வெள்ளிக்கிழமை, 01 மே 2020 00:00

பேரீத்தம் பழத்தை ஊறப்போட்டது பற்றிய வாதத்திற்கு விளக்கம்

Rate this item
(1 Vote)

மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.

பகுதி : 6B/7

வாதம் 2 : பேரீத்தம் பழத்தை ஊறப்போட்டது பற்றிய வாதம்

حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ يَحْيَى بْنِ عُبَيْدٍ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُنْبَذُ لَهُ لَيْلَةَ الْخَمِيسِ فَيَشْرَبُهُ يَوْمَ الْخَمِيسِ وَيَوْمَ الْجُمُعَةِ قَالَ وَأُرَاهُ قَالَ وَيَوْمَ السَّبْتِ فَإِذَا كَانَ عِنْدَ الْعَصْرِ فَإِنْ بَقِيَ مِنْهُ شَيْءٌ سَقَاهُ الْخَدَمَ أَوْ أَمَرَ بِهِ فَأُهْرِيقَ . مسند أحمد - (3 ஃ 496)2068 .

நபி (ஸல்) அவர்களுக்கு (சுவையான நீர் வழங்க) வியாழக்கிழமை இரவு (பேரித்தம் பழங்கள் போட்டு) பாத்திரத்தில் ஊற வைக்கப்படும். வியாழக் கிழமையிலும், வெள்ளிக்கிழமைலும், (அறிவிப்பவர் கூற்றின்படி சனிக் கிழமையிலும்) நபி (ஸல்) அவர்கள் அதை அருந்துவார்கள். அஸர் வரை மீதமிருந்தால் அதைப் பணியாளுக்கு வழங்குவார்கள் அல்லது கொட்டி விடுவார்கள்.'

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரழி) நூல் : அஹ்மத்(2036)

விளக்கம் :

 மேற்படி அறிவிப்பு ஒரு ஹதீஸே அல்ல. நபி (ஸல்) அவர்களின் சொல், செயல் மற்றும் அங்கீகாரம் ஏதுமில்லாத ஒரு செய்தியேயாகும். பேரீத்தம்பழத்தை நபி (ஸல்) அவர்கள் ஊற வைக்கும்படி கட்டளையிட வில்லை. நபி (ஸல்) அவர்கள் ஊற வைத்திடவில்லை. அவ்வாறு ஸஹாபாக்களில் யாரும் ஊற வைப்பதைக் கண்டு நன்மையான செயல் என்று அதை அங்கீகரிக்கவுமில்லை.

 இந்நிலையில், நபி (ஸல்) அவர்களுக்காகத்தானே பேரித்தம் பழங்கள் வைக்கப்பட்டது எனவே இதுவும் ஹதீஸ்தான் என்று மாற்றுக் கருத்தினர் வாதிக்கின்றனர். ஒரு வாதத்திற்காக இது ஹதீஸ் என்று வைத்துக் கொண்டு ஆய்வு செய்தாலும், மேற்படி செய்தியில் ஒருநாளின் துவக்கம் மஃரிபு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

 'வியாழக்கிழமை இரவு' என்பது தவறான மொழிபெயர்ப்பாகும். இதில் இடம்பெறும் லைலத் என்ற பதத்திற்கு இரவு என்று பொருள் அல்ல. மாறாக ஒரு முழுமையான நாள் என்று பொருள் வைத்தால் எந்தக் குழப்பங்களும் வராது.

 மூன்று நாட்கள் பேரீத்தம் பழத்தை தண்ணீரில் ஊற வைத்தால் என்னவாகும்? அது போதை நீராக மாறும் வாய்ப்புள்ளது.

 தூற வீசியெறியும் நிலையிலுள்ள ஒரு உணவுப் பொருளை பணியாளர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் வழங்குவார்களா? என்று சிந்தியுங்கள்.

 இல்லை இல்லை மூன்று நாட்கள் ஊற வைத்தாலும் கெட்டுப்போகாது என்றால், கெட்டுப்போகாத நிலையில் ஒரு உணவுப் பொருள் இருந்தால், அந்த உணவுப் பொருளை கீழே கொட்டுவது வீண் விரையமாகாதா? என்ற கோணத்திலும் சிந்தியுங்கள்.

 இந்த ரிவாயத்தில் இடம்பெறும் அறிவிப்பாளர் ஷூஃபா அவர்கள் சனிக்கிழமையும் என்று ஒரு நாளை அதிகப்படியாக சேர்த்து சொல்லியுள்ளார்.

 முஸ்தஹ்ரஜ் அபீ ஆவானா 6549-ல் புதன் சாயங்காலம் ஊறவைக்கப்பட்டதை, வியாழக் கிழமையும், வெள்ளிக் கிழமையும் அருந்துவார்கள் என்றும் ஒரு ரிவாயத் வருகிறது.

 இன்றும், நாளையும் அதை அருந்துவார்கள் என்று கிழமையைக் குறிப்பிடாமல் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக முஸ்தஹ்ரஜ் அபீ ஆவானா 6550-வது செய்தி இடம்பெறுகிறது. அதிலும் ஷூஃபா அஸரு வரை என்று குறிப்பிடுகிறார்கள்.

 எனவே நபி (ஸல்) அவர்களுக்காக பேரீச்சம்பழத்தை எந்தெந்தக் கிழமைகளில் ஊறப் போடப்பட்டது? எப்போதெல்லாம் அதை அவர்கள் குடித்தார்கள்? இவை போன்ற பல்வேறு வினாக்களுக்கு இந்த பேரீத்தம்பழம் ஊரப்போட்ட செய்தியில் தெளிவான விடையில்லை.

எனவே குர்ஆன் சுன்னாவிலிருந்து எடுத்து வைக்கப்படும் நேரடியான ஆதாரங்களை வைத்தே மார்க்க சட்டங்களை விளங்க வேண்டுமே தவிர, பேரீத்தம்பழம் ஊரப்போடப்பட்ட இச்செய்தி போன்றவற்றை வைத்துக் கொண்டு ஒரு நாளின் தொடக்கம் மஃரிபு என்று வாதிப்பது அறிவுடைமையாகாது.

Read 764 times Last modified on புதன்கிழமை, 06 மே 2020 04:22