வியாழக்கிழமை, 21 ஜூலை 2016 00:00

பார்த்தல் எனும் ஒரு வினைச்சொல் புறக்கண்ணால் பார்ப்பதைத்தான் குறிக்குமா?

Rate this item
(10 votes)

பிறையும் புறக்கண்ணும் பகுதி : 32

 

அரபு இலக்கணத்தின் படி ஒரு வாக்கியத்தில் பார்த்தல் என்ற ஒரு வினை இருந்தால் அதற்கு கண்ணால் பார்த்தல் என்றே பொருள். ஒன்றுக்கு மேற்பட்ட வினைச் சொல் இருந்தால்தான் ஆய்வு செய்தல் என்று பொருள்படும். ஸூமுலிருஃயத்திஹி என்பதில் பிறையைப் பார்த்தல் ஒரேயொரு வினைச் சொல்தான் உள்ளது.

விளக்கம்:

ஒரேயொரு வினைச் சொல் இருந்தால் கண்ணால் காண்பது என்றுதான் அர்த்தம் என்ற மேற்படி இலக்கண விதி எந்த இலக்கணப் புத்தகத்தில் உள்ளது? இந்த இலக்கணத்தைச் சொல்லித் தந்தது யார்? குர்ஆனும், தங்களது மனோ இச்சைக்கு முரண்படாத ஸஹீஹான நபி மொழியுமே மார்க்கம் என்று கூறும் சிலர்தான் மேற்படி வாதத்திற்கு சொந்தக்காரர்கள் ஆவர்.

மேற்படி கருத்து 'லிஸானுல் அரப்' என்ற அரபு அகராதி நூலில் இடம் பெற்றிருப்பதாக ஒரு எண்ணையும் குறிப்பிட்டு 'ஹிஜ்ரி கமிட்டியினருக்கு மரணஅடி' என்ற தலைப்பில் புத்தகத்தையும் வெளியிட்டனர். அந்த அவதூறு புத்தகத்தில் இடம்பெற்ற அபத்தக் கருத்துக்களுக்கு ஹிஜ்ரி கமிட்டியின் சார்பில் 'மரணஅடி யாருக்கு?' என்ற தலைப்பில் வீடியோ பதிவுகளாக வரிக்கு வரி பதில் அளிக்கப்பட்டுள்ளது. 'சொந்தக் காசில் சூனியம் வைத்து விட்டார்கள்' என்ற உவமையைப் போல மேற்படி இயக்கத்தினர் தங்களுக்குத் தாங்களே மரணஅடி வாங்கியதை மக்களும் அறிந்து கொண்டார்கள்.
அல்குர்ஆனில் 105:1 மற்றும் 89:6 சூராக்களில் இடம்பெரும் 'அலம்தர கைஃப ஃபஅழ ரப்புக' - 'ரப்பாகிய அல்லாஹ் என்ன செய்தான்?' என்பதில் 'செய்தான்' என்ற ஒருரேயொரு வினைச்சொல் மட்டுமே வந்துள்ளது. இதில் இடம்பெரும் யானைப்படையையும், ஆதுக் கூட்டத்தையும் மஃப்வூல் என்று எப்படி புரிந்து கொண்டார்கள்? பெயர்ச் சொல்லுக்கும், செயல்பாட்டு வினைக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

அதுபோல அல்குர்ஆனின் வசனம் (37:102) கூறுவது போல 'ஃபன்ளுர் மாதா தரா'- உன் கருத்து என்ன? என்பதில் எத்தனை மஃப்வூல் வருகிறது? அந்த ஆயத்தில் 'இன்னீ அராஃபில் மனாமி'நான் கனவில் கண்டேன் என்ற வார்த்தை வந்துள்ளதால் அந்த 'அரா' என்ற சொல்லுக்கு ஒரு மஃப்வூல் வந்துள்ளது என்று கூற வருகின்றீர்களா? அப்படியானால் அதற்கு அடுத்து இடம் பெரும் 'ஃபன்ளுர் மாதா தரா' என்ற அல்குர்ஆன் வாக்கியத்தில் இடம்பெரும் 'தரா' என்ற சொல்லுக்கு புறக்கண்களால் பார்த்தல் என்று பொருள் கொள்ளலாமா?

அல்குர்ஆனின் (3:13) வசனத்தில் 'புறக்கண்ணால் பார்த்தல்' என்பதற்கு வல்ல அல்லாஹ் 'ரஃயல்அய்ன்' என்ற பதத்தைப் பயன்படுத்துகிறான். 'ரஃயல்அய்ன்' என்ற இச்சொல் பிறை சம்பந்தமாக வரும் எந்த ரிவாயத்திலும் இடம் பெறவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.
மாற்றுக் கருத்துடையோரின் வாதப்படி 'அல்ஃபீல்' அத்தியாத்தின் 'அலம்தர கைஃப ஃபஅழ ரப்புக' என்ற வசனங்களில் 'யானைக் கூட்டம்' என்ற 'ஒரு பெயர்ச்சொல்'லும், 'அல்லாஹ் என்ன செய்தான்?' என்பதில் 'செய்தான்' என்ற 'ஒரு வினையும்' தானே உள்ளது. அந்த வசனத்தில் இவர்கள் கூறியுள்ளபடி ஒரேயொரு வினைச் சொல்தானே வந்துள்ளது. ஒரேயொரு 'மஃப்வூல்' மட்டும் இருந்தால், புறக்கண்களால் பார்த்தல் என்றுதான் பொருள் என்பதே இவர்களின் வாதம். இவர்கள் இயற்றியுள்ள இப்புதிய அரபு இலக்கண விதிப்படி பார்த்தால், நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்னரே அப்ரஹாவின் யானைப்படை அழிக்கப்பட்ட அச்சம்பவத்தை நபி (ஸல்)அவர்கள் தங்கள் புறக்கண்களால் பார்த்தார்கள் என்ற பொருள் அல்லவா வருகிறது.

இன்னும் இறைவன் ஆது கூட்டத்தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (89:6) என்பதிலும் 'அலம்தர கைஃப ஃபஅழ ரப்புக' என்ற சொற்றொடரே வந்துள்ளன. இங்கும் ரப்பாகிய அல்லாஹ் என்ன செய்தான்? என்பதில் 'செய்தான்' என்ற ஒரேயொரு வினைச்சொல் மட்டுமே வந்துள்ளது. ஒரேயொரு செயல்பாட்டு வினை மட்டும் இருந்தால், புறக்கண்களால் பார்த்தல் என்றுதான் பொருள் என்று கூறும் இவர்கள், நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் பிறப்பதற்கு பலநூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஆது கூட்டத்தார் அழிந்ததையும், நபி (ஸல்) அவர்கள் தங்கள் புறக்கண்களால் பார்த்தார்கள் என்று சொல்லப் போகிறார்களா? சொன்னாலும் சொல்வார்கள்.

இன்னும் 'ஸூமூ லி ருஃயத்திஹி' என்ற சொற்றொடர் இடம்பெறும் முஸன்னஃப் அப்துர்ரஸாக் (7306) ஹதீஸில் எத்தனை மஃப்வூல்கள் இடம்பெற்றுள்ளன? மேற்படி ஹதீஸில் எதுவெல்லாம் மஃப்வூல்? நோன்பு நோற்க வேண்டும் என்பது கட்டளையா? அல்லது பிறையைப் புறக்கண்களால் பார்க்க வேண்டும் என்பது கட்டளையா?

அதுபோல முஸ்லிம் (2551 மற்றும் 2567), புஹாரி (1823), அஹ்மது (9641) போன்ற ஹதீஸ்களில் 'ரஆ' மற்றும் அதுபோன்ற சொற்கள் வினையாகத்தான் வருகிறதா? மாற்றுக்கருத்தினர் பதில் தரட்டும்.

முதலில் 'லிஸானுல் அரப்' என்பது அரபு இலக்கணப் புத்தகமா? அப்படியே 'லிஸானுல் அரப்' அரபு இலக்கணப் புத்தகமாகவே இருந்துவிட்டு போகட்டும். மார்க்க விஷயத்தை புரிந்து கொள்வதற்கும், குர்ஆன் சுன்னாவிலிருந்து சட்டம் வகுப்பதற்கு 'லிஸானுல் அரப்' போன்ற புத்தகங்கள்தான் அடிப்படை ஆதாரமாகுமா? இதை விளக்கிவிட்டு மேற்சொன்ன வாதங்களை மாற்றுக்கருத்தினர் வைக்கட்டும்.

Read 1443 times Last modified on வியாழக்கிழமை, 21 ஜூலை 2016 05:26