திங்கட்கிழமை, 11 மே 2020 00:00

நபி (ஸல்) மழைக்காக துஆ செய்தது பற்றிய வாதத்திற்கு பதில்

Rate this item
(1 Vote)

மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.

பகுதி : 6K/7

வாதம் - 11 : நபி (ஸல்) அவர்கள் மழைக்காக ஜூம்ஆ வில் துஆச் செய்தது :

حدثنا محمد ، قال : أخبرنا أبو ضمرة أنس بن عياض ، قال : حدثنا شريك بن عبد الله بن أبي نمر ، أنه سمع أنس بن مالك ، يذكر أن رجلا دخل يوم الجمعة من باب كان وجاه المنبر ، ورسول الله صلى الله عليه وسلم قائم يخطب ، فاستقبل رسول الله صلى الله عليه وسلم قائما ، فقال : يا رسول الله : هلكت المواشي ، وانقطعت السبل ، فادع الله يغيثنا ، قال : فرفع رسول الله صلى الله عليه وسلم يديه ، فقال : ' اللهم اسقنا ، اللهم اسقنا ، اللهم اسقنا ' قال أنس : ولا والله ما نرى في السماء من سحاب ، ولا قزعة ولا شيئا وما بيننا وبين سلع من بيت ، ولا دار قال : فطلعت من ورائه سحابة مثل الترس ، فلما توسطت السماء ، انتشرت ثم أمطرت ، قال : والله ما رأينا الشمس ستا ، ثم دخل رجل من ذلك الباب في الجمعة المقبلة ، ورسول الله صلى الله عليه وسلم قائم يخطب ، فاستقبله قائما ، فقال : يا رسول الله : هلكت الأموال وانقطعت السبل ، فادع الله يمسكها ، قال : فرفع رسول الله صلى الله عليه وسلم يديه ، ثم قال : ' اللهم حوالينا ، ولا علينا ، اللهم على الآكام والجبال والآجام والظراب والأودية ومنابت الشجر ' قال : فانقطعت ، وخرجنا نمشي في الشمس قال شريك : فسألت أنس بن مالك : أهو الرجل الأول ؟ قال : ' لا أدري ' ழூ صحيح البخاري - كتاب الجمعة أبواب الاستسقاء - باب الاستسقاء في المسجد الجامع حديث : ‏981‏

அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவித்தார்கள். ஜூம்ஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது மிம்பர் திசையிலுள்ள வாசல் வழியாக ஒருவர் வந்தார். நின்றவாறே நபி (ஸல்) அவர்களை நோக்கி 'இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் அழிந்து விட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டு விட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி, 'இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!' என்று பிரார்த்தித்தார்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக வானத்தில் திரண்ட மேகத்தையோ, பிரிந்து கிடக்கும் மேகங்களையோ (மழைக்குரிய) எந்த அறிகுறிகளையோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் 'ஸல்ஃஈ' என்னும் மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்டவெளியாக இருந்தது) அப்போது அம்மலைக்குப் பின்புறமிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக ஆறு நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை.

அடுத்த ஜும்ஆவில் நபி (ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்தும்போது ஒருவர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி 'இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்து விட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டு விட்டன. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் தம் கையை உயர்த்தி, 'இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே. இறைவா! மணற்குன்றுகள், மலைகள், ஓடைகள், விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)' என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.

இரண்டாவதாக வந்த மனிதர் முதலில் வந்தவர்தானா? என்று அனஸ்(ரழி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் தெரியாது' என்றனர் என ஷரீக் கூறுகிறார்.

அறிவித்தவர் : அனஸ் இப்னு மாலிக்(ரழி). நூல்: புகாரி (981)

விளக்கம் :

• மேற்படி இந்த சம்பவம் ஒரு நாளை மஃரிபிலிருந்து தொடங்வதற்கு எப்படி ஆதாரமாகும்? ஒருநாளுக்குரிய மழையானது, மஃரிபிலிருந்து தொடங்கி அடுத்து மஃரிபுவரை பெய்தது என்பன போன்ற வாசகங்கள்கூட இல்லையே.

• நபி (ஸல்) அவர்கள் ஜூம்ஆ வில் துஆச் செய்து அடுத்த ஜூம்ஆ வரை மழை தொடர்ந்துள்ளது. ஆக ஒரு வெள்ளிக்கிழமையிலிருந்து அடுத்த வெள்ளிக்கிழமை வரை மழை பெய்ததை கணக்கிட்டால் மொத்தம் 8 நாட்கள் வருகிறது.

• இதில் 6 நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை என்ற சொற்றொடர் மூலம், மழை பெய்த அந்த 8 நாட்களில், அறிவிப்பாளர் அவர்கள் 6 நாட்கள் மட்டும் சூரியனைப் பார்க்காமல் இருந்திருக்கிறார் என்பதைத்தான் புரிய முடிகிறது.

• ஆக மேற்படி ரிவாயத்தின் வாயிலாகவும் ஒரு நாளின் துவக்கம் மஃரிபு என்ற தவறான கருத்தை மாற்றுக்கருத்தினரால் நிறுவிட இயலவில்லை.

Read 373 times Last modified on திங்கட்கிழமை, 11 மே 2020 04:30