திங்கட்கிழமை, 11 மே 2020 00:00

அபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது குறித்த வாதத்திற்கு விளக்கம்

Rate this item
(1 Vote)

மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.

பகுதி : 6M/7

வாதம் - 13 : அபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது

حدثنا محمد بن سنان ، حدثنا فليح بن سليمان ، حدثنا هلال بن علي ، عن أنس رضي الله عنه ، قال : شهدنا بنت رسول الله صلى الله عليه وسلم ورسول الله صلى الله عليه وسلم جالس على القبر ، فرأيت عينيه تدمعان ، فقال : ' هل فيكم من أحد لم يقارف الليلة ؟ ' فقال أبو طلحة : أنا ، قال : ' فانزل في قبرها ' ، فنزل في قبرها فقبرها قال ابن مبارك : قال فليح : ' أراه يعني الذنب ' قال أبو عبد الله : ليقترفوا : أي ليكتسبوا ழூ صحيح البخاري - كتاب الجنائز باب من يدخل قبر المرأة - حديث : ‏1290‏

நாங்கள் நபி (ஸல்) அவர்களின் மகளாரின் அடக்கத்தில் கலந்து கொண்டோம். அப்போது கப்ருக்கு அருகில் உட்கார்ந்திருந்த நபி (ஸல்) அவர்களின் கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''இன்று வீடுகூடாதவர் உங்களில் யாரும் உண்டா'' எனக் கேட்டார்கள். அப்போது நான் (அபூதல்ஹா (ரழி)) இருக்கிறேன் என்றதும் இந்தக் கப்ரில் இறங்குங்கள், இந்தக் கப்ரில் இறங்குங்கள் என்று கூறினார்கள். உடனே அவர் கப்ரில் இறங்கி அடக்கம் செய்தார் என்று அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள். ''இன்று வீடுகூடாதவர் உங்களில் யாரும் உண்டா'' என்பதற்குப் பதிலாக ''இன்று தவறிழைக்காதவர் உங்களில் யாரும் உண்டா'' என்று சொன்னதாகக் கருதுகிறேன் என்று ஃபுலைஹ் என்பவர் கூறியதாக இப்னு முபாரக் அறிவிக்கிறார்கள். நீங்கள் பெற்றுக் கொள்வதற்காக அல்லது சம்பாதிப்பதற்காக என்று அபூஅப்துல்லாஹ் கூறினார்.

அறிவித்தவர் : அனஸ் பின் மாலிக் (ரழி), புகாரி 1290.

விளக்கம் : இந்த வாதத்தில் இடம் பெறும் லைலத் என்ற சொல்லுக்கு இரவுதான் என்று தவறாக விளங்கியதால் ஏற்பட்டுள்ள சந்தேகம் இது. லைலத் என்ற சொல்லை முழுமையான ஒரு நாள் என்ற பொருளில் 'இன்று வீடுகூடாதவர் உங்களில் யாரும் உண்டா' என்று மொழிபெயர்த்தால் குழப்பம் நீங்கிவிடும்.

Read 877 times Last modified on திங்கட்கிழமை, 11 மே 2020 04:42