புதன்கிழமை, 26 நவம்பர் 2014 15:26

ஹிஜ்ரி நாட்காட்டியின் அவசர அவசியம்

Rate this item
(0 votes)
பிறைகளை வைத்தே மாதக் கணக்கைத் தீர்மானிக்குமாறு அல்லாஹ் முஃமின்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். அதாவது 
 
1. ரமழான் மாதத்தின் (பர்ளு) கடமையான நோன்பைச் சரியான தினத்தில் துவங்குவது,
2. ஈதுல்ஃபித்ர், ஈதுல் அழ்ஹா ஆகிய இருபெருநாட்களை சரியான தினத்தில் கொண்டாடுவது,
3. துல் ஹஜ்ஜூ 8-ஆம் நாள் முதல் 13-ஆம் நாள் வரை ஹஜ்ஜூவுடைய கிரியைகளை நிறைவேற்றுவது,  
4. முஹர்ரம் மாதத்தின் 9-வது மற்றும் 10-வது நாட்களில் ஆஷூரா நோன்புகளை நோற்பது,
5. அய்யாமுல் பீழ் என்னும் மாதந்தோரும் வெண்மை நாட்களின் சுன்னத்தான மூன்று நோன்புகள்,
6. ஹஜ்ஜூக்கு செல்லாதோர் துல்ஹஜ்ஜூ மாதம் 9-வது நாள் அரஃபா நோன்பு நோற்பது,
7. அனைத்து இஸ்லாமிய மாதங்களையும் ஆரம்பித்தல், 
8. குர்ஆன் கூறும் புனித மாதங்களைச் சரியாகத் துவங்குதல், 
9. ஒரு தாய் தனது குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய காலம், 
10. தலாக் சொல்லப்பட்ட அல்லது கணவனை இழந்த பெண்ணுடைய இத்தாவின் மாதக் கணக்கு,
11. கடன் கொடுக்கல் வாங்கள் பற்றிய தவணை பத்திர காலங்களை குறித்தல்,
 
உட்பட ஒரு முஸ்லிமின் அனைத்து வணக்கங்களும், வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாகக் கொண்ட இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படையிலும், குறித்த கிழமைகளிலும் பின்பற்றப்பட வேண்டும்.
Read 770 times Last modified on திங்கட்கிழமை, 01 டிசம்பர் 2014 06:18