர்ச்சியூட்டி பக்திப்பரவசமாக்க இப்படி எழுதியுள்ளார் போலும்.

சைபுதீன் ரஷாதியோடு விவாதம் செய்யவிருக்கும் இந்த பீஜே, தான் பொய்யன் பித்தலாட்டக்காரன் என்று நீரூபணமாகிவிட்டால் அதன்பிறகு மார்க்க விஷயங்களை பிரச்சாரம் செய்யமாட்டேன் என்று ஒப்பந்தம் போட்டுள்ளார். எனவே அந்த ஒப்பந்தப்படி அவர் நடப்பதில் உறுதியாக இருந்தால் அந்த விவாதம் நடக்கும் முன்னரே, கடந்த 2000ம் ஆண்டு ஏர்வாடி பிறைவிவாதத்திலும், 2005ல் மதுரை பிறை விவாதத்திலும் தான் தோல்வி அடைந்ததையும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு, ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டு, பீஜே இழுத்தடித்துக் கொண்டிருக்கும் எழுத்து மூலமான இணையத்தள விவாதத்தில் எங்களையும் எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும் பீஜேவிற்கு மாற்றுக் கருத்து கொண்டவர்களை மூச்சுக்கு முன்னூறு தடவை விவாதத்திற்கு அழைத்து பயம் காட்டும் பீஜே ஒருபோதும் விவாதம் செய்ய இதுவரை நம்மை அழைத்ததில்லை. அவ்வாறு நம்மை அவர் அழைத்திருந்தால் அதற்கான ஆதாரத்தை காட்டட்டும். நாம் தான் அவர்களை பல முறை விவாதம் செய்ய அழைத்தோம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அவருடன் எழுத்து மூலமான விவாத அழைப்பிற்கு நாம் அழைத்ததும் பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் எடுத்தவர் தான் பீஜே. இன்னும் சொல்லப்போனால் நமது விவாத அழைப்பு சம்மந்தமான எந்த பதிவையும் பீஜே அவருடைய இணையத்தளத்தில் இதுவரை வெளியிடவில்லை. இந்த ரகசியம் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?. அதன் விபரங்களை அறிந்து கொள்ள கீழ்கண்ட சுட்டிகளில் சென்று பார்வையிடவும்.

பீஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு

பீஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில்

மக்களே! அறிவுத்திறனை முழுகுத்தகைக்கு எடுத்துள்ள இந்த விவாதப்புலி எங்களுக்கு பதில் என்று பிதற்றியுள்ள பின்வரும் வாசகத்தையும் படித்து மகிழுங்கள்.

//இப்போது கூறு கெட்ட குழப்பவாதிகள் நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று கண்டு பிடித்துள்ளதால் இவர்களுக்கு இடம் தரக்கூடாது என்பதற்காக ஒன்பதாம் நாள் என்று பேச்சுவழக்கில் சேர்த்ததை நீக்கி விட்டோம் // Online PJ

இஸ்லாமிய மார்க்கத்தில் இது போன்று இட்டுகட்டி பதிந்துவிட்டு, பேச்சுவழக்கில் எழுதிவிட்டோம் என பின்னங்கால் பிடரியில் அடிக்க தங்களுடைய பதிவை திருத்துவதில் இருந்து இவர்களுடைய மார்க்க அறிவின் தெளிவையும், அளவையும் மக்களே நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். இவர்கள் பேச்சு வழக்கில் மார்க்கத்தை எப்படியும் வளைப்பார்கள் என்பதை அவர்களை அறியாமலேயே ஒப்புக் கொண்டுள்ளதற்கு அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.

இவர் பேச்சில் மக்களை ஏமாற்றி வருகின்றார் என்பதை நாம் முன்பே அறிந்திருந்ததால் தான் பீஜேயை நாம் எழுத்து மூலமான விவாதத்திற்கு அழைத்தோம். அந்த விவாத அழைப்பிற்கு எந்த பதிலையும் அளிக்காமல் பின்னங்கால் பிடரியில் அடிக்க பீஜேயும் அவரது பக்தர்களும் ஓடி ஒழிந்து வருகின்றார்கள்.

இப்போது கூறு கெட்ட குழப்பவாதிகள் நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று கண்டு பிடித்துள்ளதால் இவர்களுக்கு இடம் தரக்கூடாது என்பதற்காக ஒன்பதாம் நாள் என்று பேச்சுவழக்கில் சேர்த்ததை நீக்கி விட்டோம் என்று போகிறபோக்கில் பதிலளித்துள்ளார். அவருடைய பிறை ஆய்வின் தவறை சுட்டிக்காட்டியது அவரது ஆய்வு என்று வெளியிடப்பட்ட எழுத்துவடிவிலான ஆன்லைன் புத்தகத்தில் அவர் எழுதியதிலிருந்தே என்பதை கவனத்தில் கொள்க. நாம் அவருடைய வீடியோ உரையிலிருந்து தவறுகளை இன்னும் சுட்டிக் காட்டவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு ஆதாரத்தை காட்டியதற்கே பதிவில் மாற்றம் என்றால், இன்னும் இவர்கள் பேச்சுவழக்கில் எழுதியதாக கூறுவது அனைத்தையும் நாம் ஆதாரம் காட்டிக்கொண்டே இருந்தால் ஆன்லைன் பீஜே இணையத்தளமே காலியாகிவிடும் என நினைக்கின்றோம். ஒட்டுமொத்தமாக அவருடைய பேச்சுவழக்குதானே ஆன்லைன் பீஜே இணையத்தளம். எனவே பீஜே எழுத்து மூலமான இணையத்தள விவாதத்திற்கு வர ஏன் பயப்படுகின்றார் என்பதை தற்போது நீங்கள் தெளிவாக புரிந்திருப்பீர்கள்.

//மார்க்கத்தில் ஆதாரம் குர்ஆனும் ஹதீஸும் தான். பீஜே சொல்வது மார்க்க ஆதாரமாக ஆகாது. ஆனால் இந்தக் கும்பல் பீஜே சொல்லி விட்டார் என்று கூறி தங்கள் வாதத்தை நிறுவப் பார்க்கிறது. பீஜே முஸ்லிம் நூலை ஆதாரம் காட்டி எழுதியதால் தான் சரி காண்கிறோம் என்று இந்தக் கும்பல் கூற முடியாது. முஸ்லிம் நூலை எடுத்து வாசித்து ஒன்பதாம் நாள் பஜ்ரு என்று அந்த நூலில் உள்ளதா என்று பார்த்து உறுதி செய்து விட்டு இப்படி விமர்சிக்கவில்லை. நாம் எழுதியது எதுவாக இருந்தாலும் இந்தக் கும்பல் எனது சொல்லைத் தான் ஆதாரமாக காட்ட நினைக்கிறதே தவிர ஹதீஸில் அப்படி உள்ளதா என்று பார்க்கும் அளவுக்கு கூட மூல மொழியில் தேடும் அறிவு இல்லை. // Online PJ

அண்ணன் ஆய்வு செய்து வெளியிட்டால் அது சரியாகத்தான் இருக்கும் என்று நம்பியிருக்கும் TNTJ அன்பர்களே! பீஜே ஒன்றை பேசிவிட்டார், சொல்லிவிட்டார் என நீங்கள் ஆய்வுசெய்யாமல் அதை கண்மூடி நம்பி, பிரச்சாரம் செய்தால் படுகேவலம்தான் மிஞ்சும் என்பதற்கு பீஜே யின் இந்த பதிலைவிட உங்களுக்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்? மார்க்கத்திற்கு ஆதாரம் என்று பீஜே சொல்வாராம். ஆனால் அதை அவர் சொன்னார் என்று ஆதாரமாக எடுக்கக்கூடாதாம்? என்ன வேடிக்கை இது

ஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ருதான் என்பதற்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து ஆதாரங்கள் பல இருக்க பீஜேயின் அபத்தங்களிலிருந்து ஆதாரம் எடுத்து வெளியிடும் அளவிற்கு கீழான நிலையில் ஹிஜ்ரிகமிட்டியினராகிய எங்களை அல்லாஹ் ஒருபோது வைக்கவில்லை. பீஜேயின் தக்லீது கூட்டத்தை புரிய வைப்பதற்காகவே நண்பர் ஒருவர் 'இவர் என்ன சொல்ல விரும்புகின்றார்?' என்ற தலைப்பிட்டு பீஜே வெளியிட்ட புத்தகத்திலிருந்தே மேற்கோள் காட்டினார். அதற்கே பீஜே இப்படி தடுமாறி நிலைகுலைந்துவிட்டார். பாவம்.

முஸ்லிம் நூலை எடுத்து அந்த நூலில் அவ்வாறு உள்ளதா என நாம் பார்த்துவிட்டு விமர்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் நம்மீது பீஜே வைக்கின்றார். அவரைவிட அரபி அறிவில் நாம் கூடியவர்கள் என்பதை அறிந்து இவ்வாறு கூறியிருக்கிறார் போலும், இப்போது இதையாவது ஒப்புக்கொண்டாரே.

பீஜேயானிகளை பார்த்துக் கேட்கிறோம், பீஜேயானிகளே! நாங்கள் தான் எதிலும் சரி. மற்றவர்கள் அனைவரும் தவறில் இருக்கின்றார்கள் என விவாதத்திற்கு அழைக்கும் நீங்கள் மூல நூலை பார்க்காமல் பேச்சு வழக்கில் எதையாவது எழுதுவீர்கள் அதை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்து விடுங்கள் என கூறவருகின்றீர்களா? அரபி விற்பன்னர்கள் (?) நிறைந்த உங்கள் இயக்கத்திலுள்ளவர்கள் (!) யாரும் இதை படிக்கவே மாட்டார்களா? அல்லது படித்தாலும் பீஜே எழுதியதற்கு எதிராக கருத்து சொல்லக் கூடாது என்ற எழுதப்படாத சட்டம் உள்ளதா? அல்லது பீஜேவிற்கு அரபியை மூல மொழியில் படிக்கும் அறிவுகூட இல்லையா?

இவர் என்ன சொல்ல விரும்புகின்றார்? என்று அந்த நண்பர் தலைப்பிட்டது மிகச்சரியானதுதான். ஏனெனில் அக்கட்டுரை பதிவிற்கு பதில் என்று பீஜே பிதற்றியுள்ளதை நீங்களே வாசித்துப்பாருங்கள்

//வரட்டு ஹிஜ்ரா கும்பலின் வாதப்படி பார்த்தாலும் அப்போதும் இதில் இரண்டு நாட்கள் உள்ளன. இரண்டு நாட்கள் தான் ஒரு நாளாக சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கும்பலின் வாதப்படி லுஹர் அசர் மரிப் இஷா ஆகியன எட்டாம் நாளுக்கு உரியதாகவும் பஜ்ர் ஒன்பதாம் நாளுக்கு உரியதாகவும் உள்ளன. ஆனால் அனைத்துக் எட்டாம் நாள் என்ற சொல்லுக்கும் அடக்கப்பட்டுள்ளன. நம்முடைய வாதப்படியும் வரட்டு கும்பலின் வாதப்படியும் இரண்டு நாட்களைக் கொண்ட கால அளவு எட்டாம் நாள் என்ற ஒரு நாளின் பெயரால் சொல்லப்பட்டுள்ளது என்று ஆகின்றது. இது நாளின் துவக்கம் பஜ்ர் என்பதற்கோ மக்ரிப் என்பதற்கோ ஆதாரமாக ஆகாது. // Online PJ

ஹிஜ்ரி கமிட்டியின் வாதம் வரண்டு இருந்தாலும் அதில் உண்மை உள்ளதாக பீஜே மீண்டும் இங்கே ஒப்புக்கொள்கின்றார். ஹிஜ்ரி கமிட்டியினரின் வாதம் வரண்டு இல்லை அதில் பீஜே மிரண்டு இருக்கிறார் என்பதே உண்மை. அந்த ஹதீஸில் இரண்டு நாட்களைத்தான் ஒரு நாளாக குறிக்கப்பட்டுள்ளதாம். ஆனால் இரண்டு நாளும் எட்டாம் நாள் என்ற சொல்லுக்குள் அடக்கப்பட்டுள்ளனவாம். எனவே அவர் பேச்சுவழக்கில் கூறியது சரிதான் என மீண்டும் எழுத்துவழக்கிலும் நிறுவப்பார்க்கின்றார். அண்ணன் கீழே விழுந்துவிட்டார் ஆனால்.. ஆனால்... ஆனால் அவர் மீசையில் மட்டும் மண் ஒட்டவில்லை.

அடுத்து என்ன கூறுகின்றார்கள் பாருங்கள். பீஜே எழுதியதிலேயே இதுதாங்க ரொம்ப ரொம்ப சூப்பர்.

// பொதுவாக நடைமுறையில் நள்ளிரவுக்குப் பின் மறுநாள் என்று குறிப்பிடுவது தான் தமிழகத்தில் வழக்கமாக உள்ளது. ஆங்கிலேயர்களின் இந்த வழி முறையில் தான் நம்முடைய பேச்சுக்கள் அமைந்துள்ளன.//

// எனவே இதை வைத்து உளறி மாட்டிக் கொள்ளாமல் நாளின் ஆரம்பம் மஃரிப் தான் என்பதற்கு பீஜே நேரடியாக எடுத்துக்காட்டிய ஆதாரங்களை விமர்சிப்பவர்கள் பார்க்கட்டும். // Online PJ

நாம் உளறி மாட்டிக்கொண்டோமா? பீஜே உளறி மாட்டிக்கொண்டாரா? இந்த பதிவை படித்த அனைவருக்கும் பீஜே உளறிக்கொட்டியது புரிந்து கேள்வி கேட்டதினால் தானே பீஜேவிற்கு அனல் பறக்கும் கோபமே வந்தது. பீஜே உளறி மாட்டிக்கொள்ளவில்லை என்றால் அவசர அவசரமாக பீஜே தான் பதிந்ததை திருத்தியது ஏன்?

மார்க்கம் எவ்வாறு உள்ளதோ அவ்வாறே மார்க்கத்தை பின்பற்ற வேண்டும் என்று அடிக்கடி கூறும் பீஜே, கிறிஸ்தவர்களான ஆங்கிலேயர்கள் வழிபடி அவருடைய பேச்சும் நடவடிக்கையும் அமைந்துவிட்டது என தற்போதுகூட உளறியுள்ளது அவர் என்னதான் உள்பூச்சு வெளிப்பூச்செல்லாம் பூசி மெழுகி சப்பைகட்டு கட்டி சமாளித்தாலும் உளருவாயான் யார் என்பதை வல்ல அல்லாஹ் வெளிச்சம் போட்டு காண்பித்துவிட்டான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கவில்லையா?

// துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று மினா எனுமிடத்துக்குச் செல்ல வேண்டும். அன்றைய தினம் லுஹர், அஸர், மஃரிப், இஷா, பஜ்ரு தொழுகையையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும். நூல்: முஸ்லிம் 2137 // Online PJ

இது பீஜே யால் திருத்தி வெளியிடப்பட்ட மறுபதிப்பின் வாசகங்கள். இதையும் பேச்சு வழக்கில் உளறிவிட்டேன் என்று கூறி பீஜே எஸ்கேப் ஆகப் போகிறாரா? எட்டாம் நாள் என்பது ஏழாம் நாள் மஃரிபிலேயே ஆரம்பித்துவிடுகின்றது என்பதே பீஜே யின் வாதம். அப்படி இருக்கும் போது அன்றைய தினம் லுஹர் அஸர் வரைதானே எட்டாம் நாள். அது எப்படி அன்றைய தினம் மஃரிப், இஷா, பஜ்ரு தொழுகையை எட்டாம் நாள் தொழ முடியும். எட்டாம் நாள் மஃரிபிலேயே ஒன்பதாம் நாள் பீஜேவிற்கு ஆரம்பித்து விடுமே? இதுவும் பேச்சுவழக்குதான் என்றால் அவருடைய கதைகளும், அவரது இணையதளத்தின் கதைகளும் முடிந்துவிடும் அவ்வளவு தான்.

தன்னை அதிபுத்திசாலியாக நினைத்து அபத்தங்களை அள்ளிவீசும் பீஜேக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறோம். ஒவ்வொரு அறிவாளிக்கு மேலும் ஒரு அறிவாளியை அல்லாஹ் வைத்திருக்கிறான் (.....கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்! 12:76) என்ற குர்ஆன் வசனத்தை நினைவில் நிறுத்தி, இனிமேல் நீங்கள் மக்களுக்கு பிரச்சாரம் செய்யும் போது, என்னுடைய பேச்சை நீங்கள் யாரும், நான் கூறுகின்றபடி விளங்கிக்கொள்ள வேண்டாம். இது பேச்சு வழக்கில் கூறப்பட்ட பொய்யா?, அல்லது உண்மையிலேயே ஹதீஸில் அவ்வாறு உள்ளதா? நான் பொய்யுரைத்துள்ளேனா என்று பார்த்து என்னுடைய உரைகளை முடிவு செய்ய வேண்டும் என அறிவுரை கூறுங்கள்.

என்னுடைய அனைத்து மொழிபெயர்ப்புகளும் இதுபோன்று பேச்சு வழக்கில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கலாம். அதை நீங்கள் சரியாக என்னை விட மொழிபெயர்ப்பில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களிடமோ அல்லது ஹிஜ்ரி கமிட்டியிடமோ அணுகி சரிபார்த்து கொள்ளவும் என அறிவிப்பு செய்யுங்கள்.

உங்களுடைய தவறை யார் சுட்டிக்காட்டினாலும், அதை சரி செய்வதற்கு தயங்க மாட்டோம் என கூறிவரும் நீங்கள் உங்களுடைய நாளின் ஆரம்பம் மஃரிப் என்ற முக்கியமான வாதத்திற்கு மாற்றமாக நீங்கள் எழுதியதை நாங்கள் சுட்டிக்காட்டும் போது ஏன் எங்கள் மீது ஆத்திரப்பட்டு கடும் சொற்களை கொண்டு திட்டி தீர்க்க வேண்டும். உங்களுக்கு வாதத்திற்கு எதிராக யாரும் கேள்வி எழுப்பினால், உங்களுக்கு ஆத்திரம் வரும் என்பதால் தான் உங்கள் இயக்கத்தில் உள்ள ஒரு சில நல்லவர்கள் கூட உங்களிடம் பேச தயங்குகின்றார்கள் என்பது இப்போது எங்களுக்கும் புரிந்துள்ளது.

உங்கள் வாதத்தில் உள்ள தவறுகளை யாராவது உங்களிடம் சுட்டிக்காட்டினால் நீங்கள் கோப்பட்டு கடுஞ்சொற்களை நீங்கள் உபயோகித்து இதுபோன்றுதான் திட்டுவீர்கள் என்பதை தற்போது உங்கள் மக்களும் தெளிவாக புரிந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்

எனவே நாங்கள் சுட்டி காட்டியது வரட்டு சிந்தனையல்ல. உண்மையான கொள்கைதான் என்பதை நீங்கள் ஒத்துக்கொண்டதால் தான் நாங்கள் சுட்டிக்காட்டிய உங்கள் பேச்சுவழக்கு எழுத்தை (வழக்கமாக நீங்கள் சொல்லும் மறுஆய்வு என்ற நாடகம் இல்லாமல்) உடனடியாக நீக்கி விட்டீர்கள்.

இனிமேல் நீங்கள் ஹஜ்ஜின் நாட்களில் உள்ள தொழுகைகளைப்பற்றி கீழ்கண்டவாறுதான் விளக்கி ஆக வேண்டும்.

துல்ஹஜ் 8 ன் உடைய மஃரிப் மற்றும் இஷா பஜ்ர் போன்றவைகளை மக்காவில் தங்கும் அரைகளிலோ பள்ளிவாயிலிலோ தொழுதுவிட வேண்டும்.

துல்ஹஜ் 8 ன் உடைய லுஹர் மற்றும் அஸர் தொழுகையை மினாவில் தொழ வேண்டும்.

துல்ஹஜ் ஒன்பதாம் நாள் அரஃபாவுடைய நாள். அன்றைய மஃரிபு மற்றும் இஷா பஜ்ர் ஆகிய தொழுகைகளை மினாவில் வைத்து தொழவேண்டும். துல்ஹஜ் 9 இரவு அன்று மினாவில் தங்க வேண்டும்.

மேற்கண்ட அடிப்படையில் எதிர்வரும் ஹஜ்ஜிற்கு புதிதாக பயான் செய்து, உங்கள் மக்களை ஹஜ் செய்யும் படி உபதேசித்து அனுப்பவும்.

பீஜே யும் அவரின் ரசிகமன்றமும் மற்றவர்களின் சிறு பிழைகளைக் கூட இலகுவாக விட்டுவிடுவதில்லை. மற்றவர்களின் பேச்சுக்களையும் எழுத்துகளையும் வரிக்கு வரி ஆப்பு என்று சீடிக்கள் வெளியிட்டு அசிங்கப்படுத்தவும் தவறுவதில்லை. இத்தைகைய கேடுகெட்ட நாகரிகத்திற்கு சொந்தக்காரர்களிடம் இத்தனை தவறுகள் வரலாமா?. தன்னிடம் இத்தனை கறைகளை வைத்துக்கொண்டு ஹிஜ்ரி கமிட்டியினரை வரட்டுக்கும்பல், மூளை வரண்டு விட்டது என்று கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சிப்பதை இனிமேலாவது நிறுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த பதிலை வெளியிடுகிறோம்.

இனியும் இந்த பீஜேயும் இவரது கூட்டமும், மறைக்கப்பட்டுள்ள உண்மையான விஷயங்களை உலகிற்கு எடுத்து கூறிவரும், எங்களை வம்புக்கு இழுத்து வரம்பை மீறினால் இதைவிட மிகக் கேவலமான அவர்கள் நிலைபாடுகளின் உண்மைநிலை வெளிவரும். அதனை எதிர்கொள்ளத் தயாராகட்டும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறோம்.

நாங்கள் ஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ருதான்; மக்ரிப் அல்ல. அந்தந்த கிழமைகளில் தென்படும் பிறை அந்தந்த கிழமைகளுக்கே உரியது; அடுத்த கிழமைக்குரியது அல்ல என்பதை குர்ஆன் சுன்னா அடிப்படையில் தகுந்த ஆதாரங்களுடன் பிரசுரங்கள், புத்தங்கங்கள், இணையத்தளங்கள் மற்றும் கட்டுரைகள் வாயிலாக மக்களுக்கு பலமுறை எத்தி வைத்துவிட்டுடோம் - அல்ஹம்துலில்லாஹ். எனவே பீஜே இன்று வெளியிட்டுள்ள அபத்தங்களுக்கு இந்த பதிலே போதுமானது என்று நினைக்கிறோம், அவரையும் அவரது பிறபொய்களையும் அலட்சியம் செய்கிறோம்

எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும்; (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்;. அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும். அல்குர்ஆன் 4:115

இதற்கு காரணம்; நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள். எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் விரோதம் செய்வாரோ - நிச்சயமாக அல்லாஹ் கடினமாகத் தண்டனை செய்பவனாக இருக்கிறான். அல்குர்ஆன் 8:13

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை. அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும். அல்குர்ஆன் 3:160

மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் நன்மாராயங் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்;. எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அனுமதியை கொன்டு நேர் வழி காட்டினான்;. அவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான். அல்குர்ஆன் 2:213

இன்னும், சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்´ என்று கூறுவீராக. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் அதிகமாக்குவதில்லை. அலகுர்ஆன் 17:81-82

நீர் கூறுவீராக ஒவ்வொருவனும் தன் வழியிலேயே செயல் படுகிறான்; ஆனால் நேரான வழியில் செல்பவர் யார் என்பதை உங்கள் இறைவன் நன்கு அறிவான். அல்குர்ஆன் 17:84

அல்லாஹ் மிக்க விளங்கியவன்.


மேலும் நமது பிறை சம்மந்தமான ஆய்வுகளை பார்வையிட www.mooncalendar.in என்ற இணைய முகவரிக்கு சென்று பார்வையிடவும்.


பிறைகள் மற்றும் சந்திர நாட்காட்டி சம்மந்தமான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய hijriindia@googlegroups.com என்ற கூகுள் குழுமத்தில் இணையவும்.


இப்படிக்கு,

ஹிஜ்ரி கமிட்டி

---------

From: ibnuhasann@gmail.com via googlegroups.com

Sender-time: Sent at 12:35 PM (GMT-07:00). Current time there: 11:44 PM. ✆

Reply-to: hijriindia@googlegroups.com

To: HIJRIINDIA@googlegroups.com

cc: hijriindia@googlegroups.com

Date: Mon, Sep 10, 2012 at 12:35 PM

Subject: Re: [HCI] Re: இவர் என்ன சொல்ல விரும்புகிறார்?

HIJIRI COMMITTE......

IT’S NOT ENOUGH JUST TO WRITE A DETAILED REPLY...........

ACCEPT P.J.'s CAL FOR A DEBATE

OR

INVITE THEM FOR A PUBLIC DEBATE TO EDUCATE prove and ALL MUSLIMS....

-----------

From: Hijri Committee hijricommittee@gmail.com

Sender-time: Sent at 9:23 AM (GMT+05:30). Current time there: 12:12 PM. ✆

Reply-to: hijriindia@googlegroups.com

To: hijriindia@googlegroups.com

Date: Mon, Sep 10, 2012 at 9:23 AM

Subject: Re: [HCI] Re: இவர் என்ன சொல்ல விரும்புகிறார்?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்........

அன்பான சகோதர சகோதரிகளுக்கு,

சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள் நாளின் ஆரம்பத்தை பி.ஜே எவ்வாறு புரிந்துள்ளார் என்பதை ஆன்லைன் பி.ஜே இணையத்தளத்தில் இருந்தே ஆதாரத்தை காட்டியவுடன் பின்னங்கால் பிடரியில் அடிக்க தங்களுடைய பதிவில் மாற்றத்தை ஏற்படுத்தி, நாங்கள் அரபி மூலத்தில் உள்ளதை உள்ளபடி மொழிபெயர்க்க மாட்டோம். எங்கள் பேச்சுவழக்கில் தான் மொழியாக்கம் செய்வோம் என்ற தங்களுடைய இமாலயத் தவறை மறைக்க பயங்கர கோபத்துடன் ஆன்லைன் பி.ஜேயில் பதிலிட்டுள்ளார்.

இன்ஷாஅல்லாஹ் ஆன்லைன் பி.ஜே இணையதளத்தில் பி.ஜே பதிவிட்டதற்கு, நாம் கூடிய விரைவில் கட்டாயமாக பதில் எழுதுவோம்.

இப்படிக்கு

ஹிஜ்ரி கமிட்டி

----------

From: GORI MOHAMED drgorimohamed@gmail.com

Sender-time: Sent at 8:40 PM (GMT+05:30). Current time there: 12:10 PM. ✆

Reply-to: hijriindia@googlegroups.com

To: hijriindia@googlegroups.com, HIJRIINDIA@googlegroups.com

Date: Sun, Sep 9, 2012 at 8:40 PM

Subject: Re: [HCI] Re: இவர் என்ன சொல்ல விரும்புகிறார்?

Thank u br.hasan u posted the same wat i had to do...

with Regards,

GORI MOHAMED J,

-----------

சகோதரர் பீ.ஜே அவர்கள் அவரின் இனையதளத்தில் வெளியிட்டதை கீழே காண்க........

நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று பீஜே சொன்னாரா??

கேள்வி

நாளின் ஆரம்பம் பஜ்ருதான் என்பதை பீஜேயே ஒப்புக் கொண்டு விட்டார் என்று ஹிஜ்ரா கமிட்டி என்ற குழப்பவாதிகள் பரப்பி வருகின்றனர். அவர்கள் பரப்பும் செய்தி இது தான்.

"துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று "மினா" எனுமிடத்திற்குச் செல்ல வேண்டும். அன்றைய தினம் லுஹர், அஸர்,மஃரிப், இஷாஆகிய தொழுகைகளையும் ஒன்பதாம் நாளின் பஜ்ரு தொழுகையையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும்." நூல்: முஸ்லிம் 2137 //நபி வழியில் ஹஜ் பக்கம்: 44

எட்டாம் நாளின் தொழுகை என "லுஹர், அசர், மக்ரிப், இஷா" என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒன்பதாம் நாளின் "பஜ்ர்" என குறிப்பிட்டு நாளின் ஆரம்பம் "பஜ்ர்" என்பதை அவரே நிரூபிக்கின்றார்.

இவ்வளவு தெளிவாக நேரடியாக முஸ்லிம் நூலின் 2137 எண் ஹதீசை ஆதாரம் காட்டி எழுதியுள்ள பீ.ஜை. அவர்கள்,அவர் எழுதியுள்ளதற்கு நேர் முரணாக நாளின் ஆரம்பம் மக்ரிப் தான் என பக்கம் பக்கமா விளக்கம் கொடுத்து மக்களை குழப்புவது ஏன் எனப் புரியவில்லை.

இது தான் அவர்கள் எழுதிய விமர்சனம். இதன் உண்மைத் தன்மை என்ன?

ரஸ்மின் இலங்கை

பதில்

ஹிஜ்ரா கமிட்டி என்ற பெயரில் செயல்படும் மூளை வரண்ட கூட்டத்தினருக்கு மார்க்கமும் தெரியவில்லை. விஞ்ஞானமும் தெரியவில்லை. அபத்தங்களின் ஒட்டு மொத்த தொகுப்பாக அவர்களின் வாதங்கள் அமைந்துள்ளன. இது குறித்து விவாதம் செய்ய அழைத்தால் பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் எடுக்கின்றனர். பரேலவிகளும் பலஆண்டுகள் போக்கு காட்டிய சைபுத்தீன் ரஷாதியும் கூட பகிரங்க விவாதத்துக்கு தயாராக இருக்கும் போது இவர்கள் ஓட்டம் பிடிப்பதில் இருந்து இவர்களின் அறிவுத்திறனை அறிந்து கொள்ளலாம்.

இவர்கள் எந்த ஆதாரத்தைக் காட்டினாலும் அவை அனித்துமே இவர்களுக்கு எதிராகவும் இவர்களின் அறியாமையைப் பறைசாற்றக் கூடியதாகவும் உள்ளன. இந்த விஷயமும் அந்தப் பட்டியலில் சேர்கின்றது.

மார்க்கத்தில் ஆதாரம் குர்ஆனும் ஹதீஸும் தான். பீஜே சொல்வது மார்க்க ஆதாரமாக ஆகாது. ஆனால் இந்தக் கும்பல் பீஜே சொல்லி விட்டார் என்று கூறி தங்கள் வாதத்தை நிறுவப் பார்க்கிறது.

பீஜே முஸ்லிம் நூலை ஆதாரம் காட்டி எழுதியதால் தான் சரி காண்கிறோம் என்று இந்தக் கும்பல் கூற முடியாது. முஸ்லிம் நூலை எடுத்து வாசித்து ஒன்பதாம் நாள் பஜ்ரு என்று அந்த நூலில் உள்ளதா என்று பார்த்து உறுதி செய்து விட்டு இப்படி விமர்சிக்கவில்லை.

முதலில் முஸ்லிம் நூலில் உள்ளது என்ன என்பதையும்

பீஜே மேற்கண்டவாறு கூறியது ஏன் என்பதையும் நாம் விரிவாக விளக்குவோம்.

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (4/ 39(

فَلَمَّا كَانَ يَوْمُ التَّرْوِيَةِ تَوَجَّهُوا إِلَى مِنًى فَأَهَلُّوا بِالْحَجِّ وَرَكِبَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَصَلَّى بِهَا الظُّهْرَ وَالْعَصْرَ وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ وَالْفَجْرَ

3009

இது தான் முஸ்லிமில் உள்ள வாசகம். ஆலமியா இலக்கப்படி 2137 வது ஹதீஸாகவும் தமிழாக்கத்தில் உள்ளஇலக்கப்படி 3009 வது ஹதீஸாகவும் இடம் பெறும் மிக நீண்ட ஹதீஸில் விவாதத்துக்கு உரிய அந்தப் பகுதி இது தான்.

எட்டாம் நாள் ஆன போது மினாவுக்குச் சென்றனர். லுஹர், அஸர், மக்ரிப், இஷா, பஜ்ர் ஆகிய தொழுகைகளைத் தொழுதனர்.

அதாவது இந்த ஹதீஸில் ஒன்பதாம் நாளின் பஜ்ரு என்று கூறப்படவில்லை. நான்கு தொழுகைகளைக் கூறி விட்டு பஜ்ரைக் கூறும் போது ஒன்பதாம் நாள் பஜ்ர் என்றோ அடுத்த நாள் பஜ்ரு என்றோ கூறினால் தான் நாளின் ஆரம்பம் பஜ்ரு என்ற கருத்து வரும். மக்ரிப், இஷா, பஜ்ர் என்று கூறப்படுவதால் இவர்கள் வாதிடும் கருத்து இந்த ஹதீஸில் இல்லவே இல்லை.

இன்னும் சொல்லப் போனால் நாளின் ஆரம்பம் எது என்று முடிவு செய்ய இதில் ஒன்றுமே இல்லை.

இந்த ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகத்தை வைத்து முடிவு செய்வதாக இருந்தால் லுஹர் தான் நாளின் ஆரம்பம் என்று கூற வேண்டும். ஏனெனில் எட்டாம் நாள் லுஹர் என்று துவங்கி பஜ்ர் வரை சொல்லப்படுகிறது. அதாவது லுஹரும் எட்டாவது நாள் தான். அசரும் எட்டாவது நாள் தான். மக்ரிபும் எட்டாவது நாள் தான். இஷாவும் எட்டாவது நாள் தான். பஜ்ரும் எட்டாவது நாள் தான் என்ற கருத்து தான் இந்த வாசகத்தில் உள்ளது. அடுத்த லுஹர் வந்தால் தான் மறு நாள் ஆரம்பமாகும்.

இதை ஆதாரமாகக் காட்டும் வரட்டுக் கும்பல் இனிமேல் லுஹரில் இருந்து நோன்பை ஆரம்பித்தாலும் ஆச்சரியம் இல்லை.

நம்முடைய கருத்துப்படியும் உலக முஸ்லிம்கள் கருத்துப்படியும் பார்த்தால் லுஹர், அசர் ஒரு நாளாகவும் மக்ரிப் இஷா பஜ்ர் மறு நாளாகவும் ஆகின்றது. இரண்டு நாட்களைத் தான் எட்டாம் நாள் என்ற வார்த்தையால் ஜாபிர் (ரலி)அறிவிக்கிறார்.

வரட்டு ஹிஜ்ரா கும்பலின் வாதப்படி பார்த்தாலும் அப்போதும் இதில் இரண்டு நாட்கள் உள்ளன. இரண்டு நாட்கள் தான் ஒரு நாளாக சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கும்பலின் வாதப்படி லுஹர் அசர் மரிப் இஷா ஆகியன எட்டாம் நாளுக்கு உரியதாகவும் பஜ்ர் ஒன்பதாம் நாளுக்கு உரியதாகவும் உள்ளன. ஆனால் அனைத்துக் எட்டாம் நாள் என்ற சொல்லுக்கும் அடக்கப்பட்டுள்ளன.

நம்முடைய வாதப்படியும் வரட்டு கும்பலின் வாதப்படியும் இரண்டு நாட்களைக் கொண்ட கால அளவு எட்டாம் நாள் என்ற ஒரு நாளின் பெயரால் சொல்லப்பட்டுள்ளது என்று ஆகின்றது. இது நாளின் துவக்கம் பஜ்ர் என்பதற்கோ மக்ரிப் என்பதற்கோ ஆதாரமாக ஆகாது.

பிறகு ஏன் அறிவிப்பாளர் இப்படிச் சொல்ல வேண்டும்? இதன் விடை மிக எளிதானது.

மனிதர்களின் பேச்சு வழக்கில் ஒரு நாளில் ஆரம்பித்து மறு நாள் வரை தொடரும் செயல்களை முதல் நாளுக்குரியது போல் பேசுவது வழக்கத்தில் உள்ளது.

எட்டாம் தேதி பகலிலும் பின்னர் இரவிலும் பின்னர் காலையிலும் சாப்பிட்டேன் என்று கூறினால் மறுநாள் காலையை முதல் நாளில் சேர்த்து விட்டார் எனக் கூற மாட்டோம்.

வெள்ளிக்கிழமை ஜும்மாவையும் அசரையும் மக்ரிபையும் இஷாவையும் பஜரையும் தொழுதேன் என்று கூறினாலும் இதே போன்றது தான்.

பேச்சு வழக்கில் ஜாபிர் அவர்கள் இப்படிக் கூறியதால் தான் இரண்டு நாட்களில் நடக்கும் செயலை ஒரு நாளுக்குரியது போல் சொல்கிறார்.

எனவே இதை வைத்து உளறி மாட்டிக் கொள்ளாமல் நாளின் ஆரம்பம் மஃரிப் தான் என்பதற்கு பீஜே நேரடியாக எடுத்துக்காட்டிய ஆதாரங்களை விமர்சிப்பவர்கள் பார்க்கட்டும்.

http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/361/

http://onlinepj.com/kelvi_pathil/nonbu_kelvi/nalin_armbam_ethu/

பொதுவாக நடைமுறையில் நள்ளிரவுக்குப் பின் மறுநாள் என்று குறிப்பிடுவது தான் தமிழகத்தில் வழக்கமாக உள்ளது. ஆங்கிலேயர்களின் இந்த வழி முறையில் தான் நம்முடைய பேச்சுக்கள் அமைந்துள்ளன. பீஜே ஒன்பதாம் நாள் என்று குறிப்பிட்டதும் இதே பேச்சு வழக்கில் தான். வரட்டு ஹிஜ்ரா கூட்டத்தின் உளறல்கள் இல்லாத காலத்தில் இது சரியாக புரிந்து கொள்ளப்பட்டது.

இப்போது கூறு கெட்ட குழப்பவாதிகள் நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று கண்டு பிடித்துள்ளதால் இவர்களுக்கு இடம் தரக் கூடாது என்பதற்காக ஒன்பதாம் நாள் என்று பேச்சு வழக்கில் சேர்த்ததை நீக்கி விட்டோம்.

http://onlinepj.com/books/nabi-vaziyil-nam-haj/

நாம் எழுதியது எதுவாக இருந்தாலும் இந்தக் கும்பல் எனது சொல்லைத் தான் ஆதாரமாக காட்ட நினைக்கிறதே தவிர ஹதீஸில் அப்படி உள்ளதா என்று பார்க்கும் அளவுக்கு கூட மூல மொழியில் தேடும் அறிவு இல்லை.

08.09.2012. 04:42

--------------

From: ibnuhasann@gmail.com

Sender-time: Sent at 7:53 PM (GMT-07:00). Current time there: 11:37 PM. ✆

Reply-to: hijriindia@googlegroups.com

To: HIJRIINDIA@googlegroups.com

cc: hijriindia <hijriindia@googlegroups.com>

Date: Sat, Sep 8, 2012 at 7:53 PM

Subject: [HCI] Re: இவர் என்ன சொல்ல விரும்புகிறார்?

சலாம்.

உங்கள் பதிவுக்கு இன்று , 08 , ( SATURDAY < செப்டம்பர் , 2012 , அவரின் இணையத் தளத்தில் கீழ்வரும் லிங்க் இல் P. ஜைனுல் அப்தீன் அவர்கள் பதில் கொடுத்து , ஹிஜ்ரி கம்மிட்டே இன் அறிவு ஆராச்சி பற்றி குறை கண்டு கேவலமாக கூறுகிறார்.........

இந்த ஹிஜ்ரி காம்மிட்டீ விவாதத்துக்கு அழைத்தால் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள் என கூறுகிறார்........எனவே இந்த லிங்கில் போய விரிவாக அவரின் விமர்சனத்தை படித்து சரியான பதில் பதியும்படி கேட்கின்றேன்.............

ஹிஜ்ரி கமிட்டி பகிரங்கமாக P.ஜைனுல் அப்தீன் அவர்களை பிறை , நாளின் ஆரம்பம் , நாட்காட்டி விவாவத்துக்கு அழைத்து எல்லா முஸ்லிம்களுக்கும் சரியான அறிவை வழங்கவும் என வேண்டுகின்றோம்.......GO TO THIS LINK....

http://www.onlinepj.com/kelvi_pathil/vithanda_vatham_kelvi/nalin_aramabm_fajru_enru_pj_sonnara/

BROTHER,

HASAN

----------

From: Hijri Committee hijricommittee@gmail.com

Sender-time: Sent at 6:20 AM (GMT+05:30). Current time there: 12:05 PM. ✆

Reply-to: hijriindia@googlegroups.com

To: hijriindia@googlegroups.com

Date: Sat, Sep 8, 2012 at 6:20 AM

Subject: Re: [HCI] இவர் என்ன சொல்ல விரும்புகிறார்?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

சகோதர சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள்.

எந்த இழையில் கருத்து சொல்ல விரும்புகின்றீர்களோ அந்த இழையில் Reply அல்லது Reply to All என்பதை தேர்வு செய்து பதில் பதிவு செய்யவும். அப்போது தான் சம்மந்தப்பட்ட இழையில் உங்கள் கருத்து பதிவாகும். இல்லையென்றால், ஒவ்வொரு கருத்திற்கும் ஒரு தனியிழை உருவாகும். அதனால் யாருக்கும் பயன் இல்லாமல் போகும்.

எனவே நமது குழுமத்தின் ஒழுங்கு முறைகளை பேணி உதவி செய்யவும்.

இப்படிக்கு

ஹிஜ்ரி கமிட்டி

--------------

இவர் என்ன சொல்ல விரும்புகிறார்?

From: Abdul Rasiq mdrasik@gmail.com

Sender-time: Sent at 10:47 PM (GMT+05:30). Current time there: 12:01 PM. ✆

Reply-to: hijriindia@googlegroups.com

To: hijriindia <hijriindia@googlegroups.com>

Date: Thu, Sep 6, 2012 at 10:47 PM

Subject: [HCI] இவர் என்ன சொல்ல விரும்புகிறார்?

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற ஒரு அமைப்பின் தலைவரான பீ.ஜைனுல் ஆபிதீன் என்பவர் எழுதி வெளியிட்டுள்ள, நபி வழியில் ஹஜ் என்ற நூலின் 44ம் பக்கத்தில் காணப்படுவது வருமாறு:

"துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று "மினா" எனுமிடத்திற்குச் செல்ல வேண்டும். அன்றைய தினம் லுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளையும் ஒன்பதாம் நாளின் பஜ்ரு தொழுகையையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும்." நூல்: முஸ்லிம் 2137 //நபி வழியில் ஹஜ் பக்கம்: 44

எட்டாம் நாளின் தொழுகை என "லுஹர், அசர், மக்ரிப், இஷா" என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒன்பதாம் நாளின் "பஜ்ர்" என குறிப்பிட்டு நாளின் ஆரம்பம் "பஜ்ர்" என்பதை அவரே நிரூபிக்கின்றார்.

இவ்வளவு தெளிவாக நேரடியாக முஸ்லிம் நூலின் 2137 எண் ஹதீசை ஆதாரம் காட்டி எழுதியுள்ள பீ.ஜை. அவர்கள், அவர் எழுதியுள்ளதற்கு நேர் முரணாக நாளின் ஆரம்பம் மக்ரிப் தான் என பக்கம் பக்கமா விளக்கம் கொடுத்து மக்களை குழப்புவது ஏன் எனப் புரியவில்லை.

எனவே நாளின் ஆரம்பம் பஜ்ர் என்பதற்கு குரானிலும் ஹதீஸிலும் எண்ணற்ற ஆதாரங்கள் இருக்கின்றது. அதை ஏற்கனவே சகோதரர். டாக்டர். முஹம்மது அலி அவர்கள் தங்கள் முந்தைய அஞ்சலில் விளக்கமாக பதிந்துள்ளார்.

நேர்வழிக் காட்ட அல்லாஹ்வே போதுமானவன். !

அன்புடன்,

அப்துல் ராஸிக்.

20 ஷவ்வால் 1433. வியாழன்.

(குறிப்பு: இந்த மடலுடன் இணைக்கப்பட்டுள்ள Hajj.pdf, onlinepj விலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது. இதில் சமந்தப்பட்ட ஹதீஸ் இடம்பெற்றுள்ள பக்கம் 20. இதே தலைப்பில் வெளிவந்துள்ள அச்சிட்ட புத்தகத்தில் பார்க்க பக்கம் 44.)

-------------



அல்ஜன்னத் பத்திரிகையின் அவதூறும், HCI யின் மறுப்பும்

கேள்வி : அல் – ஜன்னத் பிப்ரவரி 2010 இதழில் பிறைபற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளிக்கும் போது கணக்கின் அடிப்படையில் பின்பற்றுவதை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள் அதற்கு தங்களின் பதில் என்ன ? நாசர் – கோவை .

பதில் : நீங்கள் சுட்டிக்காட்டிய பதிலை நாமும் பார்த்தோம். யாரையோ திருப்திபடுத்தி அதன் மூலம் சில அற்ப உலக ஆதாயம் அடைவதற்காக அப்படி ஒரு பதில் அளிக்கப்பட்டுள்ளது. நாம் இப்படி கூறுவது யூகத்தின் அடிப்படையில் அல்ல. ஏனென்றால் அதன் ஆசிரியர் கோவையில் நடந்த JAQH தாயிகள் கூட்டத்தில் என்னுடைய ஆய்வின்படி பிறையில் கணக்கின் அடிப்படையில் செயல்படுவதுதான் சரி என்று கூறினார். (வீடியோ ஆதாரம் நம்மிடம் உள்ளது )

மேலும் கோவையில் KNM ஜமாத்தோடும், சென்னையில் அஹ்லே ஹதிஸ் அறிஞர்களோடும் கணக்கை வலியுறுத்தி விவாதத்திற்கு சென்றார். அந்த வரிசையில் இதே அல் – ஜன்னத் பத்திரிக்கையில் கணக்கை பின்பற்றுவது குர்ஆன் ஹதிஸுக்கு எதிரானதா ? என்ற தலைப்பில் கணக்கின் அடிப்படையில் செயல்படுவதை ஆதரித்து JAQH மாநில துணை தலைவர் மவ்லவி S. செய்யது அலி பைஜி அவர்கள் எழுதிய கட்டுரையை இடம்பெறச்செய்தார். எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டு வருடங்களுக்கு முன்னால் ரமலான் நோன்பு ஆரம்பிப்பதற்கு பதிமூன்று நாட்களுக்கு முன்னரே ரமலான் முதல் நாளை தீர்மானித்து JAQH ன் அனைத்து கிளைகளுக்கும் கடிதம் அனுப்பினார் இப்படியெல்லாம் கணக்கின் அடிப்படையில் செயல்படுவதை சரிகண்டவர் இப்போது மாற்றி பேசுகிறார் என்றால் நாம் மேலே கூறிய காரணம் தான் என்பதில் சந்தேகமில்லை . அல்லாஹ் அறிந்தவனாக இருக்கிறான்.

அவர்களின் விமர்சனத்திற்கு வருவோம்

// இவர்களுக்கு கணக்குபற்றிய ஞானம் அதாவது முன்கூட்டியே சொல்லக்கூடிய அறிவு கிடையாது மற்றவர்கள் சொல்வதை கேட்டு அப்படியே கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகின்றனர். அல் – ஜன்னத் பக்கம் 44 //

பிறை விசயத்தில் கணக்கை பின்பற்றக்கூடிய நமக்கு கணக்கை பற்றிய ஞானம் கிடையாது மற்றவர்கள் சொல்வதை அப்படியே பின்பற்றுகிறோம் என்று குற்றம் சாற்றுகிறார். அவரின் வாதப்படி நமக்கு கணக்கு தெரியவில்லை என்றே வைத்துக்கொள்வோம் கணக்கு தெரியவில்லை என்பதற்காக அதை பின்பற்றக்கூடாதா ? அப்படியென்றால் இவரை பார்த்து நாம் கேட்பது, தொழுகைக்கான நேரத்தை முன்கூட்டியே கணக்கிட்டு தொழுகையை அமைத்துகொள்கிறீர்களே, உங்களுக்கு அந்த விஞ்ஞான அறிவு இருக்கிறதா ? . பின் எப்படி தொழுகைக்கான நேரத்தை முன்கூட்டியே தீர்மானித்தீர்கள் ? ஆகவே நிரூபிக்கப்பட்ட அறிவியலை குர்ஆன் ஹதீஸிற்கு முரணில்லாத வகையில் ஏற்று செயல்படுவதில் தவறில்லை .

// கணக்கின் அடிப்படையில் முன்கூட்டியே யார் சொன்னாலும் அது யூகத்தின் அடிப்படையிலே இருக்க வேண்டுமே தவிர திட்டவட்டமாகச் சொல்வது இஸ்லாமிய அடிப்படை கொள்கைக்கு எதிரானதாகும் . காரணம் எதிர்காலத்தில் எது எப்படி எப்போது நடக்கும் என்பதையெல்லாம் திட்டவட்டமாக தெரியக்கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டும் தான் . ஒருவன் எதிர்காலத்தில் இப்படித்தான் நடக்கும் என்று திட்டவட்டமாக நானும் சொல்வேன் என்று சொல்லும் போது அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமான எதிர்காலத்தில் நடப்பதை அறிதல் என்ற தன்மையில் போட்டி போடுவதாகக் கருதப்படும் . எனவே இது விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளவேண்டும் . நமக்கு சரியான ஞானமில்லாத விசயத்தில் தலையிடுவது கூடாது. அல் – ஜன்னத் பக்கம் 44 //

இவர் இப்படி கூறுவதிலிருந்து இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றான மறைவான ஞானம் பற்றிய மார்க்க அறிவு இவருக்கு அறவே கிடையாது என்பது தெளிவாகிறது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். ‘நிச்சயமாக (இறுதித் தீர்ப்பிற்குரிய) அந்த நேரத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையைப் பொழிவிக்கிறான். (பெண்களின்) கருவறைகளில் இருப்பவற்றையும் அவனே அறிவான். எந்தமனிதனும், அவன் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை. தாம் எந்த இடத்தில் மரணிப்பார் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. நிச்சயமாக, அல்லாஹ்தான் (யாவற்றையும்) நன்கு அறிந்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.

அறிவித்தவர் : அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி)

ஹீஹுல் புகாரி ஹதீஸ் எண் : 4627

நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.

திருக்குர்ஆன் 31:34

மேற்கண்ட குர்ஆன் வசனத்திலிருந்தும், ஹதீஸிலிருந்தும் மறைவான ஞானத்திற்கு உட்பட்ட விசயங்கள் என்னென்ன என்பதை தெளிவாக அறிந்துகொள்ளலாம். பிறை விசயத்தில் நாம் கூறும் தேதி பற்றிய கணக்கு மறைவான ஞானத்திற்கு உட்பட்டதல்ல மாறாக அல்குர்ஆன் 55 : 5 வசனத்தில் அல்லாஹ் கூறியுள்ள கணக்கைத்தான் நாம் ஏற்று செயல்படுகிறோம்

சூரியனும் , சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப்பெற்ற ) கணக்கின்படியே இருக்கின்றன .

அல்குர்ஆன் 55: 5

அந்த கணக்கை நீங்கள் அறிந்துகொள்ள முடியும் என்று 10: 5 வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்

அவன்தான் சூரியனைச் (சுடர்விடும் ) பிரகாசமாகவும் , சந்திரனை ஒளியுள்ளதாகவும் ஆக்கினான் . ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு (சந்திரனாகிய ) அதற்கு (மாறிமாறி) வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான் ; அல்லாஹ் உண்மை (யாக தக்க காரணம் ) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை ; அவன் அறியக்கூடிய சமுதாயத்திற்கு தன் அத்தாட்சிகளை (இவ்வாறு) விவரிக்கின்றான் .

அல்குர்ஆன் 10: 5

ஒரு வாதத்திற்கு அவர் கூறுவதுபோல மறைவான ஞானத்திற்கு உட்பட்டது என்றால் இந்த கணக்கை JAQH ஃபத்வா குழு எப்படி ஏற்றுகொண்டது. JAQH ஃபத்வா குழு அளித்த தீர்ப்பை தங்களின் பார்வைக்கு தருகிறோம்.

// பிறை விசயத்தில் கணக்கை ஏற்று செயல்படுவது குர்ஆன் ஹதீஸின்படி சரியாக இருந்தாலும் சில நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு தற்காலிகமாக தகவலை ஏற்று செயல்படுமாறு கேட்டுகொள்கிறோம். JAQH ஃபத்வா குழு //

மேலும் அவர்கள் வெளியிட்ட காலண்டரில் பிறைக்கணக்கையும் ஒரு ஆண்டுக்கான தொழுகைக்கான நேரத்தையும் முன்கூட்டியே அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்களே அப்படியானால் மறைவான ஞானத்தை அறிந்து கொண்டார்களா ? ஆகவே அறிந்துகொண்டே மக்களை குழப்புகிறார்.

//கணிப்பிற்கு அடிமையாகி இருக்கின்ற சிலர் அல்லாஹ்வுடைய தூதர் விஷயத்தில் வரம்பு மீறி நடந்து கொள்கின்றனர் . நபியின் இயலாமை காரணத்தினால் தான் இது விஷயத்தில் சரியான இலக்கை அவர்களால் அடைய முடியவில்லை என்று கூறி நபியை மட்டம் தட்டும் அளவிற்கு கிழே இறங்கிச் சென்றுவிட்டனர். அல் – ஜன்னத் பக்கம் 44 //

நபியின் காலத்தில் இன்றைக்கு இருக்கும் அறிவியல் முன்னேற்றமோ நவீன கருவிகளோ இல்லை என்பதை நபி (ஸல்) அவர்கள் நாம் உம்மி சமுதாயமாக இருக்கிறோம் என்று கூறிய ஹதிஸின் படி அந்த கால மக்களுடைய இயலாமை என்று நாம் கூறியதை திரித்து கூறுகிறார். மீலாது விழா மார்க்கத்தில் இல்லை அதை கொண்டாடக்கூடாது என்று நாம் சொன்னபோது இவர்கள் நபியை புகழக்கூடாது என்று கூறுகிறார்கள் என்று சுன்னத் ஜமாத்தினர் ? எப்படி பொய் பிரச்சாரம் செய்தார்களோ அதே பாணியில் இவர்களும் இறங்கிவிட்டார்கள்.

பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். திருக்குர்ஆன் 3 : 61

// இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆனும் சுன்னாவும் தான் என்று தான் நாம் மக்களுக்கு கூறி பிரச்சாரம் செய்து வந்தோம். ஆனால் இவர்கள் இடத்தில் மூன்றாவது ஒரு அடிப்படையும் இருப்பதாக நம்புகின்றனர்.அதாவது குர்ஆன், ஹதீஸ்,அறிவு என்ற மூன்று அடிப்படைகள் எனக்கூறுகின்றனர். அல் – ஜன்னத் பக்கம் 44 //

நாம் குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ் மட்டுமே இஸ்லாத்தின் அடிப்படை என்ற விசயத்தில் இருந்து கொஞ்சம் கூட மாறவில்லை, இன்ஷா அல்லாஹ் மரணிக்கும்வரை மாறமாட்டோம். ஆனால் அவர்கள் தான் தடம்புரண்டுவிட்டர்கள். குர்ஆன் ஹதீஸை மூத்த அறிஞர்கள் விளங்கியது போலவே நாமும் விளங்கவேண்டும் என மூன்றாவது அடிப்படையை தொடர்ந்து அல்ஜன்னத் பத்திரிகையில் சமீபகாலமாக எழுதி வருகிறார். பிறை விஷயத்தில் நான் எடுக்கும் முடிவுக்கு நீங்கள் கட்டுப்படுங்கள் தவறாக இருந்தால் நான் அல்லாஹ்விடம் பொறுப்பு ஏற்கிறேன் என்று கூறியவர் தான் இதன் ஆசிரியர். இதற்கு குர் ஆன் ஹதீஸில் எங்கிருந்து ஆதாரம் எடுத்தார் என்று தெரியவில்லை. மேலும் அவரது சக மதனி ஒருவர் சென்னை ஜும்மா குத்பாவில் குர் ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றக்கூடாது சஹாபாக்கள் தாபியீன்களையும் பின்பற்றவேண்டும் என்று கூறியிருக்கிறார்.ஆகவே அவர்கள்தான் மாறிவிட்டார்கள்.

//மனித குல காலண்டர் ஏற்றுச் செயல்படாதவர்களை எல்லாம் வழிகேடர்கள் என்று இவர்கள் கூறிவருகிறார்கள் என்பது உண்மை தான். அல் – ஜன்னத் பக்கம் 45 //

நாம் எங்குமே இது போன்ற வார்த்தைகளை உபயோகித்ததே இல்லை. நாம் முன்னர் கூறியதையே மீண்டும் எச்சரிக்கின்றோம்.

பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். திருக்குர்ஆன் 3 : 61

// 9:37 வசனத்தின் வரலாற்று பின்ணனியை இருட்டடிப்பு செய்துவிட்டதாக குற்றம் சாட்டுகிறார்.//

ஒரு சந்தர்ப்பத்தில் இறங்கிய வசனத்தை அது போன்ற வேறு சந்தர்ப்பத்தில் பயன்படுத்தக்கூடாது என்பதை அவர் தெளிவு படுத்த வேண்டும். பயன்படுத்தலாம் என்பதை அவர் நேரடியாக விவாதத்திற்கு வந்தால் நாங்கள் நிரூபிக்க தயாராக இருக்கிறோம் .

மேலும் இவரின் தடுமாற்றங்களையும், மக்களை ஏமாற்றுவதையும், இன்ஷாஅல்லாஹ் விரைவில் வீடியோ உடன் கூடிய தொகுப்பாக வெளியிட இருக்கிறோம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.

இப்படிக்கு

இந்திய ஹிஜ்ரா கமிட்டி

தமிழ்நாடு



குற்றச்சாட்டுக்கு பதில்

ஏர்வாடி, ஆக.19: நெல்லை, ஏர்வாடி ஜாக் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆகஸ்டு 20ம் தேதி சந்திரன் முழுமையாக தேய்ந்து அமாவாசை ஏற்படுகிறது. அதற்கு அடுத்த நாள் வளர்பிறை ஆகும். இதை கவனத்தில் கொண்டு 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) இஸ்லாமியர்கள் அனைவரும் நோன்புடன் ரமலான் மாதத்தை கண்ணியப்படுத்தும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்: நெல்லை தினகரன் (19-08 09)

2009/8/20 Abdul Hadi

இது ஜாக் சார்பான தகவல் இல்லை. இது பொய்யான தகவல். ஜன்னத் பத்திரிகையில் தெளிவாக உள்ளது. படித்துப் பார்க்கவும் . நான் படித்துவிட்டேன்.

2009/8/20 AERO TRAVELS

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் அப்துல் ஹாதி அவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்திரிகை செய்தி ஏர்வாடி ஜாக் சம்மந்தப்பட்டது. செய்தி உண்மைதான். அல்ஜன்னத் படியுங்கள். அதிலும் கணக்கு சரி காணப்பட்டுள்ளதை பார்க்கலாம். அதன் பிறகு பின்பற்ற ஏன் தயக்கம்.

இப்படிக்கு ஏர்வாடி சிராஜ் ஜாக் சார்பில் 21ல் ரமலான் தொடக்கம்.



பி.கே.முஹ்யித்தீன் கேள்விக்கு பதில்

பி.கே.முஹ்யித்தீன் கேள்விக்கு பதில் Sun, Sep 30, 2007

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹிம்

அஸ்ஸலாமு அலைக்கும்! பிறை சம்பந்தமாக சில விளக்கங்கள் தேவைப்படுகிறது.தெளிவு தரவும்.

தாமதிக்காமல் பதில் தரவும்.பி.கே.முஹ்யித்தீன் Sun, Sep 30, 2007

1.ஒவ்வொரு மாதமும் புதிய பிறை எங்கு, எந்த நாட்டில் பிறக்கிறது என்று அறிய முடியுமா? முடியும் என்றால் எவ்வாறு?

உலக நேர (Universal Time) அடிப்படை நேரத்தை வைத்து பிறை எந்த நாட்டில் பிறக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக வரும் ஷவ்வாலுக்கான பிறை பிறக்கும் நேரம் 05:01UT நேரம் ஆகும். பூமியை 360டிகிரி என கணக்கிட்டு அதை 24 மணி நேரத்தில் வகுத்து 15 டிகிரி க்கு 1 மணி நேரம் என கணக்கிடப்பட்டுள்ளது. உலக தேதி கோட்டில் இருந்து கணக்கிட்டு வந்தால் ஷவ்வாலுக்கான பிறை பிறக்கும் இடம் தாய்லாந்து, ஹனாய், ஜகார்த்தா (+7 hours) போன்ற நாடுகளுக்கு மேல் தான் பிறக்கிறது. உலக தேதி மாறும் நேரம் பகல் 12.00 மணிக்கு தான். அந்த இடத்தில் 00.00hrs போட்டு கணக்கிட்டால் தான் பிறை பிறக்கும் சரியான இடத்தை கண்டுபிடிக்க முடியும். அதிலும் உலக அளவில் பல சதி வேலைகள் நடைபெற்று பிறைபிறக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் மக்கள் இருக்கிறார்கள்.

2.புதிய பிறை பிறந்ததிலிருந்து மாதம் தொடங்குகிறதா? அல்லது பார்வைக்கு தென்படுவதிலிருந்து துவங்குகிறதா? பிறை பிறந்ததிலிருந்து எத்தனை மணி நேரம் கழித்து பார்வைக்கு புலனாகும்?

புதிய பிறை பிறக்கும் நேரத்தில் இருந்து நாள் துவங்காது. நாளுக்கென்று ஒரு ஆரம்ப நேரம் எல்லை முடிவு எல்லை உள்ளது. அந்த எல்லையில் இருந்து தான் நாள் துவங்கும். இந்த புதிய பிறை பிறந்ததை நாம் பிறை பிறந்த நாள் என குறிப்பிடுவோம். (Date of Birth) நமக்கு மாதத்தின் முதல் நாள் (First day of the Month) எது என்பது தான் பிரச்சினை. பிறை பிறந்த நாள் 0 (பூஜ்யம்) ஆகும். இதற்கு அடுத்த நாள் மாதத்தின் முதல் நாளாகும். மேலும் நமக்கு அல்லாஹ் பிறையின் படித்தரங்களை தான் நாட்களுக்கான தேதி என அறிவிக்கிறானே தவிர கண்ணால் பிறை பார்த்து தான் மாதம் ஆரம்பிக்க வேண்டும் என எங்கும் கூறவில்லை. நபி(ஸல்) பிறையை கண்ணால் பார்த்து மாதத்தை ஆரம்பித்தாக ஒரு ஆதாரம் கூட இல்லை. எப்படி பிறை பார்க்க வேண்டும் என்பதை கூட நபி(ஸல்) அவர்கள் கற்றுக்கொடுக்கவில்லை.

தற்போது ஆங்கிலத்தில் நியூ மூன் என்று கூறப்படும் புதிய சந்திர சுழற்சி மாதம் என்பது சூரியன் சந்திரன் மற்றும் பூமி ஓரே நேர்கோட்டிற்கு வரும் நேரத்திலிருந்து துவங்கி விடுகிறது. இதை மக்கள் புதிய பிறை என கூறிவருகிறார்கள். ஹதீஸ்களில் பார்த்தால் இதை ஹிலாலு ஷவ்வால், ஹிலாலு ரமளான் என அழைப்பதை பார்க்க முடியும். சந்திரன் ஒரு மாதத்திற்கான சுற்றுவட்ட பாதையை முடித்து புதிய சுற்றை துவங்கும் நாள் தான் நியூ மூன் டே எனப்படுவதாகும்.

தற்போதைய வான மண்டலத்தில் நாம் பிறையை கண்ணால் பார்க்க வேண்டும் என்றால் குறைந்தது பிறை பிறந்து 24 மணிநேரமாவது ஆகியிருக்க வேண்டும். அதன் பிறகு தான் அது கண்பார்வைக்கு தெரியவரும். இதே பிறையை நபி (ஸல்) காலத்தில் கண்ணால் பார்க்க வாய்ப்புகள் பல இருந்தது. அன்றைய வான மண்டலம் இவ்வளவு மோசமாக இல்லை. எனவே 36:39 (வுர்ஜூனல் கதீம்) உலர்ந்து வளர்ந்த பேரீத்தம் பாளையை போல் ஆகும் வரை இதற்கு நாங்கள் படித்தரங்களை வைத்திருக்கிறோம் என அல்லாஹ் கூறும் கடைசி படித்தரத்தையும் கண்ணால் பார்க்க வாய்ப்புகள் இருந்தது. நமக்கு படித்தரங்களை பார்ப்பது தான் அல்லாஹ்வும் தூதரும் காட்டித்தந்த வழியே தவிர இன்று முஸ்லீம்கள் நம்பிக்கொண்டிருக்கும் வெறும் பார்வை இஸ்லாமிய மாதங்களை துவங்கும் வழியல்ல.

3.துல்ஹஜ் பிறை யுனிவர்சல் நேரம் மாலை 5:40- க்கு பிறப்பதாக ஹிஜ்ரா காலண்டரில் உள்ளது. அப்படியென்றால் மறுநாளே முதல் பிறையா? இக் கணக்கு சரிதானா? விளக்கம் தரவும்.

ஞாயிற்று கிழமை உலக நேரம் மாலை 5.40 க்கு நேர்கோட்டிற்கு சூரியன் சந்திரன் பூமி வரும் நேரம். சந்திரன் துல்ஹஜ் மாதத்திற்கான புதிய சுற்றை ஆரம்பிக்கும் நேரம். துல் காயிதா மாதத்தின் முப்பதாவது நாளுக்கான மன்ஸிலும், துல்ஹஜ் மாதத்திற்கான 0 (பூஜ்யம்) உள்ள ஒரு மன்ஸில் ஆகும். இதை தான் அல்லாஹ் 36:39 ல் உலர்ந்து வளைந்த பேரீத்தம் பாளையை போல் ஆகும் வரை அதற்கு படித்தரங்களை வைத்திருக்கிறோம். பேரீத்தம் பாளையையோ, தென்னை மர பாளையையோ பார்த்து சிந்தித்தால் பேரீத்தம் பழத்தை பரித்த பிறகு அதில் உள்ள பாளை இருபக்கமும் பிறை போன்று கீழே விழுந்து கிடப்பதை நாம் நமது சிறிய வயதில் பார்த்திருக்காலம். நம் ஊரில் தென்னை மரத்தில் தேங்காய் வருதற்காக பாளை வெடித்து தேங்காய் விளைந்து அதை பரித்ததும்; அந்த காய்ந்த பாளையை பார்த்தால் அதுவும் இரு பிறை வடிவங்களை அதில் பார்க்கலாம். அதற்கு அடுத்த நாள் திங்கள் கிழமை துல்ஹஜ் மாதத்தின் முதல் நாளாகும்.

4.ஸவ்வால் பிறை அதிகாலையிலேயே பிறப்பதால் இந்தியாவிலும் 11ந் தேதியே பிறை பார்வைக்க்கு தெரியும் அல்லவா?

மீண்டும் நினைவு படுத்துகிறேன். பிறந்த பிறையை கண்ணால் பார்ப்பதல்ல நபி வழி. அதன் படித்தரங்களை பார்த்து கணக்கிட்டு அது எந்த தேதியை மக்களுக்கு சொல்கிறதோ அந்த கிழமைக்கு(நாளுக்கு) நாம் அந்த தேதியை வைத்திருக்க வேண்டும். இதை தான் 2:189, 10:5 வசனமும், நபி (ஸல்) சொன்ன ‘ ஸூமூ லி ரூஃயத்’ என்ற அரபிப்பதம் குறிக்கிறது.

ஷவ்வால் பிறை இந்தியாவில் சூரிய அஸ்தமத்திற்கு பின் இருக்க வேண்டும். ஆனால் பல காரணங்களால் அது சூரிய அஸ்தமனததிற்கு முன்பாகவே இந்தியா சவூதி போன்ற நாடுகளில் அஸ்தமனம் ஆகிவிடுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் பார்வைக்கு தெரியும் என்பதால் அவர்கள் 12ஆம் தேதி வெள்ளிகிழமை ஷவ்வால் மாதத்தை துவக்க முடிவு செய்துள்ளார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்கள் இந்த பார்வையை சொல்லவில்லை. அதன் படித்தரங்கள் மாறி மாறி வருதை தான் பார்த்து வர சொன்னார்கள் அந்த அடிப்படையில் 11 ஆம் தேதி பழைய படித்தரத்தில் இருந்து புதிய படித்தரத்திற்கு மாறும் நிகழ்வு நடைபெறுவது நிரூபிக்கப்பட்ட உண்மையாக உள்ளதால் அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ( 12.10.2007 ) 1428ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும்.

5.பிறை ஒவ்வொரு மாதமும் எந்தெந்த நாட்டில் பிறக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கான வெப்சைட் முகவரி தரவும். நீங்கள் எவ்வாறு அறிகிறீர்கள்?

கீழ்கண்ட முகவரியில் இது சம்மந்தமான விபரங்களை அறியலாம். சந்திரனின் படித்தரங்கள் நிரூபிக்கப்பட்ட விஞ்சான விஷயத்தில் உள்ளதாகும்.

http://www.timeanddate.com/calendar/aboutmoonphases.html

http://www.timeanddate.com/calendar/moonphases.html



ஹிஜ்ரி காலண்டருக்கும் கிருஸ்துவக் காலண்டருக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

கேள்வி : ஹிஜ்ரி நாட்காட்டியை கன்ஜங்ஷன் முலாம் பூசப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டி என்று விமர்சனம் செய்வது பற்றிய விளக்கம் என்ன?

பதில் : குர்ஆன் சுன்னாவின் அசைக்க முடியாத ஆதாரத்துடனும், துள்ளியமான விஞ்ஞானத்தின் அடைப்படையிலும் அமைந்ததே அல்லாஹ் வழங்கிய மனிதகுலத்தின் காலண்டரான நமது ஹிஜ்ரி நாட்காட்டி ஆகும். இத்தகைய இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியை, ஒட்டுமொத்த மனிதர்களுக்காகவும் அல்லாஹ் வழங்கியுள்ள காலண்டரை, போப் கிரிகோரி தயாரித்த கிருஸ்தவ ஆங்கில நாட்காட்டியோடு அனுவின் முனையளவுகூட ஒப்பிட்டுக் கூற இயலாது.

காரணம், நமது ஹிஜ்ரி நாட்காட்டியில் நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி ஒவ்வொரு மாதங்களிலுள்ள நாட்களின் எண்ணிக்கை 29 அல்லது 30 ஆகவே உள்ளன. ஆனால் கிரிகோரியன் நாட்காட்டியின் மாதங்களிலுள்ள தேதிகளின் எண்ணிக்கை 28, 29, 30 மற்றும் 31 என்று பலவாறாக அமைந்துள்ளன. மேலும் இந்த கிரிகோரியன் காலண்டர் இஸ்லாம் தடுத்துள்ள நட்சத்திர இலக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

சந்திரனின் 'அஹில்லாஹ்' மனிதர்களுக்கு தேதிகளை அறிவிக்கும் (2:189) மற்றும் சந்திரனின் 'மனாஜிலை' வைத்து ஆண்டுகளை கணக்கிட வேண்டும் (10:5). இவை போன்ற அல்குர்ஆனின் கட்டளைகளுக் கிணங்க பிறைகளின் வடிவ நிலைகளால் ஆனதே ஹிஜ்ரி காலண்டரின் தேதிகள். ஆனால் கிரிகோரியன் நாட்காட்டியின் தேதிகளுக்கும், பிறைகளின் படித்தரங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

இஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டரின் மாதங்களிலுள்ள நாட்களின் எண்ணிக்கையில் எவ்வித கூட்டலும், கழித்தலும் தேவையற்றது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் கண்கீட்டில்கூட அதன் துள்ளியம் மாறாதது. ஆனால் கிரிகோரியன் நாட்காட்டியில் ஒவ்வொரு 4 வருடங்களுக்கு ஒருமுறை, லீப் நாளாக ஒரு நாளை கூடுதலாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் ஒவ்வொரு தேதியும் குர்ஆன் சுன்னாவின் கூற்றுக்கிணங்க ஃபஜ்ரிலிருந்து (விடியலிலிருந்து) துவங்குகிறது. ஆனால் கிரிகோரியன் நாட்காட்டியின் தேதிகள் நள்ளிரவு 12 மணிக்கு துவங்குகிறது.

இவ்வாறு ஹிஜ்ரி நாட்காட்டிக்கும், கிருஸ்தவ நாட்காட்டிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளின் பட்டியல் மிக நீளமானது. எனவே ஹிஜ்ரி நாட்காட்டி கன்ஜங்ஷன் முலாம் பூசப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டி என்ற தரம்தாழ்ந்த விமர்சனத்தின் உண்மை நிலையை நியாயமுடனும், நீதியுடனும் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

கிரிகோரியினின் கிருஸ்தவ நாட்காட்டியைத் தூக்கிப் பிடித்து ஹிஜ்ரி நாட்காட்டியை எப்படியேனும் மட்டம் தட்ட வேண்டும் என்ற நோக்கில் பலான இயக்கத் தலைவர் பேசிய பேச்சுக்களை யாரும் மறக்க இயலாது. ஆங்கில காலண்டர் கிருஸ்தவ நாட்காட்டி அல்ல, மாறாக அது ஒரு சூரியக் காலண்டர்தான் இதைப் பின்பற்றுவது தப்பில்லை என்றார். மேலும் ஆங்கில காலண்டர் பின்பற்றுவதற்கு லேசானது, லேசானதுதான் மார்க்கம் என்றும் கூறினார். ஸஹாபாக்கள் இஸ்லாமிய ஆண்டுகளின் எண்ணிக்கைளை நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்திலிருந்து துவக்கியதில் எவ்வித லாஜிக்கும் இல்லை என்றார். இவ்வாறான அபத்தக் கருத்துக்களை எல்லாம் மார்க்கம் என்று போதிக்கப்பட்டு அதிலேயே பயிற்றுவிக்கப்பட்டவர்கள் யாரும் ஹிஜ்ரி நாட்காட்காட்டியைப் பற்றி விமர்சிப்பதற்கு எவ்வித அருகதையும், தகுதியும், உரிமையும் இல்லாதவர்களாவர்.

'ஒரு கிழமைக்கு இரண்டு தேதிகளை இறைவன் அமைத்துள்ளான்' என்று ஆதாரமற்ற, வடிகட்டிய பொய்யைக்கூட துணிந்து சொல்பவர்களிடம் இதுபோன்ற தரமற்ற விமர்சனங்களைத் தவிர வேறு எவற்றை நாம் எதிர்பார்க்க முடியும்?

சர்வதேசத்தேதிக் கோடு (IDL) பிரிட்டிஷ்காரர்களின் தனிவுடமையல்ல.

கேள்வி : உங்கள் ஹிஜ்ரி நாட்காட்டியானது International Date Line – IDL எனும் சர்வதேசத்தேதிக் கோட்டிலிருந்து ஒரு நாளைத் துவங்குவதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. சர்வதேசத்தேதிக் கோட்டை பிரிட்டிஷ்காரர்கள்தான் கண்டுபிடித்து போட்டனர். எனவே உங்கள் ஹிஜ்ரி காலண்டர் இஸ்லாமிய நாட்காட்டியாக எப்படி ஆகும்?

பதில் : International Date Line – IDL எனும் சர்வதேசத்தேதிக் கோட்டுப் பகுதியில்தான் ஒவ்வொரு கிழமையும் (நாள்) மாறுகிறது என்பதை ஒட்டுமொத்த உலக மக்களும் எவ்வித கருத்து வேறுபாடின்றி ஏற்றுக் கொண்டுள்ளனர். உதாரணமாக ஒவ்வொருநாளும் சர்வதேசத்தேதிக் கோட்டுப் பகுதிக்கு அருகிலுள்ள கிழக்கத்திய நாடுகளான ஃபிஜி, நியூசிலாந்து போன்ற பகுதியிலிருந்துதான் புதிய நாள் துவங்குகிறது.

இதற்கு வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆத் தொழுகையை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். Dateline-க்கு அருகில் கிழக்குப் பகுதி நாடுகளிலுள்ள முஸ்லிம்கள்தான் முதலில் ஜூம்ஆ தொழுகையை தொழுகின்றனர். பிறகு ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா என்று ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து நாடுகளிலுள்ள முஸ்லிம்களையும் அந்த ஜூம்ஆ தொழுகை கடந்து செல்கிறது. பிறகு மேற்கில் அமெரிக்கா, அலாஸ்கா போன்ற நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் தொழுது முடித்த பின்னர், அதே சர்வதேசத்தேதிக் கோட்டின் இறுதிப் பகுதியான அமெரிக்கன்சமோவா பகுதியில் வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆ தொழுகை முடிவடைகிறது. இதைத்தான் 24 மணிநேரங்கள் கொண்ட முழுமையான ஒருநாள் என்கிறோம். இதில் யாருக்கும் எத்தகைய மாற்றுக் கருத்துமில்லை. புரிந்துகொள்வதற்காக இந்த உதாரணம்.

இந்நிலையில், 'உங்கள் ஹிஜ்ரி நாட்காட்டியானது Dateline லிருந்து நாளைத் துவங்குவதாக உள்ளதே'' என்று வாதம் வைத்துள்ளனர். தேதிக்கோட்டிலிருந்து (Dateline) நாள் துவங்குவது தவறு, அது ஹராம் என்ற எண்ணம் இவர்களுக்கு இருப்பது இக்கேள்வியிலிருந்து தெரிகிறது. அப்படியானால் பூமியின் எந்தப் பகுதியிலிருந்து ஒருநாள் துவங்குகிறது? என்பதை நடைமுறை உண்மையிலிருந்து எடுத்துக் காட்ட வேண்டும். மேலும் இன்று வெள்ளிக்கிழமைதான் (16-10-2015) என்பதை இவர்கள் ஒப்புக் கொள்கிறார்களா இல்லையா? இன்றைய வெள்ளிக்கிழமை எங்கிருந்து ஆரம்பமாகியது என்பதையும் கூற வேண்டும். ஒரு தேதியை தேதிக்கோட்டிலிருந்து துவங்காமல் எங்கிருந்து துவங்குவது?

இன்னும் 'Dateline'-ஐ பிரிட்டிஷ்காரர்கள்தான் கண்டுபிடித்தனர் என்பதும் இவர்களின் முக்கிய வாதம். கிபி 1884-ல் தேதிக்கோட்டுப் பகுதி (Dateline) அதுதான் என்று உலகம் ஒப்புக் கொள்வதற்கு சுமார் 600 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம்கள் அந்தப் பகுதிக்கு சென்றுவிட்ட வரலாற்றை இவர்கள் படிக்கவில்லை. கிபி 1884-க்கு முன்னரே உலகில் வெள்ளிக்கிழமை உட்பட ஏழு கிழமைகள் இருக்கத்தான் செய்தது. கிபி 1884-க்கு முன்னரே சர்வதேசத்தேதிக் கோட்டுப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை என்ற அந்த நாளில்தான் ஜூம்ஆ தொழுகையை தொழுது இருப்பர்.

இந்நிலையில், 'Dateline' பகுதியை பிரிட்டிஸ்காரர்கள்தான் கண்டுபிடித்தனர்' என்றால், கிபி 1884-க்கு முன்னர் பூமியின் எந்தப் பகுதி முஸ்லிம்கள், வெள்ளிக்கிழமையுடைய ஜூம்ஆ தொழுகையை முதலில் நிறைவேற்றினர் என்பதை ஆதாரத்துடன் இவர்கள் நிரூபிக்க வேண்டும். கிபி 1884-க்கு முன்னர் பூமியிலுள்ள முஸ்லிம்களுக்கு தொழுகைகளும், கிப்லாவும் இருக்க வில்லையா? நவ்வூதுபில்லாஹ்.

கடந்த அக்டோபர் 1884-ல், வாஷிங்டனில் நடைபெற்ற International Meridian Conference இல் சர்வதேசத்தேதிக் கோட்டுப்பகுதி என்று அறிவித்ததை ஏதோ பிரிட்டிஷ்காரர்கள் IDL-லை அகழ்வாராய்ச்சி செய்து புதிதாக உறுவாக்கியதைப் போல சித்தரிக்கின்றனர். Dateline பகுதி பிரிட்டிஷ்காரர்களின் தனிவுடமையல்ல.

முஸ்லிமல்லாதவர்களின் கண்டுபிடிப்புகள் ஹராம் என்று எண்ணிக் கொண்டார்கள் போலும். புதிய கண்டுபிடிப்புகள் நாம் பயன்படுத்தும் போது அவற்றை யார் கண்டுபிடித்தார்? அவருடைய மதம் என்ன? அவருக்கு எந்த ஊர்? என்று நாம் பார்ப்பதில்லை. அப்படி பார்க்க வேண்டிய அவசியமுமில்லை. கண்டுபிடித்த விஷயம் சரியாக இருந்து, மார்க்கத்தில் தடை இல்லாமலிருந்தால் போதுமானது. அவற்றை பயன்படுத்துவதில் எந்தத் தவறுமில்லை. உதாரணமாக முஸ்லிம்களாகிய நாம் தினமும் பயன்படுத்தும் தொழுகை கால அட்டவணையின் நேர அளவுகளின் சூத்திரத்தையும், அதன் கணக்கீட்டையும் கண்டுபிடித்தது யார்? என்று நாம் ஆராய்ச்சி செய்வதில்லை. அதை ஏற்று சரிகண்டு பின்பற்றத்தான் செய்கிறோம்.

அதுபோலத்தான் அமெரிக்கன்சமோவாவையும், ஃபிஜி தீவுகளையும் பிரிக்கும் பகுதியாக உள்ள சர்வதேசத்தேதிக் கோட்டுப்பகுதி மிகச் சரியான இடத்தில் அமைந்துள்ளது. அந்த இடத்தில்தான் வியாழக்கிழமையிலிருந்து, வெள்ளிக்கிழமை மாறுகிறது. தினமும் கிழமை மாற்றம் அந்த இடத்தில்தான் நடைபெறுகிறது. அல்குர்ஆனின் 55:17-வது வசனம் சிலாகித்துச் சொல்லும் இடமாகவும் இது இருக்கிறது. இவ்வாறு அல்லாஹ்வின் அத்தாட்சிகள் உள்ள இடமாக இவ்விடம் திகழ்கிறது.

இன்னும் இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டி மார்க்க அடிப்படையில் அமைந்ததுதான் என்பதற்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து நேரடி ஆதாரங்களை மக்கள் மன்றத்தில் சமர்ப்பித்து விட்டோம். அவ்வாறு நிரூபித்த பின்னரும் 'உங்கள் ஹிஜ்ரி காலண்டர் இஸ்லாமிய நாட்காட்டியாக எப்படி ஆகும்?' என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஹிஜ்ரி நாட்காட்டியின் பற்றி அடிப்படை ஞானமில்லாமல் இவர்கள் விமர்சிப்பது துரதிஷ்டவசமும், துர்பாக்கிய நிலையுமாகும்.

எவ்வித கருத்து வேறுபாடின்றி இவர்களே ஏற்றுக் கொண்டுள்ள தொழுகை அட்டவணையின் கிழமைகள் எந்த Dateline - ஐ அடிப்படையாகக் கொண்டது? மேலும் அதன் கிழமைகள் எங்கிருந்து துவங்கிறது? என்பதையாவது இவர்கள் சிந்திக்கக் கூடாதா?

இவர்களது பிறை நிலைபாட்டின்படி பிறைபார்க்கும் தமிழக, தேசிய எல்லைகளுக்கு மார்க்க ஆதாரமுண்டா? என்பதை ஆய்வு செய்யாமல் Dateline பற்றி தாருமாறாக விமர்சிப்பது நகைப்புக்குரியது. Dateline பகுதியை ஹிஜ்ரிகமிட்டி கிரையப்பத்திரம் செய்து வாங்கிவிட வில்லை. தற்போதிருக்கும் உண்மையான சர்வதேசத்தேதிக் கோட்டுப்பகுதியை மாற்றி, தான் விரும்பும் இடத்திலிருந்துதான் ஒவ்வொருநாளும் துவங்க வேண்டும் என்ற கற்பனை ஆசையில் இவர்கள் மிதக்கின்றனர். அவர்கள் விரும்பும் அந்த இடத்தை புதிய சர்வதேசத் தேதிக் கோட்டுப் பகுதியாக (New IDL) அறிவித்து உலக நாடுகளை ஏற்றுக் கொள்ளச் செய்யட்டுமே!. பிறகு அதன் அடிப்படையில் ஒரு சந்திரக் காலண்டரையும் தயாரித்து மக்கள் மத்தியில் தரட்டும். அதன் பின்னர் ஹிஜ்ரி நாட்காட்டி இஸ்லாமிய நாட்காட்டியா? என்று நம்மை நோக்கி கேள்வி எழுப்பட்டும். இவர்களது மனோ இச்சைகள் ஒருபோதும் மார்க்கமாகாது.

நாள் : 03-முஹர்ரம்-1437, வெள்ளிக்கிழமை (அக் 16)

ஒருநாளுக்குரிய தேதி ஊருக்கு ஊர் மாறுபடுவதில்லை

கேள்வி : இந்திய நேரம், உலக நேரம் எல்லாம் மனிதன் உருவக்கியதுதான். ஜெய்ப்பூருக்கும் காயல்பட்டினத்திற்கும் இந்திய ஸ்டாண்டர்ட் நேரம் (IST) ஒன்றுதான். ஆனால் true solar time என்பது வேறு. இதைப் புரிந்து கொள்வதற்கு விஞ்ஞான அறிவு வேண்டும் என்றும், நீங்கள் விக்கிபீடியா இணையதளத்தைத்தான் ஆதாரமாகக் கொள்வதாகவும் விமர்சனம் செய்யப்படுகிறதே இதற்கு உங்கள் விளக்கம் என்ன?

பதில் : மேற்படி இரண்டு ஊர்களுக்குமிடையே நேர வித்தியாசம் இருக்குமே அல்லாமல் நாள் வித்தியாசம் இல்லை. ஒருநாளுக்குரிய தேதி ஊருக்கு ஊர் மாறுபடுவதில்லை என்பதை முன்னரே விளக்கி விட்டோம். இந்திய நேரம், உலக நேரம் என்பதெல்லாம் மனிதன்தான் உருவக்கியது என்கின்றனர். அப்படியானால் 'உண்மையான சூரிய நேரம்' (true solar time) என்று இவர்கள் வாதிக்கும் அந்த நேரத்தை கண்டுபிடித்தது யார்? என்பதையும் இவர்கள் சொல்ல வேண்டும். அந்த நேரத்தை மலக்குமார்களா கண்டு பிடித்தார்கள்?

தான் என்ன கேட்கிறோம் என்பதைக்கூட புரியாமல் ஏதோ கேள்விகளை அடுக்கிக் கொண்டு போய்விடுவோம் என்று எண்ணிக் கொண்டார்கள் போலும். 'இதைப் புரிந்து கொள்வதற்கு விஞ்ஞான அறிவு வேண்டும்' என்ற பீடிகை வேறு.

அப்படியானால், 'சந்திரன் மேற்கில் உதிக்கிறது. மேற்கு திசையில்தான் சந்திரனைப் பார்ப்பீர்கள். சந்திரன் (பிறை) மேற்கில் உதித்து கிழக்கில் மறைகிறது' என்று இவர்களது இயக்கத்தின் அசல் தலைவர் சொல்லியுள்ளது விஞ்ஞானமா அல்லது மெஞ்ஞானமா? என்பதையும் இவர்களே அறிவிக்கட்டும்.

இன்னும், 'தலைப்பிறை சவுதியில் உதிக்கிறது என்றால் சவுதியிலிருந்து பிறை ரிவேஸ்ல வராது. காரணம் அது மேற்கு உதிப்பதால் நம் தலைக்கு நேராக ஒரு ரவுண்ட் அடித்து வருவதற்கு 21:30 மணிநேரம் ஆகும்' என்று இவர்களது தலைவர் சொன்னது எந்த ''விக்காத பீடியா'' இணையதளத்தில் உள்ளது?

மேலும், 'பிறை பிறந்தால்தான் இரவு ஆரம்பிக்கிறது. இரவில்தான் நாள் ஆரம்பிக்கிறது' என்று அவர் சொன்னதும் விஞ்ஞான அறிவின் உச்சகட்ட முதிற்சியின் வெளிப்பாடுதானோ?

இவர்களின் விஞ்ஞான அறிவின் நிலைமை இந்த அளவு இருக்கும் போது Apparent solar time, Mean solar time, Standard time மற்றும் Universal Time என்று கேள்வி எழுப்புவது நகைப்புக்குரியது.

உலக நேரம் என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரமுண்டா?

கேள்வி : உலகநேர (Universal Coordinated Time - UTC) கணக்கீட்டின் அடிப்படையில்தான் உங்கள் காலண்டரின் தேதிகளை அமைத்துள்ளீர்கள். UT எனும் இந்த உலக நேரம் என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரமில்லை. இந்நிலையில் உங்கள் ஹிஜ்ரி காலண்டரை எப்படி இஸ்லாமிய நாட்காட்டி என்று கூறுகிறீர்கள்?. இந்த கேள்விக்கு விடை என்ன?

பதில் : உலகநேர (Universal Coordinated Time - UTC) என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரமில்லை என்று வாதம் எழுப்பியுள்ளனர். அப்படியானால் இன்று காலை 10 மணி என்கிறோம். நான் நாளை மாலை 5 மணிக்கு வருகிறேன் என்கிறோம். இவ்வாறான நமது அன்றாட வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த இந்த லோக்கல் மணிநேரக் கணக்கிற்கு (Local Time) குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் இருக்கிறதா? என்பதையும் இவர்களே விளக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

உலக நேரம் (UT) என்பதை ஏதோ கழிவுகட்டை நேரமாக சித்தரிக்கும் போக்கு இக்கேள்வியில் தெரிகிறது. நம்மைப் பொறுத்தவரை Local Time, Universal Time போன்ற எந்த நேரக் கணக்கீட்டையும் வெறுப்பவர்கள் அல்லர். அந்தந்த நேரக்கணக்கீட்டை எதுஎதற்குப் பயன்படுத்த வேண்டுமோ அதுஅதற்கு பயன்படுத்த வேண்டும் என்கிறோம். கால நேரத்தை இழிவாக பேசக்கூடாது என்பதுதான் ஒரு முஸ்லிமின் நிலைப்பாடாக இருக்க வேண்டும் என்கிறோம்.

நேரங்கள் குறித்து பல்வேறு குர்ஆன் வசனங்கள் உள்ளன. சூரியனும், சந்திரனும் திட்டமிட்ட கணக்கின்படியும், கணக்கிடும்படியும் உள்ளதாக வல்ல அல்லாஹ் குறிப்பிடுகிறான் (55:5, 6:96).

மேலும் அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஆதமுடைய மக்கள் காலத்தை திட்டுகிறார்கள். ஆனால் நானே காலமாக (காலத்தின் போக்கை நிர்ணயிப்பவனாக) உள்ளேன். என்னுடைய கரத்திலேயே இரவும், பகலும் உள்ளன. நூல் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவுத், தாரமி, முஅத்தா.

எனவே நேரக் கணக்கீடுகளில் எதையும் நாம் வெறுத்து ஒதுக்க வேண்டியதில்லை. உலக நேரம் (UT) என்பதும் இஸ்லாத்திற்கு சொந்தமானதுதான் என்பதை புரிந்து கொள்ள மேற்கண்ட ஆதாரங்களே போதுமானது.

சந்திர மாதத்தின் இறுதிநாள் சங்கமதினம். சங்கமம் என்பது சர்வதேச சமூகத்திற்கும் உள்ள ஒரு பொதுவான சர்வதேச நிகழ்வு. அந்த சங்கம நிகழ்வை சர்வதேச நேரக் கணக்கீடான உலக நேரத்தில்தான் (UT) குறிப்பிட வேண்டும். இந்த அறிவியலின் அடிப்படையான விஷயத்தை விபரம் தெரிந்தவர்கள் மறுக்க மாட்டார்கள்.

வியாபார நோக்கில் தங்கள் இயக்கத் தலைமை அச்சடித்து வருடந்தோரும் வெளியிடும் குத்துமதிப்பு காலண்டர்களின் தேதிகள், பிறைகளின் வடிவநிலைகளோடு முரண்படுவது பொதுமக்கள் மத்தியில் வெட்ட வெளிச்சமாகி விட்டது. அதில் விரக்த்தியுற்றவர்கள் மக்களை திசை திருப்புவதற்கு உலகநேரத்தை (UT) மையப்படுத்தி 'ஹிஜ்ரி காலண்டரை இஸ்லாமிய நாட்காட்டி என்று எப்படி கூறுகிறீர்கள்?' என்று விமர்சிப்பதின் சூழ்ச்சமம் நமக்கு புரியத்தான் செய்கிறது.

உலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா?

கேள்வி : புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நடைபெறும் போது பூமியில் இரண்டுகிழமைகள் இருக்கும். அதனால் 24 மணிநேரங்கள் கொண்ட ஒருநாளுக்குள் நோன்பைத் துவங்கவோ, பெருநாளை கொண்டாடவோ முடியாது என்கிறார்களே இதன் விளக்கம் என்ன?

பதில் : ஒவ்வொரு சந்திர மாதத்தின் இறுதி நாளிலும் சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய முக்கோள்களும் ஒரு கோட்டில் தவறாமல் சங்கமிக்கும். அவ்வாறு சங்கமிக்கும் நிகழ்வைத்தான் புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) என்கிறோம். சங்கமம் என்ற இந்த நிகழ்வு பூமியின் ஒரேயொரு மையப்புள்ளியில் (One Geocentric Position) தான் நடைபெறும். ஒருமாதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மையப்புள்ளிகளில் சங்கமம் நடைபெறாது. சங்கமம் நடைபெறும் மையப்புள்ளியின் பகுதிக்கு ஒரேயொரு தேதியும், ஒரேயொரு கிழமையும்தான் (நாள்) இருக்கும். சங்கமம் நடைபெறும் அந்த சர்வதேச நாளைத்தான் புவிமைய சங்கம நாள் என்கிறோம். பூமியின் ஒரு மையப்புள்ளியில் நடைபெறும் நிகழ்வான இப்புவிமைய சங்கமம் என்ற அந்த சொல்லிலேயே இக்கேள்விக்குரிய விடை உள்ளது. சங்கமம் நடைபெறும் அந்த சர்வதேச நாளுக்கு, இரண்டு தேதிகள் கிடையாது என்பதை அறிந்து கொள்க.

இப்போது கேள்வியை மீண்டும் படியுங்கள். புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நடைபெறும் போது பூமியில் இரண்டு கிழமைகள் (நாட்;கள்) இருக்கும் என்பது வாதம். சங்கமம் நடைபெறாத மாதத்தின் மற்ற நாட்களிலும் பூமியில் இரண்டு கிழமைகள் இருக்கத்தான் செய்யும். எனவே ஒவ்வொரு தேதிக்கும் இரண்டிரண்டு கிழமைகள் கொடுக்கலாமா என்ன? ஒவ்வொரு நாளுக்கும் (கிழமைக்கும்) குறிப்பிட்ட ஒரு தேதி மட்டும்தான் உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.

உதாரணமாக ஒரு சந்திரமாதத்தின் 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பூமியின் ஒரு மையப்புள்ளியில் சங்கமம் நிகழ்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது வியாழக்கிழமையில் இருக்கும் நாடுகள் அனைத்திற்கும் 29-வது தேதியாகத்தான் இருக்கும். அன்றி அந்த வியாழக்கிழமைக்கு 30-வது தேதியோ, 28-வது தேதியோ இருக்காது. அதுபோல சங்கமம் நடைபெறும் வெள்ளிக் கிழமைக்கு 30-வது தேதியைத் தவிர மற்றொரு தேதி இருக்காது. அந்த வெள்ளிக்கிழமை என்ற 24 மணிநேரங்கள் கொண்ட அந்த நாளில் மட்டும்தான் ஜூம்ஆ எனும் 2 ரக்அத்துகள் கொண்ட தொழுiகைத் தொழுவோம். வியாழன், வெள்ளி, சனிக் கிழமைகள் என்று ஒன்றுக்கு மேற்பட்ட நாட்களில் ஜூம்ஆத் தொழுகையை நாம் தொழ மாட்டோம். ஆக சங்கமம் நடைபெறும் போது இரண்டு கிழமைகள் (நாட்கள்) இருக்கும் என்றால், குறிப்பிட்ட அந்தந்த நாட்கள் குறிப்பிட்ட ஒருவ்வொரு தேதிக்கும் உரியது. எனவே 24 மணிநேரங்கள் கொண்ட ஒருநாளுக்குள் நோன்பைத் துவங்கவோ, பெருநாளை கொண்டாடவோ முடியாது என்பது தவறான வாதமாகும். மேலும் இது திட்டமிட்டு திரித்துக் கூறுவதும் ஆகும்.

சந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின் காலண்டரை உருவாக்க முடியுமா?

பதிலளிப்பவர்:-

மௌலவி அப்துர் ரஷீத் ஸலஃபி அவர்கள்

சந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின் காலண்டரை உருவாக்க முடியுமா?

இடம் :-

ராயல் கோர்ட், அக்குரணை, ஸ்ரீலங்கா

Royal Court Wedding Hall, Kandy-Jaffna Highway, Akurana, Sri Lanka.

தேதி :-

ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15

ஞாயிற்றுக்கிழமை (03-05-2015).

இஜ்திஹாது அடிப்படையில் ஜம்மியத்துல் உலமாவின் தலைமையின் கீழ் செயல்படுவது பிழையாகுமா?

கேள்வி: நாம் ஒரே உம்மத்தாக இருக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப் பட்டது. இலங்கை முஸ்லிம்கள் ஓரே தலமையின் ஜம்மியத்துல் உலமா கீழ் பல்வேறு விடையங்களில் பின்பற்றுகிறது. பிறை வடயத்தில் ஓர் அமைப்பு இஜ்திஹாது அடிப்படையில் முடிவுகளை தருகிறது. அதை நம் நாட்டு அநேகமானவர்கள் ஏற்றுக் கொள்கிறனர். எனவே, அவர்கள் மூலம் இதை முஸ்லிம் சமூகத்திற்கு எடுத்துச் சொல்வது நல்லது. எனவே, சமூகம் பிரிவுபடாமலிருக்க தற்போதைய தலைமையின் கீழ் செயல்படுவது பிழையாகுமா? அல்லது அவர்கள் ஓர் கருத்தில் இருக்க பலர் அவர்களை பின்பற்றுவார்கள்? வேறு சிலர் இதை பின்பற்றுவார்கள்? சமூகம் மேலும் மேலும் பிளவுபடும்?

ஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி

பதிலளிப்பவர் :- மௌலவி அப்துர் ரஷீத் ஸலஃபி அவர்கள்

தேதி :-

ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 14

சனிக்கிழமை (02-05-2015)

இடம் :-

புத்தளம், ஸ்ரீலங்கா

இஜ்திஹாது அடிப்படையில் ஜம்மியத்துல் உலமாவின் தலைமையின் கீழ் செயல்படுவது பிழையாகுமா?

சர்வதேச பிறை நிலைபாட்டை பின்பற்றினால் குழப்பம் வருமா?

சர்வதேச பிறை நிலைபாட்டை பின்பற்றினால் குழப்பம் வருமா?- ATJ மஸ்ஜிது , அக்குரணை, ஸ்ரீலங்கா.

ஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி

பதிலளிப்பவர்: மௌலவி அப்துர் ரஷீத் ஸலஃபி அவர்கள்

தேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015)

இடம் : ATJ மஸ்ஜிது, அக்குரணை, ஸ்ரீலங்கா

சர்வதேச பிறை நிலைபாட்டை பின்பற்றினால் குழப்பம் வருமா?



ஹிஜ்ரி காலண்டரும் பிற காலண்டர்களும்

தேதி :-

ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15

ஞாயிற்றுக்கிழமை (03-05-2015)

இடம் :-

ராயல் கோர்ட், அக்குரணை, ஸ்ரீலங்கா


Royal Court Wedding Hall, Kandy-Jaffna Highway, Akurana, Sri Lanka

ஹிஜ்ரி காலண்டரும் பிற காலண்டர்களும் - Islamic Hijri Calendar & Other Calendars

உரை :-

மௌலவி அப்துர் ரஷீத் ஸலஃபி அவர்கள்

குரைப் ஹதீஸிற்கு விளக்கம்? பெருநாள் தொழுகை குறைவானவர்கள் தொழுவது சரியா?

1. குரைப் ஹதீஸிற்கு விளக்கம் என்ன? 2. பெருநாள் என்பது பொதுவானது தானே அதை குறைவான நபர்களை வைத்து தொழுவது சரியா? - ATJ மஸ்ஜிது , அக்குரணை, ஸ்ரீலங்கா.

ஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி

பதிலளிப்பவர்: மௌலவி அப்துர் ரஷீத் ஸலஃபி அவர்கள்

தேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015)

இடம் : ATJ மஸ்ஜிது, அக்குரணை, ஸ்ரீலங்கா

1. குரைப் ஹதீஸிற்கு விளக்கம் என்ன? 2. பெருநாள் என்பது பொதுவானது தானே அதை குறைவான நபர்களை வைத்து தொழுவது சரியா?

2:189தில் வீடுகளில் பின் வாசல் வழியாக...அல்லாஹ் கூறுவது பிறையுடன் தொடர்புடையதா?

கேள்வி : 2:189 வசனத்தில் உங்கள் வீடுகளில் பின் வாசல் வழியாக செல்லாதீர்கள் மாறாக முன் வாசல் வழியாக செல்லுங்கள் என்று அல்லாஹ் கூறுவது பிறையுடன் தொடர்புடையதா?

ஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி

பதிலளிப்பவர் :- மௌலவி அப்துர் ரஷீத் ஸலஃபி அவர்கள்

தேதி :-

ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 14

சனிக்கிழமை (02-05-2015)

இடம் :-

புத்தளம், ஸ்ரீலங்கா

கேள்வி : 2:189 வசனத்தில் உங்கள் வீடுகளில் பின் வாசல் வழியாக செல்லாதீர்கள் மாறாக முன் வாசல் வழியாக செல்லுங்கள் என்று அல்லாஹ் கூறுவது பிறையுடன் தொடர்புடையதா?

நாளின் ஆரம்பம் நல்லிரவா? அல்லது ஃபஜ்ரா?

ஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி

பதிலளிப்பவர் :- மௌலவி அப்துர் ரஷீத் ஸலஃபி அவர்கள்

தேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 14 சனிக்கிழமை (02-05-2015)

இடம் : புத்தளம், ஸ்ரீலங்கா

கேள்வி : நாளின் ஆரம்பம் நல்லிரவா? அல்லது ஃபஜ்ரா?

ஹிஜ்ரி கமிட்டி செயல் படுவது பிறையை பார்த்தா அல்லது கணக்கிட்டா?

ஹிஜ்ரி கமிட்டி செயல் படுவது பிறையை பார்த்தா அல்லது கணக்கிட்டா? - ATJ மஸ்ஜிது , அக்குரணை, ஸ்ரீலங்கா.

ஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி

பதிலளிப்பவர்: மௌலவி அப்துர் ரஷீத் ஸலஃபி அவர்கள்

தேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015)

இடம் : ATJ மஸ்ஜிது, அக்குரணை, ஸ்ரீலங்கா

ஹிஜ்ரி கமிட்டி செயல் படுவது பிறையை பார்த்தா அல்லது கணக்கிட்டா?

மாதத்தின் எத்துனை நாட்கள் முடிந்தன.. என்று வரும் ஹதீஸில் உங்களின் கருத்து என்ன?

மாதத்தின் எத்துனை நாட்கள் முடிந்தன.. (இப்னு ஜைமாஹ்-2024) என்று வரும் ஹதீஸில் உங்களின் கருத்து என்ன? - ATJ மஸ்ஜிது , அக்குரணை, ஸ்ரீலங்கா.

ஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி

பதிலளிப்பவர்: மௌலவி அப்துர் ரஷீத் ஸலஃபி அவர்கள்

தேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015)

இடம் : ATJ மஸ்ஜிது, அக்குரணை, ஸ்ரீலங்கா

மாதத்தின் எத்துனை நாட்கள் முடிந்தன.. என்று வரும் ஹதீஸில் உங்களின் கருத்து என்ன?

மறைக்கப்படும் நாளை சரியாக கணக்கிட முடியுமா?

மறைக்கப்படும் நாளை சரியாக கணக்கிட முடியுமா? - ATJ மஸ்ஜிது , அக்குரணை, ஸ்ரீலங்கா.

ஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி

பதிலளிப்பவர்: மௌலவி அப்துர் ரஷீத் ஸலஃபி அவர்கள்

தேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015)

இடம் : ATJ மஸ்ஜிது, அக்குரணை, ஸ்ரீலங்கா

மறைக்கப்படும் நாளை சரியாக கணக்கிட முடியுமா?

பிறை பார்க்க தேவையில்லை கணக்கிட்டு கொள்ளலாம் என்கிறீர்களா?

இப்னு குஜைமாஹ்-ஹதீஸ் எண்-2024 அடிப்படையில் நீங்கள் பிறை பார்க்க கூறுகிறீர்களா அல்லது பார்க்க தேவையில்லை கணக்கிட்டு கொள்ளலாம் என்கிறீர்களா? - ATJ மஸ்ஜிது , அக்குரணை, ஸ்ரீலங்கா.

ஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி

பதிலளிப்பவர்: மௌலவி அஹ்மது உஸ்மானி அவர்கள்

தேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015)

இடம் : ATJ மஸ்ஜிது, அக்குரணை, ஸ்ரீலங்கா

பிறை பார்க்க தேவையில்லை கணக்கிட்டு கொள்ளலாம் என்கிறீர்களா?

சந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின் காலண்டரை உருவாக்க முடியுமா?

கேள்வி : சந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின் காலண்டரை உருவாக்க முடியுமா? முடியுமென்றால் எவ்வளவு ஆண்டுகள் வரை உருவாக்க முடியும்? - ராயல் கோர்ட், அக்குரணை, ஸ்ரீலங்கா.

பதிலளிப்பவர்: மௌலவி அப்துர் ரஷீத் ஸலஃபி அவர்கள்

தேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015)

இடம் : ராயல் கோர்ட், அக்குரணை, ஸ்ரீலங்கா - Royal Court Wedding Hall, Kandy-Jaffna Highway, Akurana, Sri Lanka

சந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின் காலண்டரை உருவாக்க முடியுமா?

காலையில் பிறையை பார்த்து மறுநாள் நோன்பு நோற்க வேண்டும்??

நீங்கள் காலையில் பிறையை பார்த்து மறுநாள் நோன்பு நோற்க வேண்டும் என்கிறீர்கள், அப்படியானால் ஒரு நாளின் நோன்பை இழக்க நேரிடுமே? - ATJ மஸ்ஜிது , அக்குரணை, ஸ்ரீலங்கா.

ஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி

பதிலளிப்பவர்: மௌலவி அஹ்மது உஸ்மானி அவர்கள்

தேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015)

இடம் : ATJ மஸ்ஜிது, அக்குரணை, ஸ்ரீலங்கா

காலையில் பிறையை பார்த்து மறுநாள் நோன்பு நோற்க வேண்டும்??

கணக்கிட்டுக் கொள்ள மாட்டிர்கள் (73:20) வசனத்திற்கான விளக்கம்.

குர்ஆனில் ((அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டிர்கள் என்பதையும் அவன் அறிகிறான்)) என்று 73:20 வசனத்தில் இருக்கும்போது நீங்கள் ஏன் கணக்கிடுகிறீர்கள்? - ATJ மஸ்ஜிது , அக்குரணை, ஸ்ரீலங்கா.

ஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி

பதிலளிப்பவர்: மௌலவி அஹ்மது உஸ்மானி அவர்கள்

தேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015)

இடம் : ATJ மஸ்ஜிது, அக்குரணை, ஸ்ரீலங்கா

கணக்கிட்டுக் கொள்ள மாட்டிர்கள் (73:20) வசனத்திற்கான விளக்கம்.

ஃபஜருக்கு முன்பே நாம் ஸஹர் செய்கிறோமே? இது சரியா?

நாளின் துவக்கம் ஃபஜர் என்ற போது நாம் ஸஹர் அதுக்கு முன்பே செய்கிறோமே. இது சரியா? - ATJ மஸ்ஜிது , அக்குரணை, ஸ்ரீலங்கா.

ஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி

பதிலளிப்பவர்: மௌலவி அப்துர் ரஷீத் ஸலஃபி அவர்கள்

தேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015)

இடம் : ATJ மஸ்ஜிது, அக்குரணை, ஸ்ரீலங்கா

ஃபஜருக்கு முன்பே நாம் ஸஹர் செய்கிறோமே? இது சரியா?

உர்ஜூனில் கதீம் மறைக்கபட்டால் மாதத்தை முப்பதாக பூற்தி செய்வதா?

உர்ஜூனில் கதீம் மறைக்கபட்டால் மாதத்தை முப்பதாக பூற்தி செய்வதா? - ATJ மஸ்ஜிது , அக்குரணை, ஸ்ரீலங்கா.

ஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி

பதிலளிப்பவர்: மௌலவி அப்துர் ரஷீத் ஸலஃபி அவர்கள்

தேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015)

இடம் : ATJ மஸ்ஜிது, அக்குரணை, ஸ்ரீலங்கா

உர்ஜூனில் கதீம் மறைக்கபட்டால் மாதத்தை முப்பதாக பூற்தி செய்வதா?

இரண்டு மாதங்கள் சேர்ந்தால் போல் குறையாது’ என்ற ஹதீஸின் விளக்கம்?

ஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்புகாரி–1912 ஹதீஸில் ‘துல்ஹஜ், ரமலான் ஆகிய பெருநாள்களுக்குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தால் போல் குறையாது’ என்ற ஹதீஸின் விளக்கம்?- ATJ மஸ்ஜிது , அக்குரணை, ஸ்ரீலங்கா.வி பதில் நிகழ்ச்சி

https://youtu.be/O-rfEQ1_pUU

பதிலளிப்பவர்: மௌலவி அப்துர் ரஷீத் ஸலஃபி அவர்கள்

தேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015)

இடம் : ATJ மஸ்ஜிது, அக்குரணை, ஸ்ரீலங்கா

இரண்டு பெருநாள் என்பது மூன்று பெருநாளாக அதிகரிக்கிறதே?

கணக்கீட்டை நடைமுறை படுத்தினால் இரண்டு பெருநாள் என்பது மூன்று பெருநாளாக அதிகரிக்கிறதே, இதை நடைமுறை படுத்துவது சரியா ?

- ATJ மஸ்ஜிது , அக்குரணை, ஸ்ரீலங்கா.

ஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி

பதிலளிப்பவர்: மௌலவி அப்துர் ரஷீத் ஸலஃபி அவர்கள்

தேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015)

இடம் : ATJ மஸ்ஜிது, அக்குரணை, ஸ்ரீலங்கா

https://youtu.be/uxorpuK5I5w

பூமியின் மையப்பகுதி மக்கா நகரமா? சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா?

பூமியின் மையப்பகுதி மக்கா நகரமா? சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா?