செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

பிறையைப் பார்த்தே நோன்பு வையுங்கள், விடுங்கள் என்பதின் விளக்கம் என்ன?

Rate this item
(1 Vote)

பிறையும் புறக்கண்ணும்!!!

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?

பகுதி : 22.பிறையைப் பார்த்தே நோன்பு வையுங்கள், விடுங்கள் என்பதின் விளக்கம் என்ன? 

பிறையை புறக்கண்ணால் பார்ப்பதற்கு மாற்றுக் கருத்தினர் கூறும் பிரதான ஆதாரமாக இதைக் கொள்ளலாம்.இன்று மஃரிபு நேரத்தில் மேற்குத் திசையில் மறையும் பிறையைப் புறக்கண்ணால் பார்த்த பின்னரே புதிய மாதத்தைத் துவங்க வேண்டும் என்று முஸ்லிம்களில் பலர் நம்பியுள்ளனர். பிறையைப் புறக்கண்ணால் பார்த்த பின்புதான் ரமழான் நோன்பைத் துவங்க வேண்டும் அல்லது பெருநாள் தினம் (ஷவ்வால்-1) என்று தீர்மானிக்க வேண்டும் என்கின்றனர். பிறந்த பிறையைப் புறக்கண்ணால்தான் பார்க்க வேண்டும் என்று கூறுபவர்கள் குறிப்பாக கீழ்க்காணும் நபிமொழிகளைப் பிரதான ஆதாரங்களாகக் கருதி மக்களிடையே பிரச்சாரமும் செய்து வருகின்றனர்.

1.       حدثنا أبو داود قال حدثنا بن سعد عن الزهرى عن سالم عن بن عمر قال قال رسول الله صلى الله عليه و سلم : صوموا لرؤيته وأفطروا لرؤيته فإن غم عليكم فأقدروا له مسند الطيالسي - (1 / 249 ( 1810 –

2.       حدثنا عبد الله بن مسلمة عن مالك عن نافع عن عبد الله بن عمر رضي الله عنهما  : أن رسول الله صلى الله عليه و سلم ذكر رمضان فقال ( لا تصوموا حتى تروا الهلال ولا تفطروا حتى تروه فإن غم عليكم فاقدروا له ) صحيح البخاري - (2 / 674) 1807.

 

صوموا لرؤيته وأفطروا لرؤيته فإن غم عليكم فاقدروا له
ஸூமூ லி ருஃயத்திஹி வ அஃப்திரு லி ருஃயத்திஹி –

அதை (பிறையைப்) பார்த்து நோன்பு வையுங்கள் அதை(மறு பிறையை)ப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டமாக இருந்தால் அதைக் கணக்கிட்டு கொள்ளுங்கள்.

لاَ تَصُومُوا حَتَّى تَرَوُا الْهِلاَلَ ، وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ
மேலும் லா தஸூமூ ஹத்தா தரவுல் ஹிலால் வலா துப்ஃதிரு ஹத்தா தரவ்ஹூ

பிறையைப் பார்க்காத வரை நோன்பை நோற்காதீர்கள். (மறு)பிறையை பார்க்காத வரை பெருநாள் கொண்டாடாதீர்கள்.

(மேற்கண்ட இரு நபிமொழிகளுக்கும் மாற்றுக் கருத்துடையவர்களின் தவறான மொழிபெயர்ப்பை புரிந்து கொள்வதற்காகவே அப்படியே மாற்றம் செய்யாமல் நாம் தந்துள்ளோம். அவர்கள் கூறும் மேற்கண்ட ஹதீஸ்கள் புஹாரி கிரந்தத்தில் உள்ளதாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. புஹாரி கிரந்தத்தில் அது போன்ற வாசகங்கள் கொண்ட அறிவிப்புகள் இல்லை என்பதையும் நினைவில் கொள்க)

இதில் ஸூமூ லி ருஃயத்திஹி (صُومُوا لِرُؤْيَتِهِ) என்ற கருத்தைச் சொல்லும் ஹதீஸின் சரியான முழுமையான அறிவிப்புகளை முதலாவதாக நாம் ஆய்வு செய்வோம்.

   عبد الرزاق عن عبد العزيز بن أبي رواد عن نافع عن بن عمر قال قال رسول الله صلى الله عليه و سلم     إن الله جعل الأهلة مواقيت للناس فصوموا لرؤيته وأفطروا لرؤيته فإن غم عليكم فعدوا له ثلاثين يوما. مصنف عبد الرزاق - (4 / 156)   7306 -)

عن ابن عمر ،أن رسول الله صلى الله عليه وسلم قال :  إن الله جعل الأهلة مواقيت ، فإذا رأيتموه فصوموا ، وإذا رأيتموه فأفطروا ، فإن غم عليكم فاقدروا له ، واعلموا أن الشهر لا يزيد على ثلاثين " *. (  صحيح ابن خزيمة  - كتاب الصيام   جماع أبواب الأهلة ووقت ابتداء صوم شهر رمضان -  باب ذكر البيان أن الله جل وعلا جعل الأهلة مواقيت للناس   حديث : ‏1789(

''நிச்சயமாக அல்லாஹ் பிறை(யின் படித்தரங்)களை மனித சமுதாயத்திற்கு தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு வையுங்கள். அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை நிறைவு செய்யுங்கள். எனவே அவை உங்கள் மீது மறைக்கப்படும்போது முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.'' 
அறிவித்தவர் இப்னு உமர் (ரழி). நூல்: முஸன்னஃப் அப்துர்ரஸாக் (7306)''நிச்சயமாக அல்லாஹ் பிறை(யின் படித்தரங்க)ளைத் தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவற்றை நீங்கள் கவனிப்பதைக் கொண்டு நீங்கள் நோன்பு வையுங்கள். மேலும் அவற்றை நீங்கள் கவனிப்பதைக் கொண்டு நிறைவு செய்யுங்கள். எனவே அவை உங்கள் மீது மறைக்கப்படும் போது கணக்கிட்டுக் கொள்ளுங்கள். மேலும், நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் மாதம் என்பது முப்பதை விட அதிகமாவதில்லை.'' 
அறிவித்தவர் : இப்னு உமர் (ரழி). நூல்: ஸஹீஹ் இப்னு ஹூசைமா (1789)

மேற்கண்ட அறிவிப்புகள் மட்டுமே முழுமையான ஹதீஸ்களாக உள்ளன. ஸூமூ லி ருஃயத்திஹி வ அஃப்திரு லி ருஃயத்திஹி என்று துவங்கும் ரிவாயத்தில் ஸூமூ லி ருஃயத்திஹி என்ற சொற்றொடருக்கு அதைப் பார்த்து நோன்பு வையுங்கள் என்று பொருளாகும். அதைப் பார்த்து நோன்பு வையுங்கள் என்றால் எதைப் பார்த்து? என்ற கேள்வி எழுகிறது. அதனால்தான் ஸூமூ லி ருஃயத்திஹி என்ற வாசகத்தில் உள்ள 'ஹி' என்ற பதம் எதைக் குறிக்கின்றது என்று கேட்கிறோம். நமது கேள்விக்கு மாற்றுக் கருத்துடையோர் தெளிவான பதில் அளிப்பதில்லை. மேலும் இந்த முழுமையான வாசகங்கள் அடங்கிய ஹதீஸை மக்கள் மன்றத்தில் மேற்படி அறிஞர் பெருமக்கள் விளக்கி கூறுவதும் இல்லை.

மாறாக 'ஸூமூ லி ருஃயத்திஹி வ அஃப்திரு லி ருஃயத்திஹி' என்ற ரிவாயத்துகள் பிறந்த பிறையைப் புறக்கண்களால் மட்டும் பார்த்து நோன்பு பிடியுங்கள் பிறந்த பிறையைப் புறக்கண்களால் மட்டும் பார்த்து நோன்பை விடுங்கள் என்று கூறுவதாக மாற்றுக் கருத்துடையோர் பிரச்சாரம் செய்கின்றனர். இன்னும் மாதத்தின் 29-வது நாளின் மாலையில் (30-வது நாளுக்குரிய!) மஃரிபு வேளையில், உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் ரமழானை 30 நாட்களாக பூர்த்தி செய்யுங்கள் என்று மார்க்கம் போதிப்பதாகவும் கூறுகின்றனர். மேலும்; வெறுமனே 'பிறை' பார்த்து என்று ஒருமையில் மொழிபெயர்த்து பிறந்த பிறையைப் புறக்கண்ணால்தான் பார்க்க வேண்டும் என நபி (ஸல்) அவர்களே சொல்லி விட்டார்கள் என்றும் மக்களிடத்தில் பிரச்சாரம் செய்கின்றனர். இத்தகைய கருத்துக்கள் அனைத்துமே தவறானதாகும்.

குறிப்பாக மேற்படி முஸன்னஃப் அப்துர்ரஸாக் (7306) ஹதீஸில் வரும் ஸூமூ லி ருஃயத்திஹி என்பதில்''ஹி' என்ற பதம் அஹில்லாஹ்வை (அதாவது ஒரு மாதத்தில் தோன்றும் அனைத்து நாட்களின் பிறைகளையும்) குறிப்பதைக் காணலாம். மேலும் அல்குர்ஆன் 2:189-வது வசனத்தில் இடம்பெறும் சொற்றொடர்களை தாங்கியுள்ளதாகவும், சந்திரனின் படித்தரங்களை மனித சமுதாயத்திற்கு தேதிகளாக அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான் என்று நாட்காட்டியின் அடிப்படையை வலியுறுத்துவதாகவும் மேற்படி முஸன்னஃப் அப்துர்ரஸாக் (7306) ஹதீஸ் உள்ளது.

மேற்படி ஹதீஸ்களில் இடம்பெறும் 'மறைக்கப்படும்போது கணக்கிட்டுக் கொள்ளுங்கள்' என்ற சொற்றொடருக்குப் பின்னால் பல விஞ்ஞான அறிவியல் ரீதியிலான கருத்துக்கள் புதைந்துள்ளன. அவை நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதர்தான் என்பதற்கும், அவர்கள் சுயமாக எதையும் பேசுவதில்லை என்பதற்கும் தகுந்த எடுத்துக் காட்டுகளாகும். இப்புத்தகத்தை முழுவதுமாக படித்த பின்னர் தாங்கள் நிதர்சனமாக இதை அறிந்து கொள்வீர்கள்.

பிறந்த பிறையை அது மறையும் மஃரிபு வேளையில் மேற்குத் திசையில் பார்த்த பிறகு அடுத்த நாள் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும். மேகமூட்டமாக ஆகிவிட்டால் மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்தி செய்ய வேண்டும். இவை மாற்றுக் கருத்துடையோரின் நம்பிக்கையும் பிறை நிலைப்பாடும் ஆகும்.

அதாவது ரமழான் மாதத்தைத் துவங்கவும், நோன்பை நோற்பதற்கும் பிறையை பார்த்தே ஆகவேண்டும் என்பதே மாற்றுக் கருத்துடையோரின் நிபந்தனை. இந்நிபந்தனையை நபி (ஸல்) அவர்கள் உண்மையிலேயே வலியுறுத்தியிருந்தால், அதே நபி (ஸல்) அவர்களே மேகமூட்டமாக ஆகிவிட்டால் பிறையைப் பார்க்காமலேயே 30 நாட்களாக மாதத்தைப் பூர்த்தி செய்யுங்கள் என்று கூறியிருப்பார்களா? சற்று சிந்தியுங்கள். மேகமூட்டம் சம்பந்தமான எந்த சொல்லும் மேற்படி ரிவாயத்துகளில் இடம்பெறவில்லை என்பதே உண்மை.

இன்னும் பிறையை பார்த்தே ஆகவேண்டும் என்பதுதான் நிபந்தனையாக இருக்குமென்றால், மேற்படி முப்பதாவது நாளில் (மேகமூட்டமாக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும்) பிறையை பார்க்காமலேயே புதிய மாதத்தைத் துவங்கிக் கொள்ளுங்கள் என்று ஒரே நிகழ்வுக்கு இரண்டு முரண்பட்ட கருத்தைக் கூறியிருப்பார்களா? என்பதைச் சற்று சிந்திக்க வேண்டுகிறோம்.

மார்க்க அறிஞர்கள் எனப்படுவோர் பிறைகள் குறித்த ஹதீஸ்களில் இடம்பெறும் 'ருஃயத்' என்ற சொல்லுக்கு 'பிறையை புறக்கண்களால் பார்த்து' என்று மட்டும் காலம் காலமாக மொழி பெயர்த்தனர்.

• பிறையை புறக்கண்ணால் பார்க்கத்தான் வேண்டும் என்றும் 

• புறக்கண்ணால்தான் பிறையைப் பார்க்க வேண்டும் என்றும் 

• பிறை பார்க்கப்பட்ட பின்னர்தான் புதிய மாதத்தை துவங்க வேண்டும் என்றும்

மக்களும் புரிந்து கொண்டு நடைமுறைப் படுத்தியதின் விளைவாக நம் சமுதாயத்தில் இக்கருத்து புறையோடிப் போய்விட்டது. இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் முக்கியத்துவம், மகத்துவமும் முஸ்லிம்களுக்கு புரியாமலேயே போய் நாட்காட்டியின் அடிப்படைகளும் தகர்க்கப்பட்டு விட்டன.

'ருஃயத்' என்ற வேர்ச்சொல்லுக்கு சரியான மொழி பெயர்ப்பு 'காட்சி' என்பதாகும். 'அதன் அடிப்படையில் அப்பிறைகளின் காட்சியைக் கவனித்து, அவற்றின் அடிப்படையில் நோன்பை துவங்கவும் முடிக்கவும் வேண்டும்' என்ற பொருளை நாம் இங்கு கையாண்டிருக்கின்றோம். மேலும் 'காட்சி' என்பது புறக்கண்ணால் பார்த்துவிட்டு சிந்தனை செய்யாமல் வெறுமனே பார்த்துவிட்டுச் செல்வது என்ற அர்த்தத்தில் 'ருஃயத்' என்ற சொல்லை நபி(ஸல்) அவர்கள் பயன்படுத்தவில்லை. அதன் உண்மை விளக்கத்தையும் இப்புத்தகத்தின் மூலம் நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இன்னும் 'ஹிலால்' என்ற அரபுச் சொல்லுக்கு அரபுமொழி ஆய்வாளர்களின் விளக்கத்தையும் சுருக்கமாக அறிந்து கொள்வோம். இஸ்லாமிய மார்க்கத்திற்கு மூல ஆதாரம் குர்ஆனும், ஸஹீஹான சுன்னாவும் மட்டுமே. இதுவல்லாமல் அரபு அகராதி விளக்கங்களோ, அரபு இலக்கண இலக்கியங்களோ மார்க்கத்தின் அடிப்படை ஆதாரமாகாது. இருப்பினும் நமது நிலைப்பாட்டிற்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து நாம் நேரடியான ஆதாரங்களை எடுத்து வைக்கும்போது சிலர் அகராதி நூட்களில் அப்படி உள்ளது, அரபு இலக்கண இலக்கியத்தில் இப்படி எழுதப்பட்டுள்ளது என்கின்றனர். எனவே 'ஹிலால்'என்ற அரபுச் சொல்லை புரிந்து கொள்வதற்காக, அத்தகைய அரபு மொழி ஆய்வு நூல்களில் இருந்தே சிலவற்றை உங்கள் குறிப்பிற்காகக் கீழே வழங்குகிறோம்.

அஸ்ஸிஹாஹ் ஃபில் லுஅ:
 

الصحاح في اللغة - (2 / 254-255) هلل : الهِلالُ: أوَّل ليلةٍ والثانية والثالثة، ثم هو قمرٌ. والهِلالُ: ما يُضَمُّ بين الحِنْوَيْنِ من حديدٍ أو خشب؛ والجمع الأهِلَّةُ. والهِلالُ: الماءُ القليل في أسفل الرَكِيِّ والهلال: السنان الذي له شعبتان يصاد به الوحش. والهِلالُ: طرف الرحى إذا انكسر منه.


'ஹிலால்' என்பது முதல் நாளுக்கும், இரண்டாம் நாளுக்கும், இன்னும் மூன்றாம் நாளுக்கும் பிறகு அதை சந்திரன் என்று கூறுவார்கள். மேலும் 'ஹிலால்' என்பது மரக்குச்சி அல்லது இரும்பு கம்பியை வளைக்கும் போது இடையில் ஏற்படும் கொம்பு வடிவத்திற்கும் கூறுவர். அதன் பன்மைச் சொல் அல்'அஹில்லாஹ்' ஆகும். இன்னும் ஆட்டு உரலில் மாவு அரைத்த பின் கடைசியாக இருக்கும் சிறது தண்ணீருக்கும் 'ஹிலால்' என்று கூறுவர். மிருங்கங்களை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் இருசூலம் போன்ற இரண்டு பக்கம் கூர்மையான ஆயுதத்திற்கும் 'ஹிலால்' என்று கூறுவர். மாவரைக்கும் ஆட்டு உரல் உடைந்த பின் அதன் ஓரத்திற்கும் 'ஹிலால்' என்பர். நூல்: ஸிஹ்ஹா ஃபில் லுஆ 

(குறிப்பு : மேற்கண்ட அகராதி குறிப்பில் இடம்பெறும் 'ஸின்னான்' என்ற பதம் நேரடி மொழி பெயர்ப்பின்படி இரண்டு பற்கள் என்று பொருள்படும். السنان الذي له شعبتان يصاد به الوحش என்ற முழுமையான வாக்கியத்தில் 'ஸின்னான்' என்ற பதம் கூர்மையான ஆயுதத்திற்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமான மாற்றுக் கருத்துடையோரின் வரம்பை மீறிய விமர்சனங்கள் பற்றியும் 'ஸின்னான்' என்ற பதத்திற்கு இரண்டு பற்கள் என்ற பொருள் பற்றியும் கூடுதல் விளக்கங்களை விமர்சனம் பகுதியில் காண்க.)

காமூஸுல் முஹீத்:
 

القاموس المحيط - (1 / 1384) الهِلالُ : غُرَّةُ القَمَرِ أو لِلَيْلَتَيْنِ أو إلى ثلاثٍ أو إلى سبعٍ ولِلَيْلَتَيْنِ من آخِرِ الشهرِ سِتٍّ وعشرينَ وسبعٍ وعشرينَ وفي غيرِ ذلك قَمَرٌ.

சந்திரனில் ஏற்படும் ஒளிக்கும், இரண்டு மூன்று அல்லது ஏழு நாட்களுடைய சந்திரனிற்கும் 'ஹிலால்' என்பர். மேலும், மாதத்தின் இறுதியில் வரும் இரண்டு நாட்களான 26 இன்னும் 27 நாட்களுக்கும் கூறப்படும். அதுவல்லாவற்றிக்கு சந்திரன் என்பர். நூல்: காமூஸுல் முஹீத்.

தாஜுல் உரூஸ்:

تاج العروس من جواهر القاموس - (31 / 144)ه ل ل   | ( * ! الهِلالُ ) ، بِالكَسْر : ( غُرَّةُ القَمَرِ ) ، | وَهِي أَوَّل لَيْلَة ، ( أَو ) يُسَمَّى * ! هِلَالًا | ( لِلَيْلَتَيْنِ ) مِنَ الشَّهْرِ ، ثُمَّ لَا يُسَمَّى بِهِ | إِلى أَنْ يَعُودَ في الشَّهْرِ الثَّاني ، ( أَوْ | إِلى ثَلَاثِ ) لَيَالٍ ، ثُمَّ يُسَمَّى قَمَرًا ، | ( أو إِلى سَبْع ) لَيالٍ ، وَقَريبٌ مِنْهُ قَوْلُ | مَنْ قَالَ : يُسَمَّى هِلَالًا إِلى أَنْ يَبْهَرَ | ضَوْؤُهُ سَوادَ اللَّيْلِ ، وَهذا لَا يَكُونُ | إِلَّا في السَّابِعَة . قَالَ أَبُو إِسحاق : | وَالَّذي عِنْدِي وَمَا عَلَيْهِ الأَكْثَر أَنْ | يُسَمَّى هِلَالًا ابْن لَيْلَتَيْن فَإِنَّهُ في | الثّالِثَة يَتَبَيَّن ضَوْؤُهُ . ( و ) في التَّهْذيب | عَن أَبي الهَيْثَم : يُسَمَّى القَمَرُ لِلَيْلَتَيْن | مِنْ أَوَّلِ الشَّهْرِ هِلَالًا ، و ( لِلَيْلَتَيْن مِنْ | آخِرِ الشَّهْرِ سِتٍّ وَعِشْرِينَ وَسَبْعٍ | وَعِشْرِين ) هِلالًا ، ( وفي غَيْرِ ذلِكَ | قَمَرٌ ) .

அல்ஹிலால், ''ஹ' என்ற எழுத்திற்கு கஸர் போட்டு சொல்லப்படும். ஹீர்ரத்துன் கமர் என்று முதல் நாளுக்குக் கூறப்படும். மாதத்தின் இரண்டு நாட்களுக்கு 'ஹிலால்' என்று கூறப்படும். அதன்பின் மறுமாதம் வரும் வரை அதை 'ஹிலால்' என கூற மாட்டார்கள். அல்லது மூன்று நாட்களுக்குக் கூறப்படும். பிறகு சந்திரன் எனக் கூறப்படும். அல்லது ஏழு நாட்களுக்குக் கூறப்படும். இந்த கூற்றுகளுக்கு மிகவும் நெருக்கமானது இரவு முழுமையாக வந்தபின் தெரியும் ஹிலாலின் வெளிச்சத்திற்கு 'ஹிலால்' என கூறுவர். மேலும் இது ஏழாவது நாளைத் தவிர நடைபெறாது. அபூஇஸ்ஹாக் என்பவர் கூறுகின்றார் என்னிடம் உள்ளதும், மேலும் அதிகமானோரின் கருத்தும் இரண்டு நாளுக்குரியதை 'ஹிலால்' என கூறுவோம். ஏனெனில் மூன்றாம் நாளில் அது தன் ஒளியை வெளிப்படுத்திவிடும். ஹூசைம் என்பவர் தஹ்தீபில் கூறுகின்றார் மாதத்தின் முதல் இரண்டு நாளுக்குரிய சந்திரனை 'ஹிலால்' எனக் கூறுவோம். மேலும் மாதத்தின் இறுதியில் 26, 27 க்கும் 'ஹிலால்' என கூறப்படும். இது அல்லாததை கமர் என கூறுவோம். நூல்: தாஜூல் உரூஸ்.

 
லிஸானுல் அரப்:

لسان العرب - (11 / 701) ………والجمع أَهِلَّة على القياس وأَهاليلُ نادرة ……………….. والهِلالُ غرة القمر حين يُهِلُّه الناسُ في غرة الشهر وقيل يسمى هِلالاً لليلتين من الشهر ثم لا يسمَّى به إِلى أَن يعود في الشهر الثاني وقيل يسمى به ثلاث ليال ثم يسمى قمراً وقيل يسماه حتى يُحَجِّر وقيل يسمى هِلالاً إِلى أَن يَبْهَرَ ضوءُه سواد الليل وهذا لا يكون إِلا في الليلة السابعة قال أَبو إِسحق والذي عندي وما عليه الأَكثر أَن يسمَّى هِلالاً ابنَ ليلتين فإِنه في الثالثة يتبين ضوءُه والجمع أَهِلَّة .


ஹிலாலின் பன்மை 'அஹில்லாஹ்' இது கியாஸின் அடிப்படையாகும். சில சமயங்களில் அஹாலீலு என்ற சொல் பயன்படுத்தப்படும். 'ஹிலால்' என்பது சந்திரனில் ஏற்படும் சிறு வெளிச்சத்திற்கு சொல்லப்படும். மக்கள் அதற்காகக் கூச்சலிடுவார்கள். மாதத்தின் இரண்டு நாட்களுக்கு 'ஹிலால்' என்று கூறப்படும். அதன்பின் மறுமாதம் வரும் வரை அதை 'ஹிலால்' என கூறமாட்டார்கள். அல்லது மூன்று நாளைக்கு கூறப்படும். பிறகு சந்திரன் எனக் கூறப்படும். அல்லது ஏழு நாட்களுக்குக் கூறப்படும். இந்த கூற்றுகளுக்கு மிகவும் நெருக்கமானது இரவு முழுமையாக வந்தபின் தெரியும் ஹிலாலின் வெளிச்சத்திற்கு 'ஹிலால்' என கூறுவர். மேலும் இது ஏழாவது நாளைத் தவிர நடைபெறாது. அபூஇஸ்ஹாக் என்பவர் கூறுகின்றார் என்னிடம் உள்ளதும், மேலும் அதிகமானோரின் கருத்தும் இரண்டு நாளுக்குரியதை 'ஹிலால்' என கூறுவோம். ஏனெனில் மூன்றாம் நாளில் அது தன் ஒளியை வெளிப்படுத்திவிடும். நூல்: லிஸானுல் அரப்

மேலும், நபி (ஸல்) அவர்களைப் பொருத்தவரை ஜவாமிவுல் கலாம் - அதாவது இரத்தினச் சுருக்கமான வார்த்தைகளைக் கொண்டு மிகப் பெரும் பொருளைத் தெரிவிக்கும் ஆற்றலை நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருந்தான். மேற்கண்ட முஸன்னஃப் அப்துர்ரஸாக்கின் 7306-வது ஹதீஸை இதற்கு சிறந்ததோர் உதாரணமாகக் கொள்ளலாம்.

அதாவது நபி (ஸல்) அவர்கள் அல்அஹில்லாஹ், மவாகீத், மவாகீத்து லின்னாஸ், லி ருஃயத்திஹி, ஃபஇன்கும்ம அலைக்கும், ஃபக்துரு, ஃபஉத்தூ போன்ற அத்தகைய இரத்தினச் சுருக்கமான சொற்களை பிறைகள் குறித்த ஹதீஸ்களில் கூறியுள்ளார்கள். இத்தகைய சொற்களின் உட்பொருளை ஆய்வு செய்தாலே மேற்கண்ட நபிமொழிகள் கூறும் அர்த்தங்களின் ஆழம் புரியும். எனவே அவற்றிற்கான விளக்கங்களை முதலில் பார்ப்போம்.

 

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Read 4524 times Last modified on வெள்ளிக்கிழமை, 09 ஜூன் 2017 06:52