திங்கட்கிழமை, 01 ஜூன் 2015 00:00

15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா?

Rate this item
(3 votes)

15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா?

நமது மார்க்கம் இஸ்லாம், ரமழான், மற்றும் பெருநாள் தினங்களை தீர்மானிக்கப் பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்க்கக் கட்டளையிடவில்லை என்பதை நீங்கள் தெளிவாக அறிந்திருப்பீர்கள். தொழுகை நேரங்களை அறிந்துகொள்ள சூரியனால் ஏற்படும் நிழலின் அளவை கணக்கிடுவது எவ்வாறு அவசியமோ, அதுபோல ஒரு கிழமைக்குரிய தேதியை அறிந்துகொள்ள சந்திரனின் மனாஸில்களை (தங்குமிடங்களை) கணக்கிட்டுத்தான் ஆகவேண்டும். அதற்கு திருமறை குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களும் கட்டளையிடுகிறது, வலியுறுத்துகிறது, ஆர்வமூட்டுகிறது. அன்றி தடை விதிக்கவில்லை என்பதையும் தெளிவாக நீங்கள் புரிந்திருப்பீர்கள்.

இன்று அதிகமான மக்கள் நம்பியுள்ளது போல பிறை மறையும் மேற்குத் திசையில் மஃரிபு வேளையில் அதைப் புறக்கண்ணால் பார்த்துவிட்டு அடுத்த நாளை முதல்நாளாகக் கொள்ள வேண்டும் என்பது தவறான வழிமுறையாகும் என்பதை இதுவரை படித்த விளக்கங்களிலேயே நீங்கள் தெரிந்திருப்பீர்கள்.

இருப்பினும் பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று வாதிடும் சிலர், பலவீனமான அறிவிப்புகளை சிறிதும் ஆய்வு செய்திடாமல் தங்களின் பிறை கொள்கைக்கு தக்க ஆதாரங்களாக நம்பி அவற்றை நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றனர். பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்க்கத்தான் வேண்டும் என்பதற்கு அவ்வறிஞர்கள் எடுத்து வைக்கும் அனைத்து ஆதாரங்களுமே மிகவும் பலவீனமாகத்தான் உள்ளன என்ற நிலையில், அத்தகைய அறிவிப்புகளில் சிலவற்றை சுருக்கமான தகவல்களுடன் அறிந்து கொள்வதும் அவசியமாகும்.

அ) ஒரு கிராமவாசியின் பிறை அறிவிப்பு:

 حدثنا أبو العباس محمد بن يعقوب ، ثنا أبو البختري عبد الله بن محمد بن شاكر ، ثنا الحسين بن علي الجعفي ، ثنا زائدة ، عنسماك بن حرب، عن عكرمة ، عن ابن عباس ، قال : جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم ، فقال : إني رأيت الهلال - يعني هلال رمضان - ، فقال : " أتشهد أن لا إله إلا الله ؟ " قال : نعم ، قال : " أتشهد أن محمدا رسول الله ؟ " قال : نعم ، قال : " يا بلال أذن في الناس أن يصوموا غدا " تابعه سفيان الثوري ، وحماد بن سلمة ، عن سماك بن حرب. *(المستدرك على الصحيحين للحاكم  - كتاب الصوم حديث : ‏1477‏).

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்தார். நான் நிச்சயமாக பிறையைக் கவனித்தேன் என்று அவர் கூறினார். நீ லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சாட்சி கூறுகிறாயா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (கிராமவாசி) ஆம் என்றார். முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று நீ சாட்சி கூறுகிறாயா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (கிராமவாசி) ஆம் என்றார். பிலாலே! நாளை நோன்பு நோற்க மக்களிடம் நீர் அறிவிப்பு செய்யும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவித்தவர் : இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஹாக்கிம் 1477.

மேற்படி அறிவிப்பை காரணம் காட்டி பார்த்தீர்களா ஒருகிராமவாசி பிறையைப் பார்த்து அவர் மட்டும் தனித்து வந்து சாட்சி சொன்னதற்கே நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். நோன்பு வைப்பதற்கு மக்களுக்கு கட்டளையிடுமாறு பிலால் (ரழி) அவர்களை வலியுறுத்தியுள்ளார்கள் பாருங்கள் என்று கூறி இந்த அறிவிப்பு பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதற்குரிய ஆதாரம் என்று வாதம் வைக்கின்றார்கள்.

இந்த ஹதீஸில் ஸிமாக் பின் ஹர்ப் என்பவர் இடம் பெற்றுள்ளார். அவரைப் பற்றி ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறும்போது ''ழயீஃபுல் ஹதீஸ்', 'முஸ்தரபுல் ஹதீஸ்', 'மனன ஆற்றலில் மோசமானவர்'என்று விமர்சிக்கின்றனர். மேலும் குறிப்பாக இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் அவரைப் பற்றி கூறும்போது இக்ரிமா இடமிருந்து இவர் கூறும் ஹதீஸ்களில் அதிக முஸ்தரபுகள் இடம் பெற்றிருக்கும். மேலும், இவரின் மனன ஆற்றல் கடைசி காலத்தில் மோசமாகி விட்டது. ஆகையினால் இக்ரிமாவிடமிருந்து இவர் அறிவிக்கும் ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப் படாது என்று திட்ட வட்டமாக கூறியுள்ளார்கள். மேற்படி ஹாக்கிமின் 1477-வது அறிவிப்பையும் ஸிமாக் பின் ஹர்ப் அவர்கள் இக்ரிமாவிடமிருந்துதான் அறிவித்துள்ளார்.

இதே ரிவாயத்து அபூதாவுதில் 2006-வது அறிவிப்பாகவும், திர்மிதியில் 659-வது அறிவிப்பாகவும் இடம்பெறுகின்றன. அந்த ஸனதுகளில் 'வலீது'என்பவர் இடம்பெறுகிறார். அவரைப்பற்றி ஹதீஸ்கலை வல்லுனர்கள் 'பலவீனமானவர்', 'கத்தாப் - பொய்யர்', 'சரியில்லாதவர்'என்றெல்லாம் மிகக் கடுமையாக விமர்சித்து உள்ளனர். அவர் ரிவாயத்து செய்யும் அறிவிப்பை 'ஏற்றுக் கொள்ளக் கூடாது' என்றும் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வளவு கடுமையாக விமர்சனங்கள் செய்யப்பட்ட, பலவீனமான அறிவிப்பாளர்களைக் கொண்ட மேற்படி அறிவிப்புகள் பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதற்கு எப்படி ஆதாரமாகும் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். எனவே பிறையைக் பார்த்து அதன் தகவலைக் கூறி, நபி (ஸல்) அவர்கள் ரழமான் நோன்பை ஆரம்பித்ததாக வரும் அனைத்து செய்திகளும் பலவீனமானவையாகவே உள்ளன.

குறிப்பாக பிறை மறையும் மேற்குத் திசையில் மஃரிபு வேளையில் அதைப் புறக்கண்ணால் பார்த்துவிட்டு அடுத்த நாள்தான் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுபவர்கள், நபி (ஸல்) அவர்கள் பிறையை நேரடியாகப் பார்த்ததாக ஒரு ஹதீஸைக்கூட தரமுடிவில்லையே ஏன்? யாரோ பிறையைப் பார்த்தாகவும், அவர்கள் தகவல் அளித்ததாகவும் வரும் பலவீனமான செய்திகளையே புறக்கண் பார்வைக்கு ஆதாரமாக வைப்பது ஏன்? இதையும் சற்று கவனிக்க வேண்டுகிறோம்.

ஆ)பிறையை பார்த்துதும் ஒதும் துஆ:

பிறையைப் ('ஹிலால்'!)பார்க்கும் போது ஓத வேண்டிய துஆ சம்பந்தப்பட்ட கீழ்க்கண்ட அறிவிப்பையும் தங்களின் புறக்கண் பார்வைக்கு மற்றொரு ஆதாரமாகக் கூறுகின்றனர். பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டியது இபாதத் என்பதாலேயே நபி(ஸல்) அவர்கள் அதற்கான துஆவையும் கற்றுத் தந்துள்ளார்கள் என்றும் கூறுகின்றனர். எனவே அத்தகைய அறிவிப்புகளின் நிலையையும் சுருக்கமாகக் காண்போம்.

حَدَّثَنَا أَبُو عَامِرٍ ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ سُفْيَانَ الْمَدَايِنِيُّ ، حَدَّثَنِي بِلَالُ بْنُ يَحْيَى بْنِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ ، عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَأَى الْهِلَالَ ، قَالَ " اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالْإِيمَانِ ، وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ ، رَبِّي وَرَبُّكَ اللَّهُ " . مسند أحمد بن حنبل » مُسْنَدُ الْعَشَرَةِ الْمُبَشَّرِينَ بِالْجَنَّةِ ... » مُسْنَدُ بَاقِي الْعَشَرَةِ الْمُبَشَّرِينَ بِالْجَنَّةِ ... » مُسْنَدُ أَبِي مُحَمَّدٍ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ ...

அல்லாஹ்வே, அதை அபிவிருத்தி உள்ளதாகவும், ஈமானையும், இஸ்லாமையும், சாந்தியையும் தரக்கூடியதாக ஆக்கிவைப்பாயாக! உன்னுடைய ரப்பும் என்னுடைய ரப்பும் அல்லாஹ்தான்.

அறிவித்தவர் : தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரழி), நூல்: முஸ்னத் அஹமத்.

மேற்கண்ட செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் 'சுலைமான் பின் சுப்யான் அல் மதாயினி'மற்றும் 'பிலால் பின் யஹ்யா'ஆகிய இருவருமே பலவீனமானவர்கள் என ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். நீங்கள் அறிந்து கொள்வதற்காக சில விபரங்களை மட்டும் சுருக்கமாக இங்கே தந்துள்ளோம்.

இப்னு ஹஜர் (ரஹ்), இமாம் தாரக்குத்னீ(ரஹ்) மற்றும் இமாம் தஹபீ(ரஹ்) ஆகியோர் அனைவரும் மேற்படி சுலைமான் பின் சுப்யான் ழயீஃபானவர் - பலவீனமானவர் என்று விமர்சிக்கின்றனர்.

அதைப்போல், இமாம்களான அபூ ஹாதிம் அல் ராஸி (ரஹ்), அபூ சுர்ஆ அர் ராஸி (ரஹ்), அலி இப்னு மதனீ (ரஹ்), முஹம்மது பின் இஸ்மாயில் அல் புகாரி (ரஹ்) மற்றும் யாகூப் பின் சீபா (ரஹ்) ஆகியோர்கள் மேற்படி சுலைமான் பின் சுப்யானை 'முன்கருல் ஹதீஸ் - ஹதீஸ்களில் தடுக்கப்பட்டவர்'என்று விமர்சித்துள்ளனர்.

இன்;னும் எஹ்யா பின் மயீன் (ரஹ்), நஸாயீ (ரஹ்), மற்றும் அபீ பிpச்ர் அத் துலாவி (ரஹ்) ஆகியோர் சுலைமான் பின் சுப்யானை 'லைஸ பி ஸிகா அவர் நம்பகமானவர் அல்ல' என்றும் விமர்சித்துள்ளார்கள்.

பிலால் பின் யஹ்யா என்பவர் பற்றிய விமர்சனங்களில், 'லையினுல் ஹதீஸ் - ஹதீஸ்களில் பலவீனமானவர்' மேலும், தக்ரீபுத்தஹ்ஸீபில் 'மஜ்ஹூல் இனம் காணப்படாதவர்'என்று இமாம் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் பிலால் பின் யஹ்யாவை 'ழயீப்- பலவீனமானவர் எனக் கூறியுள்ளார்கள்.

ஆக, இந்த அறிவிப்பின் தரம் எந்த அளவிற்கு பலவீனமானது என்பதை அதன் அறிவிப்பாளர்கள் விமர்சிக்கப் பட்டுள்ளதை வைத்தே உணர்ந்து கொள்ள இயலும். மேலும் சிறுசிறு வார்த்தை மாற்றங்களுடன் ஹிலாலைப் பார்த்ததும் துஆ ஓத வேண்டும் என்று இடம்பெறும் இவைபோன்ற அறிவிப்புகள அனைத்தும் பலவீனமான தரத்திலேயே அமைந்துள்ளன. இந்நிலையில் பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே ஆக வேண்டும் என்பதற்கு பிறையைப் பார்த்ததும் ஓதும் துஆ சம்பந்தப்பட்ட மேற்கண்ட அறிவிப்பை தக்க ஆதாரமாகக் கருதி எவ்வாறு வாதிடுகின்றனர் என்பது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

'ஹிலால்' என்ற பதம், சந்திரனின் குறைந்தது 12 படித்தரங்களையாவது குறிக்கும் என்பதை அரபு அகராதி விளகக்ங்களை மேற்கோள் காட்டி ஆதாரங்களுடன் முன்னர் விளக்கியுள்ளோம். எனவே எந்த நாளின் ஹிலாலைப் பார்த்து இந்த துஆவை ஓத வேண்டும் என்ற கேள்விக்கு பதில் கிடைக்காத நிலையில், 30-வது நாள் பார்க்கும் பிறைக்கு மட்டும்தான் மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்ய முடியும்? ஆக பிறந்த பிறையைப் புறக்கண்ணால், முப்பதாம் நாள் மேற்குத் திசையில், மஃரிபு நேரத்தில் பார்த்தே மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற பிறை நிலைப்பாட்டை கொண்டவர்களுக்கு இந்த பலவீனமான அறிவிப்பில் கூட எந்த ஆதாரமும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

மேற்கண்ட பலவீனமான செய்தியை நம்பியிருக்கும் மாற்றுக் கருத்துடையோர் கீழ்க்காணும் கேள்விகளை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பார்ப்பட்டு சிந்தித்து பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

1.            பிறந்த பிறையைப் பார்த்து இந்த துஆவை ஒத வேண்டும் என்று சொல்பவர்களில் நீங்களும் இருந்தால் இவ்வாறு எத்தனை தடவை பிறந்த பிறையை நேரடியாக பார்த்து இந்த துஆவை ஓதியுள்ளீர்கள்? அல்லாஹ்வை முன்னிறுத்தி உங்கள் நெஞ்சில் கை வைத்துக் கூறுங்கள்.

2.            அப்படியே நீங்கள் ஒரு வெள்ளிக்கிழமை மஃரிபில் பிறைபார்த்து ஓதியிருந்தாலும், அது சனிக்கிழமைக்குரிய பிறைதான், அதுதான் தலைப்பிறை என்று உங்கள் மனசாட்சி ஊர்ஜிதமாக சொல்லுகிறதா?

3.            ஒரு மாதத்தின் 29-வது நாளின் பின்னேரம் 30-வது இரவு என்று நீங்கள் முடிவு செய்யும் ஒருநாளில் மேற்குத் திசையில் பார்க்கும் பிறைக்குத்தான் மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று நீங்கள் எந்த அடிப்படையில் முடிவு செய்தீர்கள்?

4.            'உன்னுடைய ரப்பும் என்னுடைய ரப்பும் அல்லாஹ்தான்' என்ற வாசகம் அந்த துஆவில் இடம் பெற்றிருக்கையில் நம் அனைவருக்கும் 'ரப்பாகிய' வல்ல அல்லாஹ் பிறைகளை பற்றி அல்குர்ஆனில் 10:5, 2:189, 55:5, 36:39, 6:96 போன்ற வசனங்களில் கூறியுள்ளவற்றை என்றாவது சிந்தித்ததுண்டா? அவற்றை தற்போதாவது நடைமுறைப்படுத்த தயாரா?

5.            பிறைக்கும் நமக்கும் ரப்பாகிய அல்லாஹ்தான் ஒரு மாதத்தில் புறக்கண்களால் பார்க்க இயலும் பிறையின் இறுதி படித்தரத்தைப் பற்றிக் கூறியுள்ளான். அந்த 'உர்ஜூஃனில் கதீம்' என்ற அந்த ஹிலாலைப் பார்க்கும் போதும் மேற்படி துஆவை ஓதலாமா?

6.            தேய்பிறையின் இறுதி நாளான 'உர்ஜூஃனில் கதீம்' என்ற ஹிலாலுக்கும் மேற்படி துஆ பொருந்தும் என்றால், அதற்கு அடுத்தநாள் சங்கமதினம் என்ற பிறை புறக்கண்களுக்கு பொதுவாக மறைக்கப்படும் நாள் என்பதையும், அந்த சங்கம தினத்திற்கு அடுத்தநாள்தான் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதையும் ஏற்றுக் கொள்கிறீர்களா?

7.            இல்லை 'உர்ஜூஃனில் கதீம்' என்ற ஹிலாலைப் பார்க்கும் போது மேற்படி துஆவை ஓதக்கூடாது என்றால், ஏன் ஓதக்கூடாது? உர்ஜூஃனில் கதீம் என்ற பிறைப்படித்தரம் பிறையே இல்லையா? சந்திரனின் அப்படித்தரம் பிறையில் சேராது என்பதை ஆதாரங்களுடன் விளக்கத் தயாரா?

8.            பிறை பார்த்தே மாதத்தைத் துவங்க வேண்டும், பிறையைப் பார்த்தால் துஆவும் ஒத வேண்டும் என்று வாதிக்கின்றனர். நீங்கள் யாராவது பிறையைப் பார்த்தால் டவுண் காஜியிடமோ, எங்கள் இயக்கத்தின் தலைமைக்கோ, பிறை கமிட்டியிடமோ அறிவிக்கவும் என்றும் விளம்பரப் படுத்துகின்றார்கள். அப்படி பிறந்த பிறையைப் பார்த்து தகவலை அறிவிக்கும் போது நீ முதலில் பிறை துஆவை ஓதிவிட்டாயா? என்று எந்த டவுண்காஜி கேட்கிறார்? டவுண் காஜிகளுக்கு இவ்வாறு தலைப்பிறையை பார்த்து துஆ ஓதக்கூடிய பாக்கியம் என்றாவது கிடைத்துண்டா? பிறைத் தகவலை அளிப்பவருக்கு இந்த துஆ அவசியம் தெரிந்திருக்க வேண்டுமா? இந்த துஆவை ஒதத் தெரியாதவர்கள் பிறையைப் பார்த்து விட்டு ஒருவேளை அறிவிக்கும் போது அவரின் அந்தத் தகவலை ஏற்று அமல் செய்யலாமா?

இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை நம்மால் எழுப்ப இயலும். இருப்பினும் மேற்படி துஆ சம்பந்தப்பட்ட அறிவிப்பு யாரும் மறுக்க இயலாத வகையில் அமைந்துள்ள 'ழயீஃபான - பலவீனமான'செய்தியாக இருப்பதால் அதுபற்றிய சுருக்கமாக தகவல்களை மட்டுமே இங்கு சமர்ப்பித்துள்ளோம்.

கடந்த 2000-ஆம் ஆண்டு நெல்லை ஏர்வாடியில் பிறை விவாதம் ஒன்று நடைபெற்றது. அவ்விவாதத்தில் அவரவர்கள் தத்தமது பகுதியில்தான் பிறை பார்க்க வேண்டும் என்று ஒரு சாராரும், சர்வதேசப் பிறை கொள்கைதான் சரி என்ற மற்றொரு அணியாகவும் இருந்து விவாதித்தனர். அந்த விவாதத்தைத் துவங்கும் போது சர்வதேசப்பிறை கொள்கை தரப்பில் இருந்தவர்கள், ஹிலாலைப் பார்த்து ஒதும் மேற்படி துஆவை ஓதி நிகழ்ச்சியை ஆரம்பித்தனர். அப்போது ' ஆரம்பிக்கும் போதே பலவீனமான ஹதீஸா' என்று தத்தமது பிறை கொள்கையினர் கேலி செய்தனர்.

அவ்வாறு கேலிசெய்த தத்தமதுபகுதி பிறையினர் பின்பு ஒருநாள் அவர்களின் இதழ் ஒன்றில் இதே துஆ ரிவாயத்தை பிரசுரித்திருந்தார்கள். அப்போது சர்வதேசப் பிறை கொள்கையினர் பதிலுக்கு அவர்களை கேலிசெய்தனர். சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இச்சம்பவத்தை இங்கு பதிவு செய்கிறோம். தற்போது மக்களின் மறதியைப் பயன்படுத்தி தங்களுடைய பிறை கொள்கையை நிலைநாட்டிட வேறு வழியில்லை என வரும்போது இவ்வாறான பலவீனமான ஹதீஸ்களையும் தூக்கி பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வை சுட்டிக்காட்டியுள்ளோம்.

இ)ரிப்யீ பின் ஹிராஷ் அறிவிக்கும் இரண்டு கிராமவாசிகளின் பிறை செய்தி :

حدثنا مسدد ، وخلف بن هشام المقرئ ، قالا : حدثنا أبو عوانة ، عن منصور ، عن ربعي بن حراش ، عن رجل ، من أصحاب النبي صلى الله عليه وسلم قال : اختلف الناس في آخر يوم من رمضان ، فقدم أعرابيان ، فشهدا عند النبي صلى الله عليه وسلم بالله لأهلا الهلال أمس عشية ، " فأمر رسول الله صلى الله عليه وسلم الناس أن يفطروا " . )سنن أبي داود  - كتاب الصوم باب شهادة رجلين على رؤية هلال شوال - حديث : ‏2005‏(.

ரமழானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து, நேற்று இஷா நேரப் பிறையால் சப்தமிட்டனர் என்று நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டனர் அறிவித்தவர்: ரிப்யீ பின் ஹிராஷ், நூல்: அபூதாவூத் 2005.

حدثنا مسدد ، وخلف بن هشام المقرئ ، قالا : حدثنا أبو عوانة ، عن منصور ، عن ربعي بن حراش ، عن رجل ، من أصحاب النبي صلى الله عليه وسلم قال : اختلف الناس في آخر يوم من رمضان ، فقدم أعرابيان ، فشهدا عند النبي صلى الله عليه وسلم بالله لأهلا الهلال أمس عشية ، " فأمر رسول الله صلى الله عليه وسلم الناس أن يفطروا " . )سنن أبي داود  - كتاب الصوم باب شهادة رجلين على رؤية هلال شوال - حديث : ‏2005‏(.

நபி (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தின் முப்பதாம் நாளில் நோன்பு நோற்றவர்களாக சுப்ஹூ வேளையை அடைந்தார்கள். அப்போது இரு கிராமவாசிகள் வந்து வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று சாட்சி கூறி நேற்று அவர்கள் அதற்காக சப்தமிட்டனர். எனவே அவர்கள் அவர்களை நோன்பை விடுமாறு கட்டளையிட்டார்கள். அறிவித்தவர்: ரிப்யீ, நூல்: தாரகுத்னீ

மேற்படி அறிவிப்பை வைத்துக்கொண்டு அந்த இரண்டு கிராமவாசிகள் பிறையை பார்த்துவிட்டுத்தானே நபி (ஸல்) அவர்களிடம் அறிவிக்கின்றார்கள் என்று வாதம் வைக்கின்றார்கள். முதலில் ரிப்யீ பின் ஹிராஷ் என்ற தாபிஈயீ அறிவிக்கும் மேற்கண்ட செய்தியை மீண்டும் படித்துப் பாருங்கள்.

மேற்காணும் அபூதாவூது 2005-வது அறிவிப்பில் இடம்பெறும் 'அஷிய்யா'என்ற அரபுப் பதம் இரவு உணவு சாப்பிடும் நேரத்தைக் குறிப்பதாகும். மேலும் அங்கே கிராமவாசிகள் பிறை பார்த்ததாக எந்த நேரடி வாசகமும் இல்லை. இன்னும் பிறை பற்றி 'அஷிய்யா'நேரத்தில் மக்கள் சப்தமிட்டதாக நபி (ஸல்) அவர்களிடம் வந்து சாட்சி கூறியதாகவே செய்தி இடம்பெறுகிறது. மேலும் தாரகுத்னீயில் இடம்பெறும் 1921-வது அறிவிப்பிலும் யாரும் பிறை பார்த்ததாக நேரடி வாசகம் எதுவும் இல்லை.  

மேற்கண்ட இரு அறிவிப்புகளின் இடம் பெற்றுள்ள 'நேற்று இஷா நேரப் பிறையால் சப்தமிட்டனர்', 'சாட்சி கூறி நேற்று அவர்கள் அதற்காக சப்தமிட்டனர்'போன்ற வாசகங்களை நேரடியாக மொழிபெயர்த்தால் நகைப்புகுரியதாகவே அமையும். இந்நிலையில் மேற்கண்ட இரு அறிவிப்புகளுமே 'முர்ஸல்' அறிவிப்புகள் ஆகும். இந்த அறிவிப்புகளை ஆதாரமாக ஏற்றுக்கொள்பவர்கள் 'முர்ஸல்'அறிவிப்புகள் மார்க்க ஆதாரமாகாது என்பதை வசதியாக மறந்தது ஏன்? என்று கேட்கிறோம்.

முர்ஸல் என்றால் இடையில் விடுபட்;டது என்பது இதன் சொற்பொருளாகும். அதாவது அர்ஸல் என்ற இறந்த கால வினைச் சொல்லிலிருந்து வந்த இஸ்மு மஃப்ஊல் வடிவமே முர்ஸல் என்பதாகும். இதன் பொருள் பொதுவாக விட்டுவிட்டான் என்பதுதாகும்.

ஏனெனில் முர்ஸல் வகை நபிமொழியில் அறிமுகமான அறிவிப்பாளரை குறிப்பிடாமல் அறிவிப்பாளர் தொடர் விடப்பட்டு விடுகிறது. ஏற்றுக் கொள்ளத்தக்க நபிமொழிக்கான நிபந்தனைகளில் ஒன்றான 'அறுபடாத' அறிவிப்பாளர் தொடர்ச்சியை இழந்த காரணத்தினாலும், விடுபட்ட அறிவிப்பாளரின் விவரம் தெரியாததாலும் அவ்வாறு விடுபட்டவர் நபித்தோழர் அல்லாதவராக இருக்கலாம் என்ற காரணத்தாலும் இந்த முர்ஸல் வகை நபிமொழி ஏற்றுக் கொள்ளப்படாத பலவீனமான நபிமொழியாகும் என்று தைஸீரு முஸ்தலஹுல் ஹதீத் போன்ற ஹதீஸ்கலை நூல்களில் நாம் காணமுடிகிறது.

ஒரு செய்தி நபி (ஸல்) அவர்களிடம் இருந்து பெறப்பட்டதா? என்பதை அறிவதுதான் ஹதீஸ் கலையின் முக்கிய விதியாகும். அறிவிப்பாளர்களின் தொடர் எத்தகைய சந்தேகங்களுக்கும், பலவீனங்களுக்கும் அப்பாற்பட்ட நபி (ஸல்) அவர்கள் வரை சீராகச் சென்று முடிந்தால்தான் அந்தச் செய்தி ஹதீஸ் என்ற தரத்தை அடையும். அதுவரை அந்த செய்தியை ஹதீஸாக ஏற்க முடியாது.

ஒரு செய்தி நபி (ஸல்) அவர்கள் வரை செல்லாமல் நபித்தோழர்கள் காலத்திற்கு பின்னால் வாழ்ந்த ஒரு தாபிஈ ஒருவரால் பொத்தாம் பொதுவாக நான் ஒரு ஸஹாபியிடம் கேட்டேன் என்று மறைத்து அறிவித்தால் அது எவ்வகையிலும் ஹதீஸ் என்ற தரத்தை அடையவே முடியாது. எல்லா விதிகளும் சரியாக இருக்கும் ஒரு செய்தியைத்தான் ஸஹீஹ் தரத்தில் உள்ள ஹதீஸ் எனக் கூறப்படும்.

மேற்கண்ட செய்திகள் எவ்வகையிலும் மர்ஃபூவு தரத்தை அடையவே முடியாது என்பதை சிந்திப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். இந்நிலையில் முர்ஸலான அறிவிப்புகள் மார்க்க அடிப்படை ஆதாரமாகாது என்பது ஹதீஸ்கலை அறிஞர்களின் ஏகோபித்த முடிவாக இருக்கும் நிலையில் மேற்கண்ட அறிவிப்புகளுக்கு மட்டும் அது விதிவிலக்காகி விட்டதா? என்று இவற்றை ஆதாரமாகக் கருதுபவர்களிடம் நாம் மீண்டும் கேட்க விரும்புகிறோம்.

எனவே தாரகுத்னீயில் இடம்பெறும் 1921-வது அறிவிப்பும், அபூதாவூது 2005-வது அறிவிப்பும் எந்த நபித்தோழர் இதை அறிவித்தார்கள் என்ற தகவல் காணப்படாத பலவீனமான அறிவிப்புகளாகிவிட்ட நிலையில் பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதற்கு அவை எக்காலமும் ஆதாரமாகாது என்பதை அறிந்து கொள்ள வேண்டுகிறோம். இன்னும் தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறை பார்த்த தகவல் போன்ற பிறை நிலைப்பாடுகளுக்கு வாகனக்கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா? என்ற நமது ஹிஜ்ரிகமிட்டி வெளியிட்ட புத்தகத்தை நீங்கள் படித்தால் முர்ஸலான அறிவிப்புகள் பற்றிய முழுமையான விளக்கங்களைப் பெறலாம்.

அறிவிப்பாளர் விடுபட்ட ஹதீஸை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்று நாம் பிரச்சாரம் செய்து வந்ததின் விளைவாக கஷ்டப்பட்டு, மெல்லவும் இயலாமல், விழுங்கவும் முடியாமல் கீழ்க்கண்ட ஒரு அறிவிப்பை எடுத்துள்ளனர். இதோ விடுபட்ட நபித்தோழர் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டோம், இதுவே எங்களுடைய ஆதாரம் என்று சிலர் முழங்குகின்றனர். குறிப்பாக அவர்களுடைய அந்த ஆதாரத்தையும் நாம் இப்போது அலசுவோம்.

ஈ)இரண்டு கிராமவாசிகள் சம்பந்தமாக வரும் மேலும் ஒரு அறிவிப்பு:

سنن الدارقطني - كتاب الصيام باب الشهادة على رؤية الهلال - حديث : ‏1938‏
حدثنا
محمد بن إسماعيل الفارسي , ثنا عثمان بن خرزاذ , ثنا إبراهيم بن بشار , ثنا سفيان بن عيينة , عن منصور , عن ربعي بن حراش , عن أبي مسعود الأنصاري , قال : أصبحنا صبيحة ثلاثين , فجاء أعرابيان رجلان يشهدان عند النبي صلى الله عليه وسلم أنهما أهلاه بالأمس , فأمر الناس " فأفطروا " *

முப்பதாவது காலையை நாம் அடைந்தோம். அப்போது இரு மனிதர்களான கிராமவாசிகள் வந்தனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் நேற்று அதற்காக இருவர் சப்தமிட்டதாக சாட்சி கூறினர். அச்சமயம் அவர் மக்களுக்கு கட்டளையிட்டார். எனவே நீங்கள் நோன்பை நிறைவு செய்யுங்கள்.

அறிவித்தவர் : அபீ மஸ்வூத் அல் அன்சாரி (ரழி). நூல்: தாரகுத்னீ 1938.

மேற்கண்ட இந்த அறிவிப்புதான் மாற்றுக் கருத்துடையோர் எடுத்துக்காட்டும் செய்தியாகும். இதிலும் அவர்களுடைய பிறை நிலைப்பாட்டிற்கு எந்த ஆதாரமும் காண முடியவில்லை என்பது ஒருபுறமிருக்க இந்த அறிவிப்பின் பலவீனமான இலட்சனங்களைப் பாருங்கள்.

இதில் அபீ மஸ்வூத் அல் அன்சாரி என்ற நபித்தோழரிடமிருந்து ரிப்யீ பின் ஹிராஷ் கேட்டதாக அறிவிப்பாளர் தொடர் அறுபடாமல் உள்ளது என்பதே அவர்களின் வாதம். இவ்வாறு வாதம் புரிபவர்களுக்கு ஹதீஸ்கலையை உண்மையிலேயே தெளிவாக படித்திருந்தால் அவர்கள் இந்த ஹதீஸை ஆதாரமாக காட்டியிருக்க மாட்டார்கள்.

ஏனெனில் இந்த செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் சுப்யான் பின் உவைனா என்பவரின் இறுதி காலத்தில் 'மனன சக்தியை இழந்துவிட்டார்'என்றும் 'அவர் செய்திகளை மறைத்து அறிவிப்பார்'என்பதும் அறிஞர்களின் விமர்சனங்களாகும். அதாவது 'இல்லாததை இருப்பது போலும், இருப்பதை இல்லாதது போலும் ஹதீஸிலும், அறிவிப்பாளர் வரிசையிலும் இணைத்துவிடுவார்' என இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் மேற்படி சுப்யான் பின் உவைனாவைப் பற்றி விமர்சித்து உள்ளார்கள்.

மேலும் இந்த ரிவாயத்தில் இடம்பெறும் மற்றொரு அறிவிப்பாளரான இப்ராஹிம் பின் பஷ்ஷார் அர்ரமாதி என்ற அறிப்பாளரும் பலவீனமானவரே. இமாம் இப்னு ஹஜர் (ரஹ்), இமாம் தஹபி (ரஹ்) போன்றவர்கள் இவரைப் பற்றி கூறும்போது, மேற்படி இப்ராஹிம் பின் பஷ்ஷார் அர்ரமாதியாகிய 'இவர் கற்பனை செய்து கூறுவதும்', 'இல்லாததை இணைப்பதும்' இவரின் பணியாகும் என்று விமர்சித்துள்ளனர்.

மேலும் இப்ராஹிம் பின் பஷ்ஷார் அர்ரமாதி பற்றி இமாம் நஸாயி (ரஹ்) கூறும்போது 'இவர் பலமற்றவர்' என்றும், 'இவர் கற்பனை செய்து கூறுபவர்' என்று இமாம் புஹாரி (ரஹ்) அவர்களும் கூறுகின்றார்கள்.

அபூ அகமது பின் ஆதி அவர்கள் இவரைப் பற்றி கூறும்போது 'இப்னு உவைனாவிடமிருந்து இவர் அறிவிப்பது முர்ஸலாகவே உள்ளன' என்கின்றார்கள்.

இமாம் அஹமத் (ரஹ்) அவர்களின் மகனான அப்துல்லாஹ் அவர்கள் இமாம் அவர்களிடம் இவரைப் பற்றி விசாரித்தார். இமாம் அவர்கள் இப்ராஹிம் பின் பஷ்ஷார் அர்ரமாதி அவர்கள் 'சுப்யானிடமிருந்து அறிவிப்பதாக இவர் கூறினால் அது சுப்யான் பின் உவைனாவிடமிருந்து கேட்டதாக இல்லை'. அது வேறு சுப்யானாகும் என்றார்கள்.

இமாம் இப்னு முயீன் (ரஹ்) அவர்கள் இவரைப்பற்றி கூறும்போது 'லைஸ பி ஷை' என்று கூறுவார்கள். மேலும் 'அவர் சுப்யானிடமிருந்து எதையும் எழுதிக்கொள்ள வில்லை'. மேலும் 'அவருடைய கையில் எழுதுகோலை எப்பொழுதும் பார்த்ததேயில்லை'. 'மக்கள் எழுதும் போது சுப்யான் எதையெல்லாம் கூறவில்லையோ அவற்றையெல்லாம் எழுதி வைத்துவிடுவார்' என்று கூறியுள்ளார்கள்.

அல் அகீலி அவர்கள் இவரின் பல ஹதீஸ்கள் மீது 'லைஸ லஹூ அஸ்லுன் மின் ஹதீஸி இப்னு உவைனா' எனக் கூறுவார். அதாவது 'அவருக்கு அபூஉவைனாவின் ஹதீஸில்; எந்த ஒரு மூலமும் கிடையாது' என இப்னு அதி கூறும் கூற்றை பதிவு செய்வார்.

இவ்வாறு விண்னை முட்டும் விமர்ச்னங்கள் மேற்காணும் ரிவாயத்தில் இருக்க, மேற்படி சங்கதிகளை மூடி மறைத்து, அறிவிப்பாளர் தொடர்பு அறுபடாது வந்து விட்டது என்று திசை திருப்புவது ஏன்? புறக்கண் பார்வை நிலைப்பாட்டிற்கு எந்த சம்பந்தமும் இல்லாத மேற்படி செய்தியை ஆதாரமாகக் கருதும் மாற்றுக் கருத்துடையோரின் ஹதீஸ் ஆய்வின் மிகவும் பின்னடைந்த போக்கை கண்டு வியப்படைகிறோம்.

இவ்வாறு விண்னை முட்டும் விமர்ச்னங்கள் கொண்ட செய்திகளையே மாற்றுக் கருத்துடையோர் தங்களின் பிறை நிலைப்பாட்டிற்கு ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர். அத்தகைய பவீனமான ஆதாரங்கள் பிறைகள் விஷயத்தில் மக்களை வழிநடத்த அவர்கள் கொஞ்சம்கூட தகுதியற்றவர்கள் என்பதற்கு சான்றாக அமைகிறது. அவர்களின் நிலைப்பாட்டை தெரிவிக்காத ஒரு செய்தியை (தாரகுத்னீ 1938) அவர்கள் ஆதாரமாகக் கொண்டு வந்தனர். அந்த ஆதாரமும் தேறவில்லை. இந்நிலையில் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து மட்டுமே செயல்பட வேண்டும் என்ற அவர்களின் கூற்றை எவ்வாறு நிரூபிக்க போகின்றார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும், அல்லாஹ்வின் உதவியால் இந்த பிறை விஷயங்கள் பற்றி முழுவீச்சில் நாம் ஆய்வுக் களத்தில் இறங்கிய பிறகுதான், மாற்றுக் கருத்துடையவர்கள் ஹதீஸ்களை இப்படி கூடவா வளைத்தும், திரித்தும் தங்களுடைய ஆதாரமாக வாதிடுவர்? என்பதை அறிந்து வியந்தோம். அவர்கள் ஹதீஸ்களை கையாளும் அவல நிலையையும் தெளிவாக அறிந்து கொண்டோம்.

தங்களின் சுயஅறிவிற்கு ஒத்துவராத செய்திகளை அது ஸஹீஹானதாக இருக்கும் நிலையில்கூட அவற்றைத் தட்டிவிட வேண்டும் என்ற நோக்கில் அவ்வதீஸ்களை துருவித் துருவி ஆய்வு செய்து பலவீனமாக்க முயலும் அவர்கள், பிறை விஷயத்தில் மட்டும் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளைக்கூட ஆதாரமாகக் காண்பித்து மக்களை ஏமாற்றும் மோசடி போக்கைக் கண்டு உண்மையிலேயே அதிர்ச்சி அடைகிறோம். இப்புத்தகத்தை கவனமாக படித்து உள்வாங்கி வரும் நீங்கள்கூட இதே மனநிலைமையில் இருக்கலாம்.

ஸஹாபாக்கள் மற்றும் தாபிஈயீன்களின் கூற்று மார்க்க ஆதாரமாகாது என்று மேடைக்கு மேடை முழங்கும் பிரபல மௌலவி, சரியான அறிவிப்பாளர்கள் வரிசையைக் கொண்ட ஸஹீஹான ஹதீஸ்களைக்கூட தமது சிந்தனைக்கு ஒத்துவரவில்லை என்ற காரணத்தைச் சொல்லி ழயீஃப் என்று அவர் சுலபமாக தட்டிவிடும் நிலையில், பிறை விஷயத்தில் மட்டும் இந்த முர்ஸலான அறிவிப்பு உட்பட பல பலவீனமான அறிவிப்புகளைக்கூட தமது பிறைநிலைப்பாட்டிற்கு தக்க ஆதாரங்களாகத் தூக்கிப்பிடிக்கும் இரகசியம்தான் என்ன? என்று கேட்கிறோம்.

உ)நோன்பு மற்றும் பெருநாள் தினங்களை அவரவர் முடிவு செய்து கொள்ளலாமா?:

حدثنا محمد بن إسماعيل قال : حدثنا إبراهيم بن المنذر قال : حدثنا إسحاق بن جعفر بن محمد قال : حدثني عبد الله بن جعفر ، عن عثمان بن محمد ، عن سعيد المقبري ، عن أبي هريرة ، أن النبي صلى الله عليه وسلم قال : ' ' الصوم يوم تصومون ، والفطر يوم تفطرون ، والأضحى يوم تضحون ' ழூ.(سنن الترمذي الجامع الصحيح - أبواب الجمعة أبواب الصوم عن رسول الله صلى الله عليه وسلم - باب ما جاء في أن الفطر يوم تفطرون حديث : ‏665‏).

நோன்பு நீங்கள் நோன்பு நோற்கும் கிழமையாகும்;. பெருநாள் நீங்கள் நோன்பு பிடிக்காத கிழமையாகும்;;. ஹஜ்ஜுப் பெருநாள் நீங்கள் குர்பானி கொடுக்கும் கிழமையாகும்;;; ஆகும்;. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவித்தவர்: அபு ஹுரைராஹ் (ரழி), நூல்: திர்மிதீ,அபூதாவூத்).

மேற்கண்ட அறிவிப்பை வைத்து மாற்றுக் கருத்துடையோர், நோன்பு என்று ஒருநாளை நாம் அனைவரும் முடிவு செய்துவிட்டால் அது நோன்பு நாளாகிவிடும் என்றும் அதுபோல நாம் விரும்பியபடி அனைவரும் சேர்ந்து பெருநாள் என்று ஒருநாளை முடிவெடுத்து விட்டால் அது பெருநாள் தினமாகிவிடும் என்றும் கூறுகின்றனர். முதலில் நபி (ஸல்) அவர்கள் இப்படி கூறியிருப்பார்களா? என்று சிந்தியுங்கள்.

நீங்கள் நோன்பு நோற்கும் நாளில்தான் நோன்பு என்றால் அதில் 'நீங்கள்' என்ற சொல் யாரையெல்லாம் குறிக்கும்? தனித்தனி நபர்களையா? அந்தந்த ஊர்களில் வாழும் முஸ்லிம்களையா? அல்லது சர்வதேச முஸ்லிம்கள் அனைவரையும் சேர்த்து குறிக்குமா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் விளக்க வேண்டும்.

சரி இந்த அறிவிப்பாவது ஸஹீஹானதுதானா என்றால் அதுவுமில்லை. இந்த அறிவிப்பில் இப்ராஹிம் பின் முன்திர் என்பவர் இடம் பெற்றுள்ளார். அவரைப்பற்றி இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) மற்றும் ஜக்கரிய்யா (ரஹ்) மற்றும் இப்னு ஹஜர் (ரஹ்) போன்றோர் கூறும்போது 'இவர் வெறுக்கப்படக் கூடியவர்' மேலும் ஹல்கில் குர்ஆன் (குர்ஆன் படைக்கபட்டதா) என்ற விஷயத்தில் இவர் பேசப்பட்டுள்ளார் என்று விமர்சித்துள்ளனர்.

மேலும் இந்த அறிவிப்பில் உஸ்மான் பின் முஹம்மது என்பவரும் இடம் பெற்றுள்ளார். அவரை 'சந்தேகத்திற்குரியவர்', 'வெறுக்கப்படக் கூடியவர்' என்று இமாம் தஹபி (ரஹ்) மற்றும் இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். இப்படி படித்தவுடனேயே இது பலவீனம்தான் என்று தெளிவாக தெரியும் மேற்கண்ட அறிவிப்பா? புறக்கண்ணால் பிறந்த பிறையை பார்ப்பதற்கு ஆதாரம்? மேலும் மேற்கண்ட அறிவிப்பில் சில வார்த்தை மாற்றங்களுடன் வந்துள்ள அனைத்து செய்திகளும் பலவீனமானவைகளே.

மேலும், மேற்கண்ட அறிவிப்பில் உள்ள வாசகங்களை உற்று நோக்கும் போது, ஒரே நாளில் தான் அனைவரும் நோன்பிருக்க வேண்டும். அதே போல் ஒரே நாளில் தான் பெருநாளாகும் என்பதைத்தான் அந்த செய்தி தெளிவுபடுத்துகின்றது. எனவே மேற்கண்ட அறிவிப்புகள் ஒருவேளை ஸஹீஹானதாக இருந்திருக்குமானால் அது ஹிஜ்ரி கமிட்டியினருக்கு ஆதாரமான செய்தியாகவே அமைந்திருக்கும். மேலும் அவர்கள் கூறுவது போல் மக்கள் தீர்மானத்தின்படி மாதத்தை ஆரம்பித்தோ பெருநாளை முடிவுசெய்தோ கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை அந்த அறிவிப்பில் எங்கிருந்து எடுத்தார்கள் என்பதை அவர்கள் தான் மக்கள் மன்றத்தில் நிரூபிக்க வேண்டும். எனவே அவர்களுடைய நிலைப்பாட்டிற்கு மேற்கண்ட இந்த அறிவிப்பும் ஆதாரமாக அமையவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகும்.

மேற்கண்ட பலவீனமான அறிவிப்புகளையும், பல விமர்சங்களைக் கொண்ட அறிவிப்பாளர்களின் செய்திகளையும் முன்னிறுத்திதான் மாதத்தைத் தீர்மானிக்க 30-வது நாள் இரவில் மேற்குத் திசையில் பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர். அவர்களின் நிலைப்பாட்டிற்கு இவையே ஆதாரங்கள் என்று அவர்கள் கூறுவதிலிருந்து, அவர்களுடைய நிலைப்பாட்டிற்கு எந்தவிதமான தரமான, ஸஹீஹான ஹதீஸ்களும் இல்லை என்பது தௌ;ளத் தெளிவாக நிரூபணம் ஆகிவிட்டது. இன்னும் பிறை பார்த்தல் சம்பந்தமாக மாற்றுக் கருத்துடையோர் எடுத்து வைக்கும் அனைத்து ஆதாரங்களும் ஒன்று பலவீனமான செய்தியாக இருக்கும், அல்லது அவர்களின் நிலைப்பாட்டிற்கு ஆதாரமாக அவை அமையாது என்ற நிலையில்தான் உள்ளன.

மேலும் அவர்களுடைய புறக்கண்பார்வை அடிப்படையில், 29-வது நாள் மாலை முப்பதாம் நாள் இரவு, மேற்கு திசையில், மஃரிபு நேரத்தில், மறைந்து கொண்டிருக்கும் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து அடுத்தநாளை முதல்நாளாகக் கொள்வதுதான் நபிவழி என்று நம்பியுள்ளனர். முப்பதாம் இரவு என்ற அந்த நாளில் மேகம் மூட்டம் பிறையை மறைத்தால், அந்த நாளை முப்பதாம் நாளாக முழுமைப்படுத்தி அடுத்துவரும் மஃரிபு முதல், புதிய மாதத்தை ஆரம்பம் செய்ய வேண்டும் என்றும் நம்பியுள்ளனர். நபி (ஸல்) அவர்களின் வழிமுறை என்ற மாற்றுக் கருத்துடையோரின் இந்த நம்பிக்கைக்கும், நிலைப்பாட்டிற்கும் நபி (ஸல்) அவர்களின் எவ்விதமான சொல், செயல், அங்கீகாரம் உள்ள ஒரு ஸஹீஹான ஹதீஸைக் கூட ஆதாரமாக இல்லை. அவர்களால் தங்கள் நிலைப்பாட்டிற்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து இதுவரை ஒரு ஆதாரத்தைக்கூட காட்டிட முடியவில்லை என்பதை பகிரங்கமாக தெரிவிக்கிறோம்.

மாற்றுக் கருத்துடையோரின் மேற்படி நம்பிக்கைக்கும், அவர்களின் பிறை நிலைப்பாட்டிற்கும் குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரங்கள் இல்லவே இல்லை என்பதை இவர்களை கண்ணியமாக அணுகி, குர்ஆன் சுன்னா ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வுகளை சமர்ப்பித்து, சுட்டிக்காட்டி, பல விளக்கங்களை அளித்தும் அவற்றை எல்லாம் கொஞ்சம்கூட ஏறிட்டு பார்க்காமல் 'பிறந்த பிறையைப் புறக்கண்ணால்தான் பார்க்க வேண்டும், பிறை படித்தரங்களை கணக்கிடக்கூடாது' என்று இன்றும் அடம்பிடித்து வருவதை பார்க்கிறோம். இவ்வாறு அடம்பிடித்து, மார்க்கத்தின் பெயரில் மக்களையும் தவறான வழியின்பால் இட்டுச் செல்வோர் பிறைவிஷயத்தில் தங்கள் மனோ இச்சையைத்தான் மார்க்கமாக பின்பற்றுகின்றனர்.

தாங்கள் மக்களிடம் இதுநாள்வரை கூறிவந்த பிறை கோட்பாடுகளை தற்போது எப்படி மாற்றிக் கொள்வது என்ற பரிதவிப்பில் சிலர் இருக்கலாம். அல்லது நமது சமுதாய மக்களின் எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது என்ற தயக்கத்திலும்கூட இருக்கலாம். சத்தியத்தை உளப்பூர்வமாக உணர்ந்து மேற்படி சிந்தனையிலுள்ள உலமா பெருமக்கள் தாங்கள் நிதர்சனமாக விளங்கிக் கொண்ட சத்தியத்தை துணிந்து உரைக்க வேண்டுகிறோம். மக்களுக்கு நேரான வழியை போதிப்பதற்கு தயங்கிடவே கூடாது என்கிறோம். உண்மையை உணர்ந்து வெளிப்படுத்துவோரும், தவறை திறுத்திக் கொள்வோரும்தான் உத்தமர்கள், உயர்ந்தவர்கள், இறை உவப்பைப் பெற்றவர்கள் ஆவர்.

ஊ) பிறை பார்த்தலும் இரண்டு சாட்சிகளும்.

பிறைகளை புறக்கண்களால் பார்ப்பது சம்பந்தமான ஆய்வறிக்கையில் சாட்சி விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? என்ற கேள்வி எழலாம். இருப்பினும் சாட்சி விஷயங்களிலும் புறக்கண்பார்வை உள்ளடங்கியுள்ளது என்றும், புறக்கண் பார்வை நிலைப்பாட்டிற்கு இதுவும் ஆதாரம் என்று மாற்றுக்கருத்தினர் தற்போது வலியுறுத்த ஆரம்பித்துவிட்டதால், பிறைசாட்சி சம்பந்தமான செய்திகளையும் ஆய்வு செய்வது நம்மீது கடமையாகிவிட்டது.

மாற்றுக் கருத்துடையோரின் நிலைப்பாட்டின்படி தத்தமது பகுதியில் அல்லது சர்வதேச நாடுகளில், ஒரு மாதத்தின் 30-ஆம் நாளுக்குரிய பிறையை 29-ஆம் நாளின் மஃரிபு வேளையில் (அவர்களின் பாஷையில் 29-வது நாளின் பின்னேரம் 30-வது நாளின் இரவில்) புறக்கண்ணால் பார்க்க வேண்டும். அல்லது அவ்வாறு பார்த்தவர்களின் சாட்சியைப் பெறவேண்டும், அல்லது முப்பது நாட்களாக முழுமை செய்து அந்த மாதத்தை முடிக்க வேண்டும். இதுதான் அவர்களின் பிறை நிலைப்பாடு.

ஒரு மாதத்தின் இறுதிவாரத்தில் தென்படும் பிறைகள் தேய்பிறைகள் (றுயniபெ ஊசநளஉநவெள) எனப்படும். மேற்படி தேய்பிறைகள் மஃரிபு நேரத்தில் தெரியாது. பிறையை 29-ஆம் நாளில் மஃரிபு நேரத்தில் மேற்குத் திசையில் பார்க்கலாம் என்று இவர்கள் நம்பியுள்ளதே இவர்களுக்கு சந்திரன் எந்த திசையில் உதிக்கிறது எந்த திசையில் மறைகிறது என்ற அடிப்படை அறிவுகூட இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

ஒரு மாதத்தின் 30-ஆம் நாளுக்குரிய பிறையை 29-ஆம் நாளின் மஃரிபு வேளையிலும், 29-ஆம் நாளுக்குரிய பிறையை 28-ஆம் நாளின் மஃரிபு வேளையில் மேற்குத்திசையில் புறக்கண்ணால் பார்க்கவேண்டும் என்றால் அந்த மாதத்தின் முதல்நாளுக்குரிய பிறையை எந்த நாளில் பார்க்க வேண்டும்? அவர்கள் கூற்றுப்படி 29 நாளின் பின்னேரம் 30 நாளின் இரவு என்பதற்கு எந்த மார்க்க ஆதாரமும் இல்லை.

ஒரு மாதத்தின் 30-ஆம் நாள் பிறையை 29-ஆம் நாளின் மஃரிபு வேளையில் புறக்கண்ணால் பார்க்க வேண்டுமாம். அல்லது அவ்வாறு பார்த்தவர்களின் சாட்சியைப் பெறவேண்டுமாம். இதுதான் இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறை என்பதற்கு இதுவரை ஒரு குர்ஆன் வசனத்தையோ, ஆதாரப்பூர்வமான ஒரு நபிமொழியையோ மாற்றுக் கருத்துடையோரால் சமர்ப்பிக்க இயலவில்லையே அது ஏன்? சிந்திக்கக் கூடாதா?. தேய்பிறைகள் மஃரிபு வேளையிலோ, மேற்குத்திசையிலோ காட்சியளிப்பதில்லை மாறாக அவை ஃபஜ்ரு நேரத்தில், கிழக்குத் திசையில்தான் காட்சியளிக்கும். பிறைகள் குறித்து இந்த சாதாரண அடிப்படை விஷயத்திற்கு மாற்றமாக 29-ஆம் நாளின் மஃரிபு வேளையில் பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) அவர்களும் நமக்குக் கட்டளை இட்டிருப்பார்களா? மக்களே சற்று சிந்தியுங்கள்.

பிறைகளை புறக்கண்களால் மேற்குத் திசையில் மஃரிபு வேளையில் பார்க்க வேண்டும் என்ற தங்களுடைய பிறை கொள்கைக்கு ஆதாரங்கள் என்று கூறிவந்த பல செய்திகள் அவர்களுடைய பிறை நிலைப்பாட்டிற்கு எதிரானதாகவும், பலவீனமான, இட்டுக்கட்டபட்ட செய்திகளாகவுமே உள்ளதை 'பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா?' என்ற இந்த தலைப்பின்கீழ் தொடர்ந்து படித்து வருகிறோம்.

பிறை பார்த்த சாட்சியை ஏற்றுக் கொள்ளலாமா? பிறை பார்த்ததற்கு ஒரு சாட்சி மட்டும் போதுமா? அல்லது பிறை பார்த்ததற்கு இரண்டு சாட்சிகள் அவசியம் தேவையா? போன்ற சர்ச்சைகள் சமுதாயத்தில் நிலவிக் கொண்டே இருக்கின்றன. எனவே பிறை சாட்சி சம்பந்தப்பட்ட அத்தகைய செய்திகளையும் நாம் ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

அதாவது இந்த பிறைசாட்சி சம்பந்;தமான விஷயத்திற்குக்கூட மாற்றுக் கருத்துடையோர் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை இதுகாலம்வரை சமர்ப்பிக்க வில்லை. இவர்கள் ஆதாரமாக நம்பியுள்ள ஒரு சாட்சியைக் கொண்டு பிறைத் தகவலை செயல்படுத்தியதாக வரும் அனைத்து செய்திகளும் பலவீனமாகவே உள்ளன. இந்நிலையில், நபி (ஸல்) அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்து தகவல் பெற்று செயல்பட்டதாக வரும் செய்திகளும் 'முர்ஸலான', 'மவ்கூஃபான' செய்தியாகவே உள்ளன என்பதுதான் வேதனையிலும் வேதனை. எனவே அவற்றைப் பற்றியும் நாம் சுருக்கமாக இங்கே ஆய்வு செய்வோம்.

حدثنا يحيى بن زكريا ، قال : أخبرنا حجاج ، عن حسين بن الحارث الجدلي ، قال : خطب عبد الرحمن بن زيد بن الخطاب في اليوم الذي يشك فيه ،فقال : ألا إني قد جالست أصحاب رسول الله صلى الله عليه وسلم ، وسألتهم ، ألا وإنهم حدثوني ، أن رسول الله صلى الله عليه وسلم قال : ' صوموا لرؤيته ، وأفطروا لرؤيته ، وأنسكوا لها ، فإن غم عليكم فأتموا ثلاثين ، وإن شهد شاهدان مسلمان ، فصوموا وأفطروا' .

مسند أحمد بن حنبل - أول مسند الكوفيين حديث أصحاب رسول الله صلى الله عليه وسلم - حديث : ‏18510‏

அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் கத்தாப் அவர்கள் சந்தேகப்படக்கூடிய நாளில் உரை நிகழ்த்தியதாக ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ கூறுகின்றார்கள். 'நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் அமர்ந்திருக்கின்றேன். மேலும் நான் அவர்களிடம் கேட்டேன். அப்போது 'நிச்சயமாக நீங்கள் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பு வையுங்கள், மேலும் நீங்கள் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பை நிறைவு செய்யுங்கள். மேலும் நீங்கள் அதன் காட்சியின் அடிப்படையிலே அறுத்துப் பலியிடுங்கள். அது உங்கள் மீது மறைக்கப்படும் போது நீங்கள் முப்பதை முழுமையாக்குங்கள் (முழுமைப் படுத்துங்கள்). மேலும் இரண்டு முஸ்லிம்கள் சாட்சி கூறும் போது நீங்கள் நோன்பு வையுங்கள், நோன்பை நிறைவு செய்யுங்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அவர்களின் தோழர்கள் என்னிடம் அறிவித்தார்கள். அறிவித்தவர் : ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ, நூல்: அஹமத் - 18510.

أخبرنا إبراهيم بن يعقوب ، قال : حدثنا سعيد بن شبيب أبو عثمان ، وكان شيخا صالحا بطرسوس ، قال : أخبرنا ابن أبي زائدة ، عن حسين بن الحارث الجدلي ، عن عبد الرحمن بن زيد بن الخطاب ، أنه خطب الناس في اليوم الذي يشك فيه فقال : ألا إني جالست أصحاب رسول الله صلى الله عليه وسلم وسألتهم ، وإنهم حدثوني أن رسول الله صلى الله عليه وسلم قال : ' صوموا لرؤيته وأفطروا لرؤيته ، وانسكوا لها ، فإن غم عليكم فأتموا ثلاثين ، وإن شهد شاهدان فصوموا وأفطروا ' ழூ.

السنن الكبرى للنسائي - كتاب الصيام ذكر الاختلاف على سفيان في حديث سماك - حديث : ‏2395‏

அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் கத்தாப் அவர்கள் சந்தேகப்படக்கூடிய நாளில் மக்களுக்கு உரை நிகழ்த்தியதாக ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ கூறுகின்றார்கள். நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் அமர்ந்திருக்கின்றேன். மேலும் நான் அவர்களிடம் கேட்டேன். அப்போது 'நிச்சயமாக நீங்கள் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பு வையுங்கள், மேலும் நீங்கள் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பை நிறைவு செய்யுங்கள். மேலும் நீங்கள் அதன் காட்சியின் அடிப்படையிலே அறுத்துப் பலியிடுங்கள். அது உங்கள் மீது மறைக்கப்படும் போது நீங்கள் முப்பதை முழுமையாக்குங்கள் (முழுமைபடுத்துங்கள்). மேலும் இரண்டு சாட்சியாளர்கள் சாட்சி கூறும் போது நீங்கள் நோன்பு வையுங்கள், நோன்பை நிறைவு செய்யுங்கள்'.

அறிவித்தவர் : ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ நூல்: அஹமத் - 2395.

حدثنا أبو بكرثنا أبو الأزهرثنا يزيد بن هارونثنا الحجاجعن الحسين بن الحارثقال : سمعت عبد الرحمن بن زيد بن الخطابيقول : إنا صحبنا أصحاب النبي صلى الله عليه وسلم وتعلمنا منهم وإنهم حدثونا أن رسول الله صلى الله عليه وسلمقال : ' صوموا لرؤيته وأفطروا لرؤيتهفإن أغمي عليكم فعدوا ثلاثينفإن شهد ذوا عدل فصوموا وأفطروا وأنسكوا ' ழூ.

سنن الدارقطني - كتاب الصيام باب الشهادة على رؤية الهلال - حديث : ‏1920‏

நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் நாம் தோழமை கொன்டோம் மேலும் நாம் அவர்களிடமிருந்து கற்றோம். மேலும் நிச்சயமாக நாம்மிடம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''நீங்கள் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பு வையுங்கள், மேலும் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பை நிறைவு செய்யுங்கள். உங்கள் மீது அது மங்கும் போது நீங்கள் எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள். மேலும் நீதமானவர்களில் இருவர் சாட்சி கூறும் போது நீங்கள் நோன்பு வையுங்கள் மேலும் நீங்கள் நோன்பை நிறைவு செய்யுங்கள் மேலும் நீங்கள் அறுத்து பலியிடுங்கள்''.

அறிவித்தவர் : ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ நூல்: தாரகுத்னீ - 1920

حدثنا أبو بكر بن مالك ، ثنا عبد الله بن أحمد بن حنبل ، حدثني أبي ، ثنا يحيى بن زكريا ، ثنا حجاج يعني ابن أرطأة ، عن حسين بن الحارث الجدلي ، قال : خطب عبد الرحمن بن زيد بن الخطاب في اليوم الذي يشك فيه من رمضان ، قال : ألا إني قد جالست أصحاب النبي صلى الله عليه وسلم وساءلتهم ، ألا وإنهم حدثوني أن النبي صلى الله عليه وسلم ، قال : ' صوموا لرؤيته ، وأفطروا لرؤيته ، وأمسكوا لها ، فإن غم عليكم فأتموا ثلاثين ، فإن شهد شاهدان مسلمان فصوموا وأفطروا ' ழூ.

معرفة الصحابة لأبي نعيم الأصبهاني - باب العين عبد الرحمن بن زيد بن الخطاب - حديث : ‏6626‏.

அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் கத்தாப் அவர்கள் ரமழான் மாதத்தின் சந்தேகப்படக்கூடிய நாளில் உரை நிகழ்த்தியதாக ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ கூறுகின்றார்கள். 'நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் அமர்ந்திருக்கின்றேன். மேலும் நான் அவர்களிடம் கேட்டேன். அப்போது 'நிச்சயமாக நீங்கள் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பு வையுங்கள், மேலும் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பை நிறைவு செய்யுங்கள். மேலும் அதன் காட்சியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மீது மறைக்கப்படும் போது நீங்கள் முப்பதை முழுமையாக்குங்கள் (முழுமைபடுத்துங்கள்). மேலும் இரண்டு முஸ்லிம்கள் சாட்சி கூறும் போது நீங்கள் நோன்பு வையுங்கள், நோன்பை நிறைவு செய்யுங்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அவர்களின் தோழர்கள் என்னிடம் அறிவித்தார்கள்.

அறிவித்தவர் : ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ நூல்:மஹாரிபத்து ஸஹாபா – 6626.

மேற்கண்ட நான்கு அறிவிப்புகளையும் ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ என்ற தாபிஈயீதான் அறிவிக்கின்றார். மேற்படி தாபிஈ அவர்கள், அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் கத்தாப் என்ற மற்றொரு தாபிஈ இடமிருந்து அறிவிப்பதாகவே செய்தியில் உள்ளது. அந்தத் தாபிஈ கூட நபித்தோழர்களான ஸஹாபாக்களிடம் இருந்தே தான் அறிந்ததாகக் கூறுகின்றார். இச்செய்தியை அவருக்கு அறிவித்த நபித்தோழர் யார்? அந்த ஸஹாபியின் பெயர் என்ன? போன்ற விபரங்களை அவர் கூறவில்லை. இவை முதலாவது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயமாகும்.

அதில் 'நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் அமர்ந்திருக்கின்றேன். மேலும் நான் அவர்களிடமிருந்து கேட்டேன். நிச்சயமாக அவர்கள் என்னிடம் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக' என்ற வாசகங்கள் அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் கத்தாப் அவர்களின் சொற்பொழிவின் கருத்துக்களாகும்.

ஸஹீஹான ஹதீஸ்கள் கூட குர்ஆனுக்கு முரணாக இருப்பதாக தாங்கள் கருதினால் அவற்றை பின்பற்றக் கூடாது என வாதிடும் சிலர், தற்போது ஸஹாபாக்களின் கூற்றையும் விட அடுத்த நிலையில் உள்ள தாபிஈயீன்களின் கூற்றையும் ஏற்கத் தயாராகி விட்டது வியப்பில் ஆழ்த்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது அப்துர் ரஹ்மான் பின் ஸைத் அவர்கள் இரண்டு வயதுடைய குழந்தையாக இருந்தார்கள் என்பதற்கு வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. மேலும் அப்துர் ரஹ்மான் பின் ஸைத் அவர்கள், நபி (ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்ற ஸஹாபியும் அல்ல. மேலும் இவர்களுக்கு இரண்டு வயது இருக்கும்போதே நபி (ஸல்) அவர்கள் மரணித்தும் விட்டதால், இவர் ஸஹாபிகளிடம் இருந்தே ஹதீஸ்களை அறிவிப்பவராக இருந்தார்கள்.

ஹீசைன் பின் அல்ஹாரிஸ் அல் ஜத்லீ என்பவர் தாபிஈயீ ஆவார். அவர் அப்துர் ரஹ்மான் அவர்களிடமிருந்து மாணவர் என்ற ரீதியில் கேட்காமல், ஏதோ உரை நிகழ்த்தும் போது கேட்டதாகவே இச்செய்தி பதியப்பட்டுள்ளது. மேலும் இச்செய்தியை வேறு எந்த ஸஹாபியும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டதாக எந்த ஹதீஸூம் இல்லை. மேலும் இதுபோன்ற ஒரு செய்தியை இவர் அல்லாத மற்ற எந்த தாபிஈயும்கூட அறிவிக்க வில்லை. மேற்கண்ட இச்செய்தி 'முர்ஸல்' என்னும் 'முன்கதீ' (தாபிஈயீன் தரத்தில் உள்ளவின்) அறிவிப்பேயாகும்.

மேற்படி நான்கு நூற்களில் வரும் அறிவிப்புகளையும் ஹூசைன் பின் அல்ஹாரிஸ் அல் ஜத்லீ என்ற ஒரே நபர்தான் இந்த செய்தியை அறிவித்துள்ளார். மேற்படி அறிவிப்புகளில்

•             'இரண்டு முஸ்லிம்களின் சாட்சி வேண்டும்' என்றும்,

•             'இருவரின் சாட்சி ' என்றும்,

•             அதன் பிறகு 'நீதமான இரு சாட்சிகள்' என்றும்,

கருத்துக்களில் வார்த்தைகளை மாற்றி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளதையும் காண்கிறோம். ஒரு அறிவிப்பில் இரண்டு முஸ்லிம்களின் சாட்சி வேண்டும் என பதியப்பட்டுள்ளது. அதே நபர் அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில் இருவரின் சாட்சி இருந்தாலே போதுமானது என பதியப்பட்டுள்ளது. எனவே முஸ்லிம் அல்லாதவர்களின் சாட்சியை ஏற்றுக்கொள்ளலாம் என இரண்டாவது அறிவிப்பு கூறுகின்றது என நாம் விளங்கிக் கொள்ளலாமா? என்ற கேள்வி எழுவது நியாயம்தான். மேலும் அதே நபர் அறிவிக்கும் அடுத்த அறிவிப்பில் நீதமான இரு சாட்சிகள் என கூறப்பட்டுள்ளது. முஸ்லிம்களில் கணிசமானோர் நீதமாக இல்லாமல் இருக்கும் போது நீதமான பிற மதத்தவர்கள் கூறும் சாட்சியை ஏற்றுக் கொள்ளலாம் என்று இந்த அறிவிப்பு கூறுகின்றதா? இந்த அறிவிப்பை பலமானது என்று கூறுவோர்தான் இவை போன்ற கேள்விகளுக்கு பதில் தர கடமைப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பாளர் தொடரில் வரும் ஹஜ்ஜாஜ் என்பவர் பலவீனமானவர் ஆவார்.

قال الذهبي في الكاشف : أحد الأعلام ، على لين فيه ... قال أحمد : كان من حفاظ الحديث ... وقال أبو حاتم : صدوق يدلس ، فإذا قال حدثنا فهو صالح ...

قال أبو حاتم : صدوق ، يدلس عن الضعفاء يكتب حديثه ، فإذا قال : حدثنا ، فهو صالح لا يرتاب فى صدقه و حفظه إذا بين السماع ، لا يحتج بحديثه

قال إبن حجر في التقريب : صدوق كثير الخطأ و التدليس ، أحد الفقهاء

قال أبو زرعة : صدوق يدلس

قال يحي بن معين : قال أبو بكر بن أبى خيثمة ، عن يحيى بن معين : صدوق ، ليس بالقوى ، يدلس عن محمد بن عبيد الله العرزمى ، عن عمرو بن شعيب

قال عبد الله بن المبارك : كان الحجاج يدلس

قال النسائي : ليس بالقوي

قال يعقوب بن شيبة : واهى الحديث ، فى حديثه اضطراب كثير ، و هو صدوق ، و كان أحد الفقهاء

காஷிப் என்ற புத்தகத்தில் மேற்கண்ட ஹஜ்ஜாஜ் என்பவரைப்பற்றி அறிஞர்கள் கூறுவதாக இமாம் தஹபி அவர்கள் கூறும்போது, இவர் அறிஞர்களில் ஒருவராவார். அவர் மீது சில பலவீனங்கள் உள்ளன. இமாம் அஹமது அவர்கள் கூறும் போது இவர் ஹதீஸ் மனனம் செய்தவர்களில் இருந்தார் மேலும் அபூஹாதிம் அவர்கள் இவரை ஒப்புக்கொள்ளப்பட்டவர், இருட்டடிப்பு செய்பவர் என்ற கூறியுள்ளார்கள்.

அவர் நம்மிடம் அறிவித்தார் (ஹத்தஸனா) எனக்கூறினால் அதை ஏற்றுக்கொள்ளலாம் என்கின்றனர்.

யாகூப் பின் ஷைபா அவர்கள் ஹஜ்ஜாஜைப் பற்றிக் கூறும்போது ஹதீஸில் பொய்யுரைப்பவர், அவரின் ஹதீஸில் அதிகமான முரண்பாடுகள் இருக்கும், அவர் ஒப்புக்கொள்ளப்பட்டவர், அறிஞர்களில் ஒருவராக இருந்தார் என்கின்றனர்.

இமாம் நஸாயீ (ரஹ்) அவர்கள் இவரை பலமில்லாதவர் எனக் கூறியுள்ளார்கள்.

அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்கள் கூறும்போது: ஹஜ்ஜாஜ் அவர்கள் இருட்டடிப்பு செய்பவர்களில் ஒருவராக இருந்தார் என்று விமர்சித்துள்ளார்கள்.

யஹ்யா பின் முயீன் (ரஹ்) அவர்கள் கூறும்போது : ஒப்புக்கொள்ளப்பட்டவர், பலமில்லாதவர், அவர் முகமது பின் உபைதுல்லாஹ் விடமிருந்து அமர் பின் ஷூயைப்பிடமிருந்தும் இருட்டடிப்பு செய்பவர் என்று விமர்சித்துள்ளார்கள்.

அபூஹாதிம் அல் ராஸி (ரஹ்) கூறுகின்றார்கள் : ஒப்புக்கொள்ளப்பட்டவர், இவர் பலவீனமான நபர்களிடமிருந்து இருட்டடிப்பு செய்து அறிவிப்பவர். அவர் நம்மிடம் அறிவித்தார் (ஹத்தஸனா) எனக்கூறினால் அதை ஏற்றுக்கொள்ளலாம் அதை எழுதியும் கொள்ளலாம். அந்த செய்தி உண்மையானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் செவியுற்று தெளிவு பெற்றாலே தவிர. இல்லையெனில் அந்த ஹதீஸ் ஏற்றுக்கொள்ளப்படாது.

தக்ரீபில் இப்னு ஹஜர் (ரஹ்) கூறும்போது, அதிக தவறு செய்யக் கூடியவர் இருட்டடிப்பு செய்பவர், அறிஞர்களில் ஒருவர்.

அபூ சுர்ஆ கூறும் போது: ஒப்புக்கொள்ளப்பட்டவர், இருட்டடிப்பு செய்பவர்

மேலும் மேலே நாம் பதிந்துள்ள நான்கு அறிவிப்புகளிலும் ஹஜ்ஜாஜ் என்பவர் ' حدثنا - ஹத்தஸனா' என அறிவிக்காமல் ' عن- அன்' என்ற பதத்தை கொண்டே அறிவித்துள்ளார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

இன்னும் இந்த செய்தியை அறிவிக்கும் ஹீசைன் பின் அல்ஹாரிஸ் அல் ஜத்லீ அவர்கள்கூட நம்பகமானவர் என்பதற்கு உறுதியான சான்றுகள் ஏதுமில்லை. ஹதீஸ்கலை அறிஞர்கள் இவரை நல்லவராக இருக்கலாம் என்ற சந்தேக வார்த்தையை கொண்டே குறிப்பிடப்படுகின்றார்.

இவ்வாறு நபி (ஸல்) அவர்களுக்கு சம்பந்தமில்லாத, பலவீனமான அறிவிப்பாளர்கள் வரிசை கொண்ட, குழப்பமான வார்த்தைகளை உள்ளடக்கிய மேற்கண்ட இந்த அறிவிப்பு எப்படி நபிமொழியாக அமையும்? என்பதை நாம் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக நபித்தோழர்கள் அறிவித்தார்கள் என்று பொத்தாம் பொதுவாக கூறி, அவ்வாறு அறிவித்த நபித்தோழர்கள் யார் யார்? என்று அடையாளம் காட்டாமல் வந்துள்ள இந்த அறிவிப்பு 'ஷாஹிதானி' என்ற இரண்டு சாட்சிகளின் விஷயத்திற்கோ, பிறை பார்த்தலுக்கோ, பிறை பார்த்த தகவல்களுக்கோ ஒரு போதும் ஆதாரமாக அமையாது.

எ) ரமழானை முன்கூட்டியே ஆரம்பிப்பது சம்பந்தமான அறிவிப்பு :-

صحيح البخاري - (2676) 1815 - حدثنا مسلم بن إبراهيم حدثنا هشام حدثنا يحيى بن أبي كثير عن أبي سلمة عن أبي هريرة رضي الله عنه : عن النبي صلى الله عليه و سلم قال ( لا يتقدمن أحدكم رمضان بصوم يوم أو يومين إلا أن يكون رجل كان يصوم صومه فليصم ذلك اليوم )

ரமழானை உங்களில் யாரும் ஒரு நாளின் நோன்பைக் கொண்டோ, இரு நாளின் நோன்பைக் கொண்டோ முந்த வேண்டாம். வழக்கமாக நோன்பு வைக்கும் மனிதரைத்தவிர. எனவே அந்த நாட்களில் அவர் நோன்பு நோற்றுக் கொள்ளலாம். அறிவித்தவர் : அபூஹூரைரா (ரழி) அறிவித்தார். நூல்: புகாரி 1815 (தமிழ் மொழிபெயர்ப்பில் : 1914)

மேற்காணும் இந்த ஹதீஸை மேற்கோள் காட்டி பிறந்த பிறையைப் பார்க்கும் முன்பே மாதத்தை ஆரம்பித்து மாதத்தை முற்படுத்தித் தவறிழைக்கின்றனர் என ஹிஜ்ரி கமிட்டியினராகிய நம் மீது மாற்றுக் கருத்துடையோர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த ஹதீஸ் சம்பந்தமாக 'யவ்முஷ்ஷக் என்ற வாதம் எடுபடுமா?' என்ற தலைப்பில் ஏற்கனவே நாம் விளக்கியிருக்கிறாம். ஒருவர் ரமழான் மாத நோன்புகளை மட்டும் நோற்பவராக இருந்தால், அவர் ரமழானின் முந்தைய மாதங்களின் கணக்கையும், தேதியையும் அறியாமல் நோன்பு வைக்கக் கூடாது. அவர் சந்திரனின் படித்தரங்களைக் கவனித்து அறிந்த பின்னரே நோன்பை ஆரம்பிக்க வேண்டும் அல்லது முடிக்க வேண்டும். இவைதான் மேற்படி ஹதீஸ் கூறும் நிபந்தனையாக உள்ளது.

மேற்படி ஹதீஸோ ரமழான் துவங்குவதற்கு ஒரு நாளோ இரு நாளோ மீதி இருக்கும் போது நோன்பு வைக்காதீர்கள் என்று திட்டவட்டமாகக் கூறுகின்றது. எனவே அன்றைய சமுதாயம் ரமழான் மாதத்தின் பிறைகளை பார்க்கும் முன்பே ஷஃஅபான் மாதம் 29 தினங்களில் முடிந்துவிடும், அல்லது 30 தினங்களில் முடிந்து விடும் என்பதை முற்கூட்டியே அறிந்து கொள்ளும் நிலையிலும், பிறை படித்தரங்களை முறையாகக் கணக்கிட்டுக் கொள்ளும் ஞானம் உள்ளவர்களாக இருந்துள்ளார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடிகின்றது. மாதம் முடிவதை முற்கூட்டியே அறிந்து கொள்ளும் நிலை (ஞானம்) இருந்திருந்தால் மட்டுமே நபி (ஸல்) அவர்கள் 'ரமழானை உங்களில் யாரும் ஒரு நாளின் நோன்பைக் கொண்டோ, இரு நாளின் நோன்பைக் கொண்டோ முந்த வேண்டாம்' என்ற உத்தரவைப் பிறப்பித்திருக்க முடியும் என்பதை அறிவுடையோர் யாரும் மறுக்க மாட்டார்கள்.

இன்னும் இந்த ஹதீஸை நாம் அலசும் போது ரமழான் மாதம் எப்போது துவங்கும்? என்பதை நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் துல்லியமாக அறிந்திருந்தது விளங்குகிறது. பேணுதலுக்காக முந்தைய மாத நாட்களையும் ரமழானில் சேர்த்து நோன்புகள் வைக்கும் பழக்கத்தை ஒருவேளை கொண்டிருந்திருக்கலாம். ஆகையால் மேற்படி உத்தரவின் மூலம் அச்செயலை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருக்கலாம். எனவேதான் நபி (ஸல்) அவர்கள் ரமழான் துவங்கும் சரியாக தினத்தில், ரமழான் நோன்பை ஆரம்பித்தே ஆக வேண்டும் என்ற இந்தக் கட்டளையைக் கொடுத்துள்ளார்கள் என சிந்திக்கத் தோன்றுகின்றது.

நபி (ஸல்) அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட அந்த முஸ்லிம் சமுதாயம் பிறைகளைக் கவனிப்பதில் மிகுந்த அக்கரை கொண்டிருந்துள்ளார்கள். எவ்வித விஞ்ஞான முன்னேற்றங்களும் இல்லாத அக்காலத்தில் ஒவ்வொரு மாதத்தையும் மிகத்துல்லியமாக அறிந்து, ரமழான் நோன்பை நோற்பதில் மிகச் சரியாக செயல்பட்டு முன்னணியில் இருந்துள்ளார்கள். இவற்றை மேற்படி ஹதீஸ் தெளிவாக உணர்த்துகிறது.

அதே வேளையில் இன்றைய மாநில, தேசிய மற்றும் சர்வதேசப் பிறை நிலைப்பாடுகளில் உள்ளவர்கள் நாங்களும் நபி (ஸல்) அவர்களைத்தான் முன்மாதிரியாகக் கருதுகிறோம் என்கின்றனர். ஆனாலும் அவர்கள் பிறைகளைத் தொடர்ந்து கவனிப்பதிலும், மாதத்தைத் துல்லியமாக அறிந்து சரியான நாளில் நோன்பை நோற்பதிலும் மிகவும் பின்தங்கியே உள்ளனர். ரமழான் மாதத்தில் கூட கடமையான இரண்டு நோன்புகளையோ அல்லது ஒரு நோன்பையோ சர்வசாதாரணமாக இழக்கும் நிலையில் இருப்பதைப் பார்த்துப் பரிதாபப்படுகிறோம், கவலையும் அடைகிறோம். மூன்றாம் பிறையைத்தான் நபி(ஸல்) அவர்கள் முதல் பிறையாக எடுத்துக் கொள்ளக் கட்டளையிட்டுள்ளார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லாத ஒன்றை அவர்கள் கூறியதாக அவதூறாகப் பிரச்சாரம் செய்கின்றனர். அத்தகையோர் தயவுசெய்து மேற்படி ஹதீஸை நிதானமாகப் படித்து தங்களின் தவறான நிலைப்பாட்டைத் திருத்திக் கொள்ள கடமைப் பட்டுள்ளார்கள்.

பொதுவாக ரமழானின் ஃபர்ளான நோன்பை ரமழான் மாதத்தில்தான் நோற்க வேண்டும். ஒருவர் ரமழான் மாதம் எனக்கு தவறி விடக் கூடாது என்பதற்காக ஷஃஅபானின் இறுதி நாளிலோ அல்லது இறுதி இரு நாட்களிலோ நோன்பை ஆரம்பித்து முந்த வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளார்கள். அதே சமயம் வழக்கமாக ஒருவர் திங்கள், வியாழன் போன்ற கிழமைகளில் உபரியான (நஃபிலான) நோன்பு வைக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால் அவருக்கு இந்த சட்டம் பொருந்தாது என்பதையும் நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள்.

மேலே பதியப்பட்டுள்ள ஹதீஸை வைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் மாதத்தை முற்படுத்தக் கூடாது என கூறி விட்டதால், நாங்கள் பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்க்காமல் நோன்பு வைக்க மாட்டோம். காரணம் முற்படுத்துவதைத்தான் நபி (ஸல்) தடை விதித்துள்ளார்கள், எனவே நாங்கள் நோன்பு நோற்கும் நாளை முடிந்தவரை பிற்படுத்துவோம் என்கின்றனர். ரமழான் மாதம் ஆரம்பித்து ஒரு நாளோ இரண்டு நாட்களோ கழிந்து விட்டதை நாங்கள் தெளிவாக அறிந்து கொண்டாலும் கூட பரவாயில்லை காரணம் பிறையை புறக்கண்களால் பார்ப்பதே முக்கியம் என்றும் கூறி வருகின்றனர். என்ன வேடிக்கை விபரீதம் இது! ரமழான் மாதம் ஆரம்பித்தும் நோன்பு வைக்காமல் இருப்பதுதான் அவர்கள் புரிந்துவைத்துள்ள இஸ்லாமிய மார்க்க சட்டமா? இது கைசேதத்துக்குரியதே!

شَهْرُ‌ رَ‌مَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْ‌آنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْ‌قَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ‌ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِ‌يضًا أَوْ عَلَىٰ سَفَرٍ‌ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ‌ ۗ يُرِ‌يدُ اللَّـهُ بِكُمُ الْيُسْرَ‌ وَلَا يُرِ‌يدُ بِكُمُ الْعُسْرَ‌ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُ‌وا اللَّـهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُ‌ونَ

ரமழான் மாதம் எத்தகைய தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு முழுமையான வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, எவர் உங்களில் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் நோன்பு நோற்கட்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்தில் இருக்கிறாரோ அவர் மற்ற நாட்களில் நோற்கட்டும்;. உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காகக் குறிப்பிட்ட எண்ணிக்கையைப் பூர்த்தி செய்து, அல்லாஹ்வைப் பெருமைப்படுத்துவதற்காக அல்லாஹ் இலகுவை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. (அல்குர்ஆன் 2:185)

யார் அம்மாதத்தை அடைகின்றாறோ அவர் நோன்பு நோற்கட்டும் என அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். இவ்வசனம் மூலம் ரமழான் மாதத்தை நாம் எப்போது அடையப் போகின்றோம் என்பதை முற்கூட்டியே அறிந்து வைத்திருந்தால் தான் நாம் சரியாக அடைய முடியும். இதைக் கூட சிந்திக்காமல், யார் அம்மாதத்தை அடைகின்றாறோ என்ற வாசகத்தைத் தவறாக விளங்கி, உலக முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நாட்களில் ரமழானை அடைவார்கள் என்று மாற்றுக்கருத்தினர் பிரச்சாரம் செய்வது வேடிக்கைதான்.

إِنَّمَا النَّسِيءُ زِيَادَةٌ فِي الْكُفْرِ يُضَلُّ بِهِ الَّذِينَ كَفَرُوا يُحِلُّونَهُ عَامًا وَيُحَرِّمُونَهُ عَامًا لِيُوَاطِئُوا عِدَّةَ مَا حَرَّمَ اللَّهُ فَيُحِلُّوا مَا حَرَّمَ اللَّهُ زُيِّنَ لَهُمْ سُوءُ أَعْمَالِهِمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ

மாற்றுவது நிராகரிப்பையே அதிகப்படுத்துகிறது. இதன்முலம் நிராகரிப்பவர்களே வழிகெடுக்கப் படுகின்றனர், அவர்கள் அதை ஒரு வருடத்தில் அனுமதிக்கப்பட்டதாகக் கொள்கின்றனர். அல்லாஹ் தடுத்திருக்கும் எண்ணிக்கையைச் சரி செய்வதற்காக மேலும் ஒரு வருடத்தில் அதைத் தடுத்துக் கொள்கின்றனர். எனவே, அல்லாஹ் எதைத் தடுத்தானோ (அதை) அவர்கள் ஆகுமாக்கிக் கொண்டார்கள். அவர்களின் தீச்செயல்கள் அவர்களுக்கே அழகாக்கப் பட்டுவிட்டன. மேலும் அல்லாஹ், நிராகரிப்பவர்களை நேர் வழியில் செலுத்த மாட்டான். அல்குர்ஆன் (9:37)

மேலும், மாதத்தை முன்னும் பின்னும் மாற்றுவது இறை நிராகரிப்பு என்பதையும் அல்லாஹ் தன்னுடைய திருமறையில் மேற்கண்டவாறு கூறுகின்றான். எனவே மாதத்தை முற்படுத்துவதும், பிற்படுத்துவதும் அல்லாஹ் அனுமதிக்காத ஒன்று என்பதை நாம் தெளிவாக விளங்க முடிகின்றது.

நாம் மேலே எடுத்துக் காட்டியுள்ள ஹதீஸ் ரமழான் மாதத்தைச் சரியாக அதற்குரிய நாளில் கண்டிப்பாகத் துவங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஹதீஸ் ஆகும்.

•             அதில் 29-வது நாளின் மாலை, 30-வது நாளின் மஃரிபில் (இப்படி சொல்வதே மார்க்க அடிப்படையில் தவறானதாகும்), பிறந்த பிறையை மறையும் நேரத்தில் பார்த்து விட்டு அடுத்த நாள் மாதத்தை துவங்குங்கள் என்பதற்கு ஆதாரமில்லை.

•             பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்க்காமல் மாதத்தை துவங்காதீர்கள் என்ற எந்த வாசகமும் மேற்படி ஹதீஸில் இடம் பெறவில்லை.

இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் ரமழானை முற்கூட்டியே அறிந்து சரியான நாளில் துவங்க வேண்டும் என்பதை மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்தும் ஹதீஸ் இது என்றால் அது மிகையில்லை.

ரமழானை உங்களில் யாரும் ஒரு நாளின் நோன்பைக் கொண்டோ, இரு நாளின் நோன்பைக் கொண்டோ முந்த வேண்டாம் என்று சொன்னால் தாராளமாக பின்தங்கலாம் என்றா பொருள் கொள்வது? சற்று சிந்தியுங்கள் மக்களே. மேற்கண்ட ஹதீஸ் வாசகத்தைப் படித்துப் பார்த்தாலே இன்று நடைமுறையில் மாற்றுக் கருத்துடையோர் பிரச்சாரம் செய்வதைப் போல 'பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்த்துவிட்டு (ஒரு நாள் கழித்தோ, இரண்டு நாட்களை கழித்தோ, மூன்று நாட்களை கழித்தோ) அவரவர்கள் தத்தமது பகுதியில் தங்களது மாதத்தை ஆரம்பிக்கலாம், காரணம் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற சொற்றொடர் இதைத்தான் கூறுகிறது. எனவே மாதத்தின் துவக்கத்தை அவரவர்கள் வௌ;வேறு கிழமைகளில் துவக்குவது ஒன்றும் குற்றமில்லை' என்ற தவறான கருத்தைத் தடை செய்யும் ஒரு ஹதீஸாகவும் இது இருக்கின்றது.

ஆகவே, எவர்கள் மாதத்தைச் சரியான நாட்களில் ஆரம்பிக்கின்றார்களோ அவர்களைப் பார்த்து மாதத்தை முன்கூட்டியே நீங்கள் ஆரம்பித்து விட்டீர்கள் எனவே இந்த ஹதீஸிற்கு மாற்றம் செய்து விட்டீர்கள் என்று கூறுவது நகைப்பிற்குரிய விஷயமாகும். ஏனென்றால், அவர்களுடைய பிறை நிலைப்பாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை அறிந்த விரக்தியில் இது போன்ற அவதூறுகளைக் கூறி சரியாக மாதத்தைத் துவங்குபவர்களைக் குழப்பி விடலாம் என முடிவு செய்துள்ளார்கள் போலும்.

இதுபோன்ற குழப்பங்களை இஸ்லாமிய விரோத சக்திகள் மார்க்கத்தின் பெயரால் ஏராளமாகவும், தாராளமாகவும் செய்துள்ள நிலையில் நம்மைப் பொய்பிப்பதற்காக வேண்டி சிலர் அந்தத் தீய சக்திகளின் பணியைக் கையில் எடுத்து வேலை செய்யுமளவிற்கு துணிந்து விட்டார்களோ என்ற அச்சமும், ஐயமும் ஏற்படுகிறது - அல்லாஹ்வே அறிந்தவன்.

மேலும், முன்பு அவர்களாகவே தள்ளுபடி செய்த பல பலஹீனமான அறிவிப்புகளையும் தற்போது தூசி தட்டி எடுத்து மக்கள் மன்றத்தில் வைத்து ஏமாற்றியும், குழப்பியும் வருகின்றார்கள். இது போன்று குழப்பம் விளைவிப்பவர்களால் மக்கள் ஏமாற்றப் படாமல் இருப்பதற்காகவே அவர்கள் எடுத்து வைக்கும் இந்த தலைப்புச் சம்பந்தப்பட்ட அனைத்துச் செய்திகளையும் தற்போது நாம் விளக்கிக் கொண்டு வருகிறோம்.

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيٍّ، عَنْ بَعْضِ، أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ '‏ لاَ تَقَدَّمُوا الشَّهْرَ حَتَّى تُكْمِلُوا الْعِدَّةَ أَوْ تَرَوُا الْهِلاَلَ ثُمَّ صُومُوا وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوُا الْهِلاَلَ أَوْ تُكْمِلُوا الْعِدَّةَ ثَلاَثِينَ ‏'‏ ‏.‏ أَرْسَلَهُ الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ.‏ السنن الكبرى للنسائي - كتاب الصيامذكر الاختلاف على منصور في حديث ربعي فيه - حديث : ‏2406‏.

நீங்கள் எண்ணிக்கையை முழுமையாக்கும் வரை, அல்லது பிறையைக் கவனிக்கும் வரை மாதத்தை முற்படுத்தாதீர்கள் பிறகு நீங்கள் நோன்பு வையுங்கள். இன்னும் நீங்கள் பிறையைக் கவனிக்கும் வரை அல்லது எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்தும் வரை நீங்கள் நோன்பை விடாதீர்கள். ஹஜ்ஜாஜ் பின் அர்தாஹ் அவர்கள் இந்த செய்தியை இர்ஸாலாக அறிவிக்கின்றார்கள். (அறிவித்தவர் : ரிப்யீ பின் ஹிராஷ் நூல்: நஸாயீ 2406)

மேற்கண்ட செய்தியை அறிவிக்கும் ரிப்யீ பின் ஹிராஷ் என்பவர் நபித்தோழரல்ல என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டுகிறோம். நபி (ஸல்) அவர்களைக் காண்பதற்காக பிரயாணம் செய்து வந்த ரிப்யீ பின் ஹிராஷ் அவர்கள், நபி (ஸல்) அவர்களை மதீனாவில் அடக்கம் செய்த பின்பே மதீனா வந்தடைந்தார்கள் என்றும் எனவே அவரை 'மஹ்ஸர்மி' என்றும் இப்னு ஹஜர் (ரஹ்) போன்ற ஹதீஸ் கலை அறிஞர்களும் மற்றும் வரலாற்று அறிஞர்களும் தெரிவித்துள்ளனர். மேலும் ரிப்யீ பின் ஹிராஷ் எந்த நபித்தோழரிடமிருந்து மேற்படி செய்தியை கேட்டார் என்பதற்கும் இதில் விடையில்லை. இதையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

தாபிஈயீன்களிடமிருந்தும், ஸஹாபாக்களிடமிருந்தும் ஒருவர் ஹதீஸை அறிவித்தால், அவர் இன்னாரிடமிருந்து அறிவித்தேன் என்று அன்னாரது பெயரைக் குறிப்பிட்டு தெளிவாகக் கூறினால்தான் அவர் யாரிடம் இருந்து அறிவித்தார் என்பதை உறுதிபடக் கூற முடியும். அவர் ஒரு நபரிடம் இருந்து கேட்டேன், அல்லது ஒரு ஸஹாபியிடமிருந்து கேட்டேன் என்று பொத்தாம் பொதுவாக அறிவித்தால் அவர் எந்த ஸஹாபியிடம் இருந்து கேட்டார் என்பதைத் தெளிவு படுத்தாதவரை அக்கூற்று முர்ஸலாகவே கருதப்படும். மேலும் ஒரு தாபிஈயீடமிருந்து அதே நபர் அறிவிக்கும் போதுகூட அந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையானது நபி(ஸல்) அவர்கள் வரை தொடர் முறியாமல் சென்றடைந்தால்தான் அதை ஹதீஸ் என்ற தரத்தில் சேர்க்க முடியும்.

இந்நிலையில் மேற்படி ரிப்யீ பின் ஹிராஷ் அவர்கள் தாபிஈயீகளிடமிருந்தும், ஸஹாபிகளிடமிருந்தும் பல செய்திகளை அறிவித்துள்ளார் என்பதை அறிய முடிகின்றது. எனவே அவர் யாரிடம் இருந்து மேற்படிச் செய்தியை அறிவித்தார் என்பதை பெயர்கூறி அறிவிக்காத வரை, ஹதீஸ் கலையின் விதியின் அடிப்படையில் அச்செய்தியை ஸஹீஹான தரத்தில் அமைந்த நபிமொழியாகக் கருதிடவே இயலாது என்பதே நிதர்சனமான உண்மையாகும், விதியுமாகும்.

இதுபோன்ற அறிவிப்புகளை முர்ஸல் வகை அறிவிப்பு எனப்படும். முர்ஸல் என்றால் இடையில் விடுபட்டது என்பது இதன் சொற்பொருளாகும். ரிப்யீ பின் ஹிராஷ் அறிவித்த இரண்டு கிராமவாசிகளின் பிறை செய்தியில் முர்ஸல் பற்றிய குறிப்பை முன்னரே தெரிவித்துள்ளோம். முர்ஸலான அறிவிப்புகள் மார்க்க அடிப்படை ஆதாரமாகாது என்பது ஹதீஸ்கலை அறிஞர்களின் ஏகோபித்த முடிவாக இருக்கும் நிலையில் மேற்படி இந்த அறிவிப்புகளுக்கு மட்டும் அது விதிவிலக்காகி விட்டதா? என்று இவற்றை ஆதாரமாகக் கருதுபவர்களிடம் நாம் கேட்க விரும்புகிறோம். தங்களது பிறை நிலைப்பாட்டை நிலை நிறுத்துவதற்காக முர்ஸலான, ழயீபான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளைக்கூட ஸஹீஹான ஹதீஸ் என்று பிரச்சாரம் செய்பவர்களிடம் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். இதுவே மார்க்கத்தில் வளைத்தல், திரித்தல், திணித்தல், நுழைத்தல் என்பதாகும்.

மேலும் மேற்கண்ட அறிவிப்பின் இறுதியில் இடம் பெறும் குறிப்பில், ஹஜ்ஜாஜ் பின் அர்தாஹ் அவர்கள் இதை இர்ஸால் செய்து அறிவித்துள்ளதாக இமாம் நஸாயீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். இந்த அறிவிப்பாளர் தொடரில் வரும் ஹஜ்ஜாஜ் பின் அர்தாஹ் என்பவர் பலஹீனமானவர் ஆவார். இவரை இருட்டடிப்பு செய்பவர், ஹதீஸில் பொய்யுரைப்பவர், அவரின் ஹதீஸில் அதிகமான முரண்பாடுகள் உள்ளன என்றும் அவரை பலமில்லாதவர், இருட்டடிப்பு செய்பவர்களில் ஒருவராக இருந்தார், அதிகத் தவறு செய்யக் கூடியவர் என்றெல்லாம் மேற்படி ஹஜ்ஜாஜ் அவர்களை ஹதீஸ் கலை வல்லுனர்கள் விமர்சித்துள்ளதை பிறை பார்த்தலும் இரண்டு சாட்சிகளும் என்ற தலைப்பில் நாம் ஏற்கனவே படித்தோம்.

இன்னும் இப்னு ஹிப்பான், அபூதாவூத், நஸாயீ, தாரகுத்னீ, அல் பஹ்ரு அஸ் ஸுஹார் எனும் முஸ்னத் பஸ்ஸார், அல் இர்ஷாத் ஃபீ மஃரிபஃத்தி உலமாவுல் ஹதீஸ், முஜமஅல் அவுஸத், முஸ்னத் அஹ்மத், சுனன் குப்ரா மற்றும் மஃரிபதுல் ஸூனன் வல் அஸார் போன்ற நூல்களில் வரும் அறிவிப்பில் ரிப்யீ பின் ஹிராஷ் அறிவிக்கும் இந்த முர்ஸலான செய்தியை ஜரீர் இப்னு அப்துல் ஹமீத் அழ்ழாபி என்பவர் அறிவிக்கும் போது மட்டும் ரிப்யீ பின் ஹிராஷ் என்பவர் ஹுதைபா (ரழி) அவர்களிடம் கேட்டதாக அறிவித்துள்ளார்.

ரிப்யீ பின் ஹிராஷின் மாணவரான மன்ஸூர் என்பவர் இந்த செய்தியைத் தனிநபராகவே தனித்து அறிவிக்கின்றார். மேற்படி மன்ஸூருக்கு பல மாணவர்கள் இருந்துள்ளனர். அம்மாணவர்களில் ஜரீர் இப்னு அப்துல் ஹமீத் அழ்ழாபி என்பவர் மட்டும் இச்செய்தியை அறிவிக்கும் போது மேற்படி ரிப்யீ பின் ஹிராஷ் அவர்கள் ஹுதைபா (ரழி) அவர்களிடம் கேட்டதாகவும், ஹதீஸ் கலை அடிப்படையில் அது 'ஷாத்' ஆகவும் அறிவிக்கின்றார். ஆனால் அதே மன்ஸூரின் மற்ற மாணவர்கள் அனைவரும் ரிப்யீ பின் ஹிராஷ் முர்ஸலாக அறிவிப்பதாகவே அறிவித்துள்ளனர். இப்படி ஒரே ஆசிரியரின் கீழ் பாடம் பயின்ற பல மாணவர்கள் ஒருவிதமாக அறிவிக்க, அதில் ஒரேயொரு மாணவர் மட்டும் அதற்கு மாற்றமாக அறிவித்து முரண்படும் அறிவிப்புகள் ஹதீஸ்கலையில் 'ஷாத்' எனக் கூறப்படும். 'ஷாத்' ஆன செய்திகள் ழயீபான வகையைச் சார்ந்த நிராகரிக்கப்படும் செய்தியாகும்.

இன்னும் இதில் வேடிக்கை என்னவென்றால், அதே மன்ஸூரின் மாணவர்கள் இடம்பெறும் பட்டியலில் ஹஜ்ஜாஜ் என்பவரும் ஒன்று. அவரோ ரிப்யீ பின் ஹிராஷ் அவர்கள் நேரடியாக இந்த செய்தியை நபி(ஸல்) அவர்களிடம் பெற்றதாகக் கூறுகிறார். ரிப்யீ பின் ஹிராஷ் அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் சந்தித்ததுமில்லை, கண்டதுமில்லை என்ற நிலையில் ரிப்யீ பின் ஹிராஷ் அவர்கள் நேரடியாக இந்தச் செய்தியை நபி(ஸல்) அவர்களிடமிருந்து பெற்று அறிவிப்பது எவ்வாறு சாத்தியமாகும்?. நபி(ஸல்) அவர்ளை ரிப்யீ பின் ஹிராஷ் காண செல்லும் போது நபி(ஸல்) அவர்கள் மரணித்திருந்தார்கள் என்ற செய்தியை நாம் முன்னரே குறிப்பிட்டுள்ளோம். எனவே இந்தச் செய்தியை எந்தக் கோணத்தில் ஆய்வு செய்தாலும் இச்செய்தி முர்ஸல் என்ற நிலையையும் தாண்டி, பல குழப்பங்களும், பலஹீனங்களும் இணைந்துள்ளதை அறியலாம்.

حدثنا الحسن بن علي ، حدثنا حسين ، عن زائدة ، عن سماك ، عن عكرمة ، عن ابن عباس قال : قال رسول الله صلى الله عليه وسلم : ' لا تقدموا الشهر بصيام يوم ، ولا يومين إلا أن يكون شيء يصومه أحدكم ، ولا تصوموا حتى تروه ، ثم صوموا حتى تروه ، فإن حال دونه غمامة ، فأتموا العدة ثلاثين ، ثم أفطروا والشهر تسع وعشرون ' ، قال أبو داود : رواه حاتم بن أبي صغيرة ، وشعبة ، والحسن بن صالح ، عن سماك بمعناه لم يقولوا : ' ثم أفطروا ' ، قال أبو داود : ' وهو حاتم بن مسلم ابن أبي صغيرة ، وأبو صغيرة زوج أمه ' ழூ. سنن أبي داود - كتاب الصوم باب من قال : فإن غم عليكم فصوموا ثلاثين - حديث : ‏1995‏

மாதத்தை உங்களில் யாரும் ஒரு நாளின் நோன்பைக் கொண்டோ, இரு நாளின் நோன்பைக் கொண்டோ முந்த வேண்டாம். வழக்கமாக நோன்பு வைக்கும் மனிதரைத் தவிர. இன்னும் அதை கவனிக்கும் வரை நீங்கள் நோன்பு வைக்காதீர்கள். பிறகு அதை கவனிக்கும் வரை நோன்பை வையுங்கள். எனவே உங்களுக்கு மத்தியில் மேகம் திரையிட்டால் மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்யுங்கள். பிறகு நோன்பை விடுங்கள். மேலும் மாதம் என்பது 29 நாட்களைக் கொண்டதாகவும் இருக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இமாம் அபூதாவூத் அவர்கள் கூறுகின்றார்கள் அதை ஹாதிம் பின் அபூ ஸஹீரா அவர்கள் ஷுஃபா அவர்களிடம் இருந்தும் ஷுஃபா ஹஸனிடமிருந்தும் ஹஸன் ஸிமாக்கிடமிருந்தும் இதே அர்த்தமுள்ள அறிவிப்பை அறிவித்துள்ளார்கள். ஆனால் அதில் பிறகு நீங்கள் நோன்பு வையுங்கள் (சும்ம அஃப்திரு) எனும் வார்த்தையை அவர்கள் கூறவில்லை. அறிவித்தவர் : இப்னு அப்பாஸ் (ரழி), நூல் : அபூதாவூத் 1995

صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ حَالَ بَيْنَكُمْ وَبَيْنَهُ سَحَابٌ فَأَكْمِلُوا الْعِدَّةَ وَلاَ تَسْتَقْبِلُوا الشَّهْرَ اسْتِقْبَالاً ‏'‏.‏ السنن الكبرى للنسائي - حديث : ‏2408‏

صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ حَالَ بَيْنَكُمْ وَبَيْنَهُ سَحَابَةٌ أَوْ ظُلْمَةٌ فَأَكْمِلُوا الْعِدَّةَ عِدَّةَ شَعْبَانَ وَلاَ تَسْتَقْبِلُوا الشَّهْرَ اسْتِقْبَالاً وَلاَ تَصِلُوا رَمَضَانَ بِيَوْمٍ مِنْ شَعْبَانَ ‏'‏‏.‏ السنن الكبرى للنسائي - حديث : ‏2468‏.

لا تستقبلوا الشهر استقبالا ، صوموا لرؤيته وأفطروا لرؤيته ، فإن حال بينك وبين منظره سحاب أو قترة فأكملوا العدة ثلاثين ' ழூ صحيح ابن خزيمة -حديث : ‏1795‏

لا تستقبلوا الشهر استقبالا ، صوموا لرؤيته ، وأفطروا لرؤيته ، فإن حال بينكم وبينه غبرة سحاب ، أو قترة فأكملوا العدة ثلاثين ' ழூصحيح ابن حبان -حديث : ‏3649‏2

இந்த அனைத்து அறிவிப்புகளிலும் ஸிமாக் பின் ஹர்ப் என்பவர் இடம் பெற்றுள்ளார். அவரைப் பற்றி ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறும்போது 'ழயீஃபுல் ஹதீஸ்''முள்தரபுல் ஹதீஸ்''மனன ஆற்றலில் மோசமானவர்' என்று விமர்சிக்கின்றனர். மேலும் குறிப்பாக இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் அவரைப் பற்றி கூறும்போது இக்ரிமா இடமிருந்து இவர் கூறும் ஹதீஸ்களில் அதிக 'முள்தரபுகள்' (அதாவது மாற்றியும், திரித்தும் கூறியவை) இடம் பெற்றிருக்கும். மேலும், இவரின் மனன ஆற்றல் கடைசி காலத்தில் மோசமாகி விட்டது. ஆகையினால் இக்ரிமாவிடமிருந்து இவர் அறிவிக்கும் ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப் படாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்கள்.

எனவே நாம் ஆதாரப் பூர்வமான செய்தியாகப் புகாரியில் இருந்து இந்த தலைப்பில் பதிந்த முதல் ஹதீஸைத் தவிர்த்து மற்ற அனைத்தும் பலஹீனமானவைகளே என்பது இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்கள் கூறுவதைப் போல மேகம் என்ற பதம் இடம்பெறும் அறிவிப்பு ஆதாரப்பூர்வமான ஹதீஸாகவும் இல்லை. இவர்கள் கூறிவருவது போல் அது போன்ற செய்தி புகாரி, முஸ்லிம் கிதாபுகளிலும் இல்லை.

ஸஹீஹான ஒரு ஹதீஸின் வாசகத்தை எடுத்துக் கொண்டு அதை பலஹீனமான அறிவிப்போடு கலந்து, அதன் வார்த்தைகளை வெட்டி ஒட்டி இதோ பாருங்கள் நபி (ஸல்) இப்படி கூறியுள்ளார்கள் என்று கூறி இதுவும் ஆதாரம் என்று யூத முரப்பிகளைப் போல இன்று சிலர் செய்யத் துணிந்துள்ளதை எண்ணி உண்மையிலேயே அதிர்ச்சி அடைகிறோம்.

அல்லாஹ்வின் பெரும் கிருபையால் நூற்றுக்கணக்கான ஹதீஸ் புத்தகங்களை இருந்த இடத்தில் இருந்து கொண்டே புரட்டிப் படிக்கும் கணிப்பொறி யுகத்தில் கூட இத்தகைய தில்லுமுல்லு ஆசாமிகள் இருக்கின்றனர் என்றால், பண்டையக் காலங்களில் இவர்களின் வகையறாக்கள் ஹதீஸ்களில் என்னென்ன விளையாட்டுகளைப் புரிந்திருப்பார்கள்? என்பதை எண்ணி கவலையுறுகிறோம்.

மக்களே உங்களை ஏமாற்றுவதற்காக இந்த பலஹீனமான செய்தியை பதிந்து புகாரி கிரந்தத்திலும், முஸ்லிம் கிரந்தத்திலும் உள்ளன என ஒரு எண்ணையும் குறிப்பிட்டு ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வருபவர்களை நீங்களே இனங்கண்டு கொள்ளுங்கள். அல்லாஹ்வின் பேருதவியால் சத்தியத்தை அசத்தியத்திலிருந்து பிரித்தறிவிக்கும் முகமாக பிறைகள் குறித்த இந்த விரிவான ஆய்வுப் புத்தகத்தை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி மேற்படி தில்லுமுல்லு ஆசாமிகளின் தீய செயல்களை வெளிக்கொண்டு வர வேண்டுகிறோம்.

பிறையைப் புறக்கண்ணால் பார்த்துத்தான் அமல்செய்ய வேண்டும் என்பதற்கு ஆதாரமாகக் கருதப்படும் அறிவிப்புகள் யாவும் மிகவும் பலவீனமான செய்திகளாக இருப்பதையும், இவர்களின் பிறை நிலைப்பாடுகள் அந்த அறிவிப்புகளின் மூலம் நிரூபணமாகவில்லை என்பதையும் தெளிவாக நாம் காண்கிறோம்.

ஒரு ரிவாயத்து பலஹீனம் என்று தெரிந்து விட்டால் அதை மக்களுக்குப் பகிரங்கமாக அறிவிப்பதுதானே தூய்மையான எண்ணம் கொண்ட எந்த ஒரு அறிஞரின் கடமையாக இருக்க வேண்டும். மாற்றுக் கருத்துடையோர் பலஹீனமான ரிவாயத்துகளையே மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதை பார்க்கையில், இவர்களின் நிலைப்பாட்டிற்கு ஒரு ஸஹீஹான ரிவாயத்துகூட தேறவில்லையா? மேலும், இவர்களின் இன்றைய பிறை பார்க்கும் நிலைப்பாட்டிற்கு நேரடியாக ஒரு ஆதாரம் கூட இல்லையா? இட்டுக்கட்டப்பட்ட, பலஹீனமான செய்திகளை வைத்துக் கொண்டுதான் இவ்வளவு காலம் மக்களை வழிநடத்தினார்களா? என்றே கேட்கத் தோன்றுகிறது.

Read 2479 times