புதன்கிழமை, 06 மே 2020 00:00

ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட நேரம் எது?

Rate this item
(1 Vote)

மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.

பகுதி : 6J/7

வாதம் - 10 : ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட நேரம் :

أيوب بن خالد ، عن عبد الله بن رافع ، مولى أم سلمة ، عن أبي هريرة ، قال : أخذ رسول الله صلى الله عليه وسلم بيدي فقال : ' خلق الله عز وجل التربة يوم السبت ، وخلق فيها الجبال يوم الأحد ، وخلق الشجر يوم الاثنين ، وخلق المكروه يوم الثلاثاء ، وخلق النور يوم الأربعاء ، وبث فيها الدواب يوم الخميس ، وخلق آدم عليه السلام بعد العصر من يوم الجمعة ، في آخر الخلق ، في آخر ساعة من ساعات الجمعة ، فيما بين العصر إلى الليل ' ، قال إبراهيم : حدثنا البسطامي وهو الحسين بن عيسى ، وسهل بن عمار ، وإبراهيم ابن بنت حفص وغيرهم ، عن حجاج بهذا الحديث ழூ صحيح مسلم - كتاب صفة القيامة والجنة والنار باب ابتداء الخلق وخلق آدم عليه السلام - حديث : ‏5103‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துக் கொண்டு பிறகு கூறினார்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமையன்று மண்ணைப் படைத்தான். அதில் மலைகளை ஞாயிற்றுக் கிழமையன்று படைத்தான். மரங்களை திங்கட்கிழமை படைத்தான். வெறுக்கப்பட்டதை செவ்வாய் கிழமையன்றும் ஒளியை புதன் கிழமையன்றும் படைத்தான். வியாழக்கிழமையன்று கால்நடைகளைப் படைத்து பூமியில் பரவச் செய்தான். படைப்புகளில் இறுதி படைப்பாக ஆதம் (அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப்பின் படைத்தான். அது ஜூம்ஆவுடைய நேரங்களில் கடைசி நேரமான அஸ்ருக்கும் இரவுக்கும் இடையேயுள்ள நேரமாகும் என்று அபூ ஹூரைரா (ரழி) கூறினார்கள். நூல் : முஸ்லிம் 5103

விளக்கம் :

• ஒரு நாளின் தொடக்கம் மஃரிபு என்று வாதிப்பதற்கு மேற்காணும் ரிவாயத்தையும் மாற்றுக் கருத்தினர் ஆதாரமாகக் காட்டகின்றனர். மேற்படி ரிவாயத்தின் படி சனிக்கிழமை மண்ணைப் படைத்த அல்லாஹ், தொடர்ந்து 7-வது நாளான வெள்ளிக்கிழமை அன்று படைப்புகளில் இறுதி படைப்பாக ஆதம் (அலை) அவர்களை படைத்ததாக கூறுகிறது. இதில் ஒரு நாளுடைய தொடக்கம் மஃரிபு என்று எங்கும் வரவில்லை.

• இந்த ஹதீஸில் 'ஜூம்ஆவுடைய நேரம்' என்று குறிப்பிடப்பட்டிருப்பது 'ஜூம்ஆ தொழுகை' என்று சிலர் விளங்கியுள்ளனர். இது தவறான கருத்தாகும். காரணம் 'ஜூம்ஆவுடைய நேரம்' என்பதை ஜூம்ஆ தொழுகை என்று வாதிட்டால், ஜூம்ஆ தொழுகையின் இறுதி நேரம் என்பது 'அஸ்ருக்கும் இரவுக்கும் இடையேயுள்ளது' என்ற அர்த்தமற்ற பொருள் அமையும். அஸ்ரு தொழுகைக்குப் பிறகு ஜூம்ஆ தொழுகையின் நேரம் என்பது இல்லை என்பதை அனைவரும் அறிவோம்.

• மேலும் 'ஜூம்ஆவுடைய நேரம்' என்ற இந்த சொற்றொடர் வெள்ளிக்கிழமை ஜூம்ஆவுடைய நாளில் நமது பிராத்தனைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளக் கூடிய நேரத்தை குறிப்பதாகவும் சில அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

• இந்நிலையில், படைப்புகளில் இறுதி படைப்பாக ஆதம் (அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப்பின் படைத்தான். அது ஜூம்ஆவுடைய நேரங்களில் கடைசி நேரமான அஸ்ருக்கும் இரவுக்கும் இடையேயுள்ள நேரமாகும் என்று சரியான பொருளை கொடுத்தாலே மேற்படி ரிவாயத்திற்கும் ஒரு நாளை மஃரிபிலிருந்து தொடங்குவதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

• வல்ல அல்லாஹ் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்ததாக அல்குர்ஆனின் 7:54, 10:3, 11:7, 25:9, 57:4 போன்ற பல்வேறு வசனங்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது. ஒரு ஸஹீஹான ஹதீஸாகவே இருந்தாலும், தங்களின் பார்வைக்கு அது குர்ஆனுக்கு முரண்படுவதாக தெரிந்தால், அந்த ஹதீஸை நிராகரித்து மறுக்க வேண்டும் என்ற கொள்கையுடையோர் இந்த ஹதீஸை தங்களுக்கு ஆதாரமாக எப்படி கருதுகின்றனர்?

Read 433 times