வெள்ளிக்கிழமை, 01 மே 2020 00:00

கிராமவாசிகள் பிறை பார்த்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம்

Rate this item
(1 Vote)

மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.
                                                              பகுதி : 6C/7

வாதம் 3 : கிராமவாசிகள் பிறை பார்த்தது

عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اخْتَلَفَ النَّاسُ فِي آخِرِ يَوْمٍ مِنْ رَمَضَانَ فَقَدِمَ أَعْرَابِيَّانِ فَشَهِدَا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّهِ لَأَهَلَّا الْهِلَالَ أَمْسِ عَشِيَّةً فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ أَنْ يُفْطِرُوا. رواه ابو داؤد – 1992

ரமழானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள். உடனே நோன்பை விடுமாறு நபி (ஸல்) மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். பெருநாள் திடலுக்கு செல்லுமாறும் கூறினார்கள். (ரிப்பீ இப்னு கிராஷ் – அபூதாவூத் 1992)

விளக்கம் :

 மேற்படி செய்தி தொடர்பு அறுந்த முர்ஸல் வகை அறிவிப்பாகும். இதன் அறிவிப்பாளர் தொடர் நபி (ஸல்) அவர்கள் வரை முழுவதுமாக சென்று முடிவடையவில்லை. மேலும் 'நபித்தோழர்களில் ஒரு மனிதர் அறிவித்தார்' என்று அறிவித்த ஸஹாபியின் பெயர் கூறப்படாமல் இச்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஒரு நாளின் ஆரம்பம் மஃரிபு என்றால் 'நேற்று மாலையில் (மஃரிபில்) பிறை பார்த்தோம்' என்று அக்கிராமவாசிகள் சொல்லியிருக்கக் கூடாது. மாறாக இன்று மாலையில் (மஃரிபில்) பிறை பார்த்தோம்' என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். ஆக மேற்படி செய்தி ஒரு நாளை மஃரிபிலிருந்து துவங்க வேண்டும் என்பதற்கு எதிரான ஆதாரமாக அமைகிறது.

 ரமழானின் கடைசி நாள் என்றால் என்ன? அந்த நாளில் கருத்து வேறுபாடு ஏன் ஏற்பட வேண்டும்?

 இல்லை, அந்த நாள் யவ்முஷ்ஷக் அதாவது சந்தேகத்திற்குரிய நாள் என்று வாதித்தால் ரமழானின் கடைசி நாள் என்று எப்படி முடிவானது? அந்த நாள் யவ்முஷ்ஷக் நாளா? அல்லது ரமழானின் கடைசி நாளா?

 29-வது நாளின் மஃரிபில் பிறை தென்பட்;டால் அதற்கு அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல் நாள். அந்த 29-வது நாளன்று பிறை பார்க்கப்படாவிட்டால் அந்த மாதத்தை 30-ஆக பூர்த்தி செய்ய வேண்டும். இதுதான் மார்க்க சட்டம் என்றால் மேற்படி செய்தியின் படி அந்த மக்களிடம் கருத்து வேறுபாடு ஏன் வர வேண்டும்?

 நேற்று மாலை என்ற சொல் எதைக் குறிக்கிறது? மாலையில் பிறை தெரியுமா? நேற்று மாலை என்ற சொல் மஃரிபை குறிக்காதா?

 மக்கள் கருத்து வேறுபாடு கொண்ட அந்த ரமழானின் கடைசி நாள் 29-வது நாளாக இருந்தால் நேற்று மாலை என்ற சொல் 28-வது நாளின் மாலையைக் குறிக்கும். ஆக 28-வது நாளில் மாலையில் பிறை தெரியுமா? ஒரு மாதத்தில் 28-வது நாளில் பிறை பார்த்து முடிவெடுக்கலாமா? 28-வது நாளில் ஒரு மாதம் முடியுமா?

 'அஹல்லல் ஹிலால்' என்ற பதத்திற்கு பிறைக்காக அந்த இரண்டு கிராமவாசிகள் கூச்சலிட்டார்கள் என்றே பொருள். 'பிறையைப் பார்த்தோம்' என்ற சொல் மேற்படி அரபு வாசகங்களில் இல்லை.

Read 523 times Last modified on புதன்கிழமை, 06 மே 2020 04:21