வெள்ளிக்கிழமை, 01 மே 2020 00:00

பனு ஸலமா கோத்திரத்தின் லைலத்துல் கத்ரு பற்றிய விளக்கம்

Rate this item
(1 Vote)

மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.

பகுதி : 6E/7

வாதம்-5 : பனு ஸலமா கோத்திரத்தின் லைலத்துல் கத்ரு பற்றிய விளக்கம் :

حدثنا أحمد بن حفص بن عبد الله السلمي ، حدثنا أبي ، حدثنا إبراهيم بن طهمان ، عن عباد بن إسحاق ، عن محمد بن مسلم الزهري ، عن ضمرة بن عبد الله بن أنيس ، عن أبيه ، قال : كنت في مجلس بني سلمة وأنا أصغرهم ، فقالوا : : من يسأل لنا رسول الله صلى الله عليه وسلم عن ليلة القدر ، وذلك صبيحة إحدى وعشرين من رمضان ؟ فخرجت فوافيت مع رسول الله صلى الله عليه وسلم صلاة المغرب ، ثم قمت بباب بيته ، فمر بي فقال : ' ' ادخل ' ' ، فدخلت فأتي بعشائه ، فرآني أكف عنه من قلته ، فلما فرغ ، قال : ' ' ناولني نعلي ' ' فقام وقمت معه ، فقال : ' ' كأن لك حاجة ' ' ، قلت : أجل ، أرسلني إليك رهط من بني سلمة ، يسألونك عن ليلة القدر ، فقال : ' ' كم الليلة ؟ ' ' فقلت : اثنتان وعشرون ، قال : ' ' هي الليلة ' ' ، ثم رجع ، فقال : ' ' أو القابلة ' ' ، يريد ليلة ثلاث وعشرين ழூ سنن أبي داود - كتاب الصلاة باب تفريع أبواب شهر رمضان - باب في ليلة القدر حديث : ‏1184‏

அப்துல்லாஹ் பின் உனைஸ் அவர்கள் அறிவித்தார்கள். நான் பனு ஸலமா கலந்தாலோசனைக் கூட்டத்தில் இருந்தேன். அவர்களை விட வயதில் சிறியவன் நான். அப்போது நபி (ஸல்) அவர்களிடத்தில் லைலத்துல் கத்ரைப் பற்றி நம்மில் கேட்பவர் யார்? என்று வினவினர். ரமழானின் 21-வது நாள் காலையில் இவ்வாறு வினவப்பட்டது. நான் அங்கிருந்து வெளியேறி நபி (ஸல்) அவர்களிடம் மஃரிபு வேளையில் சென்றடைந்து, அவர்கள் வீட்டின் வாசலுக்கு முன்னர் நின்றிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை கடந்து சென்றார்கள். அவ்வேளையில் என்னை வீட்டிற்குள் அழைத்தார்கள். எனக்காக இரவு உணவும் கொண்டு வரப்பட்டது. உணவு குறைவாக இருந்ததால் அதை உண்பதற்கு நான் தாமதிப்பதை கவனித்தார்கள். உணவு அனைத்தும் முடிந்த பின்னர் எனது செருப்பை கொண்டு வாருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அங்கிருந்து நபி (ஸல்) எழுந்து சென்றார்கள். நானும் அவர்களை பின் தொடர்ந்தேன். அச்சமயம் உனக்கு ஏதோ தேவை இருந்ததே அது என்ன? என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வினவினார்கள். ஆம் எனது பனு ஸலமா கோத்திரம் லைலத்துல் கத்ரு பற்றிய விளக்கத்தை உங்களிடம் கேட்டு வர என்னை அனுப்பியுள்ளனர் என்று நான் பதிலளித்தேன். இது எத்தனையாவது நாள்? என்று என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். இது 22-வது நாள் என்று நான் சொன்னேன். அதற்கு இந்த நாள்தான் என்றார்கள். பின்னர் அல்லது வரக்கூடியது என்றார்கள். நபி (ஸல்) 23-வது நாளைக் குறித்து அவர்கள் இவ்வாறு சுட்டினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரழி) நூல்: அபூதாவூத் 1184.

விளக்கம் :

 இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசையில் அப்பாத் பின் இஸ்ஹாக் என்பவர் இடம் பெறுகிறார் இவர் பலவீனமானவர். இமாம்களான தாரகுத்னி (ரஹ்) அவர்கள் இவரை லயிஃப் என்கிறார்கள், புஹாரி (ரஹ்) அவர்கள் மேற்படி அப்பாதை நம்பிக்கையும் மனன ஆற்றலும் கொண்ட நபர்களில் இவர் இல்லை என்கிறார்கள், அபூ அஹ்மத் பின் அதி (ரஹ்) அவர்கள் மேற்படி நபரின் ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கிறார்கள், அபூதாவுது அவர்கள் கத்ரியா கொள்கையுடைய இவரை பல அறிஞர்கள் பலவீனமானவர் என்று சொல்லியுள்ளதாக பதிவு செய்துள்ளார்கள்.

 மேலும் இந்த ரிவாயத்தில் இடம்பெறும் இப்றாஹீம் பின் தஹ்மான் என்ற மற்றொரு அறிவிப்பாளரும் விமர்சனத்திற்குள்ளானவர் ஆவார்.

 இதில் இடம்பெறும் லைலத் என்ற பதத்திற்கு ஒரு முழுமையான நாள் என்று பொருள் கொள்ளாமல் இரவு என்று அர்த்தம் வைத்ததால் ஏற்பட்ட விளைவு இது.

 மாற்றுக் கருத்தினரின் வாதப்படி 'லைலத்' என்ற சொல்லுக்கு 'இரவு' என்று தவறான பொருள் கொண்டாலும் 22-வது இரவில் லைலத்துல் கத்ரை தேடிக்கொள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும். ஒற்றைப்படை இரவு இல்லாத 22-வது இரவில் லைலத்து கத்ரு வரும் என்பதுதான் மாற்றுக் கருத்தினரின் நிலைப்பாடா? இதற்கும் பதில் சொல்லட்டும்.

 நபி (ஸல்) 23-வது நாளைக் குறித்து அவர்கள் இவ்வாறு சுட்டினார்கள் என்ற சொற்றொடர்கூட நபி (ஸல்) அவர்களின் கருத்தல்ல. மாறாக இச்செய்தியை ரிவாயத்து செய்த அறிவிப்பாளரின் கருத்தே ஆகும்.

 இதே ரிவாயத் முஃஜமுல் கபீரில் 13758-வது ஹதீஸாக இடம்பெறுகிறது. அதில் 'மதா லைலத்துல் கத்ரு' - லைலத்துல் கத்ரு எப்போது? என்ற வாசகம் இடம் பெறுகிறது. அதுபோல 'கமில் லைலத்து மினஷ் ஷஹரு' - மாதத்தில் எத்தனை நாட்கள் முடிந்துள்ளன? என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. மேற்படி ரிவாயத்தில் அது போன்ற வாசகங்கள் இடம்பெறவில்லை.

 ஆக இதுவும் பலவீனமான அறிவிப்புதான். பலவீனமான அறிவிப்புகள் ஒருபோதும் மார்க்க ஆதாரமாகாது.

Read 520 times Last modified on புதன்கிழமை, 06 மே 2020 04:20