செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 10:43

சூரியன் சந்திரன் பூமியின் சுழற்சியினால் ஏற்படும் விளைவுகள்

Rate this item
(0 votes)
சூரியன் சந்திரன் பூமியின் சுழற்சியினால் ஏற்படும் விளைவுகள்
சூரியன் சந்திரன் பூமி பற்றிய அறிவியல்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….

அன்பான முஸ்லிம்களே!

நீங்கள் அல்லாஹ்விற்கு முற்றிலும் கட்டுப்பட்டவர்களாகவே அன்றி மரணிக்காதீர்கள் என அல்லாஹ் திருக்குர்ஆனின் அத்தியாயத்தின் வசனத்தில் குறிப்பிடுகின்றான். நாம் அல்லாஹ்விற்கு முற்றிலும் கட்டுப்பட வேண்டும் என்றால் அவனுடைய படைப்பாற்றலை பற்றி நாம் சிறிதளவாவது ஆய்வு செய்தே ஆக வேண்டும்.

எனவே அவனுடைய படைப்பாற்றலை நாம் அறிந்து அவனை அதிகமதிகம் புகழ்வதற்காக சூரியனை மையமாக கொண்டு பூமியும், பூமியை மையப்படுத்தி சந்திரனும் எப்படி சுற்றிவருகின்றது என்பதை இந்த குறும்படம் மூலம் அறிந்து கொண்டால் நமக்கு அல்லாஹ்வின் வல்லமையை அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

தமிழக அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் நடத்தப்படும் பாடதிட்டதின் கீழ் சூரியன் சந்திரன் பூமியின் சுழற்சி பாதைகளின் விளக்கங்களும், அதனால் ஏற்படும் விளைவுகளும் இந்த வீடியோவில் நீங்கள் பார்க்க முடியும்.

குறிப்பாக  பருவ கால மாற்றங்கள் எதனால் ஏற்படுகிறது.  எப்படி ஏற்படுகிறது என்பது பற்றியும், சூரிய சந்திர கிரகணங்கள் எப்படி ஏற்படுகிறது என்பது பற்றியும்கிரகணங்கள் எப்பொழுது ஏற்படும் என்பது பற்றியும், இப்பாடத்திட்டத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

இதை பார்த்தவர்கள் இதை பற்றிய விமர்சனங்களை கீழே பதியவும்.

இப்படிக்கு

தள தொகுப்பாளர்

Read 2047 times