திங்கட்கிழமை, 11 மே 2020 00:00

கைபர் பேரில் அலி (ரழி) அவர்களிடம் கொடி கொடுக்கப்பட்டது குறித்த விளக்கம்

Rate this item
(1 Vote)

மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.

பகுதி : 6L/7

வாதம் - 12 : கைபர் பேரில் அலி (ரழி) அவர்களிடம் கொடி கொடுக்கப்பட்டது.

حدثنا قتيبة بن سعيد ، حدثنا حاتم بن إسماعيل ، عن يزيد بن أبي عبيد ، عن سلمة بن الأكوع رضي الله عنه ، قال : كان علي رضي الله عنه تخلف عن النبي صلى الله عليه وسلم في خيبر ، وكان به رمد ، فقال : أنا أتخلف عن رسول الله صلى الله عليه وسلم ، فخرج علي فلحق بالنبي صلى الله عليه وسلم ، فلما كان مساء الليلة التي فتحها في صباحها ، فقال رسول الله صلى الله عليه وسلم : ' لأعطين الراية - أو قال : ليأخذن - غدا رجل يحبه الله ورسوله ، أو قال : يحب الله ورسوله ، يفتح الله عليه ' ، فإذا نحن بعلي وما نرجوه ، فقالوا : هذا علي ، فأعطاه رسول الله صلى الله عليه وسلم ، ففتح الله عليه ழூ صحيح البخاري - كتاب الجهاد والسير باب ما قيل في لواء النبي صلى الله عليه وسلم - حديث : ‏2834‏

கைபர் போரின் போது அலி (ரழி) அவர்கள் தங்கள் கண்களில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக போரில் கலந்து கொள்ள முடியாமல் போயிற்று. எனவே அலி (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்களோடு நெருங்கியிருக்காமல் பின்தங்கி இருந்தார்கள். பின்னர் வெளியேறி நபி (ஸல்) அவர்களை சந்தித்தார்கள். 'எந்த நாளின் காலை வேளையில் வெற்றி பெறப்பட்டதோ அந்த நாளின் சாயங்கால நேரத்தில்' நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''நாளை நான் கொடியை தருவேன், அல்லது பிடிக்கத் தருவேன், அந்த மனிதரை அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் நேசிக்கிறார்கள்''. அல்லது ''அந்த மனிதர் அல்லாஹ்வையும் ரஸூலையும் நேசிக்கிறார் என்று சொல்லப்பட்டது. அல்லாஹ் அவர் மூலமாக வெற்றியைக் கொடுப்பான்''. அந்த நேரத்தில் அலி (ரழி) அவர்களைத் தவிர நாங்கள் அனைவரும் (கொடி எங்கள் கையில் வர) ஆசைப் பட்டோம். அவர்கள் கூறினார்கள், இதுதான் அலி (ரழி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருடைய (அலியுடைய) கையில் கொடியைக் கொடுத்தார்கள். அல்லாஹ் வெற்றியை அவர் மூலமாக கொடுத்தான். ஸலமா இப்னு அக்வஃ(ரழி) அறிவித்தார்கள். புகாரி : 2834

விளக்கம் :

• மேற்படி ரிவாயத்தையும் ஒரு நாளின் துவக்கம் மஃரிபு என்ற தங்கள் நிலைபாட்டுக்கு ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர். மாற்றுக்கருத்தினரின் இந்த ஆதாரத்தையும் பரிசீலிப்போம்.

• முதலாவதாக, 'எந்த நாளின் காலை வேளையில் வெற்றி பெறப்பட்டதோ அந்த நாளின் சாயங்கால நேரத்தில்' என்ற சொற்றொடர் நபி (ஸல்) அவர்களின் கூற்றல்ல மாறாக இவ்வரலாற்று சம்பவத்தை அறிவிக்கும் அறிவிப்பாளர் ஸலமா இப்னு அக்வஃ(ரழி) அவர்களின் சொந்தக் கூற்றாகும். ஹதீஸூடைய நேரடி வாசகங்களிலிருந்து வாதம் வைக்க முடியாமல், அதை விட்டுவிட்டு அறிவிப்பாளரின் சொந்த கூற்றுக்களை ஆதராமாக வைப்பதை என்னவென்று சொல்வது?

• மேற்படி வரலாற்று சம்பவத்தில் இடம்பெறும் 'லைலத்' என்பதற்கு 'இரவு' என்று மாற்றுக் கருத்தினரின் மொழி பெயர்ப்பை வைத்து மொழிபெயர்த்தாலும்கூட இது அவர்களுக்கு ஆதாரமாக அமையாது.

• 'லைலத்' என்பதற்கு 'இரவு' என்று மொழிபெயர்த்தால் 'எந்த இரவின் காலை வேளையில் வெற்றி பெறப்பட்டதோ அந்த இரவின் சாயங்கால நேரத்தில்' என்று அர்த்தமற்ற வாக்கியம் அமையும். ஒரு நாளின் துவக்கம் இரவுதான் என்று கூறிவிட்ட பிறகு, இரவு முந்தி, பகல் பிந்தி என்று சொல்லிவிட்ட பிறகு அந்த இரவின் சாயங்கால நேரம் என்று எப்படி கூறமுடியும்?

• மேற்படி இரவை தொடந்து காலை விடிந்து, பின்னர் பகல் ஆகி, அதைத் தொடர்ந்து நண்பகல் ஆகி, அதன் பின்னர் தானே சாயங்காலம் வரவேண்டும். இந்நிலையில் 'நாளை நான் கொடியை தருவேன்' என்று நபி (ஸல்) அவர்கள் வருங்கால வினையில் (குரவரசந வுநளெந) கூறியதாக இடம் பெறும் செய்தி தங்கள் கூற்றுக்கு முரண்பாடாகத் தெரியவில்லையா? – சிந்திப்பீர்

Read 549 times Last modified on திங்கட்கிழமை, 11 மே 2020 04:34