செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 11:53

சறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை!

Rate this item
(0 votes)

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...

சறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை!

ஹிஜ்ரி 1433 ஆம் ஆண்டின் இறையருள் பொழியும் இனிய ரமழானின் இறுதிப் பகுதியை நாம் அனைவரும் கடந்து கொண்டிருக்கிறோம் - அல்ஹம்துலில்லாஹ். இப்பிரசுரத்தின் தலைப்பை படித்தவுடன் சிலருக்கு நெருடல் ஏற்படலாம், சிலர் கோபமும் படலாம். எனினும் யாரையும் கோபமூட்டுவது ஹிஜ்ரி கமிட்டியினராகிய எங்களின்  நோக்கமல்ல, அதற்கான அவசியமும் எங்களுக்கு இல்லை.

காரணம் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கத்திற்கு சொந்தக்காரர்களாகிய முஸ்லிம்கள், பிறையை வைத்து பிரியக்கூடாது என்றும், பிறைகளால் முஸ்லிம் சமுதாயத்திற்குள் குழப்பம் ஏற்படும் அளவிற்கு வல்ல அல்லாஹ் தன் மார்க்கத்தை பலவீனமாக படைத்திடவில்லை என்பதையும் ஆணித்தரமாக பதிவுசெய்து அதை சர்வதேச முஸ்லிம் சமூகத்திற்கு மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்வதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். 

ஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ருதான்; மக்ரிப் அல்ல. அந்தந்த கிழமைகளில் தென்படும் பிறை அந்தந்த கிழமைகளுக்கே உரியது; அடுத்த கிழமைக்குரியது அல்ல. குர்ஆனின் (10:5,36:39) அறிவுறுத்தலின் படி பிறைகளின் அனைத்து படித்தரங்களையும் நாம் கவனமாக உற்றுநோக்கி  கணக்கிட்டு வரவேண்டும். உலக முஸ்லிம்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை என்ற 24 மணிநேரம் கொண்ட ஒரே நாளில் தங்களின் ஜுமுஆ தொழுகையை நிறைவேற்றுவது போலவே ரமழான் நோன்பை 24 மணிநேரம் கொண்ட ஒரே நாளுக்குள் ஆரம்பிக்க வேண்டும். நோன்பு பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாளை ஒரே நாளுக்குள் அனுசரிக்க வேண்டும். மற்ற மாதங்களையும் இவ்வாறே முறையாக ஆரம்பிக்க வேண்டும். இதுவே சரியான வழிமுறையாகும் என்ற பேருண்மையையும், பிறை குழப்பத்திற்கு இஸ்லாம் காட்டும் மிகச்சரியான தீர்வையும், குர்ஆன் சுன்னா கூறும் தெளிவான வழிகாட்டுதலையும் மக்களுக்கு நாம் எத்திவைத்து வருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.

அந்த அடிப்படையில் கடந்த வியாழக்கிழமை (19.07.2012) அன்றுதான் ஷஅபான் மாதத்தின் கடைசி நாளாகும். ஆனால், அன்றைய தினம் பிறையை உலகில் புறக்கண்களால் யாராலும் பார்க்க முடியாத அமாவாசை நாளாகும். வெள்ளிக்கிழமை (20.07.2012) அன்று ஹிஜ்ரி 1433ன் ரமழான் மாதம் ஆரம்பம் என நாம் ஏற்கனவே அறிவித்தோம். அதை உண்மைப்படுத்தும் வகையில் அன்று மக்ரிப் வேளையில் உலகின் பல்வேறு நாடுகளிலும் ரமழான் மாதத்தின் முதல் பிறையை அது மறையும் நேரத்தில் முஸ்லிம்கள் கண்டார்கள்.

 

மறு வியாழக்கிழமை (26.07.2012) அன்று பிறை அரைவட்ட வடிவமாகி ரமழானின் 7ஆம் நாள் எனக் காட்டியதையும், அதேபோல இந்த வருட ரமழான் மாதத்தின் 14ஆம் நாளான வியாழக்கிழமை (02.08.2012) அன்று பௌர்ணமி நிலவு முன்கூட்டியே கணக்கிட்டு வெளியிட்ட நம்முடைய நாட்காட்டி தேதிகளுக்கும்  நாம் புறக்கண்ணால் பார்த்ததற்கும் சரியாக உள்ளது என்பதை ஆதாரத்துடன் மக்கள் மன்றத்தில் மீண்டும் உறுதி செய்தோம்; அல்ஹம்துலில்லாஹ்.

ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளை நாம் துல்லியமாக முன்கூட்டியே முடிவு செய்து, புதிய மாதத்தை தவறில்லாமல் ஆரம்பிப்பதற்காக  வல்ல அல்லாஹ் குர்ஆனின் 36:39 வது வசனத்தில் உர்ஜூனில் கதீம் என்ற நிலை குறித்துக் கூறியுள்ளான். இதை நாம் நம் புறக்கண்ணால் பார்க்கவியலும். பிறையின் இந்த இறுதிப் படித்தரத்தை எதிர்வரும் வியாழக்கிழமை (16.08.2012) அன்று ஃபஜ்ர் வேளையில் கிழக்கு திசையில் நாம் காணலாம்.

அடுத்த நாள் வெள்ளிக்கிழமை (17.08.2012) அன்று இவ்வாண்டு ரமழான் மாதத்தின் இறுதி நாள் அமாவாசையாகும். இப்பிறையை உலகில் யாராலும் தம் புறக்கண்களால் காணமுடியாது; அன்று பிறை புறக்கண்களுக்கு (கும்ம) மறைக்கப்பட்டிருக்கும்.

எனவே அதற்கு அடுத்த நாளான சனிக்கிழமை (18.08.2012 ) ஷவ்வால் பிறை 1 ஆகும். அந்நாளில் உலக முஸ்லிம்கள் அனைவரும் சந்தோஷமாக மக்களுக்கு உணவளித்து அல்லாஹ்வை பெருமைப்படுத்தி, புகழ்ந்து நோன்புப் பெருநாளை கொண்டாட வேண்டிய நாளாகும். எனவேதான், அன்று நோன்பு நோற்பது ஹராம் என மார்க்கம் தடைசெய்துள்ளது.

உண்மை நிலை இவ்வாறு இருக்க சர்வதேசப் பிறை என்றும், பிறை பார்த்த தகவலின் அடிப்படையில்தான் நாங்கள் செயல்படுகின்றோம் என்றும் கூறி, முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்றி, மார்க்கத்தில் குழப்பம் ஏற்படுத்திக் கொண்டிருப்பது எந்த விதத்தில் நியாயம் என சம்பந்தப்பட்டவர்களை நாம் கேட்கிறோம்.

தத்தம் பகுதி பிறை என்ற நிலைப்பாட்டில் இருந்தவர்கள் தற்போது ஊர் பிறையாகவும், பின்னர் மாவட்டபிறையாக மாறினர். இதனால் இவர்களின் பழைய  நிலைபாடு அனைத்தும் முற்றிலுமாகக் காற்றில் கரைந்துபோனது. இன்றோ மாநில அளவு பிறை என்று மாறி அதிலும் இவர்கள் உறுதியாக நிற்காமல் இஸ்லாம் எல்லையை நிர்ணயிக்கவே இல்லை; எனவே, எல்லையை நாமே நம் இஷ்டத்திற்குத் தீர்மானித்துக் கொள்ளலாம் என்று புதுமையான பல்டி அடித்திருக்கிறார்கள். அவர்களும் சர்வதேசப் பிறையை சரிகாணும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே,  இனி சர்வதேசப் பிறை குறித்த அடிப்படை முரண்பாடுகளை விளக்குவதே இப்பிரசுரத்தின் தலையாய நோக்கம்.

உலகில் எங்கு பிறை தென்பட்டாலும் அதை புறக்கண்ணால் பார்த்துவிட்டு அதற்கு அடுத்த நாள் நோன்பு, அல்லது பெருநாள் தினத்தை அனுசரிக்க வேண்டும் என்பதே சர்வதேசப்பிறையினரின் நிலைபாடாகும். இந்நிலைபாட்டால் மாவட்ட, மாகாண, மாநிலப் பிறையினரைப் போலவே ஒவ்வொரு வருடமும் சர்வதேசப்பிறையினரில் பெரும் பகுதியினர் ரமழான் முதல்நாளை அறியாமையினால் விட்டுவிடுவதும்,  நோன்பு நோற்பது ஹராம் என தடைசெய்யப் பட்டுள்ள பெருநாட்களில் நோன்பு நோற்கும் நிலையும் ஏற்படுகிறது.

மேலும், சர்வதேசப் பிறையை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சிக்கல்களும் நிறைந்துள்ளன. இவர்களின் சர்வதேசப் பிறை கொள்கை சரியாக இருந்து வந்தால், சர்வதேச முஸ்லிம்களுக்கும் பாரபட்சமற்ற தீர்வு அதில் கிடைத்திருந்திருக்க வேண்டும். புரியும்படி சொல்வதென்றால், அவர்களின் வாதப்படி கஅபா அமைந்திருக்கும் மக்காவிற்கு, மேற்கிலுள்ள நாடுகளில் முதல்நாளின் பிறை தெரிகிறது என வைத்துக்கொள்வோம். கஅபாவிற்கு கிழக்கில் உள்ள இந்தியர்கள் நள்ளிரவில்தான் இப்பிறை தகவலை பெறுவார்கள். எனவே, இந்தியாவிலுள்ளவர்கள் அவசர கோணத்தில் சஹர் உணவு தயாரிப்பில் ஈடுபடவேண்டும்.

இன்னும் இந்தியாவிற்கு சற்று அருகே கிழக்கேயுள்ள நாட்டு மக்கள் பலருக்கு இந்த தலைப்பிறை அறிவிப்பு கிடைக்காமலேயே போய்விடும். அதே நேரம் இந்தியாவிற்கு மிகவும் தூரமான கிழக்கேயுள்ள ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலுள்ளவர்களோ விடிந்து மறுநாள் காலையில் இருப்பார்கள். இதனால் ஒவ்வொரு வருடமும் முதல் நோன்பை இழந்து இரண்டாவது நோன்பை முதல்நோன்பாகக் கருதி சரியான நாட்களில் அமல்களை செய்யாமல் தவறுகின்றனர். இந்த தவறை இஸ்லாம் அங்கீகரிக்குமா?

சர்வ தேசப் பிறையா? சவுதி தேசப் பிறையா?

உலகில் எங்கு பிறைபார்க்கப்பட்டாலும், அல்லது பிறைபார்த்த தகவல் எங்கிருந்து கிடைத்தாலும் அதை ஏற்று செயல்படுவது என்பதுதான் சர்வதேசப் பிறையினரின் நிலைபாடு என்று பொதுமக்கள் நம்பியுள்ளனர். ஆனால், இந்த பிறை அறிவிப்பை வெளியிடுபவர்களோ சவுதி அரேபியாவைத் தவிர மற்ற நாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை, சவுதி அரசு பிறை அறிவிப்பை அறிவிக்காத பட்சத்தில் மற்ற நாடுகளில் பெறப்பட்ட அறிவிப்புகளை வைத்து இவர்கள் அமல் செய்வதுமில்லை. அவ்வளவு ஏன்?  பிற நாடுகளில் பிறை பார்த்த தகவல் நம் நாட்டிற்கு முன்கூட்டியே தெரிய வந்தாலும், சவுதி அரேபியா அறிவிக்கும் வரை, அதாவது இரவு 11 மணிவரை காலதாமதம் செய்ததன் இரகசியம் என்ன? இதன் மூலம் சர்வதேசப் பிறையை நம்பியுள்ள அப்பாவி மக்களை ஏமாற்றியதே மிச்சம்? எனவே, இவர்கள் சர்வதேசப் பிறையினர் அல்ல; சவுதிதேசப்பிறையினர் என்றே கூறவேண்டும்.

சர்வதேசப்பிறையினராகிய நீங்கள் சவுதிஅரேபியாவை அடிப்படையாகக் கொள்ள காரணம்தான் என்ன எனக் கேட்கப்பட்டால்,  'சவுதி அரேபியாவில் இஸ்லாமிய அரசாட்சி உள்ளது. இது உலமாக்கள் நிறைந்த நாடு, ஹஜ்ஜை அறிவிக்கும் அதிகாரம் அந்நாட்டிற்கே இருக்கிறது என்பன போன்ற சவுதியின் புகழை விவரித்துவிட்டு சவுதியை நம்பலாம் மற்ற நாடுகளின் அறிவிப்பை ஏற்றுக் கொள்ள இயலாது, மற்ற நாட்டு அறிவிப்பில் நம்பகத் தன்மையில்லை' என நாக்கூசாமல் பொய்யுரைக்கின்றனர்.

என்னே ஒரு பதில்! ஸூமு லி ருஃயத்திஹி வஅஃப்திரு லி ருஃயத்திஹி என்ற நபிமொழி எல்லாம் தற்போது வசதியாக மறந்துவிட்டதே. இவர்கள் சர்வதேசப் பிறையிலிருந்து சறுக்கி விழுந்து, சவுதி தேசப் பிறையில் தஞ்சமடைந்துவிட்டதற்கு இப்படியா சப்பைகட்டு கட்டவேண்டும்? நாங்கள் தவறுதலாக ஒரு நோன்பை விட்டுவிட்டோம், இரண்டாவது நோன்பை முதலாவது என்று அறிவித்துவிட்டோம். எனவே, ஒரு நோன்பை களாச்செய்யுங்கள் என்று இதே சவுதி அரசாங்கம் பலமுறை அறிவிப்பு செய்துள்ளதை மறந்துவிட்டார்கள் போலும். இவர்கள் சொல்வது போல சவுதியில் இஸ்லாமிய அரசு இருப்பதால் அவ்வரசின் விதிகளுக்கெல்லாம் இவர்களும் கட்டுப்படுவார்களா?

சவுதிஅரேபியா உலமாக்கள் நிறைந்த நாடு அங்குதான் புனித நகரங்கள் உள்ளன என இவர்கள் சொல்வதால், நாம் கேட்கிறோம் சவுதி உலமாக்களின் ஃபத்வாபடிதான் அங்குள்ள புனிதமிக்க இரு ஹரமிலும் ரமழானின் தராவிஹ் 20 ரக்அத்துக்கள் தொழுகை நடத்தப்படுகின்றன. எனவே, சர்வதேசப் போர்வையில் இருக்கும் சவுதி தேசப்பிறையினர் ரமழானில் தராவிஹ் 20 ரக்அத்துக்கள் சரியானதே என அறிவிப்பார்களா?

சவுதி உலமாக்களின் ஃபத்வாபடிதான் வித்ரு தொழுகைளில் இமாம் நீண்ட துஆவை சப்தமிட்டு ஓத மற்றவர்கள் அனைவரும் ஆமீன் ஆமீன் என்று கூறும் பித்அத்தை அங்கீகரித்து ஏன் இவர்களும் அதைப்போலவே அமல் செய்யக்கூடாது? மேலும் பலஹீனமான ஹதீஸ், ஸலபுஸாலிஹீன்கள், துஆ, சூனியம், வங்கிகளில் பணிபுரிவது, இன்ஸூரன்ஸ் பாலிஸி போன்ற எத்தனையோ சட்ட விஷயங்களில் இதே சவுதி உலமாக்களின் நிலைபாட்டை இவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரா? பிறைக்கு மட்டும்தான் சவுதி அரேபியாவா? ஏன் இந்த இரட்டை நிலைபாடு?

மார்க்க அறிவில் சிறந்த எத்தனையோ சிந்தனையாளர்கள் சவுதியில் இருப்பதை நாம் மறுக்கவில்லை. அவர்கள் அனைவரையும் நாமும் மதிக்கிறோம். அவர்களின் சிந்தனைகள் வளம்பெற்று அவர்களின் மார்க்க சேவைகள் மேலோங்க  நாம் துஆ செய்கிறோம்.  அல்லாஹ் அவர்களுக்கு அருள் செய்யட்டும்.

அதே சமயம் பிறைவிஷயத்தில் மக்காவை மையமாக வைத்து 29ம் நாளன்று மக்காவில்  சூரியனுக்கு முன்னால் சந்திரன் மறைந்து விட்டால் அந்த மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்தி செய்யவேண்டும் என்றும், சூரியன் சந்திரனுக்கு   முன்பாகவே மறைந்து விட்டால் அடுத்த நாள் முதல் நாள் என்றும், இதுவே மக்கா தேதிக்கோடு என்ற அவர்களின் புதிய நிலைபாடு. இன்றைய நாளின் மறையும் பிறையை பார்த்துவிட்டு அது அடுத்த நாளைக்குரிய பிறை என்று அறிவிப்பதையும், நாம் குர்ஆன் சுன்னா அடிப்படையிலும் விஞ்ஞான ரீதியிலும் மிகவும் தவறு என்கிறோம்.

காரணம் மக்காவில் சந்திரன் சூரியனுக்கு முன்னால் மறைந்து மக்ரிப் வேளையும் முடிந்துவிட்டால் அதோடு அந்த நாள் முடிந்து விடவில்லை. மக்காவிற்கு மேற்கே பல நாடுகளில் கோடான கோடி முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அந்த நாடுகளில் ஏதேனும் ஒன்றில் சந்திரன் மறைவதற்கு முன்னால் சூரியன் மறைந்து அதற்குப்பின் சந்திரன் மறையும். எனவே, அவர்களுக்கும் சேர்த்து தீர்வைச் சொல்வதுதான் மார்க்கம் மற்றும் அறிவார்ந்த செயல் என்கிறோம்.

 

இன்னும், நாம் அனைவரும் மதிக்கும் அத்தகைய பெரும் சிந்தனையாளர்களோடும், சவுதி அரசாங்கத்தின் உயர்நிலை விண்ணியல் நிபுணர்களோடும் ஒரே மேடையில் அமர்ந்து விவாதித்து விட்டு, நாம் வைத்த ஆதாரங்களை அவர்கள் மறுக்க இயலாத நிலையில், ஹிஜ்ரி கமிட்டியின் நிலைபாட்டை ஆணித்தரமாக அவர்களுக்கு முன்னர் எத்தி வைத்துவிட்டுத்தான் பிறைவிஷயத்தில் சவுதியின் நிலைபாடு தவறு என்பதை நாம் சொல்கிறோம்.

எனவே, பிறையை அறிவிப்பதில் சவுதிஅரேபியாவுக்கு என்று எவ்வித தனிப்பட்ட அதிகாரம் எதையும் அல்லாஹ் வழங்கவில்லை என்கிறோம். அவர்கள் நிலைபாட்டின் தவறுகளை நேரடியாகவே பல வழிகளிலும் அவர்களுக்கு இன்றும் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறோம்; அல்ஹம்துலில்லாஹ். எனவே, குர்ஆன் மற்றும் சுன்னா மட்டுமே மார்க்கம் என்று சொல்லி சர்வதேசப்பிறையை சரிகண்டவர்கள் சவுதிபிறைக்குள் சட்டெனச் சறுக்கியது பரிதாபத்திற்குரியதே!

சவுதிதேசத்துபிறை அல்லது சவுதி அரேபியாவின் அறிவிப்பை உறுதி செய்வதிலாவது இவர்கள் உறுதியாக இருக்கிறார்களா என்றால் அதுவுமில்லை என்பதே உண்மை. சவுதிஅரேபியா ஹிஜ்ரி 1433ன் ரமழான் மாதம் துவக்கம் என்ற அறிவிப்பை  வியாழன் (19.07.2012) அன்று இரவு சவுதிநேரம் சுமார் 8:15 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. நம் இந்திய நாட்டில் அப்போதைய நேரம் இரவு 10:45 ஆகும்.

தொலைக்காட்சியில் அறிவிப்பை பார்த்த மறுகனமே சவுதியில் பிறை பார்க்கப்பட்டுவிட்டது என்ற தகவல் சர்வதேசப்பிறையினரால் மக்களிடம் பரப்பப்பட்டது. சவுதியில் பிறை எங்கே எப்பொழுது தெரிந்தது என்ற தகவலை முறைப்படி அவ்வரசை தொடர்பு கொண்டு இவர்கள் கேட்டுப்பெறவுமில்லை, சவுதியில் பிறை தெரிந்தது என்பதை சவுதி அரசாங்கம் மிகவும் காலம் தாமதித்து சவுதி நேரம் இரவு 8:15 மணிக்கு ஏன் அவர்கள் அறிவிக்க வேண்டும், மக்ரிபுக்கு பிறகே அறிவித்திருக்கலாமே என பொதுமக்கள் யாரும் கேள்வி எழுப்பவுமில்லை.

சவுதிஅரேபியா கடந்த வியாழன் (19.07.2012 )அன்று ரமழான் தலைப்பிறை அறிவிப்பை வெளியிடாவிட்டாலும்  வெள்ளி (20.07.2012) அன்று ரமழான் முதல் நோன்பை சரியாக ஆரம்பிப்பதற்கு மக்கள் தயாராகவே இருந்தனர் என்பது வேறு. ஆக சவுதியின் அறிவிப்பை உறுதிப்படுத்துவதில் கூட சர்வதேசப்பிறையினர் சறுக்கித்தான் விழுந்தனர்.

நம்மைப் பொருத்தவரையில் சவுதியில் பிறை தெரிந்ததா? அமாவாசை தினத்தில் இவ்வாறு பிறையை அறிவிக்கிறார்களே என்ற ஆராய்ச்சிகளுக்குள் நாம் செல்ல விரும்பவில்லை. சவுதி தவிர்த்து மற்ற நாடுகளிலுள்ள சக முஸ்லிம் சகோதரனின் ஷஹாதாவை ஏற்கலாமா என்ற சந்தேகத்தில் சர்வதேசப்பிறையினரைப் போல நாம் இல்லை.

அதேவேளையில் 'பிறையை புறக்கண்களால் பார்த்து மாதத்தை துவக்க வேண்டும்' என்று பேசித்திரிபவர்கள் மாதத்தின் முதல்நாளில் மக்ரிப் வேளையில் தென்பட்டு மறையும் பிறையை புறக்கண்களால் பார்த்து சாட்சி சொல்லும் சக முஸ்லிம் சகோதரனை சந்தேகிப்பதும், மனிதன் தன் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்திக் கொண்ட மாநில, தேசிய எல்லைக்கோடுகளை காரணம்காட்டி அந்த சாட்சியத்தையே நிராகரிப்பதையும் நாம் கண்கூடாகக் கண்டுவருகிறோம்.

நம்மைப் பொருத்தவரை குர்ஆனுக்கும் சுன்னாவிற்கும் உட்பட்ட விஞ்ஞானமே சரியானது. அதைமட்டுமே நாம் ஏற்கிறோம். குர்ஆனும் சுன்னாவுமே நமக்கு முக்கியம்; விஞ்ஞானம் நமக்கு இரண்டாம் பட்சம் என்கிறோம். உதாரணமாக மனித உயிரின் மூலத்தைக் கண்டு பிடித்துவிட்டோம் என்ற ஆராய்ச்சி முடிவையும். வேற்றுகிரகத்தில் மனிதர்கள் இருக்கிறார்கள் (Aliens) என்று ஸ்டீபன் ஹாக்கின்ஸ் போன்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியே சொன்னாலும் அந்த அறிவியல் முடிவை நாம் மறுக்கிறோம்.  காரணம் இப்பூமியைத்தான் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற இடமாக அல்லாஹ் ஆக்கியுள்ளானே தவிர வேற்று கிரகங்களில் எந்த மனிதனும் சுயமாக வாழ இயலாது. அல்லாஹ்வைத் தவிர வேறு எவராலும் உயிரை படைக்க இயலாது என்று குர்ஆன் கூறும் உண்மைகளில் நாம் மிகமிக உறுதியாக இருக்கிறோம்.

பிறைகளை கணக்கிடுங்கள் என்று நாம் சொல்வதை ஏதோ ஏசிஅறையில் உட்கார்ந்து கொண்டு கம்பியூட்டர் தட்டி சொல்வதாக சிலர் நினைத்துக் கொண்டுள்ளனர். தமிழக வரலாற்றில் பல வருடங்களாக பிறைகளின் படித்தரங்களை கவனமாக அவதானிப்பவர்கள் ஹிஜ்ரி கமிட்டியினர்தான். மாறாக பிறைவிஷயத்தில் அது எங்கு உதிக்கிறது எங்கு மறைகிறது என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத சிலர் 29 ஆம் நாளின் சூரியன் மறையும் நேரத்தில் பிறையை புறக்கண்களால் பார்த்தே மாதத்தை துவங்கி ஆக வேண்டும் என்று மார்க்கத்தின் பெயரால் மக்களை குழப்பி பிளவுபடுத்துகின்றனர் என்கிறோம்.

காரணம் அல்லாஹ்வின் பிரம்மாண்ட படைப்புகளான சூரியனும் சந்திரனும் அவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட கணக்கின்படியே இயங்குகின்றன என்கிறது திருக்குர்ஆன் (55:5). நேரத்தையும் காலத்தையும் மனிதர்கள் அறிந்து கொள்வதற்காகவே இவற்றை படைத்துள்ளதாக வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறான். (பார்க்க : 2:189, 6:96, 10:5, 13:2, 21:33, 36:38-40). அறிந்தோ அறியாமலோ கணக்கீட்டு முறையை முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறது, அவற்றை நடைமுறையில் நாம் பின்பற்றிதான் வருகிறோம்.

சூரியனை அடிப்படையாக வைத்து செய்யவேண்டிய காரியங்களான தொழுகை நேரங்களை எவரும் இன்று நிழல்களை புறக்கண்ணால் பார்த்து அறிந்துகொள்வதில்லை. அதுபோல சஹர் நேரத்தை ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் (2:187) என்ற இறைகட்டளையை எவரும் புறக்கண்ணால் பார்த்து இன்று நடைமுறைப் படுத்துவதில்லை. மாறாக விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ள நேரங்களின் அடிப்படையில்தான் அட்டவணையிட்டு நாம் அனைவரும் பின்பற்றுகிறோம். இதற்கு எவரும் தற்போது ஆட்சேபனை தெரிவிப்பதில்லை; இது ஏன்?

ஆனால், சந்திரனை அடிப்படையாகக் கொண்ட அமல்களை செய்வதற்கு மட்டும் நிலவை புறக்கண்ணால்தான் பார்ப்போம் என்று பிடிவாதமாக இருப்பது எந்த விதத்தில் நியாயம்? வல்ல அல்லாஹ் சூரியனைப்போலவே சந்திரனையும் சேர்த்துதான் துல்லியமாக இயங்குவதாக சொல்கிறான். சூரியனை நாங்கள் கணக்கிடுவோம், ஆனால், சந்திரனை கணக்கிட மாட்டோம் என்றால் இதை நாம் எங்கு போய் சொல்வது? ஒருவேளை சந்திரன் துல்லியமாக இயங்கவில்லை என்கின்றனரா? சூரியனுக்கு ஒரு விதி சந்திரனுக்கு ஒரு விதியா? ஏன் இந்த பாரபட்சம்? இப்படித்தான் அல்லாஹ் கூறியுள்ளானா எனக் கேட்கிறோம்.

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். 2:44

இன்னும், தமிழக முஸ்லிம்கள் முறையே சுன்னத் ஜமாஅத், தப்லீக் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத் என்று மூன்று பெரும்பான்மை பிரிவுகளாக பிரிந்துள்ளனர். இதில் ஏகத்துவ சிந்தனையுள்ளவர்களைத் தவிர மற்ற ஜமாஅத்தினர் பிறை விஷயத்தில் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லையே என்ற கருத்தும் தற்போது நிலவுகிறது.

நம்மைப் படைத்த இறைவனையே இன்னும் சரியாக விளங்காமலும், இறைவன் நமக்கு அளித்துள்ள வேதமான திருமறைக் குர்ஆன் நமக்கு புரியாது என்றும், தங்கள் முன்னோர்கள் செய்தவற்றையே மார்க்கமாக நம்பும் மேற்படி ஜமாஅத்தினருக்கு குர்ஆன் சுன்னா ஒளியில் பிறைபற்றிய விளக்கங்கள் சென்றடைய, அவர்கள் புரிந்துகொள்ள ஒருவேளை சற்று தாமதமாகலாம், அவர்கள் மீதும் நாம் நல்லெண்ணம் கொள்கிறோம்.

அதுபோல இந்த ஜமாஅத்தினர் வானத்திற்கு மேலும், பூமிக்கு கீழுள்ளவற்றை பற்றிதான் கவனம் எடுக்கிறார்கள், இதற்கு இடைப்பட்ட விஷயங்களை இவர்கள் பேசுவதேயில்லை என்ற பெயர் புகழுக்கு சொந்தக்காரர்கள்கூட ஒருவேளை பிறை வானத்திற்கும் பூமிக்குமிடையே மாட்டிக்கொண்டதால் தற்போதைக்கு இவ்விஷயத்தில் அவர்கள் கவனம் எடுக்காமல் இருக்கலாம். எனவே அவர்கள் மீதும் நாம் நல்லெண்ணமே கொள்கிறோம்.  ஹிஜ்ரி கமிட்டியினாராகிய நம்மைப் பொருத்தவரையில் பிறை சம்பந்தமான விளக்கங்களை முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவாகத்தான் நாம் எத்தி வைக்கிறோம். இன்ஷா அல்லாஹ் அவர்களும் பிறை கணக்கீடு நிலைபாட்டை விரைவில் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம். ஹிதாயத்து அளிப்பவன் அல்லாஹ் அல்லவா.!

அதுபோல இன்றைய நிலையில் யாரெல்லாம் உண்மை தவ்ஹீது ஜமாஅத்தினர் என்று பட்டிமன்றம் நடத்துமளவிற்குத்தான் நிலைமை உள்ளது. இதில் தங்களை தவ்ஹீத் ஜமாஅத் என்று கூறும் சகோதரர் பி.ஜெய்னுல் ஆப்தீன் அவர்களுடைய இயக்கத்தின் பிறை நிலைபாடு சற்று விசித்திரமானது, வித்தியாசமானதும் கூட. காரணம் ஊருக்குஊரு உதுமான் லெப்பை என்ற ரீதியில் தத்தம்பகுதி பிறை என்ற நிலைபாட்டை மணிக்கணக்கில் பேசிமுடித்து  சீடிக்கள் பல வெளியிட்டு, சக முஸ்லிம்களை ஒருபிடி பிடித்த சகோதரர் பி.ஜே தற்போது சப்தமில்லாமல் தமிழக பிறைக்கு வந்துவிட்டார். அவர்களின் இயக்கம் பக்கத்து மாநிலங்களுக்கு பரவினால் அப்போது என்ன நிலைபாடு எடுப்பார்களோ! பிறகு வளைகுடா வாழ் தவ்ஹீத் ஜமாஅத் பேரவை சகோதரர் பி.ஜேக்கு நெருக்கடி கொடுக்கும் பட்சத்தில் அப்போது என்ன நிலைபாட்டை எடுப்பார்களோ! எது எப்படியோ அண்ணனிண் மனக்குழப்பத்திற்கும், சறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை குழப்பத்திற்கும் ஒரே தீர்வு அல்லாஹ் மனிதகுலத்திற்கு வழங்கியுள்ள சந்திர கணக்கீட்டின் அடிப்படையிலான காலண்டர்தான் என்பதை மிக அழுத்தமாக சொல்லிக் கொள்கிறோம். 

எதிர்வரும்  சனிக்கிழமை (18.08.2012) அன்று  ஷவ்வால் பிறை 1 என்பதற்கு  ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாங்கள் உலக மக்களுக்கு சாட்சியாக இருக்கிறோம். உலக முஸ்லிம்கள் அனைவரும்  சனிக்கிழமை (18.08.2012) அன்று தவறாது, ஒற்றுமையாக, சந்தோசமாக நோன்புப் பெருநாள் என்னும் ஈகைத் திருநாளை உணவளித்து, அல்லாஹ்வை மேன்மைப்படுத்தி, கொண்டாடுமாறு  ஹிஜ்ரி கமிட்டி கேட்டுக்கொள்கிறது.

வல்ல அல்லாஹ் நம் யாவரையும் மார்க்கத்தில் உள்ளதை உள்ளபடி விளங்கி சரியான முறையில் அமல்செய்து நன்மைகளை பெற்றுக் கொள்ள அருள் செய்வானாக.

இவண்:

ஹிஜ்ரி கமிட்டி,  160/101, வடக்கு மெயின் ரோடு, ஏர்வாடி - 627103, தமிழ்நாடு.
Mobile Contacts: 99626 22000,    99626 33000,    99626 44000,   99624 77000,    99626 33844,   95007 94544,

                            99943 44292,    93440 96221,   94439 55333,    94432 55643,   99524 14885,     99408 11119

Websites:- www.mooncalendar.in, www.hijricalendar.com,  www.hijracalendar.in,  www.hijricommittee.in  

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 

Google Group: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பெருநாள் தொழுகை நடைபெறும் இடங்கள்

தமிழ் நாடு:

1.         சென்னை: சிராஸ் மஹால் இம்பீரியல், எக்மோர் ரயில் நிலையம் அருகில் 97890 52342,   98842 15018, 99626 44000

2.         தூத்துக்குடி: மாதவ நாயர் காலணி, திரேஸ்புரம்  98424 50277

3.         காயல்பட்டினம்:  காயல்பட்டினம்  கடற்கரை திடல்  99408 11119

4.         திருநெல்வேலி: பஜார் திடல், மேலப்பாளையம் 94432 55643, 99524 14885

5.         ஏர்வாடி, திருநெல்வேலி: அல்ஹுதா பிரைமரி பள்ளி, ஏர்வாடி 94431 03500

6.         சங்கரன் கோவில், திருநெல்வேலி : திருவேங்கடம் சாலை,  மனோ கல்லூரி எதிரில்,  9042615727  

7.        நாகர்கோவில்: தாருஸ் ஸலாம் தோட்டம், மாலிக் தீனார் நகர் அருகில், வட்டவிளை ஜங்ஷன், 9894815377, 9442760699,

           9894823031, 8300101380, 9994585641, 9600957772

8.         தஞ்சாவூர்: கிழக்கு வாசல் (East Gate ), அண்ணா திருமண மண்டப திடல், உருது கூல் மைதானம்  98942 77442,

            99945 16368   

9.        திருச்சி: அரிஸ்டோ திருமண மண்டபம், திருச்சி ஜங்ஷன்  9786319310

10.      இராமநாடு பாம்பன்: ரயில்வே மைதானம், மஸ்ஜித் தவ்ஹீத் அருகில், சாயக் காரத்தெரு 99626 33844

11.     கோயம்புத்துர்: ஜீவன்ஸ் திடல், டோல் கேட் அருகில், காரமேடு, கரும்புக்கடை கோவை - 8,   90428 99396, 97896 35329

 கேரளா:

1.         எர்ணாகுளம் டவுன் ஹால்  09605757190

2.         ஆலுவா, முனிசிபல் டவுன் ஹால் 098950 44827

3.         ஆட்டிங்கல், திருவனந்தபுரம், மூன்று முக்கு, கேஸ் பம்ப் எதிரில், 9446662889

4.         கோழிக்கோடு ஜூப்ளி ஹால்,  9446338507

5.         சாவக்காடு, வியாபார பவன், 9645459357

மும்பை - மஹாராஷ்ட்ரா:

கிளிப்டன், அந்தேரி மேற்கு, மும்பை  09004335151, 9324935151.

 

Read 2233 times Last modified on சனிக்கிழமை, 08 பிப்ரவரி 2014 12:35