புதன்கிழமை, 06 மே 2020 00:00

வியாழன் பின்னேரம் என்பது வெள்ளி இரவா?

Rate this item
(1 Vote)

மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.

பகுதி : 6G/7

வாதம் - 7 : வியாழன் பின்னேரம் என்பது வெள்ளி இரவா? ...

أخبرنا محمد بن عيينة ، عن أبي إسحاق الفزاري ، عن أسلم المنقري ، عن بلاد بن عصمة ، قال : سمعت عبد الله بن مسعود رضي الله عنه يقول ، وكان إذا كان عشية الخميس ليلة الجمعة ، قام فقال : ' إن أصدق القول قول الله عز وجل وإن أحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم والشقي من شقي في بطن أمه ، وإن شر الروايا روايا الكذب ، وشر الأمور محدثاتها ، وكل ما هو آت قريب ' ழூ سنن الدارمي - باب في كراهية أخذ الرأي حديث : ‏214

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரழி) அவர்கள் வியாழன் மாலை வெள்ளிக் கிழமையன்று பின்வருமாறு கூறுவார்கள், என்று பிலாத் பின் இஸ்மா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள். ''நிச்சயமாக சொல்லில் மிகச்சிறந்த சொல் அல்லாஹ்வுடைய சொல்லாகும். மேலும் நிச்சயமாக வழிமுறைகளில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய வழிமுறையாகும். தீயவன் யாரெனில் தன் தாயுடைய வயிற்றிலிலேயே அவன் தீயவனாக இருப்பவனே. மேலும் நிச்சயமாக செய்திகளில் மிக மோசமானது பொய்யான செய்திகளாகும். காரியங்களில் மிகக்கெட்டது மார்க்கத்தில் புதிய காரியங்களை புகுத்துவதாகும். மேலும் எவை எல்லாம் வரவிருக்கிறதோ அவை எல்லாம் விரைவில் வந்துவிடும்''.

அறிவித்தவர் : பிலாத் பின் இஸ்மா (ரஹ்). நூல்: தாரமீ(214)

விளக்கம் :

 மேற்படி ரிவாயத்தில் ஒரு நாளின் தொடக்கம் பற்றிய செய்தி எங்குமே இல்லை. மாறாக அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரழி) என்ற நபித்தோழரின் சொந்த பழக்க வழக்கமான ஒரு செய்தியை, பிலாத் பின் இஸ்மா (ரஹ்) என்ற ஒரு தாபிஈ குறிப்பிடுகிறார்கள். பிறை விஷயத்தில் தங்களின் நிலைபாட்டை குர்ஆன் சுன்னாவின் நேரடி ஆதாரங்களில் நின்று நிறுவிட இயலாது என்பதை அறிந்து கொண்டு, இனி ஸஹாபாக்களின் சொந்தக் கூற்றுகளையும் மார்க்க ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலைபாட்டை நோக்கி மாற்றுக்கருத்துடையோர் நகர்வதையே இது காட்டுகிறது.

 மேற்படி செய்தியில் இடம்பெறும் 'அஸிய்யத்தல் ஹமீஸ் லைலத்தல் ஜூம்ஆ' என்ற சொற்றொடரை 'வியாழன் பின்னேரம் வெள்ளிக் கிழமை இரவு' என்று எப்படி மொழி பெயர்த்தார்கள்? 'பின்னேரம்' என்ற தமிழ் சொல்லுக்கு நிகரான அரபுச்சொல் இந்த செய்தியில் எங்கே இருக்கிறது?. அப்படி எந்த ஒரு சொல்லும் இந்த ரிவாயத்தில் இல்லை.

 'அஸிய்யத்தல் ஹமீஸ் லைலத்தல் ஜூம்ஆ' என்ற சொற்றொடரில், அஸிய்யத்தல் ஹமீஸ் என்றால் 'வியாழன் மாலை' என்றும், லைலத்தல் ஜூம்ஆ எனில் 'வெள்ளிக்கிழமை' என்றும் நேரடி பொருள் வருகிறது. 'அஸிய்யத்தல் ஹமீஸ் லைலத்தல் ஜூம்ஆ' அரபுப்பதம் அரபு இலக்கண இலக்கியப்படி சரியான முறையில் அமைந்துள்ளதா? என்றால் அதுவுமில்லை.

 இதில் மாற்றுக் கருத்தினரின் கூற்றுப்படி 'லைலத்' என்பதற்கு 'இரவு' என்று பொருள் வைத்து பார்த்தாலும்கூட, 'வியாழன் மாலை வெள்ளி இரவு' என்று அர்த்தமற்ற சொற்றொடராகவே இந்த வாக்கியம் அமைகிறது. 'வியாழன் மாலை' என்பது 'வெள்ளி இரவு' என்று எப்படி ஆகும்? வியாழனுடைய மாலைப் பொழுதும், வெள்ளிக்கிழமையுடைய இரவுப் பொழுதும் வௌ;வேறு காலங்களா இல்லையா? என்பதை மாற்றுக் கருத்தினர் சிந்திக்க வேண்டும். அல்லது மாலை என்பதும், இரவு என்பதும் ஒரே பொழுதைத்தான் குறிக்கிறது என்று வாதம் வைத்தால் மாலை - இரவு என்று ஏன் இரண்டுமுறை குறிப்பிட வேண்டும்? என்பன போன்ற பல கேள்விகள் எழுகின்றன. ஆக 'அஸிய்யத்தல் ஹமீஸ் லைலத்தல் ஜூம்ஆ' - 'வியாழன் பின்னேரம் வெள்ளிக் கிழமை இரவு' என்று கூறுவதே தவறாகும்.

 வஹியை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும், குர்ஆனும், குர்ஆனுக்கு முரண்படாத ஹதீஸ்களும்தான் மார்க்க அடிப்படை ஆதாரங்கள் என்றும், இதுவல்லாத பிறருடைய கூற்றுகளும், வரலாற்றுச் சம்பவங்களும் மார்க்க ஆதாரமாகாது என்றும் பிரச்சாரம் செய்பவர்கள் மேற்படி செய்தியை ஒருநாளின் தொடக்கம் மஃரிபு என்ற தங்களின் வாதத்திற்கு ஆதாரமாக வைப்பது வியப்புக்குரியதாகும்.

 மேற்படி செய்தி ஹதீஸ் என்ற தரத்தில் அமையவில்லை, இதை வைத்து மார்க்கத்தின் எந்த சட்டத்தையும் வகுக்க இயலாது. மேற்படி கூற்று நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஏதுமில்லாத ஒரு சம்பவமே என்பதை மாற்றுக் கருத்துடையோர் புரிந்து கொள்ள வேண்டும்.

Read 489 times