புதன்கிழமை, 22 ஜனவரி 2014 00:00

16+ UT யில் புவிமைய சங்கமம்!

Rate this item
(3 votes)

ஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும்

அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும்.

பாகம் :1

விமர்சனம் : அமாவாசை(Conjunction என்னும் சங்கம நிகழ்வு) உலகநேரம் 16 மணிக்கு மேல் நடைபெறும் போதுநியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்றகிழக்கத்திய நாடுகளில் உள்ளோர் அமாவாசை(சங்கமம்) நடைபெறும் முன்பாகவே அடுத்தநாளின் காலைப் பொழுதை அடைந்துவிடுகின்றனர். அமாவாசை (சங்கம)தினத்திற்கு அடுத்தநாள் மாதத்தின் முதல்நாள் என்று பிரச்சாரம் செய்யும் ஹிஜ்ரிகமிட்டியினராகிய நீங்கள், மேற்படிகிழக்கத்திய நாடுகளிலுள்ளோரையும் அமாவாசை(சங்கமம்) நடைபெறுவதற்கு முன்னரே புதியமாதத்தைத் துவங்கச் சொல்வது எந்தவிதத்தில் நியாயம்? அவர்கள் எப்படி முதல்நோன்பை பிடிக்க இயலும்? அத்தகையகிழக்கத்திய நாடுகளிலுள்ளவர்களுக்குஅமாவாசை (சங்கமம்) நடைபெறாமல் விடிந்துவிடுவதால் விடிந்த அந்த நாளை விட்டுவிட்டுஅடுத்த நாளை ரமழான் முதல் நாளாகக் கொள்ளவேண்டும் என்று கூறுவதுதானே அறிவார்ந்தசெயலாக இருக்கும்? என்று சிலர்விமர்சனம் செய்கின்றனர்.

விளக்கம் : Coordinated Universal Time (UTC)– அதாவதுஒருங்கிணைக்கப்பட்ட பன்னாட்டு நேரம்சுருக்கமாக உலக நேரம் (UT) என்றுஅழைக்கப்படுகிறது. மேற்படி விமர்சனத்தின்சுருக்கமாவது : அமாவாசை என்று பிற மக்கள்புரிந்துள்ள புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நிகழ்வு வெள்ளிக்கிழமை அன்றுஅமெரிக்காவில் நடைபெறுகிறது என்றால், அதற்கு சில மணித்துளிகள் முன்னரேகிழக்குப் பகுதியிலுள்ள நியூசிலாந்துபோன்ற நாடுகளுக்கு சனிக்கிழமையாக விடிந்துவிடுகிறது. இந்நிலையில் ஹிஜ்ரிநாட்காட்டியின் அடிப்படையில் அந்தநியூசிலாந்து மக்கள் சங்கமம் நடைபெறும்முன்பே நோன்பு நோற்க வேண்டுமா? என்பதேஇக்கேள்வியின் மையக் கருத்தாகும்.

நம் இஸ்லாமிய மார்க்கம் பிறைகளின்அத்தாட்சிகள் பற்றி கூறுவதென்ன? என்பதைத்தெளிவாக விளங்கிட வேண்டும் என்றஉளத்தூய்மையோடு கேட்கப்பட்ட கேள்வியாகமேற்படி கேள்வியை நாம் எடுத்துக்கொள்வோம்.

எனினும் ஹிஜ்ரி நாட்காட்டி தவறானது என்றுமக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும்சிலர் மேற்கண்ட கேள்வியை நம்மிடம்நேரடியாகக் கேட்டு தெளிவைப் பெற முயலாமல்ஹிஜ்ரி நாட்காட்டி தவறானது என்று பரப்பிவருகிறார்கள். அவர்களுக்கு அல்லாஹ்நேர்வழியைக் காட்டுவானாக.

(Geocentric Conjunction) புவிமைய சங்கமம்நிகழ்ந்ததை அறிந்தபின் நோன்பு வையுங்கள், சங்கமம் நிகழ்ந்ததை அறிந்தபின் நோன்பைவிடுங்கள். உங்களுக்கு சங்கமம் நிகழும்முன் அடுத்த நாள் விடிந்து விட்டால், அந்தநாளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள்என்று அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களோ நமக்குக் கட்டளைஇட்டிருந்தால் மேற்படி கேள்வியில் ஒருஅர்த்தம் இருக்கும்.

ஆனால் அல்லாஹ்வோ அல்லாஹ்வின் தூதர்முஹம்மது (ஸல்) அவர்களோ மாதத்தைத்துவங்கவும், ரமழானின் முதல் நோன்பைநோற்கவும் சங்கமம் நடைபெறும் நேரம்வரைகாத்திருங்கள் என்று கட்டளையிடவில்லை.பிறைகளின் படித்தரங்களை கவனிக்குமாறும், அப்பிறைகளை அடிப்படையாக வைத்தே நமதுநாட்காட்டியின் தேதிகள் அமைக்கப்படவேண்டும் என்றே குர்ஆனும் சுன்னாவும்வலியுறுத்துகிறது.

பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்? நீர் கூறும் அவை மக்களின்தேதிகளுக்காகவும், இன்னும் ஹஜ்ஜுக்காகவும்உள்ளன. அல்குர்ஆன் (2:189)

உலர்ந்த வளைந்த பழைய பேரீத்தப் பாளையைபோல் திரும்பிவரும் வரை சந்திரனுக்கு நாம்பல மன்ஸில்களை (தங்குமிடங்களை)ஏற்படுத்தியிருக்கின்றோம். அல்குர்ஆன்(36:39)

அல்லாஹ் பிறையின் படித்தரங்களை மனிதசமுதாயத்திற்கு தேதிகளாகஏற்படுத்தியுள்ளான். எனவே அவற்றின்காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்புபிடியுங்கள். அவற்றின் காட்சியைஅடிப்படையாகக் கொண்டே நோன்பை விடுங்கள்.எனவே அவை உங்கள் மீது மறைக்கப்படும்போதுமுப்பதாக கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

அறிவித்தவர் இப்னு உமர் (ரழி), நூல்:முஸன்னஃப் அப்துர்ரஸாக்.

அல்லாஹ் நிச்சயமாக பிறைகளை தேதிகளாகஏற்படுத்தியுள்ளான். எனவே அவற்றை நீங்கள்கவனிப்பதைக் கொண்டு நீங்கள் நோன்புவையுங்கள். மேலும் அவற்றை நீங்கள்கவனிப்பதைக் கொண்டு நிறைவு செய்யுங்கள்.எனவே அவை உங்கள் மீது மறைக்கப்படும்போதுகணக்கிட்டுக் கொள்ளுங்கள். மேலும், நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் மாதம் என்பதுமுப்பதை விட அதிகமாவதில்லை.

அறிவித்தவர் :இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹ் இப்னுஹூசைமா.

புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நிகழ்வு நடைபெறும் நாளைத்தான் புவிமையசங்கம நாள் என்று நாம் அழைக்கிறோம்.இதற்கு'அமாவாசை நாள்' என்ற சொல்லை நாம்ஏன் பயன் படுத்துவதில்லை? என்று சிலர்கேட்கின்றனர். மேலும் அமாவாசை என்பது ஒருசிறு நிகழ்வுதானே அதை ஏன் முழுநாளாகக்கருதுகிறீர்கள்? என்றும் வினாஎழுப்புகின்றனர்.

பிற மதத்தவர்கள் தங்களின் மத வழிபாடுகளைகுறிப்பிட்ட அந்த அமாவாசை தினத்தில்நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஒன்றுக்குமேற்பட்ட (அதாவது இரண்டு நாட்கள்கூட)அமாவாசை தினங்களாகக் கருதி நடைமுறைப்படுத்துகின்றனர். ஆனால் நாம் குறிப்பிடும்இந்த புவிமைய சங்கமம் என்பது சந்திரமாதத்தின் இறுதி நாளான'தனித்த ஒருநாளில்' – 'ஒரு கிழமையில்' -'ஒரு தேதியில்'மட்டுமே நடைபெறும் என்பது ஆதாரப்பூர்வமாகநிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை. புவிமையசங்கம நாள் என்பது முழுமையான ஒருநாள்மட்டுமே. ஒன்றுக்கு மேற்பட்ட நாட்கள்அல்ல. அந்த நாளைக் குறிப்பிட்டுதான் 'ஃபஇன் கும்ம அலைக்கும்' - உங்களுக்குப் பிறைமறைக்கப்படும் போது என்று நபி (ஸல்)அவர்கள் முன்னறிவிப்பும் செய்துள்ளார்கள்.

மேலும் சூரியன்-சந்திரன்-பூமி ஆகியமுக்கோள்களும் சங்கமிக்கும் இந்த சங்கமநிகழ்வு என்பது பூமியில் ஏதேனும் ஒருமையப் புள்ளியில் அந்த நாளுக்குள் ஒருசிலநொடிப் பொழுதுகள் நடைபெறும் நிகழ்வே.

இந்நிகழ்வு உலக மணி நேரத்தில் (UT யில்)குறிப்பிடப்படுவது இந்நிகழ்வு நடைபெறும்இடத்தைக் குறிக்கும். அதாவது புவிமையசங்கமம் உலக நேரம் 7:00 மணியில் (7:00 UT யில்) நிகழ்கிறது என்றால் அது உலகத்தேதிக் கோட்டிலிருந்து வலது புறமிருந்துஇடதுபுறமாக அமைந்துள்ள 7:00 வது மணியில்நடைபெறுகிறது என்று பொருள். ஏழாவது மணிப்பகுதியில் அமைந்துள்ள இந்தியாவின் பகுதியைஅது குறிக்கும். இவ்வாறு உலக நேரம் என்றசொல் நம் பூமியிலுள்ள ஒரு குறிப்பிட்டபகுதியை குறிப்பதற்காகவே பயன்படுத்தப்படுகின்றது.

அதுபோல உலகநேரம் 9 மணியில் (9 UT யில்)புவிமைய சங்கமம் நடைபெறும் என்றால், உலகத்தேதிக் கோட்டிலிருந்து 9 மணி தூரஅளவிலுள்ள சவுதி அரேபியா இருக்கும்பகுதியைக் குறிக்கிறது. மேலும் புவிமையசங்கமம் எந்த நாட்டில், எந்தப் பகுதியில்நடந்தாலும் அந்தப் பகுதியின் அப்போதையநேரம் நண்பகலாகவே இருக்கும்.

 

சங்கம நிகழ்வை இரண்டு வகைகளாகப்பிரிக்கலாம்.

1.சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியமுக்கோள்களும் தத்தமது நீள்வட்டப்பாதையில் சூழன்று வரும்போது ஒவ்வொருமாதத்தின் இறுதி நாளில் அவை மூன்றும் ஒருதளத்தில் (Same Plane) சங்கமிக்கும்.அவ்வாறு சங்கமிக்கும் நிகழ்வைத்தான்புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) என்கிறோம்.இது சாதாரண சங்கம நிகழ்வாகும்.

2.அதுபோல சூரியன், சந்திரன் மற்றும் பூமிஆகிய முக்கோள்களும் தத்தமது நீள்வட்டப்பாதையில் சூழன்று வரும் போது, சிலகுறிப்பிட்ட மாதங்களில் இறுதிநாளில்மட்டும் அவை மூன்றும் ஒரு தளத்திலும்(Same Plane) , ஒரே நேர்கோட்டிலும்(Straight Line) சங்கமிக்கும். அப்படிஅம்மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போதுசூரியனின் வெளிச்சம் சந்திரனால் பூமிக்குமறைக்கப்படும். அன்றைய சங்கம தினத்தில்(Geocentric Conjunction with Solar Eclipse) சூரியக் கிரகணகமும் ஏற்படும்.

இச்சங்கமநிகழ்வு நடைபெறும் மாதத்தின் இறுதிநாளைஒரு முழுநாளாகத்தான் கொள்ள வேண்டும்.அப்படித்தான் உலக மக்கள் அனைவரும்புரிந்து ஏற்றுள்ளோம். இருப்பினும் இந்தசங்கம நாள் என்னும் கும்மவுடைய தினம்என்பது முழுநாள் அல்ல என்று யாரும்கருதினால் அவர்கள் சற்று நிதானமாக நமதுவிளக்கத்தை புரிந்து கொள்ள முயலவேண்டும்.

உதாரணமாக ஜூம்ஆ தொழுகை என்பதுவெள்ளிக்கிழமை அன்று ஒரு சிலமணித்துளிகளில் நாம் தொழும் தொழுகையாகும்.இருப்பினும் 24 மணி நேரங்கள் கொண்ட அந்தமுழு நாளையும் ஜூம்ஆ தினம் என்றே நாம்அழைக்கிறோம். ஜூம்ஆ தொழுகை ஏற்படுவதுபோன்று புவிமைய சங்கமம் நிகழ்வு அந்தநாளில் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும்ஏற்படுவதில்லை, பூமியில் ஒரு பகுதியில்மட்டுமே ஏற்படும். எனினும் ஒரு முழுமையானநாளில் ஒரு பகுதியில் மட்டுமே சங்கமம்நடைபெற்றாலும் அந்த முழு நாளும்சங்கமநாள்தான் என்பதைப் புரிந்துகொள்வதற்காக இப்படி விளக்குகிறோம்.

புவிமைய சங்கம நாள் என்பது 24 மணிநேரங்கள் கொண்ட முழுமையான தனித்த ஒருநாளைத்தான் குறிக்கும் என்பதால் அதைப் பிறமதத்தவர்கள் போல அமாவாசை நாள் என்றுஅழைக்காமல் புவிமைய சங்கம நாள் என்றே நாம்அழைக்கிறோம்.

இன்னும் மேற்கண்ட விமர்சனத்தில்கேட்கப்பட்டுள்ளதைப் போல உலக நேரம் 16 மணிக்குப் பிறகு அத்தகைய புவிமைய சங்கமம்நடைபெற்று, கிழக்கத்திய நாடுகளில்உள்ளவர்களுக்கு சங்கமம் நடைபெறும் முன்னரேமறுநாள் விடிந்து விட்டால், விடிந்த அந்தநாளை விட்டுவிட்டு அடுத்த நாளை, புதியமாதத்தின் முதல் நாளாகக் கொள்ள வேண்டும்என்பதற்கு குர்ஆனிலோ, ஸஹீஹான ஹதீஸ்களிலோஎந்த ஆதாரங்களும் இல்லை. மேற்கண்டஇக்கருத்து மார்க்க அடிப்படை மட்டுமின்றிஅறிவியல் அடிப்படையிலும்கூட மிகவும்தவறானதாகும். நாட்காட்டியைப் பற்றி இந்தஆய்வின் பிற்பகுதியில் இடம்பெற்றுள்ளவிளக்கங்களை அறிந்து கொண்டால் இதுபோன்றவாதங்கள் அனைத்திற்கும் விடை கிடைத்துவிடும் - இன்ஷா அல்லாஹ்.

கிழக்கத்திய நாடுகளில் உள்ளவர்கள் விடிந்தஅந்த நாளை விட்டுவிட்டு அடுத்த நாளை புதியமாதத்தின் முதல் நாளாகக் கொள்ள வேண்டும் என்பது மிகவும் தவறான வாதமேயாகும். இதைப்புரிந்து கொள்வதற்கு உதாரணமாகநியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்றகிழக்கத்திய நாடுகளில் உள்ள முஸ்லிம்கள்ரமழான் 30-வது நோன்பை நோற்று முடித்துவிட்டார்கள் என்று கொள்வோம். ரமழான் இறுதிநாளுக்கு அடுத்த நாள் ஷவ்வால் முதல் நாள்நோன்புப் பெருநாள் என்பதும், 31-வதுநோன்பு என்பது இஸ்லாமிய மார்க்கத்தில்இல்லை என்பதும் அனைவரும் அறிந்த விஷயம்.

இந்நிலையில் அந்த ரமழான் 30-வது நாளில்புவிமைய சங்கமம் என்ற நிகழ்வு உலக நேரம்16 மணிக்கு மேல் நிகழும் பட்சத்தில்சங்கமம் நிகழ்வதற்கு முன்னரே மேற்படிநாட்டிலுள்ளோர் அடுத்தநாள் காலை நேரத்தில்நுழைந்திருப்பார்கள். மேற்படிவிமர்சனத்தின் கருத்துப்படி மேற்படிநியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்றகிழக்கத்திய நாடுகளில் உள்ள முஸ்லிம்கள்ரமழான் மாதத்தில் மேலும் ஒரு நாளைக் கூட்டவேண்டும். இப்படி ஒருநாளை அதிகப்படியாகக்கூட்டினால் அவர்களுக்கு அம்மாதத்திற்கு 31 நாட்கள் வரும். சங்கமமே இன்னும்நடைபெறவில்லை என்ற நிலையில், புறக்கண்களால் பிறையை பார்க்க முடியாதுஎன்பதும் உறுதி. அதனால் மேற்படிவிமர்சனத்தின் கருத்துப்படி புதிய மாதத்தைஆரம்பிக்காது மாதத்தில் ஒரு நாளைஅதிகப்படியாக கூட்டத்தான் முடியும். எனவேநியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்றகிழக்கத்திய நாடுகளில் உள்ள முஸ்லிம்கள்ஒருநாளை அதிகப்படுத்தி 31-வது நோன்பைநோற்பதைத் தவிர வேறு வழியில்லாமல்போகிறது.

இதுபோல துல்காயிதா மாதத்தின் 30-வதுதினத்தில் இதுபோன்று உலக நேரம் 16 மணிக்குப் பின்னர் சங்கமம் நடைபெற்று, அடுத்தநாளை விட்டுவிட்டால் அல்லது ஒருநாளை அதிகப்படியாக துல்காயிதா மாதத்தில்கூட்டினால், துல்ஹஜ் மாதத்தின் அரஃபாநாளும், ஹஜ்ஜின் கடமைகளை நிறைவேற்றவேண்டிய நாட்களும் தவறாக ஆகிவிடும்.

இன்னும் ஷஃபான் மாதத்தின் 30-வதுதினத்தில் இதுபோன்று உலக நேரம் 16 மணிக்குபின்னர் சங்கமம் நடைபெற்று, அடுத்த நாளைவிட்டுவிட்டால் அல்லது ஒரு நாளைஅதிகப்படியாக அந்த ஷஃபான் மாதத்தில்கூட்டினால், அடுத்து வரும் ரமழான்மாதத்தின் முதல் நாள் முதல் நோன்பை உலகமுஸ்லிம்களில் ஒருசாரார் இழக்க நேரிடும்.இவ்வாறு ஒரு மாதத்தின் நாட்களைமுன்பின்னாக ஆக்குவதால் ஏற்படும்தவறுகளுக்கும், இழப்புகளுக்கும் மேற்படிவிமர்சனத்தை செய்பவர்கள்தான் மார்க்கரீதியான நியாயமான தீர்வை எடுத்துக் காட்டவேண்டும். எனவே கிழக்கத்திய நாடுகளில்உள்ளவர்கள் விடிந்த அந்த நாளைவிட்டுவிட்டு அடுத்த நாளை புதிய மாதத்தின்முதல் நாளாகக் கொள்ள வேண்டும் என்பதுமிகவும் அடிப்படையற்ற, விபரீதமானவாதமேயாகும்.

சந்திர மாதத்தின் முப்பதாவது நாள் புவிமையசங்கமம் உலக நேரம் 16 மணிக்குப் பின்நடைபெறும் ஹிஜ்ரி வருடங்கள், அதன்மாதங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்காக, உதாரணத்திற்காக 10 மாதங்களின் சங்கமநிகழ்வின் குறிப்புகளை கீழே தந்துள்ளோம்.

ஹிஜ்ரி ஆண்டு 1440 - ஜமாதில் ஆகிர் மாதம்30-வது நாள் புதன்கிழமை உலக நேரம் 16.04 மணி

ஹிஜ்ரி ஆண்டு 1460 - ஸஃபர் மாதம் 30-வதுநாள் ஞாயிற்றுக்கிழமை உலக நேரம் 16.43 மணி

ஹிஜ்ரி ஆண்டு 1467 - ரபியுல் ஆகிர் மாதம்30-வது நாள் சனிக்கிழமை உலக நேரம் 17.15 மணி

ஹிஜ்ரி ஆண்டு 1468 - ரபியுல் ஆகிர் மாதம்30-வது நாள் புதன்கிழமை உலக நேரம் 18.16 மணி

ஹிஜ்ரி ஆண்டு 1475 - ஜமாஅதில் ஆகிர் மாதம்30-வது நாள் செவ்வாய்க்கிழமை உலக நேரம்16.32 மணி

ஹிஜ்ரி ஆண்டு 1476 - ஜமாஅதில் ஆகிர் மாதம்30-வது நாள் சனிக்கிழமை உலக நேரம் 18.14 மணி

ஹிஜ்ரி ஆண்டு 1477 - ஜமாஅதில் ஆகிர் மாதம்30-வது நாள் புதன்கிழமை உலக நேரம் 17.39 மணி

ஹிஜ்ரி ஆண்டு 1478 - ஷவ்வால் மாதம் 30-வதுநாள் ஞாயிற்றுக்கிழமை உலக நேரம் 16.06 மணி

ஹிஜ்ரி ஆண்டு 1484 - ஷஃபான் மாதம் 30-வதுநாள் செவ்வாய்க்கிழமை உலக நேரம் 17.53 மணி

ஹிஜ்ரி ஆண்டு 1485 - ஷஃபான் மாதம் 30-வதுநாள் சனிக்கிழமை உலக நேரம் 16.57 மணி

மேலும் அந்த கிழக்கத்திய நாடுகளில்உள்ளவர்களுக்கு புவிமைய சங்கமம் நடைபெறும்முன்பாகவே விடிந்து விடுவதால், விடிந்தஅந்த நாளை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டுஅடுத்த நாளை ரமழான் முதல் நாளாகக் கொள்ளவேண்டும் என்ற கருத்தை மேற்படிவிமர்சனத்தில் காண்கிறோம். மார்க்கஆதாரமும், அறிவியல் ஆய்வும் அற்றஞானமில்லாத நிலையைத்தான் மேற்படிவிமர்சனத்தின் கருத்துக்கள் நமக்கு உணர்த்துகின்றன.

அல்லாஹ் தன் திருமறையில் கீழ்க்கண்டவாறுகூறுகின்றான்:-

மாற்றுவது நிராகரிப்பையேஅதிகப்படுத்துகிறது. இதன்முலம்நிராகரிப்பவர்களே வழிகெடுக்கப்படுகின்றனர். அவர்கள் அதை ஒருவருடத்தில் அனுமதிக்கப் பட்டதாகக்கொள்கின்றனர்.அல்லாஹ் தடுத்திருக்கும் எண்ணிக்கையைசரிசெய்வதற்காக மேலும் ஒரு வருடத்தில்அதைத் தடுத்துக் கொள்கின்றனர். எனவே, அல்லாஹ் எதை தடுத்தானோ (அதை) அவர்கள்ஆகுமாக்கிக் கொண்டார்கள். அவர்களின்தீச்செயல்கள் அவர்களுக்கேஅழகாக்கப்பட்டுவிட்டன. மேலும் அல்லாஹ், நிராகரிப்பவர்களை நேர் வழியில் செலுத்தமாட்டான். அல்குர்ஆன் (9:37)

அல்லாஹ் நமக்கு அருளிய சந்திரநாட்காட்டியை நபி(ஸல்) அவர்களின்ஹிஜ்ரத்தில் இருந்து எண்ணி கணக்கிட்டுவரும் நம்மை விமர்சிக்கும் முகமாககூறப்படும் தீர்வு மனித சமுதாயத்தை எங்கேகொண்டு போய் சேர்க்கிறது என்பதை மேற்கண்டவசனம் தெளிவுபடுத்துவதை சற்றுசிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேற்படி விமர்சனத்தின் கருத்தை மீண்டும்நினைவுபடுத்துகிறோம். அதாவது, உலக நேரம்16 மணிக்கு மேல் (அதாவது அமெரிக்கப்பகுதியில்) புவிமைய சங்கமம் நடைபெற்றால்உலகின் 24 மணி நேரங்கள் கொண்ட ஒரு நாளின்16 மணிநேரம் என்ற அளவுக்குள் வசிக்கும்மக்களுக்கு புவிமைய சங்கமம் நடைபெற்றபிறகு முறையாக புதிய நாள் விடிகின்றது.அதாவது சற்றொப்ப சவுதி அரேபியாவிலிருந்துதுவங்கி அமெரிக்காவுக்கும் மேற்கேயுள்ளஅமெரிக்க சமோவா பகுதிவரையுள்ள மக்களுக்குபுவிமைய சங்கமம் நடைபெற்ற பிறகு முறையாகபுதிய நாள் விடிகின்றது.

ஆனால் உலகத் தேதிக்கோட்டிற்கு அருகே அதன்மேற்குத் திசையில் வசிக்கும் 8 மணிநேரபகுதியில் வசிக்கும் மக்கள் சங்கமம்நடைபெறுவதற்கு முன்பாகவே புதிய நாளில்நுழைந்து விடும் வாய்ப்புகள் உள்ளது.அதாவது உலகத் தேதிக் கோட்டின் மேற்கேஃபிஜியிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம்வரையுள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள்சங்கமம் நடைபெறுவதற்கு முன்பாகவே புதியநாளில் நுழைந்து விடும் வாய்ப்புகள்உள்ளது. இதுவே மேற்படி விமர்சனத்தின்மையக் கருத்தாகும்.

16 UT என்ன, புவிமைய சங்கமம் அந்த நாளின்18 வது மணிநேரத்தில் நடந்தாலும் ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கியஅரபு அமீரகம் போன்ற பெரும்பகுதிகிழக்காசிய நாடுகள் எவுதும்அடுத்தநாளுக்குள் செல்வதில்லை என்பதை இரவுபகலை விளக்கும் கீழுள்ள படத்தில் காணலாம்.

அவ்வளவு ஏன்? சங்கமம் 23.58 வதுமணிநேரத்தில் நடைபெற்றாலும் சீனாவின்பெரும்பான்மை பகுதிகள், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்போன்ற கிழக்காசிய நாடுகள் புதியநாளைக்குள் சென்று விடுவதில்லை. எனவே உலகநேரம் 23.58 வது மணிநேரத்தில் புவிமையசங்கமம் நடைபெற்றால்கூட கிழக்குத்திசையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம்வரையுள்ள நாடுகள் அனைத்தும் அவ்வாறுவிடிந்து அடுத்த நாளுக்குள் செல்வதில்லை என்பதை விமர்சனம் செய்வோர் தெரிந்திடவேண்டும். இந்த உண்மையை கீழுள்ள படத்தில்காணலாம்.

மேலும் புவிமைய சங்கமம் நடைபெறும்முன்பாகவே விடிந்துவிட்ட அந்த நாளைகணக்கிடாமலும், கண்டு கொள்ளாமலும்விட்டுவிட்டு அடுத்த நாளை முதல் நாளாகக்கொள்ள வேண்டும் என்று மேற்படி விமர்சனம்கூறுகிறது. அவ்வாறு வேண்டுமென்றேவிட்டுவிட்டுச் சென்ற அந்த நாளை எந்தமாதத்தில் கொண்டு சேர்ப்பது? ரமழானிலா, அல்லது ஷவ்வாலிலா? அப்படி சேர்ப்பதாகஇருந்தால் எந்த அடிப்படையில் அந்த நாளைக்குறிப்பிட்ட அந்த மாதத்தில் சேர்ப்பது? இக்கேள்விகளை மேற்படி விமர்சனத்தைதெரிவிப்போர் சற்று சிந்திக்வேண்டுகிறோம்.

சரி உலக நேரம் 16 மணிக்கு மேல் புவிமையசங்கமம் நடைபெற்ற பிறகு காலைப் பொழுதைஅடைந்த விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலகிழக்கத்திய நாடுகளைத் தவிர்த்து, புவிமையசங்கமம் நடைபெற்ற பின்னர் காலைப் பொழுதைஅடையும் ஏனைய உலக நாடுகளிலுள்ள கோடானுகோடி முஸ்லிம்களுக்கு என்ன தீர்வு? அவர்களும் அந்த நாளை கண்டு கொள்ளாமல், கணக்கிடாமல் ஒரு மாய நாளாக விட்டுவிடவேண்டுமா? அல்லது புதிய மாதத்தை அந்த காலைபொழுதில் துவங்கிவிட வேண்டுமா? இதுபற்றிசற்று சிந்திப்பதும் மேற்படி விமர்சனம்செய்தவர்களின் கடமையாகும்.

கிழக்குத் திசையின் ஆரம்ப எல்லையான உலகத்தேதிக் கோட்டிலிருந்து மேற்கு நோக்கி மிகஅதிக பட்சமாக 8 மணிநேர அளவுள்ள பகுதியில்வாழும் மக்களை மட்டும் மாதத்தில் ஒருநாளைக் கூட்டிக் கொள்ளுங்கள் என்பதற்குமார்க்க ஆதாரம் எங்கே உள்ளது?

அதுபோல உலகநேரம் 8-வது மணிநேரத்தில்இருக்கும் ஐக்கிய அரபு அமீரகப்பகுதியிலிருந்து (UAE) துவங்கி மேற்குநோக்கிய மீதம் உள்ள 16 மணிநேர அளவுள்ளஉலகநாடுகளில் வாழ்கின்ற மக்களுக்குஅவ்வாறு ஒரு நாளைக் கூட்டக் கூடாது என்றுசொன்னால் அதற்குக் காரணம் என்ன? உலக நேரம்23.58 வது மணிநேரத்தில் புவிமைய சங்கமம்நடைபெற்றால்கூட கிழக்குத் திசையிலிருந்துஐக்கிய அரபு அமீரகம் வரையுள்ள நாடுகள்அனைத்தும் அவ்வாறு விடிந்து அடுத்தநாளுக்குள் செல்வதில்லை என்பதை முன்னர்விளக்கியுள்ளோம்.

ஒரு தேதிக்குள் இருக்கின்ற இருவேறு நாட்டுமக்களுக்கு இரண்டு வெவ்வேறுகிழமைகளைக்கூறுவது சரியானதுதானா? அல்லது (Geocentric Conjunction) புவிமைய சங்கமதினம் என்பதுஇருவேறு கிழமைகளில், இரண்டு தேதிகளில்நிகழும் என்பதை அறிவியல் பூர்வமாகநிரூபிக்கத்தான் முடியுமா?

ஒவ்வொரு மாதமும் நடைபெறுகின்ற புவிமையசங்கமத்தின் போதும், உலகத் தேதிக்கோட்டிற்கு அருகில் அதன் மேற்குப்பகுதியில் உள்ள நியூசிலாந்து, ஆஸ்திரேலியாபோன்ற நாடுகளில் உள்ளோர் புவிமைய சங்கமம்நடைபெறும் முன்பாகவே அடுத்த நாளின் காலைப்பொழுதை அடைந்து விடுகின்றனரா? அல்லதுஒவ்வொரு மாதமும் சங்கமம் என்ற நிகழ்வு உலகநேரம் 16 மணிக்கு மேல்தான் நிகழ்கிறதா?

அரிதான விஷயங்களை பொதுவான மார்க்க சட்டவிதிக்குள் கொண்டுவர இயலாது என்றஅடிப்படையை விளங்காத சிலர் நம்மைபொய்ப்பிக்க வேண்டும் என்பதற்காகவே மக்களைஇவ்வாறு தவறான வழியின்பால் இட்டுச்செல்கிறார்கள். அப்படிப்பட்ட தவறானசிந்தனையிலுள்ள அவர்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு மாதமும்நிகழும் சங்கமதினத்திற்கும் இவர்களின்விதிமுறை பொருந்துமா? என்று கேட்கிறோம்.அப்படி இல்லை என்பதை அவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

மாதம் 29 நாட்களைக் கொண்டதாகவும், 30 நாட்களைக் கொண்டதாகவும் இருக்கும் என்றநபி (ஸல்) அவர்களின் போதனையைத் தவறாகவிளங்கி, இந்த புவிமைய சங்கம சம்பவத்தைவைத்துக் கொண்டு உலக முஸ்லிம்களில் ஒருபகுதியினருக்கு மாதம் 29-ஆகவும், பிறிதொருபகுதியினருக்கு 30 நாட்களாகவும்அமைக்கலாம் என்ற அடிப்படையில், புதியமுறையற்ற நாட்காட்டியை அமைத்து குழப்பிவிடவேண்டும் என்ற நிலைக்கு நம்மைவிமர்சிப்போர் வந்து விட்டார்களா?

அல்லது 30-வது நாள் மஃரிபு நேரத்தில்மறையும் பிறையை புறக்கண்ணால் பார்த்துஅமல் செய்ய எந்த ஆதாரமும் இல்லை என்பதைஅறிந்து தற்போது சந்திர நாட்காட்டியின்கணக்கை ஏற்று செயல்படுவதற்காக இது போன்றவிமர்சனங்கள் எழுப்பப்படுகிறதா? யாமறியோம்.

சந்திரனின் படித்தரங்களை வைத்துதுல்லியமாகக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளஹிஜ்ரி நாட்காட்டியின் கணக்கீட்டு முறையைஅவர்கள் அறிந்தால் மேற்படி சந்தேகங்கள்தீர்ந்துவிடும் இன்ஷா அல்லாஹ்.உண்மையிலேயே சத்தியத்தை அறிய இது போன்றகேள்விகளை எழுப்புபவர்களுக்கு அல்லாஹ்நேர்வழி காட்ட நாமும் பிரார்த்திக்கக்கடமைப் பட்டுள்ளோம்.

உலகத் தேதிக்கோட்டின் அருகே வசிக்கும்நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்றகிழக்கத்திய நாடுகள், உலக நேரம் 16 மணிக்கு மேல் புவிமைய சங்கமம்நடைபெற்றால், புவிமைய சங்கமம் நடைபெறும்முன்பாகவே அந்நாடுகளிலுள்ளோர் அடுத்தநாளின் காலைப் பொழுதை அடைவது என்பதுசந்திர சுழற்சியில் சில மாதங்களில்மட்டும் நடைபெறும் நிகழ்வாகும். இதை ஒருசாதாரண விஷயம் என்று அலட்சியப்படுத்திடஇயலாது. காரணம் நபி(ஸல்) அவர்களுக்கு நாம்சாட்சியாகவும், நமக்கு நபி(ஸல்) அவர்கள்சாட்சியாகவும் இருப்பதற்காக வல்ல அல்லாஹ்ஏற்படுத்தியுள்ள விதியாகும் என்பதைஇக்கட்டுரையின் பிற்பகுதியில் புரிந்துகொள்வீர்கள்.

இன்னும் துருவப் பிரதேசங்களான ஆர்டிக்பகுதிகளில் 6 மாதங்கள் வரை இருள் சூழாதுபகல் பொழுது நிலைத்திருக்கும். சிலமாதங்களுக்கு சூரிய உதயமே நடைபெறாமலும்இருக்கும். சில நாட்களில் சந்திரனின்காட்சியைத் தொடர்ந்து கவனிக்க முடியாதநிலையும் ஏற்படும். இந்நிலையில் அங்கேவாழுகின்ற முஸ்லிம்கள் தங்கள் வணக்கவழிபாடுகளை சூரியன் மற்றும் சந்திரனின், உதித்தல் மறைதல் என்பதையெல்லாம் கருத்தில்கொள்ளாமல் அவற்றைக் கணக்கிட்டே அமல் செய்யவேண்டும். இதற்கு நபி (ஸல்) அவர்களின்நேரடி வழிகாட்டுதல் இருப்பதை நாம்அனைவரும் அறிவோம்.

அதாவது தஜ்ஜால் வரும் இறுதி காலத்தில் ஒருநாள் என்பது ஒரு வருடத்தைப் போல இருக்கும்என்று நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம்தெரிவித்தார்கள். அப்போது அந்த நாளில்நாங்கள் எவ்வாறு எங்கள் அமல்களை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று ஸஹாபாக்கள்வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள்'கணக்கிட்டுக் கொள்ளுங்கள்' என்றுகட்டளையிட்டதை இங்கு நினைவு படுத்தவிரும்புகிறோம்.

ஒரு நாள் என்பது ஒரு வருடம் போல்இருக்கும் அச்சமயத்தில் அந்த ஒருவருடத்திற்குள் வரும் பன்னிரெண்டு சந்திரமாதங்களையும் நாம் கணக்கிட்டே துவக்கவேண்டும் என்பதையும், அந்த ஒருவருடத்திற்குள் வரும் ரமழான், ஹஜ் போன்றமாதங்களையும் நாம் கணக்கிட்டே துவங்கிவணக்க வழிபாடுகளைச் செய்ய வேண்டும்என்பதையும் யாரும் மறுக்கவே முடியாது.

இன்னும் உலகத் தேதிக்கோட்டிற்கு அருகேஅதன் மேற்குப் பகுதியில் வசிக்கும்நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்றகிழக்கத்திய நாடுகளிலுள்ளோர் புவிமையசங்கமம் நடைபெறும் முன்பாகவே அடுத்தநாளின் காலைப் பொழுதை அடைந்து விட்டால்அவர்களுக்குத் தீர்வு என்ன என்பதைபுரிந்து கொள்வது பல்கலைக் கழகங்களில்பட்டப் படிப்பு படித்து பாண்டியத்துவம்பெறவேண்டிய அளவுக்குள்ள விஷயமல்ல. இஸ்லாம்என்பது அனைவரும் எளிமையாக விளங்கி செயல்படமுடிந்த வகையிலேயே அல்லாஹ் அமைத்துக்கொடுத்த உன்னத மார்க்கமாகும்.இந்நிகழ்வைக் கூட அதற்கு சிறந்தஉதாரணமாகக் கொள்ளலாம்.

உலக நேரம் 16 மணிக்கு மேல் உள்ள பகுதியில்நடைபெறும் புவிமைய சங்கமத்தை நாம் எவ்வாறுகணக்கில் எடுக்க வேண்டும் என்பதை ஒருகுழந்தையின் பிறப்பை நாம் பதிவு செய்யும்முறையை அடிப்படையாக வைத்துக் கூட எளிதாகப்புரிந்து கொள்ளலாமே!.

உதாரணமாக ஆஸ்திரேலியாவைச் சார்ந்த ஒருஆணுக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருபெண்ணுக்கும் திருமணமாகி, தம்பதிகளாகவாழ்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.நிறைமாதக் கர்ப்பிணியான அந்தத் தாய் தன்குழந்தையை தான் வசிக்கும் அமெரிக்காவில்வெள்ளிக்கிழமை நண்பகலில்பெற்றெடுக்கிறாள். அன்று பிறந்த அந்தகுழந்தையின் பிறந்த நாளையும், (Date of Birth) பிறந்த இடத்தையும் (Place of Birth) கருத்தில் கொண்டு வெள்ளிக்கிழமைஅந்தக் குழந்தை பிறந்தது என்று தான் உலகம்முழுவதும் சொல்வோம். இதில் உலகிலுள்ளஎவருக்கும் எந்த மாற்றுக் கருத்துகளும்இருக்க இயலாது. பிறந்த தேதியையும், பிறந்தஇடத்தை குறிப்பிட்டே ஒரு குழந்தையின்பிறப்பு பதியப்படும் என்பது அனைவருக்கும்தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் அந்தப் பெண்ணின் கணவரான அந்தநபர் ''நான் ஆஸ்திரேலியாவைச் சார்ந்தவன், பிறந்த அக்குழந்தை எனக்குப் பிறந்த எனதுகுழந்தையாகும். அந்தக் குழந்தைஅமெரிக்காவில் பிறந்தாலும் குழந்தைபிறக்கும் போது எனது சொந்த நாடானஆஸ்திரேலியாவிற்கு சனிக்கிழமை ஆகிவிட்டது.நான் வசிக்கும் ஆஸ்திரேலியா நாடானதுகுழந்தை பிறந்த அதே நேரத்தில்சனிக்கிழமையை அடைந்து விட்டதால்குழந்தையின் பிறந்த நாளையும் சனிக்கிழமைஎன்றே தீர்மானிக்க வேண்டும்' என்று வாதம்எழுப்பினால் அந்த நபரை நாம் என்னசொல்வோம்?

இன்னும் குழந்தை வெள்ளிக்கிழமை பிறந்ததால்அதற்கு அடுத்த நாளான சனிக்கிழமை அந்தகுழந்தைக்கு முதல் நாளாகும். குழந்தைபிறந்த வெள்ளிக்கிழமை பிறந்த நாளாகும்(Day of Birth – Date of Birth) அந்தகுழந்தைக்கு ஒன்றாவது (முதல்) நாள் (First day of Birth) சனிக்கிழமையாகும். அதாவதுஅக்குழந்தை சனிக்கிழமை அன்று தனதுவாழ்நாளில் முதல் நாளை முடித்திருக்கும், ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளைமுடித்திருக்கும். இப்படி வாரங்கள், மாதங்கள் என்பதை கடந்து வளர்ச்சி பெறும்.

கணக்கின் அடிப்படையில் எந்தக் கிழமையில்குழந்தை பிறந்தாலும், பிறந்த குழந்தைக்குஅன்றைய தினம் எப்போதுமே ZERO (சைபர்)தினமாகவே இருக்கும். அதற்கு அடுத்தநாள்தான் 1 (முதலா)வது தினமாக இருக்கும்.இதை எப்படி புரிவது என்றால், குழந்தையின்பிறந்தநாளில் குழந்தை எப்போது பிறந்தது? என்று யாரும் கேட்டால் அக்கேள்விக்குமணித்துளிகளின் நேர அளவை வைத்தே பதில்கூறுவோம். அதாவது குழந்தையின் பிறந்தநாளின் போது குழந்தை பிறந்து ஒருமணி நேரம்ஆகிறது, அல்லது இரண்டு மணி நேரங்கள்ஆகின்றன என்று மணி நேர அளவிலேயேகுழந்தையின் வயது இருக்கும். நாட்களின்எண்ணிக்கையில் நாம் அளவிட்டுக் கூறமுடியாது. இதைத்தான் நாம் பிறந்தகுழந்தைக்கு அன்றைய தினம் எப்போதுமே ZERO (சைபர்) தினமாகவே இருக்கும் என்கிறோம்.எனவே எந்தக் கிழமையில், எந்த இடத்தில், எத்தனை மணிக்கு ஒரு குழந்தை பிறந்தாலும்அக்குழந்தைக்கு அது ZERO (சைபர்)தினத்தில் பிறந்ததாகவே அதுகணக்கிடப்படும்.

இதைத் தெளிவாக புரிந்து கொள்வதென்றால்பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் அளவுகோளைக் (Ruler Scale) கொள்ளலாம். அதில்முதல் கோட்டில் சைபர் என்று ஆரம்பித்து, அரை சென்டி மீட்டர் என்ற நடுக்கோடிட்டுபிறகு 10-வது கோட்டில் ஒன்று என்றுஎழுதப்பட்டிருக்கும். அந்த ஒன்றிற்குப்பின்னர் அடுத்த பத்தாவது கோட்டில் இரண்டுஎன்று எழுதப்பட்டிருக்கும். ஒவ்வொரு 10 கோடுகளும் ஒரு சென்டி மீட்டர் அளவைக்குறிக்கும். ஆக அளவுகோளின் முதல் ஆரம்பம்சைபர் என்றே இருக்கும். இதை வைத்தும்புரிந்து கொள்ளலாம்.

ஆகவே குழந்தை பிறந்த அந்த தினத்தின்தேதியுடன் ZERO (சைபர்) சேர்த்துகூட்டினால் நாளில் எந்த கூடுதலும் அங்கேஏற்படாது. அதாவது குழந்தை பிறந்தவெள்ளிக்கிழமை சந்திர மாதத்தின் கடைசிநாளான 29வது தினமாக இருந்தால் அந்தகுழந்தை பிறந்த தினம் அந்த குழந்தைக்குZERO (சைபர்) தினமாகும். அந்த ZERO (சைபர்) தினத்தை 29 தேதிகளுடையதினங்களுடன் கூட்டினால் தேதியில் எந்தமாற்றமும் வராது. 0+29=29 என்றே கணக்கில்வரும். அதே போல அந்த குழந்தைக்கு முதல்நாளான சனிக்கிழமையுடன் இந்த குழந்தைபிறந்த ZERO (சைபர்) தினத்தை கூட்டினாலும்எந்த மாற்றமும் தேதிகளில் நிகழாது. 0+1=1 ஆகும்.

நபி(ஸல்) அவர்கள் பிறை பிறக்கும் அந்தமறைக்கப்படுகின்ற தினத்தை பழைய மாதத்தில்கூட்டி அடுத்த நாளில் இருந்து புதியமாதத்தைத் துவங்க நமக்குவழிகாட்டியுள்ளார்கள் என்ற விரிவானவிளக்கங்களை பிறையும் புறக்கண்ணும் என்றநமது ஆய்வு நூலில் பார்க்கலாம்(LINK).

சந்திரனின் படித்தரங்களை அடிப்படையாகவைத்து ஒரு தேதி நிர்ணயிக்கப்பட்டஒருநாளில், ஏதோ ஒரு நேரத்தில், ஒருஇடத்தில் ஒரு குழந்தை பிறப்பதாலேயே இந்தக்கணக்கு முறை நமக்கு தேவைப்படுகின்றது.அந்தக் குழந்தை பிறக்கும் தினத்தில்ஏற்கனவே ஒரு கிழமையும் தேதியும் இருந்துகொண்டே இருக்கும் என்பதை நாம் அறிவோம்.இவ்வாறு ஒரு குழந்தையின் பிறப்புஉதாரணத்தை புவிமைய சங்கம தினத்தில்பிறக்கும் பிறையின் பிறப்புக்கு சற்றுபொறுத்திப் பாருங்கள். பிறைகளால் அமைந்தநாட்களை கணக்கிடுவதை சுலபமாகப் புரிந்துகொள்ளலாம் என்பதற்காக இதைவிளக்கியுள்ளோம்.

மேற்படி குழந்தை பிறப்பு சம்பந்தமான உதாரணவிளக்கங்கள் புரிந்து கொள்வதற்காகச் சொல்லப்பட்டவையே. பிறை படித்தரங்களால்அமைந்த சந்திர மாதத்தின் முதல் நாள், அந்தமாதத்தின் மத்தியப் பகுதி மற்றும் அந்தமாதத்தின் இறுதி நாள் என்று சந்திரமாதத்தின் ஒவ்வொரு கிழமையின்எண்ணிக்கையையும் விஞ்ஞானத்தின் துணைகொண்டு மிகத் துல்லியமான அறிந்து கொள்ளமுடிந்த காலத்தில் நாம் வாழ்ந்துவருகிறோம்.

எனவே அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை குழந்தைபிறக்கும் முன்பாகவே ஆஸ்திரேலியா சனிக்கிழமைக்குள் சென்று விட்டதால் அந்தக்குழந்தைக்கு சனிக்கிழமைதான் பிறந்தநாள்என்றும், ஞாயிற்றுக் கிழமைதான் அக்குழந்தைதனது முதல்நாளை முடித்துள்ளது என்றுயாரும் கூறினால் அவரை அறிவில் குறைந்தவர் என்றே எவரும் கொள்வர். மேற்படி கேள்வியும் இதே இதுபோன்ற தரத்தில் கேட்கப்பட்டகேள்வியே.

சங்கமம் நடைபெறுவதற்கு முன்னரே புதியமாதத்தைத் துவங்கச் சொல்வது எந்தவிதத்தில் நியாயம்? என்று விமர்சித்து, சங்கமம் நடைபெறாமல் விடிந்து விடுவதால்விடிந்த அந்த நாளை விட்டுவிட வேண்டும்என்று கூறுபவர்கள் மேற்கூறிய விளக்கங்களைதிறந்த மனதோடு சிந்திக்குமாறுவேண்டுகிறோம்.

ஒரு மாதத்திற்குள் இருக்கும் நாட்களின்எண்ணிக்கை விஷயத்தில் கூட்டிக் குறைத்துநம் சுய விருப்பப்படி செயல்பட முடியாதுஎன்பதை உறுதி செய்யும் முகமாக வல்லஅல்லாஹ், தன்னுடைய தூதர் நபி (ஸல்)அவர்கள் மூலம் மாதம் என்பது 29 நாட்களைக்கொண்டதாகவும், 30 நாட்களைக் கொண்டதாகவும்இருக்கும் என்று கட்டளையிட்டுள்ளான்.மேலும் கிருஸ்துவ மதப்போதகர் போப்கிரிகோரியன் தயாரித்த நாட்காட்டியில் ஒருமாதத்தின் எண்ணிக்கையை 28 ஆகவும் 31 ஆகவும் அமைக்கப்பட்டுள்ளது போல அவரவர்கள்சுய விருப்பப்படி மாற்றி அமைத்தால் அதுஇறை நிராகரிப்பு என்றும் எச்சரிக்கைவிடுத்துள்ளான். சந்திரனின் படித்தரங்களைஅல்லாஹ் உங்களுக்குத் தேதிகளாகஆக்கியுள்ளான் என்பதையும் அல்குர்ஆன்(2:189) வசனம் மூலம் நபி(ஸல்) அவர்கள்தெளிவுபடுத்தி விட்டார்கள்.

எனவே 12 மாதங்களில் உள்ள ஒவ்வொரு மாதமும்எத்தனை நாட்களைக் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதை மனிதன் சுயமாக முடிவுசெய்து கொண்டு செயல்படக் கூடாது என்பதைநாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

 

கிழமை மாற்றத்தை நாம் அறிந்து கொள்வதுஎப்படி?

கிழமைகளை ஆரம்பிப்பதை அறிந்து கொள்ளஇஸ்லாம் என்ன அளவுகோலை நமக்குத்தந்துள்ளது என்பதையும் விளங்கிக் கொள்ளவேண்டுகிறோம். நம் முஸ்லிம் சமூகத்திற்குவல்ல அல்லாஹ் வெள்ளிக் கிழமையை சிறப்பானநாளாக ஆக்கித் தந்துள்ளான். அன்று மட்டுமேநாம் லுஹர் நேரத்தில் இரண்டு ரக்அத்கள்மட்டும் கொண்ட ஜும்ஆ தொழுகையை தொழுதுவருகின்றோம். மற்ற நாட்களில் நான்குரக்அத்துகள் கொண்ட லுஹர் தொழுகையை தொழுதுவருகின்றோம். ஒரு நாள் எங்கு மாறுகின்றதுஎன்பதை நாம் அறிந்து கொள்ளவியாழக்கிழமையின் லுஹர் தொழுகையும், வெள்ளிக்கிழமையின் ஜும்மா தொழுகையும்அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி எவ்விடத்தில்மாற்றப்படுகிறதோ, அவ்விடத்தில்தான்நாட்களும், கிழமைகளும் மாறுகின்றது என்பதைமார்க்க அடிப்படையில் விளங்கிக்கொள்ளலாம். இச்சம்பவத்திற்குநிரூபிக்கப்பட்ட விஞ்ஞான புவியியல் சான்றுபகர்கின்றது. அந்த இடம் இப்பூமிப்பந்தில்எந்தப் பகுதியில் உள்ளது என்பதை நாம்ஆராய்ந்தோமானால், அது தற்போது உலகம்ஏற்றுக் கொண்டுள்ள சர்வதேசத் தேதிக்கோடுஎன்னும் (International Dateline) பசிபிக்பெருங்கடலில் அமைந்துள்ள இடத்தில்இருப்பதை திட்டவட்டமாக அறிய முடிகின்றது.புரியும்படி சொல்வதென்றால் அந்த இடமேகிழக்குத்திசையின் துவக்கம் என்று பொருள்கொள்ளலாம்.

அதாவது மக்காவுக்கு கிழக்கில் அமைந்துள்ளநாடுகளிலுள்ள முஸ்லிம்கள் தங்களின்தொழுகைக்காக கிப்லாவின் திசையான மேற்குநோக்கி தொழுகிறார்கள். அதுபோல மக்காவுக்குமேற்கில் அமைந்துள்ள நாடுகளிலுள்ளமுஸ்லிம்கள் தொழுகைக்காக தங்களதுகிப்லாவின் திசையாக கிழக்குத் திசை நோக்கிதொழுகிறார்கள். கிப்லாவை மையப்படுத்திஇவ்வாறு முழுஉலக முஸ்லிம்களும் அணியணியாக, வரிசையாக நிற்பதாகக் கொண்டால் அவ்வாறுமேற்கு நோக்கித் தொழுபவர்களின் முதுகுப்பகுதியும், கிழக்கு நோக்கி தோழுபவர்களின்முதுகுப் பகுதியும் சங்கமிக்கும் இடமாகஇந்த உலகத் தேதிக்கோட்டுப் பகுதி அமையும்.இவ்வாறு அல்லாஹ் ஏற்படுத்தித் தந்தகிப்லாவிற்கு முன் சூரியன் உதிக்கும்கிழக்கு பகுதியும், கிப்லாவிற்கு பின்சூரியன் உதிக்கும் மேற்குப் பகுதியும்சந்திக்கும் இடமாக இந்த உலகத் தேதிக்கோட்டுப் பகுதிதான் உள்ளது.

உலகத் தேதிக் கோட்டை மனிதன்தான் ஆய்வுசெய்து கண்டுபிடித்தான் என்பது உண்மைஎன்றாலும் அங்கு தேதியும், தேதிகளோடுமுஸ்லிம்களின் தொழுகையும் மாறுவது அல்லாஹ்இந்த மனித சமூகத்திற்கு அளித்துள்ளமாபெரும் அத்தாட்சியாகும்.

நமது கிப்லாவான கஃபாவின் ஹஜருல் அஸ்வத்என்னும் கருப்புக்கல்பதிக்கப்பட்டிருக்கும் மூலையிலிருந்தேநாம் தவாஃபுடைய சுற்றை ஆரம்பித்து அதேஇடத்திற்கு மீண்டும் நாம் வரும்போது முதல்சுற்று முடிந்ததாகக் கணக்கிடுகிறோம்.அதுபோல உலகத் தேதிக் கோட்டின் மேற்குபகுதியில் இருந்து கிழமைகள் மாறிவருவதும்அல்லாஹ்வின் அத்தாட்சியில் உள்ளதாகும்.

நாம் வசிக்கும் இந்த பூமியானதுமேற்கிலிருந்து கிழக்காக அதன் அச்சில்சுழன்று வருவதால், கிழக்குத் திசையின்ஆரம்பப் பகுதியான உலகத் தேதிக்கோட்டிலிருந்து தினமும் கிழமையைத்துவக்கி, அதன் பின்னர் படிப்படியாகமேற்குத் திசை நோக்கி அதாவதுநியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், பங்களாதேஷ், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், சவுதிஅரேபியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, அமெரிக்கா என்றுஒவ்வொரு நாடுகளும் நுழைய வேண்டும். புதியகிழமைகளை கிழக்கிலுள்ள உலகத் தேதிக்கோட்டிலிருந்து துவங்கி மேற்கு நோக்கிதினமும் தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதேஇறைவன் மனித சமுதாயத்திற்கு வகுத்துள்ளவரைமுறையாகும்.

இவ்வாறு அல்லாமல், 16 UT க்கு மேல்புவிமைய சங்கமம் நடைபெற்றால்கிழக்குப்பகுதி அடுத்த நாளைக்கு சென்றுவிடுவதால் அந்த நாட்டிலுள்ளோர் மாதத்தில்ஒரு நாளைக் கூட்டிக் கொள்ள வேண்டும்என்பதும், அந்த சங்கமம் நடைபெற்ற பின்னர்அடுத்த நாளைக்குள் செல்பவர்கள் அவ்வாறுமாதத்தில் ஒரு நாளைக் கூட்டத் தேவையில்லைஎன்பதும் மார்க்க அடிப்படையிலும், அறிவியல் அடிப்படையிலும் மிகமிகத் தவறானதத்துவமேயாகும்.

மேற்கண்ட விமர்சனம் சம்பந்தமாக இதுவரைநாம் படித்த விஷயங்களை சுருக்கமாக சொல்வதென்றால்...

  1. அல்லாஹ்வோ அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களோ மாதத்தைத் துவங்கவும், ரமழானின் முதல் நோன்பை நோற்கவும் சங்கமம்நடைபெறும்வரை காத்திருங்கள் என்றுநமக்குக் கட்டளை இடவில்லை.
  2. பிறைகளின் படித்தரங்களைக்கவனிக்குமாறும், அப்பிறைகளை அடிப்படையாகவைத்தே நமது நாட்காட்டியின் தேதிகள்அமைக்கப்பட வேண்டும் என்றே குர்ஆனும்சுன்னாவும் வலியுறுத்துகிறது.
  3. புவிமைய சங்கமம் நடைபெறும் முன்பாகவேவிடிந்துவிட்ட அந்த நாளை கணக்கிடாமலும், கண்டு கொள்ளாமலும் விட்டுவிட்டுஅடுத்தநாளை முதல்நாளாகக் கொள்ளவேண்டும்என்று சொன்னால் அவ்வாறு வேண்டுமென்றேவிட்டுச் சென்ற அந்த நாளை எந்த மாதத்தில்கொண்டு சேர்ப்பது? ரமழானிலா, அல்லதுஷவ்வாலிலா?
  4. அவ்வாறு சேர்ப்பதாக இருந்தால் எந்தஅடிப்படையில் அந்த நாளை குறிப்பிட்ட அந்தமாதத்தில் சேர்ப்பது? இதற்கு மார்க்கஆதாரம் என்ன?
  5. ரமழான் 30-வது நாளில் புவிமைய சங்கமம்என்ற நிகழ்வு உலக நேரம் 16 மணிக்கு மேல்நிகழும் பட்சத்தில், கிழக்கத்தியநாட்டிலுள்ளோர் ரமழான் மாதத்தில் மேலும்ஒரு நாளை கூட்ட வேண்டும் என்றால், 31 நோன்புகள் பிடிக்கவும் நேரிடுமே இதற்குகுர்ஆன், சுன்னா ஆதாரம் எங்கே?
  6. இவ்வாறு நாட்களை முன்பின்னாகமாற்றுவதால் மாதங்கள் மாற்றப்படுகின்றன.இவ்வாறு மாதங்களை மாற்றி அமைப்பதையேஇறைநிராகரிப்பு (9:37) என்கிறதுஅல்குர்ஆன். ஒரு மாதத்தின் நாட்களைஅவரவர்கள் விருப்பப்படி மாற்றுவது மேற்படிஇறை வசனத்திற்கும், மாதம் என்பது 29 அல்லது 30 நாட்களாகவே இருக்க வேண்டும்என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கும்மாறுசெய்வதாகாதா?
  7. ஒவ்வொரு மாதமும் சங்கமம் என்ற நிகழ்வுஉலக நேரம் 16 மணிக்கு மேல்தான்நிகழ்கிறதா? அல்லது ஒவ்வொரு மாதமும்நிகழும் சங்கம தினத்தன்று கிழக்கத்தியநாடுகள் அவ்வாறு விடிந்து அடுத்தநாளுக்குள் சென்று விடுகின்றனவா?
  8. அரிதான ஒரு சம்பவத்தை வைத்துக் கொண்டுமுஸ்லிம்கள் பெரும்பான்மையினரும் அதன்அடிப்படையில்தான் அமல் செய்ய வேண்டும்என்று பொதுவான மார்க்க சட்டம் வகுப்பதற்குமார்க்க ஆதாரம் என்ன? அத்தகைய அதிகாரத்தைவழங்கியது யார்?
  9. ஒரு தாய் தன் குழந்தையை தான் வசிக்கும்அமெரிக்காவில் வெள்ளிக்கிழமைபெற்றெடுக்கும்போது அந்தநாள் கிழக்கத்தியநாடுகளுக்கு சனிக்கிழமையாக இருப்பதால்அக்குழந்தையின் பிறந்த நாள் வெள்ளிக்கிழமையிலிருந்து சனிக் கிழமையாகமாறிவிடுமா?
  10. அல்லாஹ் அமைத்த தேதிக்கோட்டின் விதிப்படிஒரு கிழமை என்பது, சர்வதேச தேதிக்கோட்டில்மாறவேண்டும். இன்னும் ஒரு கிழமைக்கு ஒருதேதிதான் இருக்க வேண்டும். இவையேநாட்காட்டியின் அடிப்படை விதியாகும்.மாற்றுக் கருத்துடையோர்கூறும்நாட்களைக் கூட்டிக் குறைக்கும்தத்துவத்தின் படி இஸ்லாமிய நாட்காட்டியின்மேற்படி விதிகள் மீறப்படுகின்றதே இதற்குகுர்ஆன் சுன்னாவிலிருந்து ஆதாரம் தரஇயலுமா?

மேற்கண்ட விஷயங்களை நடுநிலையோடுசிந்தித்தாலே குர்ஆன் சுன்னாவின்அடிப்படையில் அமைந்த ஹிஜ்ரி நாட்காட்டியைஎதிர்த்து தவறான தத்துவத்தைக்கூறி கேள்விஎழுப்பியது தவறானது என்பதைத் தெளிவாகஅறியலாம்.சூரியன், சந்திரன், பூமிஇம்மூன்றும் ஒரு தளத்தில் அல்லது ஒரேநேர்கோட்டில் சங்கமிக்கும் புவிமையசங்கமம்என்ற நிகழ்வு உலகநேரம் (UT) எத்தனையில்நடைபெற்றாலும், அது நடைபெறும் அந்தக்கிழமைக்கு அடுத்த நாள் புதிய மாதத்தின்முதல் நாள்தான் என்பதை திட்டவட்டமாகப்புரிந்திருப்பீர்கள்.

ஹிஜ்ரி கமிட்டியினராகிய நம்மைப் பொருத்தவரையில் குர்ஆன் சுன்னாவிற்குஒத்துப்போகும் விஞ்ஞான கருத்துக்களைமட்டுமே ஏற்றுக் கொள்வோம். நமதுமார்க்கத்தின் மூல ஆதாரங்கள் குர்ஆனும், சுன்னாவும் மட்டுமே என்பதில் நாம்மிகத்தெளிவாக இருக்கிறோம். விண்ணியல்நிபுணர்கள்(?) என்று தங்களைஅடையாளப்படுத்திக் கொண்டு இணையதளங்களைநடத்திக் கொண்டிருக்கும் மாற்றுக்கருத்துடைய சில நபர்கள் நம்மையும், நாம்வெளியிட்டுள்ள ஹிஜ்ரி நாட்காட்டியையும்எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு 16+ UT நிகழும் சங்கமத்தை தொடர்பு படுத்திமேற்கண்ட விமர்சனத்தை எழுப்பினர்.

நாட்காட்டி தயாரித்தல் சம்பந்தமானஅடிப்படை விஷயங்களை அறியாமல் இதுபோன்றுகேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் நாம்முன்னரே விளக்கம் அளித்துள்ளோம் (பார்க்க: www.mooncalendar.in). ஏற்கனவே நாம்விளக்கியுள்ள அக்கேள்விகளில் மாற்றுவார்த்தைகளைக் கையாண்டு பழைய கேள்விகளேமீண்டும் புதுப்பிக்கப் பட்டுள்ளதைஅறிகிறோம்.

இதில் வேடிக்கை என்னவென்றால்,  மறையும்பிறையை மஃரிபு வேளையில் மேற்குத் திசையில்புறக்கண்களால் பார்த்த பின்னர் அடுத்தநாளை முதல்நாளாகக் கொள்ள வேண்டும் என்றநம்பிக்கையில் உள்ள சர்வதேச / சவுதிதேசப்பிறைக் கருத்துடையோரும் மேற்கண்டவிமர்சனத்தை தற்போது கையில் எடுத்துள்ளனர்என்பதுதான். காரணம் இதே கேள்வியை பிறைகளைபுறக்கண்களால் பார்ப்பதை மையப்படுத்திமேற்படி சர்வதேசப் பிறை நிலைப்பாட்டில்உள்ளவர்களிடம் நாம் திருப்பிக் கேட்டால்அவர்களால் தெளிவான பதில் தர இயலுமா என்பதைஅவர்கள் சற்று சிந்திக்க வேண்டும். 

அதாவது 16+ UT இல் அமெரிக்கப் பகுதியில்இவர்களின் நம்பிக்கைபடி ஒருவெள்ளிக்கிழமையில் பிறை மஃரிபு வேளையில்தெரிகிறது என்று வைத்துக் கொள்வோம்.இவர்களின் நிலைப்பாட்டின் படி அது ரமழான்தலைப்பிறை என்றே கொள்வோம். அவ்வாறுவெள்ளிக்கிழமை மஃரிபு வேளையில்அமெரிக்காவில் பிறை பார்க்கப்படும்போதுநியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்றகிழக்குப் பகுதியிலுள்ள நாடுகள் விடிந்துசனிக்கிழமையின் பகல் பொழுதில் இருக்கும்.அப்போது அந்நாடுகளிலுள்ள முஸ்லிம்களின்நிலைமை என்ன? அந்நாடுகளிலுள்ளளேர் சர்வதேசஅமெரிக்க முஸ்லிம்களைப் போல தங்களின்முதல் நோன்பை எவ்வாறு சனிக்கிழமை அன்றுதுவங்க இயலும்?

அல்லது மேற்படி நாடுகளிலுள்ள மக்கள்ஞாயிற்றுக் கிழமையைத்தான் ரமழான் முதல்நாளாகக் கொள்ள வேண்டுமா? அவ்வாறு கொண்டால்சர்வதேச முஸ்லிம்களுக்கு ரமழான் முதல்நாள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைஎன்று இரண்டு கிழமைகளில் வருவது சர்வதேசப்பிறை நிலைப்பாட்டின்படி சரியானதுதானா? என்பதை சர்வதேசப் பிறை கருத்துடையோர்சிந்திக்க வேண்டும்.

அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை பிறைதென்படும்போது நியூசிலாந்து, ஆஸ்திரேலியாபோன்ற நாடுகள் சனிக்கிழமை என்ற அடுத்தநாளுக்குள் சென்று விட்டதால், பெருநாள்கழித்து அந்நாடுகளிலுள்ளோர் பிடிக்கவியலாது போன அந்த முதல் நாளின் நோன்பைகளாச் செய்ய வேண்டுமா? அப்படி களாச் செய்யவேண்டுமென்றால் அதற்கு குர்ஆன்சுன்னாவிலிருந்து நேரடி ஆதாரம் தர இயலுமா?

அவ்வாறு ஒருநோன்பை களாச் செய்ய வேண்டும்என்றால் சர்வதேச பிறை நிலைப்பாட்டின்படிசர்வதேச முஸ்லிம்களில் ஒருசாராருக்குரமழான் 30 நாட்களாக இருந்தால் பிறிதொருசாராருக்கு 29 நாட்களாகவும், அல்லதுஒருசாராருக்கு ரமழான் 29 நாட்களாக அமைந்துவிட்டால் பிரிதொரு சாராருக்கு 28 நாட்களாகவும் வருகிறதே இதுதான்சர்வதேசப்பிறை நிலைப்பாடு தந்த பிறைத்தீர்வா? இது சர்வதேசப்பிறை என்றநிலைப்பாட்டை உலக முஸ்லிம்கள்நடைமுறைப்படுத்த முடியாமல் ஏற்பட்டதோல்வியாகத் தெரியவில்லையா? இப்படிஅடுக்கடுக்கான கேள்விகளை நம்மால்தொடுக்கவியலும்.

எனவே ஹிஜ்ரி நாட்காட்டி மிகத்துல்லியமானதுதான், குர்ஆன் சுன்னாவின்அடிப்படையில் அமைந்ததுதான் என்பதையும், 16+ UT யில் சங்கமம் நடை பெறும் போதுசங்கமம் நடைபெறும் வரை கிழக்கத்தியநாடுகளை இஸ்லாம் காத்திருக்கச்சொல்லவில்லை. அந்நாடுகளிலுள்ளோர் சரியானதேதியில் இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின்படி நிச்சயமாக தங்கள் அமல்களை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் சந்தேகத்திற்குஇடமில்லாமல் அறிந்து கொள்ள வேண்டுகிறோம்.

மேற்படி கேள்விக்கு விளக்கமாக இதுவரைபடித்துள்ள விஷயங்களே போதுமானதாகும்என்றாலும் கூடுதலான விளக்கங்களைபெறுவதற்குக் கீழ்க்காணும் துணைதலைப்புகளில் அமைந்த விஷயங்களையும்படித்தறிய வேண்டுகிறோம்.

1) இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படைஎன்ன?

2) முஸ்லிம்கள் (தீர்க்கரேகை-Meridian) முன்னோக்கும் திசை பற்றிய விளக்கம்

3) இஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டுஉருவாக்கிய நேரமண்டல மாற்றங்கள்

இன்ஷா அல்லாஹ்தொடரும்....

தொடர்ந்து படிக்க :  பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 04.

 

Read 3090 times Last modified on திங்கட்கிழமை, 04 ஜூலை 2016 04:54