புதன்கிழமை, 06 மே 2020 00:00

ஜும்ஆ தொழாமல் வெளியூர் செல்லக் கூடாதா?

Rate this item
(1 Vote)

மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.

பகுதி : 16H/7

வாதம் - 8 : ஜும்ஆ தொழாமல் வெளியூர் செல்லக் கூடாது..

حدثنا أبو معاوية ، عن ابن جريج ، عن عطاء ، عن عائشة ، قالت : ' إذا أدركتك ليلة الجمعة ، فلا تخرج حتى تصلي الجمعة ' ழூ مصنف ابن أبي شيبة - كتاب الجمعة من كره إذا حضرت الجمعة أن يخرج حتى يصلي - حديث : ‏5039‏

நீ ஜூம்ஆ நாளை அடையும்போது ஜும்ஆ தொழுகையை தொழும்வரை நீ வெளியேறாதே என்று அயிஷா (ரழி) அவர்கள் கூறியதாக அதா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள். அறிவித்தவர் : அதாஃ (ரஹ்), நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா(5039)

விளக்கம் :

 ஒரு நாளின் தொடக்கம் மஃரிபு என்று வாதிக்கும் மாற்றுக் கருத்தினர் மேற்படி ரிவாயத்தையும் தங்களின் ஆதாரமாகக் காண்பிக்கின்றனர். இந்த செய்தியும் ஹதீஸ் என்ற தரத்தில் அமைந்தது அல்ல. மேற்படி கூற்று நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஏதுமில்லாத ஒரு செய்தியே. அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் பெயரால் பதிவுசெய்யப்பட்டுள்ள ஒரு கூற்று.

 ஒரு நாளின் தொடக்கம் மஃரிபு என்ற தங்கள் நிலைப்பாட்டை நியாயப்படுத்திட, இனி ஸஹாபாக்களின் சொந்தக் கூற்றுகளையும் மார்க்க ஆதாரமாக எடுத்துக் கொண்டால்தான் ஓரளவாவது தாக்குப்பிடிக்க இயலும் என்று முடிவெடுத்துள்ளார்கள் போலும். குர்ஆனும் சுன்னாவும் அல்லாத மற்றவர்களின் கூற்றுகளும், நடைமுறை சம்பவங்களும் மார்க்க ஆதாரமாகாது என்பதை சொல்லிக் கொள்கிறோம்.

 'நீ ஜூம்ஆ நாளை அடையும்போது ஜூம்ஆ தொழுகையை தொழும்வரை நீ வெளியேறாதே' என்ற மேற்படி உபதேசத்தில் ஒரு நாளின் ஆரம்பம் மஃரிபு என்று எங்கே உள்ளது? – சிந்திப்பீர்.

 இதில் இடம்பெறும் 'லைலத்துல் ஜூம்ஆ' என்ற வாக்கியத்திற்கு 'ஜூம்ஆவுடைய நாள்' என்று பொருள்படும். மாற்றுக்கருத்தினரோ இதற்கு 'ஜூம்ஆவுடைய இரவு' என்றும் 'வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு' என்றும் வழக்கம்போல தவறாக புரிந்து கொண்டதால் ஏற்பட்ட ஐயம் இது.

 மேற்படி இந்த ரிவாயத்தை மார்க்க ஆதாரமாகக் கருதுவோர், வியாழக்கிழமை அஸருக்கு பின்னர் வெளியூர்களுக்கு பிரயாணம் செய்யக்கூடாது என்றே பொருள் அமைகிறது. நடைமுறையில் மாற்றுக்கருத்தினர் கூட இதை பின்பற்ற முடியாது என்பதை கவனத்தில் கொள்க.

Read 438 times