புதன்கிழமை, 06 மே 2020 00:00

பதுனு நக்லாவில் பிறை பார்க்கப்பட்டது பற்றிய விளக்கம்

Rate this item
(1 Vote)

மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.

பகுதி : 6I/7

வாதம் 9 : பதுனுநக்லாவில் பிறை பார்க்கப்பட்டது பற்றி...

حدثنا أبو بكر بن أبي شيبة ، حدثنا محمد بن فضيل ، عن حصين ، عن عمرو بن مرة ، عن أبي البختري ، قال : خرجنا للعمرة ، فلما نزلنا ببطن نخلة قال : تراءينا الهلال ، فقال بعض القوم : هو ابن ثلاث ، وقال بعض القوم : هو ابن ليلتين ، قال : فلقينا ابن عباس ، فقلنا : إنا رأينا الهلال ، فقال بعض القوم : هو ابن ثلاث ، وقال بعض القوم : هو ابن ليلتين ، فقال : أي ليلة رأيتموه ؟ قال فقلنا : ليلة كذا وكذا ، فقال : إن رسول الله صلى الله عليه وسلم ، قال : ' إن الله مده للرؤية ، فهو لليلة رأيتموه ' ழூ صحيح مسلم - كتاب الصيام باب بيان أنه لا اعتبار بكبر الهلال وصغره - حديث : ‏1885‏

நாங்கள் உம்ராவுக்காகப் புறப்பட்டோம். பதுனுநக்லா என்ற இடத்தில் இறங்கினோம். அப்போது பிறையைக் கவனித்தோம்;. அக்கூட்டத்தில் சிலர் இது மூன்றாவது நாளுக்குரியது (இப்னு ஃதலாஃத்) என்றனர். மற்றும் அக்கூட்டத்தில் சிலர் இரண்டாவது நாளுக்குரியது (இப்னு லைலத்தைன்) என்றனர். அப்பொழுது நாங்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. நாங்கள் நிச்சயமாக பிறையைக் கவனித்தோம் சில நபர்கள் அது மூன்றாம் நாளுக்குரியது என்றும் மேலும் சில நபர்கள் அது இரண்டாம் நாளுக்குரியது என்றும் கூறினோம். அதற்கவர்(இப்னு அப்பாஸ் ரழி) நீங்கள் எந்தக் கிழமையில் கவனித்தீர்கள்? என்று கேட்டார்கள். நாங்கள் இன்ன இன்ன கிழமைகளில் கவனித்தோம் என்று விடையளித்தோம். அதற்கவர்கள்(இப்னு அப்பாஸ் ரழி), நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அதை எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்று நபி(ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள். அறிவித்தவர்: அபுல்பக்தரீ, (நூல்: முஸ்லிம் 1885)

விளக்கம் :

• பத்னுநகலாவில் நிகழ்ந்த மேற்படி சம்பவம் பிறையின் வடிவநிலை பற்றிய சர்ச்சை ஏற்பட்டதாகத்தான் புரிய முடிகிறது. இந்நிலையில் ஒருநாளை மஃரிபிலிருந்து தொடங்குவதற்கு மேற்படி ரிவாயத்து எப்படி ஆதாரமாகும்?

• பார்க்கப்பட்ட பிறை இரண்டாவது நாளுக்குரியதா? அல்லது மூன்றாவது நாளுக்குரியதா? என்ற கருத்து வேறுபாடு வந்துள்ளது. பிறை பார்த்தவர்கள் யாரும் அதை முதல் பிறை என்று வாதிக்கவில்லை. ஆக தலைப்பிறை பற்றிய சர்ச்சைகளோ, ஒருநாளை மஃரிபிலிருந்து தொடங்க வேண்டும் என்ற கருத்து வேறுபாடுகளோ அங்கு ஏற்படவில்லை என்பதை மேற்படி ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது.

• 'எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்று நபி (ஸல்) கூறியதாக' இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் கூற்று கவனிக்கத்தக்கது. நாம் தினமும் பார்க்கின்ற பிறையானது அன்றைய நாளுக்குரிய பிறைதான், அடுத்த நாளுக்குரிய பிறை அல்ல என்பதை தௌ;ளத் தெளிவாக அறிய முடிகிறது.

• அதாவது நமக்கு வெள்ளிக்கிழமை தெரியும் பிறை வெள்ளிக் கிழமைக்குரியது. அது சனிக் கிழமைக்குரியது அல்ல என்பது தெளிவு. இது மாற்றுக்கருத்தினரின் பிறை பார்க்கும் நிலைப்பாட்டுக்கு எதிரான ஆதாரமாகவே அமைகிறது.

• மேற்படி ரிவாயத்தில் 'மத்த' என்ற சொல்லுக்கு நீட்டுகிறான் என்பது தவறான பொருள் ஆகும். நாங்கள் புறக்கண்களால் பிறையை பார்ப்பதற்காக அல்லாஹ் நீட்டுகிறான். அதனால் மாதம் தொடங்கி எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை என்று வாதிப்பது அறிவுடைமையாகாது. எனவே ஒருநாளை மஃரிபிலிருந்து தொடங்குவதற்கு மேற்படி ரிவாயத்தும் ஆதாரமாக அமையவில்லை.

Read 386 times