வியாழக்கிழமை, 14 மே 2020 00:00

அல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்ன?

Rate this item
(2 votes)

மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.

பகுதி : 6P/7

வாதம் - 16 : அல்லாஹ் சிரித்தான்

الله عليه وسلم ، فبعث إلى نسائه فقلن : ما معنا إلا الماء ، فقال رسول الله صلى الله عليه وسلم : ' من يضم أو يضيف هذا ' ، فقال رجل من الأنصار : أنا ، فانطلق به إلى امرأته ، فقال : أكرمي ضيف رسول الله صلى الله عليه وسلم ، فقالت : ما عندنا إلا قوت صبياني ، فقال : هيئي طعامك ، وأصبحي سراجك ، ونومي صبيانك إذا أرادوا عشاء ، فهيأت طعامها ، وأصبحت سراجها ، ونومت صبيانها ، ثم قامت كأنها تصلح سراجها فأطفأته ، فجعلا يريانه أنهما يأكلان ، فباتا طاويين ، فلما أصبح غدا إلى رسول الله صلى الله عليه وسلم ، فقال : ' ضحك الله الليلة ، أو عجب ، من فعالكما ' فأنزل الله : ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون ழூ صحيح البخاري - كتاب المناقب باب قول الله : ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة - حديث : ‏3610‏

அபூ ஹூரைரா (ரழி) அறிவித்தார்கள்.

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி(ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், 'எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை' என்று பதிலளித்தார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), 'இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?.'.. அல்லது 'இவருக்கு விருந்தளிப்பவர் யார்?.'.. என்று கேட்டார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'நான் (விருந்தளிக்கிறேன்)' என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்) 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் விருந்தாளியைக் கண்ணியப்படுத்து' என்று கூறினார்.

அதற்கு அவரின் மனைவி, 'நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை' என்று கூறினார்.

அதற்கு அந்த அன்சாரித் தோழர், 'உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு விளக்கை ஏற்றி சரி செய்துகொள். உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு' என்று கூறினார்.

அவ்வாறே அவரின் மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றிவிட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்துவிட்டார். பிறகு விளக்கைச்சரி செய்வது போல் நின்று விளக்கை அணைத்து விட்டார்.

பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் விருந்தாளியான அந்த மனிதருக்கு பாவனை காட்டலானார்கள். பிறகு இருவரும் பட்டினியாக இரவைக் கழித்தனர்.

காலை நேரத்தை அடைந்த போது இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றனர்.

நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு இன்றைய நாளில் அல்லாஹ் சிரித்தான் அல்லது வியப்படைந்தான்' என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், 'தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்' என்று (திருக்குர்ஆன் 59:9ம்) வசனத்தை அருளினான்.

விளக்கம் :

• 'லைலத்' என்ற சொல்லுக்கு இரவு என்று பொருள் கொண்டு இரவுக்கு அடுத்துதான் பகல் என்று வாதிட்டால், குர்ஆன் வசனங்கள் 39:40, 7:54 க்கு முரணாக வரும். குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வாதிடுவோர் இந்த ஹதீஸை எவ்வாறு ஆதாரமாகக் கொள்கின்றார்கள்.

• இரவில்தான் விருந்து நடைபெற்றது. எனவே அல்லாஹூவும் இரவில்தான் சிரித்திருக்க வேண்டும் என்று வாதம் வைப்பது சரிதானா? இது அல்லாஹ்வின் ஷிஃபத்துகளில் தலையிடுவதாக அமையாதா?. அல்லாஹ் சிரிக்க நாடினால் எப்போது வேண்டுமானாலும் சிரிப்பான், அது அவனது உரிமை. அல்லாஹ் காலம் எனும் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவன். மேலும் இப்படிப்பட்ட சம்பவம் நடைபெறும் என்பதை முற்கூட்டியே அறிந்திருப்பவன்.

• 'ழஹக்கல்லாஹீ அல் லைலாஹ்' என்ற சொற்றொடரை அந்த நாளில் அல்லாஹ் சிரித்தான் என்று பொருள் கொண்டால் பிரச்சனை தீர்ந்து விடும்.

Read 719 times