Print this page
ஞாயிற்றுக்கிழமை, 02 ஜூன் 2019 00:00

ஹிஜ்ரி 1440 - 'ஈதுல்ஃபித்ர்' பெருநாள் அறிவிப்பு

Rate this item
(0 votes)

பெருநாள் தொழுகை(இன்ஷாஅல்லாஹ்)

தேதி: 1-ஷவ்வால்-1440, செவ்வாய்க்கிழமை(04-06-2019)

——————————————————————————-

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...

 

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

 

இவ்வருடத்தின் புனிதரமழான் மாதம் கடந்த 

05-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று 

சரியாகத்தொடங்கியது.

 

புறக்கண்களால் பார்க்க இயலும் ரமழான் மாத இறுதிப்பிறை 'உர்ஜூஃனில்கதீம்02-06-2019 அன்று 

ஞாயிற்றுக்கிழமை ஆகும்

 

03-06-2019 திங்கள்கிழமை அன்று பிறை புறக்கண்களுக்கு பொதுவாக மறைக்கப்படும்(அமாவாசைபுவிமைய சங்கமதினம்

 

அன்றுசூரியன்சந்திரன் மற்றும் பூமி ஆகிய இம்மூன்றும் ஒரு கோட்டில் சங்கமித்து ரமழான் மாதத்தின் இறுதிநாளை 

உறுதிப்படுத்தும்

 

இவ்வருடத்தின் ரமழான் மாதம்(ஜூன்03) திங்கள்கிழமை 

30 தினங்களோடு நிறைவடைகிறது

எனவே ஜூன் 4-ஆம்தேதி (04-06-2019) 

செவ்வாய்க்கிழமை அன்றுதான் நோன்புப்பெருநாள் தினம்

 

பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பதற்கு நமது மார்க்கம் ஹராம் என தடை செய்துள்ளதுஎனவே பெருநாள் தினமான 

செவ்வாய்க்கிழமை(04-06-2019)அன்று இறைவனைப்புகழ்ந்து ஏழைகளுக்கு உணவளித்து ஈகைத்திருநாள் என்னும் 

நோன்புப்பெருநாளை அனைவரும் சேர்ந்து சரியான தினத்தில் சிறப்பாகவும்ஒற்றுமையுடனும் கொண்டாடிட அழைப்புவிடுக்கிறோம்இவ்வருட ரமழானின் 30 நோன்புகளை முழுமையாகநோற்காதவர்கள்விடுபட்ட நோன்பை பெருநாளுக்குப்பின்னர் களாசெய்து கொள்ளவேண்டுகிறோம்

 

அன்பின் பெருமக்களே..! 

 

பிறைகளைக்கணக்கிட்டு அதன்அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத் தொடங்கிடவேண்டும் என்பதற்கு 

குர்ஆனிலிருந்தும்சுன்னாவிலிருந்தும் பல்வேறு ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம்நபி(ஸல்அவர்களும்நபித்தோழர்களும் 

ஒருமாதம் முடிவதற்கு முன்னரே குறிப்பிட்ட அந்த மாதம் எத்தனை நாட்களில் முடிவடையும்என்பதை முன்கூட்டியே அறிந்திருந்ததை பலஹதீஸ்களைவாயிலாக விளக்கியுள்ளோம்.

 

இன்னும் ஸஹாபாக்கள் ஹிஜ்ரி நாட்காட்டியின் வருடக்கணக்கை குறிப்பிடுவதற்காகவேண்டி 'இஜ்மாவுஸ்ஸஹாபாசெய்து திட்டமாக கணக்கிட்டார்கள் என்பதையும் வரலாற்று ஆதாரங்கள் மூலம் முன்னரே சமர்ப்பித்துள்ளோம்மேலும் மூத்ததாபியீன்களும்முற்கால குர்ஆன் விரிவுரையாளர்களும் பிறைகணக்கீட்டை சரிகண்டதையும்இன்னும் பிறைகளைக்கணக்கிடத்தான் வேண்டும் என்று அழுத்தமாக 

வலியுறுத்தியுள்ள மத்ஹபு இமாம்களின் கூற்றுக்களையும் நாம் பகிரங்கமாக அறியத்தந்துள்ளோம்

 

சூரியனும்சந்திரனும் துல்லியமான கணக்கின்படி அமைந்துள்ளன(55:5, 6:96). 

சந்திரனின் மன்ஜில்களை வைத்து ஆண்டுகளைக்கணக்கிடலாம்(10:5). 

இதன் அடிப்படையில் ஷவ்வால் முதல் நாள் செவ்வாய்க்கிழமை(04-06-2019) என்பதுதான் சரியானதாகும்

வல்ல அல்லாஹ் விதியாக்கிய சந்திரனின் மன்ஜில்கள் இக்குறிப்பிட்ட தேதியைத்தான் நமக்கு அறிவிக்கின்றன (2:189).

"ஒரு முஸ்லிம் நேர்வழியில்தான் நடக்கவேண்டும்சத்தியத்திற்கே சான்று பகரவேண்டும்

அல்லாஹ்வின் பிறை அத்தாட்சிகளை உலகிற்கு உணர்த்திடஹிஜ்ரி நாட்காட்டியை மீண்டும் இவ்வுலகில் நிலை பெறச்செய்திட எங்களோடு புறப்பட்டுவாருங்கள்என அழைப்பு விடுக்கிறோம்அனைவருக்கும் இனிய ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்

செவ்வாய்க்கிழமை(04-06-2019) அன்று சென்னைதிருச்சிகோவைமதுரைசேலம்நெல்லைதூத்துக்குடிகன்னியாகுமரிமாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறுஊர்களிலும், மும்பைபெங்களுருஹைதராபாத்கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும், இலங்கையிலும் ஹிஜ்ரி கமிட்டி சார்பில் இவ்வருடமும் பெருநாள் தொழுகை நடைபெறுகிறது

 

ஹிஜ்ரி கமிட்டி சார்பில் பெருநாள் தொழுகை நடைபெறும் இடங்கள் பற்றிமேலும் அறிவதற்கு கீழ்க்காணும் அலைபேசி எண்களுக்குத் தொடர்புகொள்ளவும்.

 

இவண்

ஹிஜ்ரி கமிட்டி,  

State Head Office : 160/101, வடக்கு மெயின் ரோடு

ஏர்வாடி– 627103. திருநெல்வேலி மாவட்டம்

தொடர்பு எண்கள்: 99626 22000, 99943 44292,

98437 77157, 99524 14885

Read 438 times Last modified on ஞாயிற்றுக்கிழமை, 02 ஜூன் 2019 14:56