பதில் : மேற்படி இரண்டு ஊர்களுக்குமிடையே நேர வித்தியாசம் இருக்குமே அல்லாமல் நாள் வித்தியாசம் இல்லை. ஒருநாளுக்குரிய தேதி ஊருக்கு ஊர் மாறுபடுவதில்லை என்பதை முன்னரே விளக்கி விட்டோம். இந்திய நேரம், உலக நேரம் என்பதெல்லாம் மனிதன்தான் உருவக்கியது என்கின்றனர். அப்படியானால் 'உண்மையான சூரிய நேரம்' (true solar time) என்று இவர்கள் வாதிக்கும் அந்த நேரத்தை கண்டுபிடித்தது யார்? என்பதையும் இவர்கள் சொல்ல வேண்டும். அந்த நேரத்தை மலக்குமார்களா கண்டு பிடித்தார்கள்?
தான் என்ன கேட்கிறோம் என்பதைக்கூட புரியாமல் ஏதோ கேள்விகளை அடுக்கிக் கொண்டு போய்விடுவோம் என்று எண்ணிக் கொண்டார்கள் போலும். 'இதைப் புரிந்து கொள்வதற்கு விஞ்ஞான அறிவு வேண்டும்' என்ற பீடிகை வேறு.
அப்படியானால், 'சந்திரன் மேற்கில் உதிக்கிறது. மேற்கு திசையில்தான் சந்திரனைப் பார்ப்பீர்கள். சந்திரன் (பிறை) மேற்கில் உதித்து கிழக்கில் மறைகிறது' என்று இவர்களது இயக்கத்தின் அசல் தலைவர் சொல்லியுள்ளது விஞ்ஞானமா அல்லது மெஞ்ஞானமா? என்பதையும் இவர்களே அறிவிக்கட்டும்.
இன்னும், 'தலைப்பிறை சவுதியில் உதிக்கிறது என்றால் சவுதியிலிருந்து பிறை ரிவேஸ்ல வராது. காரணம் அது மேற்கு உதிப்பதால் நம் தலைக்கு நேராக ஒரு ரவுண்ட் அடித்து வருவதற்கு 21:30 மணிநேரம் ஆகும்' என்று இவர்களது தலைவர் சொன்னது எந்த ''விக்காத பீடியா'' இணையதளத்தில் உள்ளது?
மேலும், 'பிறை பிறந்தால்தான் இரவு ஆரம்பிக்கிறது. இரவில்தான் நாள் ஆரம்பிக்கிறது' என்று அவர் சொன்னதும் விஞ்ஞான அறிவின் உச்சகட்ட முதிற்சியின் வெளிப்பாடுதானோ?
இவர்களின் விஞ்ஞான அறிவின் நிலைமை இந்த அளவு இருக்கும் போது Apparent solar time, Mean solar time, Standard time மற்றும் Universal Time என்று கேள்வி எழுப்புவது நகைப்புக்குரியது.