Super User
Super User
Offline
0

 பிறையும் புறக்கண்ணும்!!!

ரமழான்பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா? பகுதி : 24

தத்தம்பகுதி(தமிழகப்) பிறை நிலைப்பாட்டிற்கு எங்கே ஆதாரம்?

மேற்படி தத்தம் பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டு அறிஞரின் பிறை ஆய்வுகளிலிருந்து நாம் கேள்வி எழுப்பத் துவங்கினால் பக்கங்கள் காணாது என்பதால் அவரின் சிறுபிள்ளைத்தனமான பிற வாதங்களை அலட்சியம் செய்கிறோம். அன்னாரது கிரகண ஆராய்ச்சியை சிலர் தற்போது தூக்கிப் பிடிப்பதால் அதிலுள்ள குளறுபடிகளை விரிவாக விளக்கினோம் - அல்ஹம்துலில்லாஹ்.

பார்க்க : http://mooncalendar.in/index.php/ta/ta-reviews/320-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81(!)-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-- -PART- -- 3

மேற்படி அறிஞரின் விசித்திர பிறை நிலைப்பாட்டை நாம் ஏற்கனவே முற்பகுதியில் குறிப்பிட்டுள்ளோம். அதை மீண்டும் படித்துவிட்டு மார்க்கத்தில் எவ்வித ஆதாரங்களுமற்ற அவருடைய நிலைப்பாட்டின் உண்மை நிலையையும் சற்று கவனிக்குமாறு வேண்டுகிறோம்.

1. தூரத்திலுள்ள ஊரிலிருந்து வரும் பிறைத்தகவலை அலட்சியப்படுத்தி ஒதுக்கலாம் என்பதும் அவ்வாறு அலட்சியப்படுத்துவதற்கு இரு ஊர்களுக்குமிடையேயுள்ள அதிகத்தூரம்தான் அடிப்படை என்பதும் மேற்படி அறிஞரின் பிறை நிலைப்பாடாகும். இந்த நிலைபாட்டிற்கு குர்ஆனிலிருந்தும், நபி (ஸல்) அவர்களின் நேரடியான சொல், செயல், அங்கீகாரத்தோடு கூடிய ஸஹீஹான ஹதீஸிருந்தும் முதலில் அவர் ஆதாரம் தரவேண்டும். குரைப் விஷயத்தை வைத்து இனியும் மக்களை அவர் ஏமாற்ற முடியாது நிலை ஏற்பட்டுள்ளதையும் நினைவூட்டுகிறோம். பார்க்க : http://mooncalendar.in/index.php/ta/ta-reviews/312-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D

2. அருகிலுள்ள ஊரின் பிறைத்தகவலை அலட்சியப்படுத்தி ஒதுக்கக்கூடாது என்றும், அவ்வாறு அலட்சியப்படுத்துவதற்கு இரு ஊர்களுக்குமிடையேயுள்ள குறைந்ததூரம்தான் காரணம், என்றும் மேற்படி அறிஞர் கூறுகிறார். இதுதான் நாம் பிறைத் தகவலை ஏற்றுக் கொள்வதற்கு நிபந்தனை என்பதற்கும் குர்ஆனிலிருந்தும், ஸஹீஹான ஹதீஸிருந்தும் நேரடியான ஆதாரம் தரவேண்டும். முர்ஸலான, இட்டுக்கட்டப்பட்ட வாகனக்கூட்ட அறிவிப்பையோ, கிரமப்புற வாசிகள் பிறை பார்த்த பலவீனமான செய்திகளையோ இனி தூக்கி நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை நினைவில் கொள்ள வேண்டுகிறோம். பார்க்க : http://mooncalendar.in/index.php/ta/ta-reviews/221-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D

3. எத்தனை நிமிடம் அல்லது எத்தனை மைல் வித்தியாசத்தை அலட்சியப்படுத்தலாம்? என்பதற்கு அல்லாஹ்வோ, அவனது தூதரோ எந்த வரையறையும் செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் வரையறை செய்யாத ஒரு விஷயத்தை மார்க்கத்தின் பெயரால் வரையறை செய்வதற்கு இவருக்கோ, இவரது இயக்கத்திற்கோ என்ன உரிமை இருக்கிறது? மேலும் அப்படி வரையறை செய்யும் அதிகாரம் நம்மிடம் தான் உள்ளது என்றும் கூறியுள்ளார். அந்த அதிகாரத்தை வழங்கிய நேரடியான குர்ஆன் ஆயத்துகளையும் ஸஹீஹான ஹதீஸ்களையும் அவர் ஆதாரமாகத் தர வேண்டுகிறோம்.

4. அடுத்ததாக கிராமப்புறங்கள் அந்தந்த நகர்ப்புறங்களின் ஒரு பகுதியாகும். எனவே நகரத்தில் காணப்படும் பிறை சுற்றியுள்ள கிராமங்களையும், சுற்றியுள்ள கிராமங்களில் காணப்படும் பிறை நகரத்தையும் கட்டுப்படுத்தும் என்பதும் இவரின் பிறைநிலைப்பாடு. இதற்கும் நேரடியான குர்ஆன் ஆயத்துகளையும், ஸஹீஹான ஹதீஸ்களையும் ஆதாரமாகத் தந்துவிட்டு இவ்வாறு பிரச்சாரம் செய்யட்டும்.

தத்தமதுபகுதி பிறையிலிருந்து தமிழக அளவு பிறை என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ள இவர், தமிழகத்தின் தலைநகரம் சென்னை ஒரு நகர்ப்புறம், தமிழகத்தின் தென்கோடியுள்ள கன்னியாகுமரி சென்னையை ஒப்பிடுகையில் ஒரு கிராமம். கிராமப்புறங்கள் அந்தந்த நகர்ப்புறங்களின் ஒரு பகுதியாகும் என்ற விதிப்படி சென்னையின் பிறைத்தகவல் கன்னியாகுமரியையும், கன்னியாகுமரியின் பிறைத்தகவல் சென்னையையும் கட்டுப்படுத்தும். அதனாலேயே இந்த தமிழகப்பிறை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம் என்று கூறவருகிறாரா? யாமறியோம்.

5. இன்னும் ஓர் ஊரைச் சுற்றியுள்ள கிராமங்கள் என்றால் எத்தனை கிலோமீட்டர் தொலைவு என்று கேட்கலாம். கிலோ மீட்டரில் அளந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. அதை நாமே தீர்மானம் செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஊர் என்பதற்கு என்ன அளவுகோல்? எத்தனை கிலோ மீட்டர் சுற்றளவு? என்றெல்லாம் மார்க்கத்தில் கூறப்படவில்லை. அதை நாம் தான் தீர்மானம் செய்கிறோம். என்று எழுதியுள்ளார். இப்படி எல்கையை நாமே தீர்மானிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளதாக வரும் குர்ஆன் ஆயத்து எது? இதற்கு ஆதாரமான ஸஹீஹான ஹதீஸ் எந்தக் கிரந்தத்தில் அது உள்ளது? (பார்க்க : நோன்பு மற்றும் பெருநாள் தினங்களை அவரவர் முடிவு செய்து கொள்ளலாமா? Link :http://ottrumai.net/Pirai/13.WeakHadheesPart-2.htm)

அறிஞர் அவர்கள் தத்தமதுபகுதி பிறை நிலைப்பாட்டை தான் சரிகாணுவதற்கு சிரியாவை விட அருகில் உள்ள ஊரிலிருந்து வந்த பயணக் கூட்டத்தின் தகவலையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்கவில்லை என்பதுவும் ஒரு காரணம் என்று தமது பிறை ஆய்வு புத்தகத்தில் எழுதியுள்ளார்.

6. சென்னையிலிருந்து கன்னியாகுமரிவரையுள்ள தூரம் சுமார் 700 கிலோ மீட்டர்களாகும். சிரியாவைவிட மதீனாவின் அருகிலிருந்த கிராமத்திலிருந்து வந்த வாகனக் கூட்டத்தின் தகவலையே நபி (ஸல்) அவர்கள் ஏற்கவில்லை என்ற நிலையில், 700 கிலோமீட்டர் தூரத்திலுள்ள சென்னையிலிருந்து பிறை பார்த்து தகவல் அறிவித்தால் கன்னியாகுமரியிலுள்ள இவரது இயக்கத்தினர் அதை ஏன் ஏற்கவேண்டும்? என்பதற்கு அறிஞர் பதில் சொல்லியாக வேண்டும். இவரது ஆய்வின்படி சென்னையின் பிறைத்தகவலை கன்னியாகுமரி மக்கள் நிராகரிக்கத்தானே வேண்டும். 'சிரியாவை விட அருகில் உள்ள ஊரிலிருந்து வந்த தகவலை ஏற்கவில்லை ' என்பதற்கு என்ன விளக்கம் சொல்லப்போகிறார்? ஒருவேளை 700 கிலோ மீட்டர் தூரம் என்பது நபி (ஸல்) அவர்கள் தூரம் என்று நிராகரித்த அளவைவிட மிக அருகாமை என்று சொல்லப் போகிறாரா? முதலில் நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமான வாகனக்கூட்டம் அறிவிப்பை ஸஹீஹான செய்திதான் என்று மேற்படி அறிஞர் நிரூபிக்கட்டும் அதன்பிறகு வாகனக்கூட்டத்தைப் பற்றி பேசட்டும்.

7. சிரியாவிலிருந்து மதீனாவரையுள்ள தூரம் சுமார் 1050 கிலோமீட்டர்களாகும். நிச்சயமாக சிரியா மதீனாவிற்கு இடைப்பட்ட தூரத்தைவிட சென்னை கன்னியாகுமரிக்கு இடைப்பட்ட தூரம் குறைவானதுதான். இருந்தாலும் 'குரைப் அறிவிக்கும் ஹதீஸின் அடிப்படையிலும் ஓர் ஊரில் காணப்பட்ட பிறை மற்றொரு ஊரின் நோன்பைத் தீர்மானிக்காது நாம் பிறை பார்த்து விட்டதால் நாம் ரமழானை அடைந்து விட்டோம்' என்று இவர் கூறுவதாலும் மேற்கண்ட கேள்வியை கேட்டுள்ளோம். இன்னும் குரைபுடைய அறிவிப்பைப் போன்று ஹதீஸ் அல்லாத சம்பவங்களும் மார்க்க ஆதாரமாகுமா? என்பதையும் அறிஞர் அவர்களே விளக்கி விட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

8. இன்னும், மேகமூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்படாமல் போகலாம். அப்போது அலட்டிக் கொள்ளக் கூடாது. அடுத்த மாதம் பிறக்கவில்லை என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். பிறை பார்க்க வேண்டும் என்பதே சந்தேகத்திற்குரிய 30-ஆம் இரவில் தான் என்றும் கூறியுள்ளார். ஒரு மாதத்தின் 30-வது இரவு சந்தேகத்திற்குரிய இரவு என்பதற்கும், அந்த 30-வது இரவில்தான் பிறையை பார்க்க வேண்டும் என்பதற்கும் வளைக்காமல் திரிக்காமல் நேரடியான குர்ஆன் ஆயத்துகளையும், ஸஹீஹான ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டிவிட்டு மக்களிடையே அவர் பிரச்சாரம் செய்யட்டும். (பார்க்க : யவ்முஷ்ஷக் என்ற வாதம் எடுபடுமா? Link : http://ottrumai.net/Pirai/11.IsYawMussaqValidOne.htm)

இவ்வாறு அறிஞர் அவர்கள் தமது நிலைப்பாடு என்று கூறியுள்ளதிலேயே பல ஆதாரமற்ற செய்திகள் நிறைந்து காணப்படுகின்றன. இப்படிப்பட்ட செய்திகளைத் தொகுத்தே பிறை ஓர் ஆய்வு என்று புத்தகம் வெளியிட்டுள்ளார். புத்தகம் முழுவதும் பிறைபற்றிய அபத்தங்களாகவே உள்ளன, உருப்படியான ஆய்வுகள் ஏதும் அதில் இல்லை.

இறுதியாக ஹானலுலு நாட்டில் வியாழக்கிழமை அன்று சுபஹூ தொழுதுவிட்டு அன்றைய லுஹருக்கு நியூசிலாந்து நாட்டிற்குச் சென்று விடுகின்றோம். ஆனால் அங்கே வெள்ளிக்கிழமை. இப்போது நாம் ஜும்ஆ தொழவேண்டுமா? வியாழக்கிழமையின் லுஹர் அஸர் மக்ரிப் இஷா மறுநாள் சுபுஹூ ஆகிய தொழுகைகளைக் களாச் செய்ய வேண்டுமா? என்று பயங்கரமான ஒரு கேள்வியை கேட்டுவிட்டதாகக் காட்டியுள்ளார். கேள்வி கேட்பதுதான் அவரது உரிமை, அதற்கு பதில் சொல்வது ஹிஜ்ரி கமிட்டியினரின் கடமை என்று நினைத்துக் கொண்டார் போலும். அதனால்தான் பிறைக்கும் பிரயாணத்திற்கும் முடிச்சு போட்டுள்ளார்.

ஹானலுலு தீவானது நீயூசிலாந்து நாட்டிலிருந்து சுமார் 22 மணிநேரங்கள் பின்தங்கிய ஒரு தீவாகும். இப்பூமிப்பந்தில் நியூசிலாந்து கிழக்குத் திசையின் ஆரம்பப் பகுதியில் இருக்கிறது என்றால் மேற்கு திசையின் முடிவில் அமைந்துள்ள தீவுகளில் ஒன்றுதான் ஹானலுலு. சர்வதேசத்தேதிக் கோட்டிற்கு அருகாமையிலுள்ள நாடுகளான ஹானாலுலு தீவிலிருந்து நியூசிலாந்து நாட்டிற்கு பிரயாணம் செய்வது என்பது ஏதோ சென்னையிலிருந்து மும்பைக்கு விமானத்தில் பறப்பதைப் போன்றுதான் இருக்கும் என்ற அறிஞரின் வீன் கற்பனையால் விளைந்த கேள்வியே இது.

சுமார் 7500 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இவ்விரு நாடுகளுக்கும் விமானத்தில் பிரயாணம் செய்வதென்றால் குறைந்த பட்சம் 11 மணிநேரங்களாவது வேண்டும். 11 மணிநேரம் என்பது கூட மிகமிகக் குறைந்த அளவு பிரயாண நேரமாகும். பொதுவாக சொல்வதென்றால் பூமியின் நேர்-எதிர் சுழற்சிகளை மையப்படுத்தி சர்வதேசத்தேதிக் கோட்டிற்கு அருகாமையிலுள்ள இவ்விருநாடுகளை இணைக்கும் விமான சேவைக்கான பாதை 12 மணிநேரத்திலிருந்து 18 மணிநேர கால அவகாசங்கள் எடுக்கக்கூடிய கடினமான பயணமாகும் அது. இதில் ஒரு மனிதன் பிரயாணத்திற்காக வேண்டி முன் ஏற்பாடாக எடுத்துக் கொள்ளும் கால அவகாசங்கள் தனி. இப்படி இருக்க அறிஞர் சொல்வதைப் போல 'ஹானலுலு நாட்டில் வியாழக்கிழமை அன்று சுபுஹூ தொழுதுவிட்டு அன்றைய லுஹருக்கு நியூசிலாந்து நாட்டிற்குச் சென்று விடுகின்றோம். ஆனால் அங்கே வெள்ளிக்கிழமை' என்று வாதம் வைப்பதற்கு முன்னர் அவ்வாறு பயணம் செல்ல முடியுமா என்பதை அறிஞர் பெருமகனார் முதலில் கவனித்திருக்க வேண்டுமல்லவா?

மேற்படி அறிஞர் அவர்கள் பிறை பற்றி பேசும்போதும் எழுதும் போதும், பேச்சு வழக்கில் உள்ளவைகளையும் குத்துமதிப்பான விஷயங்களையுமே முன்னிலைப் படுத்துவதைக் காண்கிறோம். எனவே ஒரு பேச்சிற்காக அவ்வாறு செல்ல முடியும் என்றே வைத்துக்கொண்டு அவரது கேள்வியை அனுகுவோம்.

பிரயாணத்தின் சட்டம் என்ன? பிரயாணத்தின்போது நோன்பு நோற்பது கடமையா? பிரயாணத்தின்போது 'ஜம்மு', 'கஸ்ரு' என்று தொழுகைகளுக்கு சலுகைகள் உள்ளதே. சரி ஒருபர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்டமுறை உபரியாகத் தொழுது விட்டால் அதில் ஏதும் குற்றமா? என்பதைப்பற்றி இஸ்லாமிய சட்டம் தெரியாதவர்கள் எழுப்பும் கேள்வி போலத்தான் மேற்படி தவ்ஹீது அறிஞரின் கேள்வியும் உள்ளது. குறிப்பிட்ட வக்தில் தொழும் தொழுகையின் நேரங்களையும், நோன்பு நோற்றலையும் ஒப்பிடவே இயலாது என்பதை முன்னரே விளக்கி விட்டோம். இருப்பினும் மேற்கண்ட அக்கேள்வியின் பதிலை அவராகவே விளங்கும் வண்ணம் அதே கேள்வியை திருப்பி நாம் அவரைப் பார்த்துக் கேட்கிறோம்.

அதாவது ஹானலுலு நாட்டில் தத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டிலுள்ள மேற்படி அறிஞரின் இயக்கத்தைச் சார்ந்த ஒருவர் வியாழக்கிழமை ரமழானின் 29-வது நோன்பை நோற்றுக் கொண்டு சுப்ஹூம் தொழுவிட்டு நியூசிலாந்து நாட்டிற்குச் சென்று விடுகிறார். ஆனால் நியூசிலாந்து நாட்டிலோ ஷவ்வால் முதல்நாள் வெள்ளிக்கிழமை. முஸ்லிம்கள் ஈத்பெருநாளை கொண்டாடி விருந்தோம்பலில் இருக்கின்றனர். இப்போது அறிஞரின் இயக்கத்தைச் சார்ந்த அவர், தத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டின்படி நோன்பை தொடர வேண்டுமா? அல்லது நோன்பை பாதியிலேயே துறந்துவிட்டு (முறித்துவிட்டு) பெருநாள் கொண்டாட வேண்டுமா?

நோன்பைத் தொடர வேண்டும் என்றால் அதற்கு மார்க்க ஆதாரம் என்ன? இல்லை நோன்பை பாதியிலேயே துறந்துவிட்டு (முறித்துவிட்டு) பெருநாள்தான் கொண்டாட வேண்டும் என்றால் அதற்கு ஆதாரம் என்ன?

மேற்படி நபர் நோன்பை முறித்தால் ரமழான் மாதத்தில் 28 நோன்புகள்தான் அவருக்குக் கிடைத்திருக்கும். எனவே அவர் கிடைக்காத ஒரு நோன்பை அவர் பின்னர் களாச் செய்ய வேண்டுமா? அல்லது அந்த நபர் விடுபட்ட அந்த நோன்பை களாச் செய்யத் தேவையில்லையா? களாச் செய்யத்தான் வேண்டும் என்றால் அதற்கு குர்ஆன் சுன்னாவின் ஆதாரம் என்ன? களாச்செய்யத் தேவையில்லை என்றால் அவருடைய ரமழான் மாதத்திற்கு 28 நாட்கள்தானா? இவற்றிற்கு அறிஞர் முதலில் பதில் சொல்லட்டும். நாம் நோன்பைப் பற்றி பேசும்போது தொழுகை நேரத்தை இழுக்கும் இவர், நம்மிடம் தொழுகையை பற்றி பேசினால் நாம் நோன்பை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினால் அதில் என்ன தவறு இருக்கிறது?.

இன்னும் இவை அவரது இயக்கத்தின் கூற்று மட்டுமல்ல. தத்தம்பகுதி பிறையை பிரச்சாரம் செய்யும் அனைவரும் கருத்தும் இவையாகத்தான் உள்ளன. எனவே இவ்விளக்கங்கள் தத்தம்பகுதி பிறை – Local Sighting உள்ள அனைவருக்கும் பொருந்தும். இன்னும் தத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டால் எழும் பல்வேறு கேள்விகளை தனித் தலைப்பில் பிற்பகுதியில் வரிசைப் படுத்தியுள்ளோம். இன்னும் தத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டால் எழும் பல்வேறு கேள்விகளை தனித் தலைப்பில் பிற்பகுதியில் வரிசைப் படுத்தியுள்ளோம்.

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply