செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 10:47

பி.ஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில்

Rate this item
(1 Vote)
 பி.ஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......

சகோதரர் பி.ஜைய்னுல் ஆபிதீன் அவர்களுக்கு,

பிறைகள் விஷயத்தில் குர்ஆனை நிராகரிக்கலாமா? டி.என்.டி.ஜே யின் நிலைபாடான தத்தமது பகுதி பிறை சரியா? ஆகிய இரு தலைப்புகளின் கீழ் விவாதிக்கத் தயார் என நாங்கள் இணையத்தில் அறிவித்திருந்தோம்.

நாங்கள் குறிப்பிட்டிருந்த விவாதத்தின் தலைப்புகளை கண்டவுடன் மௌனம் காத்த நீங்கள், பலரும் நெருக்கடி கொடுத்தவுடன், வேறுவழியின்றி உங்களது முழு கோபத்தையும் வெளிப்படுத்தும் விதமாக பிறை விவாத சவடால்  எனும் தலைப்பில் முற்றிலும் முரண்பாடான ஓர் அறிவிப்பை இணையத்தில் வெளியிட்டு ஏர்வாடி ஜாக்கிற்கு சில கட்டளை(?)களையும் பிறப்பித்துள்ளீர்கள். 

எனவே உங்களின் அறியாமை நிறைந்த முரண்பாடுகளின் தொகுப்பான அந்த அறிவிப்பு குறித்தும்எஸ்.கமாலுத்தீன் மதனிக்கு நீங்கள் தெரிவித்த பாராட்டு செய்தியை குறித்தும் அலசுவோம்.

// ஜாக் தலைவர் கமாலுத்தீன் மதனி அவர்களை மனம் திறந்து பாராட்டுகிறோம்.  தவறுகளை ஒப்புக்கொண்டவர்களை அந்த விஷயத்தில் விமர்சனம் செய்து அவர்களை மனச்சோர்வடையச் செய்யக் கூடாது.  அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இல்லாவிட்டால் தவறு செய்தவர்கள் திருந்துவதற்கு தயங்கும் நிலை ஏற்படும்.

தமிழகத்தில் ஒவ்வொரு ரமளான் மாதம் ஆரம்பிக்கும் போதும் இரண்டு பெருநாட்களின் போதும் ஜாக் இயக்கத்தின் குழப்பமான நிலைபாடு அந்த இயக்கத்தினருக்கே மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

எனவே இதுகுறித்து தவ்ஹீத் ஜமாஅத்தினர் யாரும் தம்பட்டம் அடிக்காமல் நாங்கள் சொன்னதை ஏற்றுக்கொண்டார்கள் என்பது போல் பரப்பாமல் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மட்டுமே கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.// பி.ஜே

நீங்கள் ஜாக் அமீராக இருந்த எஸ்.கமாலுத்தீன் மதனியை பிறை கொள்கையில் சரியான நிலைபாட்டிற்கு வந்துவிட்டார் என பாராட்டியதுடன், நீங்கள் சொன்னதை ஜாக் இயக்கத்தினர் ஏற்றுக்கொண்டார்கள் என்பதைப்போல் பொய்யான தகவலையும் தருகின்றீர்கள். மேலும் இதனை உங்களுடைய இயக்கத்தை சார்ந்த யாரும் தம்பட்டம் அடிக்கக்கூடாது என்றும் கூறுகின்றீர்கள். இதிலிருந்து நீங்களும் உங்களை பின்பற்றும் உங்களின் இயக்க வாதிகளும், பிற இயக்கங்களில் குழப்பம் விளைவிப்பதற்காக எத்தகைய பொய்யையும் கூறி தம்பட்டம் அடிப்பீர்கள் என்பதை நீங்களே ஒப்புக்கொள்கின்றீர்கள்.

பிற அமைப்புகள் நல்ல முடிவுகளையோ, மார்க்க சம்மந்தமான அறிவுப்பூர்வமான அறிக்கைகளையோ வெளியிட்டால், அது ஏற்கனவே நாங்கள் சொன்னதுதான் என்று கூறி, இப்பொழுது தான் இவர்கள் இந்த விஷயத்தை சொல்கிறார்கள் என்பது போல் தம்பட்டம் அடிப்பது உங்களுக்கு வழக்கம்.  இந்த விஷயத்தில் மட்டும் உங்கள் இயக்கத்தினருக்கு வீண் தம்பட்டம் அடிக்காதீர்கள் என்று கட்டளையிட்டதே நீங்கள் இந்த விஷயத்தில் கூறியது உண்மையில்லை என்று உங்களின் உள்மனதில் நெருடல் ஏற்பட்டதாலும், வெளியுலகில் உங்கள் பொய் அம்பலமாகிவிடும் என்று நீங்கள் பயந்ததினாலும் தானே.

மேலும் நீங்கள் சொன்னதை எஸ்.கமாலுத்தீன் மதனி ஏற்றுக்கொண்டார் என்பது போன்ற ஒரு மாயையையும் இதன் மூலம் ஏற்படுத்த முயற்சித்தீர்கள். உண்மையில் கமாலுத்தீன் மதனியின் பிறை நிலைபாட்டிற்கும், உங்கள் பிறை நிலைபாட்டிற்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது என்பது உங்களுக்கு தெரிந்தது தான். இதன் மூலம் உங்கள் இயக்கத்தினர் அனைவரும் பிறை விஷயத்தில் மனச்சோர்வுடன் இருந்தார்கள் என்பதை மறைக்க இப்படி ஒரு பொய்யை சொன்னீர்கள் என்பது ஊர் அறிந்த உண்மையாகிவிட்டது.

ஒவ்வொரு ஆண்டின் ரமளான் மற்றும் பெருநாட்களின் போதும், தத்தமது பகுதி பிறைக் கொள்கையை செயல்படுத்த முடியாமல் தோல்வியும் விரக்தியும் அடைந்தது, நீங்களும் உங்களை பின்பற்றும் இயக்கமும் தானே தவிர, ஜாக் இயக்கத்தினர் பிறை விஷயத்தில் ஒரு போதும் விரக்தியடையவில்லை என்பது உலகம் அறிந்த உண்மை.

மேலும் உங்கள் தோல்வியை மக்கள் மத்தியில் மறைப்பதற்காக, கமாலுத்தீன் மதனி உங்கள் பிறை கொள்கையை ஏற்றுக்கொண்டது போலவும் அதற்காக அவரை பாராட்டுவது போலவும் அறிக்கை வெளியிட்டு முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தது போல் உங்களை பின்பற்றும் மக்களை திசை திருப்பினீர்கள்.

//அந்த விவாத அழைப்பு மடமையின் தொகுப்பாக உள்ளதால் அதை நாம் கண்டு கொள்ளவில்லை.//பி.ஜே

ஒரு இஸ்லாமிய சட்டத்தை ஒருவர் ஆய்வு செய்து சொன்னால் அது சரியா தவறா என்று தெளிவுபடுத்துவதே ஒரு மார்க்க அறிஞரின் கடமையே தவிர கருத்து சொன்னவரை மடையர் என்று விமர்சிப்பது பொறுப்புள்ள மார்க்க அறிஞரின் செயலல்ல.

//ஏர்வாடி ஜாக் என்ற பெயரில் விவாத அழைப்பு விடப்பட்டுள்ளதே அதற்கு பதில் என்ன என்று சிலர் கேள்விகளைப் பரப்பி வருகின்றனர்.  திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டு திரிவதால் அது குறித்து நமது பதிலை இங்கே பதிவு செய்கிறோம்.// பி.ஜே

விவாத அழைப்பை விடுத்த நாங்களோ அல்லது பொதுமக்களோ தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தால் மட்டும் தான் பதில் சொல்வீர்களா? திரும்ப திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் தான் பதில் தருவீர்களா? மக்களின் கேள்விகளை சமாளிக்க முடியாமல் திணறியவர்களாக நீங்கள் எங்களுக்கு பதில் எழுதினீர்கள் என்பதை ஒப்புக்கொண்டுள்ளீர்கள். அல்லாஹ்வின் திருப்திக்காக மார்க்கத்தை விவாதிக்கும் பழக்கம் உங்களுக்கு இல்லை என்பதையும் இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளீர்கள்.

//ஒரு இயக்கத்துடன் விவாதிப்பது என்றால் தலைப்பு பற்றி இரு சாராரும் பேசிய பிறகு தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் இரண்டு தலைப்புகளை அவர்களாகக் குறிப்பிட்ட மடமையை பாருங்கள்.//பி.ஜே

ஒரு இயக்கத்துடன் விவாதிப்பதென்றால் இரு சாராரும் பேசியபிறகுதான் விவாத தலைப்பை முடிவு செய்ய வேண்டும். ஒரு சாரார் தலைப்பை முடிவு செய்து மற்றொரு சாராரை விவாதத்திற்கு அழைத்தால் அது மடைமை என்ற  புதிய ஒரு சட்டத்தை சொல்லித்தருகிறீர்கள். இந்த சட்டத்தை தாங்கள் எந்த குர்ஆன் ஹதீஸிலிருந்து எடுத்தீர்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மேலும் இதுநாள் வரை நீங்கள் ஒரு தரப்பாக தலைப்பை குறிப்பிட்டு யாரையும் விவாதத்திற்கு அழைத்ததில்லையா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

ஒரு சாரார் மற்றொரு சாராரை விவாதத்திற்கு அழைக்கும் போது எந்த விஷயத்தில் விவாதிக்க வேண்டும் என்பதை கூறாமல் எப்படி விவாதத்திற்கு அழைக்க முடியும். ஒரு பிரச்சினையும் இல்லாமல் ஒருவனிடம் சென்று நாம் விவாதித்துக்கொள்ளலாமா என்று கேட்டால் அவனை கிறுக்கன் என்று தான் நாம் கூறுவோம். எனவே தலைப்பு சொல்லி அழைப்பது மடமை ஆகாது என்பது, எப்படி உங்களை போன்ற மிகச்சிறந்த அறிவாளிக்கு புரியாமல் போனது என்பது எங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.

//பிறைகள் விஷயத்தில் குர்ஆனை நிராகரிக்கலாமா என்பது ஒரு தலைப்பு. உலகத்தில் எந்த முஸ்லிமாவது குர்ஆனை நிராகரிக்கலாம் என்று கூறுவானாகுர்ஆனை நிராகரிக்கலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறினால் அது பற்றி விவாதிக்க அழைப்பு விடலாம். //பி.ஜே

மேற்கண்ட தலைப்பை நாங்கள் குறிப்பிட்ட காரணம், பிறைபற்றிய உங்களது நிலைபாடு குர்ஆனுடைய வசனங்களுக்கு முரணாக இருந்ததால் தான். குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டும் என்று சட்டம் சொல்லும் நீங்கள், இந்த விஷயத்தில் குர்ஆனில் உள்ள பிறையைப் பற்றிய வசனங்களுக்கு முற்றிலும் முரண்பட்ட ஒரு நிலைபாட்டையே எடுத்துள்ளீர்கள்.

//குர்ஆனில் இல்லாததை குர்ஆனில் உள்ளதாக புளுகும் மடையர்கள் இவர்கள் என்பதுதான் நமது நிலைபாடு// பி.ஜே

குர்ஆனில் இல்லாததை இது நாள் வரை ஒரு போதும் நாங்கள் சொன்னது கிடையாது என்பதை உலகு அறியும். எந்த முஸ்லீமாவது அப்படி செய்வானா? எந்த காரியம் குர்ஆனில் இல்லாததை நாங்கள் இதுவரை கூறியிருக்கின்றோம் என்பதை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டியது உங்களுக்கும் உங்கள் இயக்கத்தினருக்கும் கடமை. ஆனால் நீங்கள் குர்ஆனில் உள்ளதை மறைத்து, உங்களின் தவறான கொள்கையை நிலைநிறுத்த, திரித்து பேசியதற்கும் எழுதியதற்கும் எங்களால் ஆதாரம் காட்ட முடியும்.

விவாத தலைப்பை நாங்கள் எழுதியதற்கே எங்களை மடத்தனமாக எழுதியுள்ளீர்கள் என்று கூறிய நீங்கள், எங்களிடம் இல்லாத ஒரு காரியத்தை இருப்பதாக கூறி, அதை உங்களின் நிலைபாடாக நீங்கள் அறிவித்தது, உங்கள் முட்டாள்தனம் இல்லையா?

//ஒரு வேளை இவர்களின் நிலை குர்ஆனை நிராகரிக்கலாம் என்பதாக இருந்தால் அது குறித்து விவாதிக்கலாம். நாங்கள் காபிர்களாகி விட்டோம் என்று அவர்கள் அறிவித்து விட்டு குர்ஆனை நிராகரிக்கிறோம் என்று கூறுவார்களானால் இது பற்றி அவர்களுடன் விவாதிக்க முடியும்.// பி.ஜே

எந்த முஸ்லீமாவது குர்ஆனை நிராகாரிக்கலாம் என்று கூறுவானா என்று நீங்களே கேட்டுவிட்டு, பிறகு அடுத்த வரியிலேயே நீங்கள், எங்களை காஃபிர்கள் என்று நாங்களே கூற வேண்டும் என்றும், குர்ஆனை நிராகாரிக்கின்றவர்கள் என்றும், அறிவித்தால் அதுபற்றி விவாதிக்கலாம் என்று உளறியுள்ளீர்கள் இது மடத்தனம் இல்லையா?

எந்த முஸ்லீமாவது காஃபிர் என்று தன்னை கூறுவானா? அப்படி ஒரு முஸ்லீம் தன்னை காஃபிர் என்று அறிவித்த பின் இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றுவது எவ்வாறு என்பது குறித்த தலைப்புகளில் ஏன் பிறருடன் விவாதம் செய்ய வேண்டும்எனவே தங்களின் பதில் அடிப்படை அறிவு கூட இல்லாத ஒருவரின் உளறல் போல் உள்ளது.

சங்கரன்பந்தலில் பணியாற்றிய போது நிர்வாகத்தின் மீது ஏற்பட்ட கோபத்தால், நீங்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி இறை நிராகாரிப்புக்கு சென்றதை போன்று எங்களை நீங்கள் கருதவேண்டாம். அதன்பிறகு இஸ்லாத்திற்கு திரும்பவந்தவுடன் உங்களை எதிர்ப்பவர்கள் அனைவரையும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய காபிர்கள் என்று நினைத்துகொண்டு பேசி வருகிறீர்கள்.

ஒரு முஸ்லிமைப் பார்த்து இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்த குர்ஆன், ஹதீஸில் எங்கிருந்து ஆதாரம் எடுத்தீர்கள் என்று தெரியவில்லை. இந்த வார்த்தையின் மூலம் உங்களது அகம்பாவம் வெளிப்படுகிறது. உங்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம்.

//மேலும் பிறை மட்டுமின்றி அதை விட பாரதூரமான கொள்கை வேறுபாடுகள் அவர்களுடன் நமக்கு உள்ளது. இஸ்லாத்தை விட்டு வெளியேற்றக் கூடிய கொள்கையை அவர்கள் கொண்டுள்ளதால் பிறை மட்டுமின்றி அதைவிட முக்கியமான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்ய வேண்டும். சமீபத்தில் ஹிஜ்ரத் குறித்து எழுதியுள்ள வடிகட்டிய முட்டாள் தனம் உட்பட அனைத்தையும் விவாதிக்க வேண்டும். // பி.ஜே

இஸ்லாத்தை விட்டு வெளியேற்றக் கூடிய பாரதூரமான கொள்கை ஜாக்கிடம் இருக்கிறது என்று தம்பட்டம் அடித்த நீங்கள், அதையெல்லாம் மறந்துவிட்டு அந்த பாரதூரமான கொள்கையில் இருந்து ஜாக் விலகுவதற்கு முன்பே எதற்கு பிறை கொள்கையில் ஜாக்கை ஊக்குவிக்கும் படி, தவ்ஹீத் இயக்கத்தினருக்கு நீங்கள் ஏன் கீழ்கண்ட படி அறிவுரை வழங்கினீர்கள்.

//எனவே இதுகுறித்து தவ்ஹீத் ஜமாஅத்தினர் யாரும் தம்பட்டம் அடிக்காமல் நாங்கள் சொன்னதை ஏற்றுக்கொண்டார்கள் என்பது போல் பரப்பாமல் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மட்டுமே கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.// பி.ஜே

பாரதூரமான இஸ்லாத்திற்கு எதிரான கொள்கையை ஜாக் கொண்டிருப்பதால், அவர்களிடம் பிறை குறித்து பேசுவதோடு அதைவிட பாரதூரமான விஷயங்களையும் சேர்த்து பேச வேண்டும் என்று கூறிய நீங்கள், தவ்ஹீதை அழித்து ஒழிக்க பாடுபடும் சுன்னத் வல் ஜமாஅத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட டவுன் காஜியுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து அதை நீங்களே மீறிவிட்டு, உங்கள் இயக்கத்தினரையே கடந்த பெருநாளில் முட்டாள் ஆக்கியது ஏன்அவருடன் ஒப்பந்தம் செய்யும் முன் ஏன் பாரதூரமான இஸ்லாத்திற்கு எதிரான மற்ற கொள்கைகளை பற்றி பேசாமல், பிறையில் மட்டும் ரகசிய உடன்பாடு செய்தீர்கள்? அந்த ரகசிய உடன்பாட்டை அவர்கள் மீறிய பின்தான், நீங்கள் ஓலமிட்டீர்கள். அதன் பிறகுதான்  ஏற்கனவே டவுன் காஜியுடன் ரகசிய ஒப்பந்தம் செய்தது அம்பலமானது.

//அட கூறு கெட்டவர்களா நாங்கள் ஏன் உங்கள் தலைவர் கமாலுத்தீன் மதனியை சேர்த்து அழைத்து வர வேண்டும்? எங்களுடன் விவாதம் செய்வது என்றால் எங்களை அழைக்கலாம். எங்கள் எதிரியான உங்கள் தலைவரையும் நாங்கள் அழைத்து வரவேண்டும் என்று எழுதும் அளவுக்கு உங்கள் புத்தி பேதலித்து விட்டதா?. //பி.ஜே

நீங்கள் உங்களின் எதிரி என்று அறிவித்து விட்ட எஸ்.கமாலுத்தீன் மதனி அவர்களை அழைத்துக்கொண்டு விவாதத்திற்கு வரவேண்டும் என்று நாங்கள் எழுதியது தவறா? நீங்கள் ஒருவரை பாராட்டி எழுதியதோடு, அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் படியும், உங்கள் இயக்கவாதிகளுக்கு உபதேசம் செய்தீர்கள். இந்நிலையில் இருவரையும் ஒரு சேர விவாதத்திற்கு வரத்தயாரா என்று கேட்டது எந்த அடிப்படையில் கூறுகெட்டதனம் என்று நீங்கள் விளக்க கடமைப்பட்டுள்ளீர்கள்.

குர்ஆன் சுன்னாவிற்கு முரண்பட்ட, குழப்பமான உங்கள் பிறை கொள்கையில் இருந்து  தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிய நிலையில் உங்களுக்கு கிடைத்த துருப்புசீட்டு தான் பிறையில் கணக்கை மறுத்த எஸ்.கமாலுத்தீன் மதனியின் அறிக்கை. அதை பாராட்டுகிறோம் என்ற போர்வையில் உங்களுடைய நிலைபாடு என்னவென்று கூட சிந்திக்காமல் உளறிவிட்டு பிறகு அதை கண்டித்து கேட்டவர்களை கூறுகெட்டவர்கள் என்று சொல்வது திருடிவிட்டு ஓடும் போது, தன்னை பிடிக்க வந்தவர்களை பார்த்து திருடன் திருடன் என்று கூப்பாடு போடுவது போல் உள்ளது.

தன்னை கப்று வணங்கி என்று பகிரங்கமாக அறிவித்த ஒருவரை, அரசியல்வாதிகளிடம் இலாபம் பெறுவதற்காக  உங்களுடைய மேடையிலேயே ஏற்றி, அவரை நண்பராக்கி கொண்ட நீங்கள், ஏகத்துவவாதியான கமாலுத்தீன் மதனியை எதிரி என்று குறிப்பிடுவதிலிருந்து உங்கள் கொள்கையை நீங்கள் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்கள். 

மேலும் ஆரம்பத்தில் ஒவ்வொருவரும் தத்தமது பகுதியில் பிறையை பார்த்துத்தான் தீர்மானிக்கவேண்டும், என்ற நிலையில் இருந்து பல்டிஅடித்து தத்தமது பகுதியில் யாரோ இருவர் பார்த்தால் போதும் என்ற நிலைக்கு மாறி அதிலிருந்தும்  அந்தர்பல்டி அடித்து இன்று தமிழகம் முழுவதற்கும் மட்டும் பிறையை எடுத்துக்கொண்டால் போதுமானது என்று கூறுகின்றீர்கள். ஆனால் பழைய நிலைபாட்டிற்கும், தற்போதைய நிலைபாட்டிற்கும் இதுவரை குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தை தரவில்லை. இந்நிலையில் நீங்கள் பிறையில் தெளிவான சான்றுகளை கூறுபவர்களை விமர்சிப்பதற்கு உங்களுக்கு என்ன தகுதி உள்ளது.

நீங்களே எஸ்.கமாலுத்தீன் மதனீயை ஆதரிக்கவும், ஊக்குவிக்கவும், ஒத்துழைக்கவும் கூறிவிட்டு நாங்கள் அவரை பிறை கொள்கையை பேச உங்களுடன் அழைத்து வாருங்கள் என்று எழுதியவுடன் அதிர்ச்சியாகி மூளை குழம்பி, அவரை எதிரி என்று கூறி மக்களை முட்டாள் ஆக்கும் வேலையை செய்துவிட்டீர்கள். எங்களுக்கு பதில் எழுதுகிறோம் என்ற பெயரில் நீங்கள் முன்னால் எழுதியதற்கு நேர் முரணாக நீங்களே உங்கள் எழுத்திற்கு  வேட்டு வைத்து தகர்த்து விட்டீர்கள். அந்தோ பாரிதாபம். இரு தலைவர்களை ஒரு சேர எதிரணியில் சந்திக்க தயார் என்று கூறியவர்களை கேவலமாக சித்தரித்து எழுதியது உங்களின் முட்டாள் தனத்திற்கு மிகப்பெரும் உதாரணமாக உள்ளது.

நீங்கள் எழுதிய பதிலில் உள்ள உளறல்களை வைத்து பார்க்கும் போது, எஸ்.கமாலுத்தீன் மதனியை ஊக்குவிக்க வேண்டும் என்று உங்கள் தொண்டர்களுக்கு நீங்கள் சொன்னது செயல்படுத்துவதற்கு அல்ல என்று வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

//திக வை விவாதத்துக்கு அழைக்கும் போது ராம கோபாலனை அழைத்து வரத் தயாரா என்று அவர்கள் கேட்டால் அது மடமை அல்லவா? ஷேக் அப்துல்லாவை விவாதத்துக்கு அழைக்கும் போது தப்லீகையும் அழைத்து வாருங்கள் என்று கேட்டால் அதுவும் மடமை தான்.// பி.ஜே

இறை நம்பிக்கையாளர்கள் என்று நாங்கள் நம்பிய இரு நபர்களை விவாதத்திற்கு அழைத்தோம். ஆனால் நீங்கள் உங்களுக்கும், எஸ்.கமாலுதீன் மதனிக்கும் எடுத்துக்காட்டாக, இறைநம்பிக்கை அற்ற தி.க வையும், இணைவைப்பு நம்பிக்கை உள்ள ராம கோபாலனையும் உதாரணம் காட்டியுள்ளீர்கள்.  மேற்கண்ட இருதரப்பினரில் உங்களை யாருடன் நீங்கள் ஒப்பிட்டுள்ளீர்கள் என்பதை நீங்கள்தான் மக்கள் மன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.  இதில் நீங்கள் தி.க கொள்கையில் இருக்கிறீர்களா? அல்லது  ராம கோபாலன் கொள்கையில் இருக்கின்றீர்களா?.

இரு முஸ்லிம்களுக்கு இடையில் உள்ள பிரச்சனை குறித்து எழுதும்போது இறை நிராகரிப்பிலும் இணை வைப்பிலும் உள்ளவர்களை ஒப்பிடுவதை பார்க்கும்போது உங்களின் இஸ்லாமிய அறிவை சந்தேகிக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்படுகிறோம்.

மேலும் உங்களின் பதிலை பார்க்கும்போது நிதானமிழந்து எழுதியதைப்போல தோன்றுகிறது. ஆகவே உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி நிதானத்தோடு சிந்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

//இதை எழுதும் போது மூளையைக் கழற்றிக் காயப்போட்டு விட்டுத் தான் எழுதினீர்களா?// பி.ஜே

எங்களுக்கு சிந்திக்கும் மூளை இருக்கிறது என்று ஒப்புக்கொண்ட தங்களுக்கு மிக்க  நன்றி. அதே சமயம் நீங்கள் மூளையுடன் எழுதிய உங்கள் பதிலில், இணைவைப்பாளர்களையும், இறை மறுப்பாளர்களையும் உங்களுக்கே உதாரணமாக கூறி எழுதிய நிலை, உங்களுக்கு மூளை குழம்பி விட்டதோ என்று சிந்திக்க தோன்றுகிறது.

மார்க்க விஷயத்தில் மாற்று கருத்துடையவர்களை எதிரி என்று குறிப்பிடும் அளவுக்கு உங்களுடைய அமைப்புவெறி உங்களுடைய சிந்தனையை மழுங்கடித்து விட்டதாகவே நாங்கள் கருதுகிறோம்.

அரசியல்வாதிகளை நண்பர்களாக்கி அவர்களின் வெற்றிக்காக அரும்பாடுபட்டு கடுமையாக உழைக்கும் நீங்கள் ஒரு முஸ்லிம் சகோதரரை எதிரி என்று குறிப்பிடுவது எந்த வகையில் நியாயம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

எங்களது விவாத அழைப்பைப் பற்றி

பிறை குறித்த எங்கள் நிலைபாட்டைப்பற்றி யாரிடத்திலும் எந்த நேரத்திலும் கலந்துரையாடல் செய்வதற்கும், விவாதிப்பதற்கும் தயாராக இருக்கின்றோம். ஒவ்வொருவரும் தத்தமது பகுதியில் பிறை பார்த்தே மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று பேசி இது சம்மந்தமாக எவரேனும் நம்முடன் விவாதிக்க தயாரா என வேர்கிளம்பி என்ற ஊரில் நடந்த பிறை நிகழ்ச்சியின் போது நீங்கள்தான் சவால் விட்டீர்கள்.

அந்த சவாலை ஏற்று ஏர்வாடி ஜாக்கை சார்ந்த சிராஜ், தங்களுடன் விவாதிக்க தயார் என பகிரங்கமாக அறிவித்தார். அந்த நிகழ்ச்சியிலேயே தாங்கள் அவருடன் விவாதிக்க தயார் என அறிவித்துவிட்டு, நிகழ்ச்சி முடிந்து மக்கள் கலைந்து செல்லும் போது நம்முடன் விவாதிக்க தயார் என்று கூறிய ஏர்வாடி சிராஜ் நமது நிகழ்ச்சி முடிவில் அவர் திருப்தியடைந்ததாக கூறி விவாதம் தேவையில்லை என்று ஏர்வாடி சிராஜ் அறிவித்துவிட்டதாக நீங்கள் ஒரு பகிரங்கமான பொய்யை கூறினீர்கள். 

அதன் பிறகு உங்களின் பிறை குளறுபடியையும், வேர்கிளம்பியில் தாங்கள் கூறிய பொய்யையும் மக்கள் அறிந்தார்கள். அதே காலகட்டத்தில் நீங்கள் ஏர்வாடியில் ஒரு வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, உங்களிடம் வந்த ஏர்வாடி சகோதரர்கள், நீங்கள் கூறிய பகிரங்க பொய் குறித்து கேள்வி எழுப்பியபோது, நீங்கள் விவாதத்திற்கு ஒப்புக்கொண்டீர்கள்.  அதன் காரணமாகத்தான் அக்டோபர் 2, 2000 த்தில் ஏர்வாடியில் நேரடி தொலைகாட்சி ஒளிபரப்புடன் விவாதம் நடைபெற்றது. அதை கீழ்கண்ட இணையதளத்தில் காணலாம். http://lunarcalendar.in/?p=950

இதிலிருந்தே உங்களிடம் விவாதம் செய்வதற்கு எங்களுக்கு எந்தவிதமான தயக்கமோ பயமோ கிடையாது என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். அதே சமயம் பிறை விஷயத்தில் குழப்பமான முடிவுகளாலும், குர்ஆன் சுன்னாவிற்கு முரணாண முட்டாள் தனமான நிலைபாட்டினாலும் விவாதத்திற்கு வருவதற்கு உங்களுக்குத்தான் பயம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

பயம் உங்களுக்கு இருப்பதால்தான் தாங்கள் பிறையில் பதிலையும் நேரடியாக அளிக்காமல், நாஷிது என்ற நேயரை வைத்து இணையதளத்தில் தங்களின் தவறான, முட்டாள் தனமான கொள்கைகளை பரப்பி வருகிறீர்கள். அத்துடன் நிறுத்தி விடாமல் உங்களை முழுமையாக தக்லீது செய்யும் நேயர் நாஷிதுடைய பதிவுகளை சிறிதும் வெட்கமில்லாமல், உங்களுக்கே சொந்தமான இணையத்தளத்தில் வெளியிட்டீர்கள். யாராவது இதை விமர்சித்தால் அது என்னுடைய கருத்து கிடையாது என்று சொல்லி மழுப்பிவிட கூட பிற்காலத்தில் வாய்ப்புள்ளது.

அதனால் நாங்கள் உங்களுக்கு திரும்பவும் சொல்லிக்கொள்வது என்னவென்றால், இது நாள் வரை நடந்த நேரடி விவாதங்கள் எதுவுமே ஒரு விஷயத்திற்கு பூரணமான முடிவு கிடைக்கும் விதத்தில் அமையவில்லை. மேலும் இரு தரப்பினர்கள் மத்தியிலே விவாதத்திற்கு முன் இருந்த உறவுகள் கூட நாசமாகும் விதத்தில் அந்த விவாதங்கள் நடந்து முடிந்தது.

உதாரணமாக ஒரு தரப்பு மற்றொரு தரப்பிற்கு குடிநீர் கூட வழங்கக் கூடாது. தேநீர், உணவு எதுவும் தரக்கூடாது. இதன் மூலம் விஷம் கலந்த உணவுகளை கூட தருவதற்கு வாய்ப்புண்டு என்று கூறி, இரு தரப்பிற்கும் நடுவில் கயிறு கட்டி பிரிக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனையை நீங்கள் கூறித்தான் விவாதங்கள் நடத்தினீர்கள். இது போன்ற நிகழ்வுகள் மூலம் மேலும் பகைமைகள் உருவாக நாங்கள் விரும்பவில்லை.

எனவே பிறை குறித்த அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு கிடைக்கும் வரையில், நாம் தொடர்ந்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்றால், நாங்கள் கூறிய அடிப்படையில் இணையதளத்தில் எழுத்து மூலமான பகிரங்க விவாதம் செய்தால் தான் ஒரு முடிவு கிடைக்கும் என்பது எங்கள் எண்ணம்.

இரு சாராரும் நேரடியாக அமர்ந்து விவாதித்தால் கூட ஒரு நாளோ அல்லது இரு நாட்களோ விவாதம் செய்வோம். பிறை பிரச்சினை என்பது பல்லாண்டு காலமாக மக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தக் கூடிய ஒரு பிரச்சினையாகவே உள்ளது. எனவே நாம் ஒரு முடிவை எட்டும் வரை பிறை பிரச்சினை குறித்து விவாதித்தால் தான், இப்பிரச்சினைக்கு குர்ஆன் கூறும் சிறப்பான தீர்வை மக்கள் சிந்திக்க வாய்ப்பு கிடைக்கும். இன்ஷாஅல்லாஹ்.

மேலும் கடந்த காலங்களில் நேரடி விவாதங்களில் எந்த விதமான முடிவும் எட்டப்படாமல், அறைகுறையாக விவாதம் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் விவாதம் செய்தவர்கள் எந்த தெளிவையும் பெறாமல் அவரவர் கொள்கையிலேயே செயல்பட்டனர். விவாதங்களில் பங்குகெடுத்தவர்களில் பலர் இஸ்லாமிய கொள்கை இதுதான் என்று தெரிந்த பின்பும், தங்கள் இயக்கத்தின் முடிவை முன்னிறுத்தி இஸ்லாமிய சட்டத்தை புறந்தள்ளியதையும் நாம் பார்க்க முடிந்தது.

எனவே கடந்த கால நேரடி விவாதங்களில் உள்ள குறைகளை போக்கும் வகையிலும், தனிநபர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இஸ்லாமிய ஆதாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இணையத்தில் எழுத்துபூர்வமான பகிரங்க விவாதத்திற்கு இதன் மூலம் அழைப்பு விடுத்துள்ளோம். எனவே நாம் ஒரு முடிவை எட்டும் வரை பிறை சம்மந்தமாக இணையத்தில் எழுத்து பூர்வமான பகிரங்க விவாதம் செய்து கொண்டிருக்கலாம்.

இதில் நாங்கள் குறிப்பிட்ட  நாட்களுடன் விவாதத்தை முடிக்காமல் பிறை சம்மந்தமாக தலைப்பிட்டு மற்றும் உப தலைப்பிட்டு, ஒவ்வொரு உப தலைப்புகளிலும் நாம் நீண்ட நெடிய விவாதம் செய்து தெளிவான ஒரு முடிவிற்கு வர முடியும். அத்துடன் இணையத்தில் உலாவரும் அனைத்து மக்களும் அதை தினமும் பார்க்கும் வாய்ப்பு ஏற்படும். மக்களுக்கு நேரடி எழுத்துபூர்வமான இணைய விவாதத்தில் சலிப்பு ஏற்படாது. யாருடைய நேரமும் வீண்விரயம் ஆகாமல் இருக்கும். மேலும் எக்காலத்திலும் அந்த விவாதங்கள் படித்து பயன்பெறும் வகையில் இருக்கும் என்பதால் தங்களோடு எழுத்து பூர்வமான பகிரங்க விவாதத்திற்கு ஏர்வாடி ஜாக் சார்பாக தங்களை அழைக்கிறோம்.

எனவே இது குறித்து தாங்களின் விரைவான பதிலை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றோம். உங்கள் பதிலை அனுப்ப வேண்டிய முகவரி. விவாதக்குழு தலைவர், ஜம்மிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ், 97-A, வடக்கு மெயின் ரோடு, ஏர்வாடி - 627103. Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இப்படிக்கு,

விவாதக்குழு தலைவர்

ஜாக் ஏர்வாடி.

குறிப்பு:- இந்த அழைப்பு கீழ்கண்ட விலாசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

பி.ஜெய்னுல் ஆபிதீன், தலைவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், 30 அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி சென்னை-1

நாம் இதை தபால் முலமாக அனுப்பியதர்க்கு சில நாட்களுக்கு பிறகு பி.ஜேவிற்காக R.ரஹ்மத்துல்லாஹ்  விவாதக்குழு என்ற பெயரில் அனுப்பிய  கடிதத்தை தாங்கள்  கீழே காணளாம்.

 

பி.ஜேவிற்காக R.ரஹ்மத்துல்லாஹ்  விவாதக்குழு அவர்களின் கடிதத்திர்கான ஹிஜ்ரி கம்மிட்டியின் பதில்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்பான சகோதரர் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களுக்கு,

உங்களையும், நீங்கள் பாராட்டிய ஜாக்கின் முன்னால் தலைவர் எஸ்.கமாலுத்தீன் மதனீ அவர்களையும், ஒரு சேர பிறை விஷயத்தில் விவாதத்திற்கு நாங்கள் அழைத்திருந்தோம்.  அதன் பிறகு அந்த அழைப்பை நீங்கள் ஏற்க மறுத்து, காலம் தாழ்த்தியதோடு, பிறகு அதிகமான மக்கள் உங்களை வற்புறுத்தி நிர்பந்தம் செய்ததால், முழு கோபத்துடன் எங்களுக்கான பதிலை உங்களுக்கு சொந்தமான இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தீர்கள். 

அதில் தாங்கள் எழுதியிருந்த பொய்களையும், இருட்டடிப்புகளையும், வரிக்கு வரி சுட்டிக்காட்டி நாங்கள் உங்களுக்கு 9-6-2011 அன்று பதிவுதபால் மூலம் பதில் அனுப்பியிருந்தோம்.   எங்களது பதிலுக்கு R.ரஹ்மத்துல்லாஹ், விவாதக்குழு என்று கையெழுத்திட்டு 17-06-2011 அன்று உங்கள் மூலமாக ஒன்பது வரியில் எழுதிய கடிதம் ஒன்று பதிலாக வந்தது. மேலும் தங்களுடைய பொய்களையும், இருட்டடிப்புகளையும் நாங்கள் சுட்டிக்காட்டிய பின்பும், நீங்கள் அதற்கு பதில் அளிக்காமல் மௌனம் காத்ததிலிருந்துநாங்கள் எழுதியதை நீங்கள் ஒப்புக்கொண்டதாக நாங்கள் புரிந்துகொண்டோம்.

//நேரடி விவாதத்திற்கு சவால் விட்டிருந்தீர்கள்.  அதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இப்போது  அதிலிருந்து அந்தர் பல்டி அடித்துள்ளீர்கள்.// பி.ஜேவிற்காக ரஹ்மத்துல்லாஹ் விவாதக்குழு

நீங்கள் பாராட்டிய எஸ்.கமாலுத்தீன் மதனீ அவர்களையும், பி.ஜேவாகிய உங்களையும் சேர்த்து விவாதத்திற்கு வாருங்கள் என்றுதான் நாங்கள் சவால் விட்டிருந்தோம். ஆரம்பத்தில் நீங்கள் ஜாக் முன்னால் தலைவர் எஸ்.கமாலுத்தீன் மதனியை பாராட்டி எழுதியதோடுஅவருக்கு உதவி செய்யுங்கள் என்று உங்கள் இயக்கத்தினருக்கு அறைகூவல் விடுத்தீர்கள். பின்னர் நாங்கள் விவாதத்திற்கு எஸ்.கமாலுத்தீன் மதனியை அழைத்து வாருங்கள் என்று சவால் விட்டவுடன், நீங்களே நீங்கள் எழுதியதற்கு முற்றிலும் முரண்பட்டு  அந்தர் பல்டி அடித்தீர்கள். எஸ்.கமாலுத்தீன் மதனியை திட்டி எழுதிவிட்டு நீங்கள் மட்டும் விவாதத்திற்கு வருவதாக ஒப்புக்கொண்டு இணையத்தளத்தில் பதில் எழுதியிருந்தீர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

//நேரடி விவாதத்திற்கு தயார் என்றால் தெளிவாக அதை எழுதி அனுப்பவும். உடனே விவாதம் என்றைக்கு என்பதற்குரிய தேதியை முடிவு செய்ய நாம் தயாராக இருக்கிறோம். // பி.ஜேவிற்காக ரஹ்மத்துல்லாஹ் விவாதக்குழு

மேற்கண்ட பதிலின் மூலம், நீங்கள் எழுத்து மூலமான இணைய விவாதத்திற்கு வர முடியாது என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என நினைக்க தோன்றுகிறது.  பி.ஜே என்பவர் எந்த முறையிலும் விவாதம் செய்வார் என்று உங்கள் அமைப்பினர் தம்பட்டம் அடிப்பதை தாங்களும் அறிந்த ஒன்று தான். தற்போது அதற்கு மாற்றமாக நேரடிவிவாதத்திற்கு மட்டும் தான் வருவேன், எழுத்து மூலமாக விவாதத்தை கண்டு கொள்ள மாட்டோம்  என்பது போல் பதில் எழுதுவது, கழுத்தை கொடுத்தாலும், எழுத்தை கொடுக்கக்கூடாது என்ற பயத்தினாலா?

யாரிடமும் எவ்விதத்திலும் விவாதம்  செய்யும் துணிச்சல் தற்போது தாங்களுக்கு இல்லாமல் போனது எதனால்? தாங்களின் ஆரம்ப காலகட்ட பிரச்சாரத்தில் இருந்த சத்திய தன்மை தற்போது எங்கே சென்றது? தற்போது பொருளாதார பலம் மேலோங்கி விட்டதால், ஏற்கனவே தாங்களிடம் இருந்த சத்திய தன்மை எடுபட்டுவிட்டதா?

//இணையதளத்தில் தான் விவாதம் என்ற இழுத்தடிப்பு வேலைக்கு நீங்கள் சவால் விடவில்லை.  நீங்கள் அதில் உடன்பாடு உள்ளவரும் அல்ல! // பி.ஜேவிற்காக ரஹ்மத்துல்லாஹ் விவாதக்குழு

உங்களையும், எஸ்.கேயையும் சேர்த்து ஒரு சேர விவாதத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்த நாங்களே, எழுத்து மூலமான விவாதம் செய்து கொள்ளலாம் என்று உங்களுக்கு, நாங்கள் எழுதிய பதிலில் காரண காரியத்துடன் தெளிவாக குறிப்பிட்டிருந்தும், எங்களுக்கு எழுத்து மூலமான விவாதத்தில் உடன்பாடு கிடையாது என்று நீங்களாகவே சுயமுடிவு எடுத்து மழுப்பல் பதில் அளித்துள்ளீர்கள்.

இணைய விவாதம் என்பது இழுத்தடிப்பு வேலை என்பது யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. உலகிலேயே இது போன்ற கருத்தை முதன் முதலாக நீங்கள்தான் கூறியுள்ளீர்கள்.  இணைய விவாதம் எவ்வகையில் எல்லாம் பயனுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.  நீங்கள் பிறை விஷயத்தில், எழுத்தை கொடுத்து மக்கள் மன்றத்தில் மாட்டிக்கொள்வோமோ என்று பயப்படுவதினால், எழுத்து முறையிலான இணைய விவாதத்தை இழுத்தடிப்பு வேலை என்று கூறுகின்றீர்கள்.

உங்கள் இயக்கத்தினர் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் இணையத்தில் பல குழுமங்கள் இயக்கப்பட்டு அதன் வாயிலாக பல தலைப்புகளில் எழுத்து விவாதங்கள் நடைபெற்று வருவது  இழுத்தடிப்பு வேலைக்காகத்தான் என்பதை இதன் மூலம் நீங்கள் சொல்ல வருகின்றீர்களா?   உங்களிடம் கேள்வி கேட்டு, நீங்கள் இணையத்தில் இதுவரை பதில் அளித்தது எல்லாமே இழுத்தடிப்பு வேலைக்காகத்தான் நடந்ததா? இல்லையென்றால் இனிமேலாவது இணையத்தின் மூலமாக எந்த விதமான மார்க்கப் பிரச்சாரத்தையும் செய்ய மாட்டேன் எல்லாமே நேரடியாகத்தான் செய்வேன் என்று நீங்கள் பகிரங்கமாக அறிவிப்பீர்களா? என்பதையும் நீங்கள்தான் தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளீர்கள்.

எனவே இணையத்தில் விவாதம் செய்வது அதிகமான பலன் தரும் என்று நாங்கள் நம்புவதாலும், நேரடி விவாதத்தில் நாங்கள் சுட்டிக்காட்டிய குறைபாடுகள் உள்ளதாலும், எம்முறையிலும் விவாதம் செய்யும் திறமைபெற்ற நீங்கள் எங்களுடைய சவாலை ஏற்று, எழுத்து மூலமான விவாதத்திற்கு வரும்படி மீண்டும் உங்களை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.  தாங்கள் எழுத்து மூலமாக இணையத்தில் எங்களுடன் விவாதிக்க மறுக்க மாட்டீர்கள் என்ற முழு நம்பிக்கையுடன் இதை எழுதிக்கொள்கின்றோம்.

மேலும் எழுத்து மூலமான இணைய விவாதம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற ஒப்பந்தத்தை, ஏர்வாடி ஜாக் மர்கஸில் வைத்து நடத்திக்கொள்வோம் என்பதை இதன் மூலம் அறிவித்துக்கொள்கின்றோம். எனவே தாங்களுக்கு தோதுவான ஒரு தேதியை ஒப்பந்தம் செய்வதற்காக அறிவிக்கும்படி  அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

எனவே இது குறித்து தாங்களின் விரைவான பதிலை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றோம். உங்கள் பதிலை அனுப்ப வேண்டிய முகவரி. விவாதக்குழு தலைவர், ஜம்மிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ், 97-A, வடக்கு மெயின் ரோடு, ஏர்வாடி - 627103. Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இப்படிக்கு,

விவாதக்குழு தலைவர்,

ஜாக் ஏர்வாடி.

நாம் இதை தபால் முலமாக அனுபியதர்க்கு சில நாட்களுக்கு பிறகு பி.ஜேவிற்காக சையது இப்றாஹீம் விவாதக்குழு என்ற கடிதத்தை தாங்கள் காணளாம்.

 

 

பி.ஜேவிற்காக சையது இப்றாஹீம் விவாதக்குழு அவர்களின் கடிதத்திர்கான பதில்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ

சகோதரர் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களுக்கு,

புகழுக்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம், ஷைத்தானின் தீண்டுதலில் இருந்து முழுமையாக பாதுகாப்பு கோரியவர்களாக இந்த கடிதத்தை தாங்களுக்கு எழுதுகின்றோம்.

தாங்கள் சகோதரர் சையது இப்றாஹீம் மூலமாக 06.07.2011 தேதியிட்டு எழுதிய கடிதம் 07.07.2011 அன்று கிடைத்தது அதில் உள்ள விபரங்கள் வருமாறு:-

//தாங்கள் நேரடி விவாதத்திற்கு அழைப்பு விட்டு, பின்னர் விவாதத்திலிருந்து நழுவி தப்பி ஓடுவதற்காக பல்வேறு இழுத்தடிப்பு வேலைகளை செய்து வருகின்றீர்கள்., என்ற போதிலும் நாங்கள் உங்களை விடுவதாக இல்லை.// பி.ஜே விற்காக சையது இப்றாஹீம்

எழுத்து மூலமாக இணையத்தில் விவாதிக்கலாம் என்று நாங்கள் கூறியதை, நீங்கள் இழுத்தடிப்பு வேலை என்று குறிப்பிட்டு விட்டு, இருந்தாலும் எங்கள் கோரிக்கையை ஏற்று எழுத்து மூலமான இணைய விவாதத்திற்கு ஒப்பந்தம் செய்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளதை பாமர மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள முடியாத வகையில் சூசகமாக எழுதியுள்ளீர்கள்.

எனவே நீங்கள், எழுத்து மூலமான இணைய விவாதத்திற்கு ஒப்பந்தம் செய்தவற்கு தயாராக உள்ளோம். எனவேதான்  உங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்பதை தெளிவாக எங்களுக்கு எழுதியனுப்பும்படி இதன் மூலம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.

//இன்ஷாஅல்லாஹ் வரும் 16/07/2011 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகத்தில் உங்களின் வருகைக்காக விவாத ஒப்பந்தக் குழு தயார் நிலையில் காத்திருக்கும் என்பதை இதன் மூலம் தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.// பி.ஜே விற்காக சையது இப்றாஹீம்

ஏற்கனவே எழுத்து மூலமான இணைய விவாதத்திற்கு நாங்கள் அழைப்பு விடுத்ததோடு, 17.06.2011 தாங்கள் அனுப்பிய கடிதத்திற்கு நாங்கள் பதில் எழுதும் போதுகீழ்கண்ட வாசகங்களை தெளிவாக உங்களுக்கு எழுதி இருந்தோம்.

//எழுத்து மூலமான இணைய விவாதம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற ஒப்பந்தத்தை, ஏர்வாடி ஜாக் மர்கஸில் வைத்து நடத்திக்கொள்வோம் என்பதை இதன் மூலம் அறிவித்துக்கொள்கின்றோம். எனவே தாங்களுக்கு தோதுவான ஒரு தேதியை அறிவிக்கும்படி  அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.// விவாதக்குழு, ஜாக் ஏர்வாடி

மேலும் உங்களை எழுத்து மூலமான இணைய விவாத்திற்கு அழைத்த நாங்களே, உங்களுக்கு தோதுவான ஒரு தேதியை அறிவிக்க சொல்லி கேட்டிருந்தோம். அத்துடன் விவாத்திற்கான ஒப்பந்தத்தை எங்கே வைத்துக்கொள்ளலாம் என்பதையும் நீங்கள் குறிப்பிடுவதற்கு முன்பாகவே நாங்கள் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றோம்.

அதனடிப்படையில், இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 30.07.2011 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை எழுத்து மூலமான இணைய விவாதம் எவ்வகையில் செய்துக்கொள்ளலாம் என்பது பற்றியும், அதற்கான விதிமுறைகள் பற்றியும் கலந்தாலோசித்து முடிவெடுக்க, தாங்களுக்காக  ஏர்வாடி ஜாக் மர்கஸில் விவாத ஒப்பந்தக் குழு காத்திருக்கும்  என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் எழுத்து மூலமான இணைய விவாதத்திற்கான அழைப்பை பி.ஜெய்னுல் ஆப்தீன் ஆகிய உங்களுக்கே நாங்கள் அனுப்பி வருகின்றோம்.  ஆனால் தாங்களோ ரஹ்மத்துல்லாஹ், சையது இப்றாஹீம் போன்றோரை வைத்து பதில் அனுப்பி வருகின்றீர்கள்.  எனவே இக்கடிதம் கண்டதும் தாங்களே இதற்கு பதில் எழுதி அனுப்பவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும், எழுத்து மூலமான இணைய விவாத ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக பி.ஜெய்னுல் ஆப்தீன் ஆகிய தாங்கள் நேரடியாக ஏர்வாடி ஜாக் மர்கஸிற்கு வருகை தரவேண்டும் என்பதை இத்தருணத்தில் மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்கின்றோம். 

நீங்கள் சூசகமாக ஒப்புக்கொண்ட, எழுத்து மூலமான இணைய விவாதத்தில் உங்கள் சாயம் வெளுத்து தோற்றுவிடுவோம் என்ற  பயமுமோ, அச்சமோ உங்கள் மனதில் உண்மையில் இல்லையென்றால், நாங்கள் குறிப்பிட்ட படி 30.07.2011 சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு எழுத்து மூலமான இணைய விவாதம் செய்வதற்கான ஒப்பந்தம் செய்ய ஏர்வாடி ஜாக் மர்கஸிற்கு வருகிறோம் என்பதை தவிர வேறு சால்சாப்பு பதிலை தாங்கள் சொல்வீர்களேயானால்உங்கள் ஏமாற்று மற்றும் பித்தலாட்ட வேலைகள் உலகுக்கு அம்பலப்பட்டு போய்விடும்.

இப்படிக்கு,

விவாத குழு தலைவர்

ஜாக் ஏர்வாடி.

பதில் அனுப்ப வேண்டி முகவரி

விவாதக்குழு தலைவர், ஜம்மிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்,97-A, வடக்கு மெயின் ரோடு, ஏர்வாடி - 627103.  Email:இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Read 2356 times