வெள்ளிக்கிழமை, 01 மே 2020 00:00

ஆதமுடைய மக்களின் அமல் பற்றிய வாதத்திற்கு விளக்கம்

Rate this item
(2 votes)

மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.

                                                                       பகுதி : 6A/7

'மஃரிபுதான் ஒரு நாளின் தொடக்கம் என்று பரப்பப்படும் தவறான வாதங்கள்ஒரு நாளின் ஆரம்பம் மஃரிபிலிருந்துதான் என வாதிடுவோர், தங்களது கூற்றுக்கு ஆதாரமாக சில செய்திகளை மேற்கோள் காட்டுகின்றனர். அவை நாளின் தொடக்கம் மஃரிபு என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களாக இல்லை. இன்னும் ஹதீஸ்கள் என அவர்கள் காட்டும் ஆதாரங்களில், பல செய்திகள் ஹதீஸாகவும் இல்லை. மாற்றுக்கருத்தினர் தங்களின் பிரதான ஆதாரங்களாக சுட்டிக்காட்டும் சுமார் 10 க்கும் மேற்பட்ட செய்திகளை முஸ்லிம் சமூகத்திற்கு விளக்கும் முகமாக இந்த ஆய்வுப் பதிவு அமைகிறது. அத்தகைய செய்திகளும் நமது விளக்கங்களும் பின்வருமாறு...

வாதம் 1 : ஆதமுடைய மக்களின் அமல்

َخْبَرَنَا أَبُو طَاهِرٍ الْفَقِيهُ ، أنا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ الْقَطَّانُ ، نا أَحْمَدُ بْنُ يُوسُفَ السُّلَمِيُّ ، نا سَالِم بْنُ شَيْخٍ بِالْبَصْرَةِ ، نا الْخَزْرَجُ بْنُ عُثْمَانَ ، عَنْ أَبِي أَيُّوبَ مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ' تُعْرَضُ الأَعْمَالُ عَشِيَّةَ كُلِّ خَمِيسٍ لَيْلَةَ الْجُمُعَةِ ، فَلا يُرْفَعُ فِيهَا قَاطِعُ رَحِمٍ ' . شعب الإيمان للبيهقي» رقم الحديث: 7474

ஒவ்வொரு வியாழன் மாலை வெள்ளி இரவன்று ஆதமுடைய மக்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படும். (அப்போது) குடும்ப உறவை முறித்தவனின் அமலை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவித்தவர்: அபூ ஹூரைரா (ரழி) நூல்: ஷூஃபுல் ஈமான்(7966)

விளக்கம் :

• மேற்படி அறிவிப்பில் ஹஸ்ரஜ் பின் உஸ்மான் ஸஃதி என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்ற செய்தி தஹ்தீபுல் கமால் கிதாபில் இடம் பெறுகிறது. பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்ட அறிவிப்பாளர் இடம்பெறும் ஹதீஸை ஆதாரமாக ஏற்க முடியுமா?

• வியாழனின் மாலை வெள்ளி இரவு என்பது சரியான மொழிபெயர்ப்பு அல்ல. 'ஒவ்வொரு வியாழக்கிழமை மாலையும், வெள்ளிக் கிழமையும்' என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பாகும்.

• மேற்படி செய்தியை ஆதாரமாக கருதும் மாற்றுக்கருத்தினர், அஷிய்யாஹ் என்றால் மாலை நேரமா? இரவு நேரமா? எத்தனை மணி? என்பதற்கு தெளிவான பதிலைத் தரவேண்டும்.

• முஸ்லிம் கிரந்தத்தில் 4758-வது ஹதீஸாக இடம்பெறும் ஸஹீஹான ஹதீஸ் வியாழன், மற்றும் திங்கள்கிழமை என்று கூறுகிறது. மேற்படி அறிவிப்பு இந்த ஸஹீஹான ஹதீஸூக்கு மாற்றமாகவும் உள்ளது.

حدثنا ابن أبي عمر ، حدثنا سفيان ، عن مسلم بن أبي مريم ، عن أبي صالح ، سمع أبا هريرة ، رفعه مرة قال : ' تعرض الأعمال في كل يوم خميس واثنين ، فيغفر الله عز وجل في ذلك اليوم ، لكل امرئ لا يشرك بالله شيئا ، إلا امرأ كانت بينه وبين أخيه شحناء ، فيقال : اركوا هذين حتى يصطلحا ، اركوا هذين حتى يصطلحا ' ழூ صحيح مسلم - كتاب البر والصلة والآداب باب النهي عن الشحناء والتهاجر - حديث : ‏4758‏ ஒவ்வொரு வியாழன் மற்றும் திங்கள் நாட்களில் அமல்கள் எடுத்துக் காட்டப்படும். அந்த நாளில் எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்க வில்லையோ அவரை அல்லாஹ் மன்னிப்பான். ஆனால் எவருக்கும் அவருடைய சகோதரருக்குமிடையே சச்சரவு இருக்குமோ அவரைத் தவிர. அப்போது இவர்கள் இருவரும் சமாதானம் ஆகும்வரை இவர்களை விட்டுவிடுங்கள் என்று கூறப்படும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹூரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள். முஸ்லிம் (4758)

Read 660 times Last modified on புதன்கிழமை, 06 மே 2020 04:23