சனிக்கிழமை, 08 பிப்ரவரி 2014 12:47

அமாவாசை பிறை பற்றிய பதிவு-2

Rate this item
(1 Vote)

Back To Main Article  

அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு பதிந்த பதிவுகள் -2

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். 

அஸ்ஸலாமு அலைக்கு வரஹ்
இந்த இணையதளத்தின் அட்மின் என்றபெயரில் ICOP சாகாக்களின்சுயகருத்துக்களையும், பொய்ச்செய்திகளையும் இத்தளத்தில் ஒருவர்தொடர்ந்து வெளியிடுகிறார். பிறைவிஷயத்தில் தனிப்பட்ட மனிதர்களைஅறிவு ஜீவியாகக் காட்டி கொண்டுமக்களை ஏமாற்ற நினைப்பதில்சிலருக்கு என்ன சந்தோஷமோ?


அமாவாசை அன்று தேய்பிறை பொதுவாகபுறக்கண்களால் பார்க்க முடியாமல்அது மறைக்கப்படும் என்பதற்குகுர்ஆன் சுன்னாவில் ஆதாரங்கள்உள்ளன. அதைத்தான் ஹிஜ்ரி கமிட்டிபிரச்சாரம் செய்து வருகிறது.அப்பிரச்சாரங்களை எதிர்கொள்ளதிராணியற்ற ICOP என்ற குழுதொலைநோக்கி மூலம் எடுக்கப்படும்போட்டோ பிறைகளையும், பொய்யானபோட்டோக்களையும் வெளியிட்டுஅப்பிறைகள் புறக்கண்களால்பார்க்கப்பட்டதாக பொய்ச் செய்திவெளியிடுவது வாடிக்கை. 

இவர்களுடைய பாணியில் பிறைபார்க்கப்பட்டதாக ஏதாவது ஒருஊரில் ஒருவர் கூறினால் சாதாரணமாகஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பலவியாக்கியானங்கள் செய்துகடைசியில் டவுன் காஜியின்அறிவிப்பையோ, சவூதியின்அறிவிப்பையோ அடிப்படையாக கொண்டேமாதத்தை ஆரம்பிப்பவர்கள்ஷியாக்கள் வாழும் ஈரானில் இருந்துஒருவர் பிறை தெரியாத நாளில் பிறைபார்த்ததாக கூறியதை அப்படியேநம்பி அதை விசாரிக்காமல் அதேபிறையை பார்த்த இன்னொரு சாட்சியார் என்பதை எல்லாம்தெளிவுபடுத்தாமல் பொத்தாம்பொதுவாக ஹிஜ்ரி கமிட்டியைஎதிர்ப்பதற்காக செய்திகளைவெளியிடுவதும் மேற்படி சகாக்களின்தனித்தன்மையாகும். 

21.38 UT யில் அமாவாசை நடைபெறும்நாளில் சுமார் 8:30 UT யிலுள்ளஈரானில் தேய்பிறையை புறக்கண்களால்பார்த்ததாக செய்திவெளியிடப்பட்டுள்ளது. இச்செய்திஅடிப்படையிலேயே பொய்ச்செய்திதான்என்பதை ஆய்வாளர்கள் எளிதில்அறிந்து கொள்வார்கள். அதை உண்மைஎன ஏற்று நம்பி காயல்பட்டினம்இணையதளமும் அச்செய்தியை அப்படியேவெளியிடுவது என்ன சாதனையோ? 

அமாவாசை அன்று பிறையை காண இயலாதா? நாளை முயற்சிக்கலாம்!! என்றதலைப்பில் இதே காயல்பட்டினம்இணையதளம் வெளியிட்ட செய்திக்குமறுப்பு தெரிவித்து சிலசகோதரர்கள் தங்கள் கருத்துக்களைப்பதிவு செய்தனர் பார்க்க :http://www.kayalpatnam.com/shownews.asp?id=12910 

காயல்பட்டினம்.காம் முன்புகூறியபடி இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங்போன்ற நாடுகளில் பிறைபார்க்கப்பட்டதா? இல்லையே!. 

கமெண்ட்ஸ் தொடர்ச்சி அடுத்தகமெண்ட்ஸ் பாக்ஸில் பார்க்கவும்.


posted by Siraj Eruvadi (Eruvadi) [01 February 2014]
IP: 122.*.*.*  India | Comment Reference Number: 32956
[இவரின் பிற கருத்துக்களை காணஇங்கு அழுத்தவும்]

கமெண்ட்ஸ் தொடர்ச்சி - 2

ஈரானில் பிறை தெரிந்திருந்தால், (அட்மின்!) பட்டியலிட்ட இந்தஊர்களில் எல்லாம் பிறை தெரிந்தபின்புதான் ஈரானில் தெரிந்திருக்கவேண்டும். அட்மின்! அவருடையபட்டியலில் உள்ள ஊர்களில் பிறைதெரியாமல் ஷியாக்களின் கொள்கையைபரப்பும் ஈரானில் மட்டும் பிறைதெரிந்துள்ளது மிகவும் ஆச்சரியமானவிஷயமாகும். 

காயல்பதியில் கூடகாயல்பட்டினம்.காம் அட்மின்அவரால் தன்னுடைய நிலையை நிரூபிக்கமுடியாமல் ஆனதைப்பற்றி எல்லாம்கவலைப்படாமல், ஈரானிய செய்தியைஅடிப்படையாக வைத்து செயல்படும்இந்த இணையத்தளம் பற்றி நாமும்எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

மேலும் அவர் பதிந்த செய்திகளில்இருந்து அவரிடம் கேட்கப்பட்டகேள்விகளுக்கு தக்க பதிலைத்தராமல் வழக்கம்போல போட்டோ பிறைபித்தலாட்ட செய்திகளை ICOP யினரைப் போல வெளியிட்டு தங்கள்இருப்பை காட்டிக் கொண்டால், அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரின்வழிகாட்டுதலுக்கு எதிரான கருத்தைபதிவு செய்யும் இவர்களின்முயற்சிக்கு வல்ல அல்லாஹ்வையேபொறுப்பு சாட்டுகிறோம். 

இந்த இணையதளத்தை நான் சாடுவதாகதயவுசெய்து யாரும் எண்ணிவிடவேண்டாம். ஒரு பானை சோற்றுக்குஒரு சோறு பதம். புரிந்துகொள்வதற்காக ஒன்றை தெளிவுபடுத்துகிறேன். 

ஒவ்வொரு ஹிஜ்ரி மாதங்களின்துவக்கம் பற்றிய செய்தி இதேஇணையதளத்தில் வெளியிடப்படும்.அதில் தமிழகப்பிறை, சர்வதேசப்பிறை, பிறைக் கணக்கீடுபோன்ற நிலைப்பாடுகள் படி மாதம்எப்போது ஆரம்பம் என்ற கருத்தில்இங்கு செய்தி வெளியிடப்படுகிறது.அதில்கூட கணக்கீடு என்றுவரும்போது கணக்கீட்டைசரிகாண்பவர்களிடம்முரண்பாடுகளும், கருத்துவேறுபாடுகளும் இருப்பதைப்போல'ஹிஜ்ரி கமிட்டி கேரளா' என்றுஇந்த இணையதளத்தில் பிரித்துஎழுதப்படுவதை நீங்களே காணலாம்.பிறை கணக்கீடை சரிகாண்பவர்கள்அனைவரும் ஒரே நாளில் மாதங்களைதுவங்கினாலும் ஹிஜ்ரி கமிட்டியைபிரித்துதான் எழுதுவார்கள். 

அதே நேரத்தில் தமிழகப்பிறைமற்றும் சர்வதேசப் பிறைநிலைப்பாட்டினர்கள் ஏதே ஒரேஅணியில் இருப்பதைப் போல அவர்கள்யார் யார் என்று பிரித்து எழுதமாட்டார்கள். ஹிஜ்ரி கமிட்டியினர்மீதுள்ள காழ்ப்புணர்ச்சியையும், வெறுப்புணர்வையும் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்றுநம்புகிறேன். 

இதன் தொடர்ச்சியை அடுத்தகமெண்டில் பார்க்கவும்.....


posted by Siraj Eruvadi (Eruvadi) [01 February 2014]
IP: 122.*.*.*  India | Comment Reference Number: 32957
[இவரின் பிற கருத்துக்களை காணஇங்கு அழுத்தவும்]

கமெண்ட்ஸ் தொடர்ச்சி 3

சந்திரனின் அறிவியல் படிசந்திரனின் தோன்றும்தேய்பிறையிலிருந்து வளர்பிறையாகமாறும் ஒரு சில வினாடிகள் மட்டுமேசந்திரனில் ஒளி ஏற்படாது. ஒரு சிலவினாடிகளுக்கு பிறகு ஒளிஏற்பட்டாலும் அதை பூமியில்இருந்து புறக்கண்ணால் பார்ப்பதுஎன்பது சாத்தியமற்றது.புறக்கண்பார்வையாளர்கள் இதுவரைஎத்தனை மணிநேரப்பிறையைபுறக்கண்ணால் பார்க்க முடியும்என்பதற்கு எந்தவிதமான அறிவியல்சான்றுகளையும் இதுவரை உலகிற்குசமர்ப்பிக்க முடியாமல்தத்தளிப்பதையும் உலகமே அறியும். 

மேலும், நமது ஹிஜ்ரி நாட்காட்டிகணக்கீட்டிற்கு அடிப்படையாகஅல்லாஹ் அமைத்துதந்த கிப்லாபகுதியில் சந்திர மாதத்தின் கடைசிநாளில் புறக்கண்ணால் பிறையைபார்ப்பது சாத்தியமே இல்லைஎன்பதைதான் நபி(ஸல்) அவர்கள்தெளிவாக விளக்கிவிட்டுசென்றுவிட்டார்கள். 

அதைத்தான் நபி(ஸல்) அவர்கள்உங்களுக்கு சந்திரனின் காட்சிமறைக்கப்படும் பொழுது நீங்கள்மாதத்தை கணக்கிட்டுக்எண்ணிக்கொள்ளுங்கள் எனகூறினார்கள். சந்திர மாதத்தின்கடைசி நாளில் சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே கோட்டிலோ, ஒரேநேர்கோட்டிலோ வரும் பொழுதுதான்சந்திரனின் ஒளி பூமிக்கு வராமல்இருக்கும் செயல் நடைபெறும் என்பதைகாயல்பட்டினம்.காம் ஒப்புக்கொண்டுவிட்டுதான், ஒளி வராது என்றுஹிஜ்ரி கமிட்டி கூறும் நாளானமாதத்தின் கடைசி நாளிலும் பிறைதெரிய வாய்ப்புள்ளது என்பதை பதிவுசெய்து வருகின்றார்கள். 

எனவே, கடைசி நாளில் சந்திரனில்ஒளிவருமா? வராதா? பிறை தெரியுமா? தெரியாதா? எத்தனை மணி நேரப்பிறையைகண்ணால் பார்க்க முடியும்? என்பதுபோன்ற சர்ச்சைகள் ஒருபுறம்இருந்தாலும், எது கடைசி நாள்என்பதை உலக மக்கள் துல்லியமாகஅறிந்து கொள்ள முடியும் என்பதைகாயல்பட்டினம்.காம்ஒப்புக்கொண்டுள்ளதற்கு நாம்அனைவரும் நன்றி சொல்லகடமைப்பட்டுள்ளோம். 

இவர்கள் எவ்வளவுதான் ஊதினாலும்அல்லாஹ்வின் சத்திய ஜோதியைஅணைத்திட இயலுமா? சத்தியமேவெல்லும், அசத்தியம் அழிந்தேதீரும். 

இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி


posted by Siraj Eruvadi (Eruvadi) [01 February 2014]
IP: 122.*.*.*  India | Comment Reference Number: 32958
[இவரின் பிற கருத்துக்களை காணஇங்கு அழுத்தவும்]

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கு வரஹ்........
சகோதரர் ஸாலிஹ் அவர்களுக்கு 

உலகப் பிரசித்திப் பெற்ற இணையதளம்என்று நீங்கள் வர்ணித்துள்ள அந்தICOP யினரின் இணையதளம் பிறைசம்பந்தமாக தொடர்ந்து பொய்ச்செய்திகளையே வெளியிட்டு வருகிறது.பிறையை யாரப்பா பார்த்தார்? என்றுநாம் கேட்டால், யாரென்ரேஅறியப்படாத ஒரு கிருஸ்தவர் போட்டோஎடுத்து அனுப்பியுள்ளார் என்றுபோட்டோவை பதிவார்கள். தற்போதுஅவர்களுக்கு ஒரு ஷியாநாட்டிலுள்ளவர் கிடைத்துள்ளார்.அல்லது வழக்கம்போலஅஸ்திரேலியாவின் சிட்னி நகரில்அமாவாசை அன்று பிறை தெரியும்என்பார்கள். இது அவர்களின்வாடிக்கை.
அதனால்தான் நாங்கள் கண்ணால்பார்த்தவர்களின் முகவரியையும், அது தொடர்பான தகவலையும்கேட்கிறோம். அமாவாசை அன்றுபுறக்கண்ணால் தேயும் பிறைபார்க்கப்பட்டதை யாரும் போட்டோஎடுத்துள்ளீர்களா என்று நாம்கேட்டு வருவதால்தான் (நீங்கள்கூறியுள்ள உலகப் பிரசித்தி பெற்றஅந்த இணையதளம்) டெலஸ்கோப்போட்டோக்களை வெளியிட்டுவருகிறார்கள் போலும். 

பிறையில் ஷியாப் பிறை, கிருஸ்தவப்பிறை என்றெல்லாம் இருப்பதாக நாம்கூறவில்லை. அதே நேரத்தில்இஸ்லாமிய மார்க்கத்தின் வணக்கவழிபாடுகளை முடிவு செய்வதற்கு பிறமதத்தவர்களின் பிறைத் தகவலைஎப்படி ஏற்பது? என்று கேட்கிறோம்.மேலும் அத்தகவல்கள்கூட பொய்த்தகவலாகவே உள்ளன. உலகப்பிரசித்திப் பெற்ற, உங்கள்அபிமானத்திற்குரிய அந்த இணையதளம்எந்த அடிப்படையில் பிறமதத்தவர்களின் பிறை சாட்சியைவெளியிடுகிறது? என்றுகேட்கிறோம். 

நாங்கள் கேட்பது தவறென்றால் ஒருகிருஸ்தவனோ, ஒரு யஹூதியோ அல்லதுமுஸ்லிமல்லாதவர்களோ பிறைபார்த்ததாக போட்டோ வெளியிட்டால்அதை ஏற்று முஸ்லிம்கள்செயல்படலாம் என்று காயல்பட்டினம்இணையதளம் முதலில் அறிவிக்கத்தயாரா?

ஜோர்டான் நாட்டிலிருந்தஜோடிக்கப்படும் தகவலை ஏற்றுவெளியிடும் உங்களுக்கு, உங்கள்நாட்டிலேயே உங்களுக்குஅருகாமையிலேயே வசிக்கும் எங்களைத்தொடர்பு கொண்டு விளக்கம்பெறதயக்கம் ஏன்? நீங்கள்அறியவேண்டியவை அனேகம் உள்ளன (UT Time Conversion உட்பட). 

ஹிஜ்ரி கமிட்டியினர் ஏற்கனவேகேட்டுள்ள கேள்விகளுக்கு பதில்இல்லை. நீங்கள் பிறை தெரியும்என்று முன்னறிவிப்பு செய்தநாடுகளில் பிறை தெரியவில்லைஎன்பதை மீண்டும் நினைவூட்டிமுடிக்கிறேன்.
இப்படிக்கு
சிராஜ்
ஏர்வாடி


posted by Siraj Eruvadi (Eruvadi) [02 February 2014]
IP: 122.*.*.*  India | Comment Reference Number: 32971
[இவரின் பிற கருத்துக்களை காணஇங்கு அழுத்தவும்]

Back To Main Article  

Read 3035 times Last modified on வியாழக்கிழமை, 13 பிப்ரவரி 2014 14:22