வாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 09

Super User
Super User
Offline
0

தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு

வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா?

பகுதி :9

 

இஸ்முமுப்ஹம் அறிவிப்பு பற்றிய விளக்கமும், அதுபற்றிய சட்டங்களும்.

மொழிஅகராதி மற்றும் பழக்கவழக்கில் இஸ்மு முப்ஹம் என்னும் இனம் காணப்படாதவர் என்பதற்கு வரைவிலக்கணமாவது.

மொழி அகராதியில்: அப்ஹம என்பதிலிருந்து எடுக்கபட்ட வார்த்தையாகும். இதன் பொருள் விளக்கப்பட்ட, அறியப்பட்ட அல்லது தெளிவுபெற்ற போன்ற அர்த்தங்களுக்கு எதிரான பொருளைத்தரும் தெளிவற்ற, காணப்படாத, அறியப்படாத என்று பொருளாகும்.

பழக்கவழக்கில்: ஒரு அறிவிப்பில் அறிவிப்பாளரின் பெயரோ அல்லது அவரைக் குறிப்பிட்டு இன்னார் என்று பதிவுசெய்யாமல் மூடலாக அல்லது அறியப்படாதவராக இடம்பெறுவது. அந்த அறிவிப்பாளர் பெண்ணாகவோ அல்லது ஆணாகவோ இருந்தாலும் சரியே. மேலும் அந்த அறிவிப்பாளர் அறிவிப்பாளரின் வரிசையில் இருந்தாலும் சரியே அல்லது அறிவிப்பில் இருந்தாலும் சரியே, அவரை மற்ற அறிவிப்பில் அறியப்பட்டவராக இடம்பெற்றாலோ அல்லது அறிஞர்கள் அவரை குறித்து கூறியிருந்தாலோ அறியலாம்.

حكمه :   لا يقبل المبهم ما لم يُسمّ ، لأنّ شرط قبول الخبر عدالة راويه ، ومن أبهم اسمه لا تعرف عينه فكيف عدالته؟ وكذا لا يُقبل خبره ولو أُبهِم بلفظ التعديل على الأصح . (الأسئلة السنية على المنظومة البيقونية - الجزء : 1 - الصفحة:  12(.

இதன் சட்டம்: பெயர் குறிப்பிடப்படாதவரை முப்ஹமை (இனம் காணப்படாதவரை) ஏற்கமுடியது. ஏனெனில் ஒரு அறிவிப்பை ஏற்றுக்கொள்வது என்பது அந்த அறிவிப்பாளரின் நம்பகத்தன்மை என்ற நிபந்தனையை வைத்தே ஆகும். எவர் ஒருவர் அறிவிப்பாளரின் பெயரை மறைத்து அறிவித்தாரோ அந்த அறிவிப்பாளரின் பற்றிய குறிப்புகளை அறியமுடியாது. அப்படியிருக்கையில், அவரின் நம்பகத் தன்மையை எவ்வாறு நாம் அறிவது? இவ்வாறே அவரின் அறிவிப்பையும் ஏற்கமுடியாது. மிக சரியானா கருத்தின் அடிப்படையின்படி நம்பகத்தன்மையான வார்த்தைகள் கூறி மறைக்கப்பட்டுயிருந்தாலும் சரியே அவரின் அறிவிப்பை ஏற்கமுடியாது. (பார்க்க : அல்அஸ்யிலது அஸ்ஸனிய்யாஹ் அலல்மன்ளு மதுல் பைகூனிய்யஹ் - 1/12.)

இந்த இஸ்முமுப்ஹம் என்னும் அபூஉமைருடைய இனம்காணப்படாமை என்ற நிலை உறுதி செய்யப்படாததினால்தான் அபூதாவுதிற்கு ஷரஹ் எழுதிய இமாம் அய்னி (ரஹ்) அவர்கள்கூட, நான் இந்த ஹதீஸை ஆய்விற்கு உட்படுத்துவது கடமை என எண்ணுகிறேன் என்றும், அபூ உமைரின் நம்பகத் தன்மை உறுதி ஆகும் வரை இந்த அறிவிப்பை ஏற்க முடியாது என்றும் இமாம் இப்னு அல் கத்தான்(ரஹ்) தம்முடைய புத்தகத்தில் கூறியுள்ளதாக அவர்கள் தெரிவித்த விஷயங்களை நாம் ஏற்கனவே சுட்டிகாட்டியுள்ளோம். இதே கருத்தைத்தான் இமாம் இப்னு முலக்கின் (ரஹ்) அவர்களும் தங்களுடைய புத்தகமான பத்ருல் முனீரில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்கள்.

وَخَالف ابْن الْقطَّان فَقَالَ فِي كِتَابه «الْوَهم وَالْإِيهَام» : سكت عبد الْحق عَلَى هَذَا الحَدِيث مصححًا لَهُ وَإنَّهُ [ لحريّ ] بِأَن لَا يُقَال فِيهِ صَحِيح ؛ لِأَن أَبَا عُمَيْر لَا يعرف حَاله ، وعمومة أبي عُمَيْر لم يسموا . قلت : وَكَذَا قَالَ ابْن عبد الْبر إِن أَبَا عُمَيْر مَجْهُول .   (البدر المنير في تخريج الأحاديث والأثار الواقعة في الشرح الكبير - 5 / 98).

இன்னும் இமாம் இப்னல் கத்தான் அவர்களோ அபூஉமைரின் இனம்காணப்படாத, மஜ்ஹூலான தன்மைகளை ஆய்வுசெய்து மேற்படி வாகனக்கூட்டம் அறிவிப்பை ஸஹீஹ் அல்ல என்று கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்கள்.

وذكر حديث أبي عمير بن أنس ، عن عمومة له من أصحاب النبي [  ] ، أن ركبا جاءوا إلى النبي [  ] يشهدون أنهم رأوا الهلال بالأمس . الحديث .   وسكت عنه مصححا له ، وإنه لحري بأن لا يقال فيه : صحيح ؛ لأن أبا عمير لا تعرف حاله ، ولكنه هو صححه ، ولم يبال / كون عمومة أبي عمير لم يسموا. (بيان الوهم والإيهام في كتاب الأحكام – الجزء : 2 الصفحة : 597, رقم الحديث : 601 ).

அபூ உமைர் இப்னு அனஸ் அவர்களின் அறிவிப்பு ஆபூஉமைருடைய நபித்தோழரில் உள்ள தந்தையின் சகோதரரிடமிருந்து. ஒரு பயண கூட்டம் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நேற்று பிறையைக் கண்டதாக சாட்சி கூறினர். (அல்ஹதீஸ்) அதை சரி காணுவதிலிருந்து அவர் (அப்துல் ஹக்) மௌனம் காத்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பை ஸஹீஹ் எனக் கூறுவது கடினமாகும். ஏனென்றால், அபூ உமைரின் வாழ்க்கைக் குறிப்பின் நிலை அறியப்படவில்லை. இருப்பினும் அவர் (போலியாக) சரி செய்யப்பட்டவராவார். மேலும் அபூ உமைரின் தந்தையின் சகோதரர் இன்னார் என்று பெயர் கூறப்படவில்லை என்பதும், உமூமத் என்பவர்கள் யார் யாரென்று அடையாளம் அறியப்படாததும் குறைகள்தான். இக்குறைகள் அலட்சியப்படுத்தக்கூடிய சிறிய விஷயங்களல்ல.(பயாணுல் வஹ்மி வல் இய்ஹாம் ஃபி கிதாபில் அஹ்காம் 2/597)

அப்துல் ஹக் (ரஹ்) அவர்கள் அல் அஹ்காமுல் குப்ரா மற்றும் அல் அஹ்காமுல் ஷூஃரா போன்ற ஹதீஸ் நூட்களின் ஆசிரியராவார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

தொடர்ந்து படிக்க : வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா??

பாகம் 01,பாகம் 02, பாகம் 03, பாகம் 04, பாகம் 05,

பாகம் 06, பாகம் 07, பாகம் 08, பாகம் 09, பாகம் 10,

பாகம் 11, பாகம் 12, பாகம் 13, பாகம் 14,பாகம் 15,

பாகம் 16பாகம் 17, பாகம் 18, பாகம் 19, பாகம் 20,

பாகம் 21, பாகம் 22,

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply