நபியின் (ஸல்) வழியே நம்வழி!

Super User
Super User
Offline
0

பிறையும் புறக்கண்ணும் பகுதி : 36

 

நபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும் நிறைந்த மார்க்கத்தில் விட்டுச் சென்றுள்ளார்கள். அதில் இரவுகூட பகலைப் போல காட்சியளிக்கும். சந்திரனின் படித்தரங்களே ஒவ்வொரு கிழமைக்குரிய தேதிகளாகும் (2:189) என்பதுதான் அல்குர்ஆனின் கூற்றும், நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலுமாகும். சந்திரனின் ஒவ்வொரு நாளுக்குரிய மன்ஜிலில் அமைந்த ஒவ்வொரு வடிவ நிலையும் ஒரு கிழமையைக் குறிக்கும். நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்படி ஒரு மாதம் என்பது 29 அல்லது 30 நாட்களைக் கொண்டதே என்பதை (புஹாரி 1827, 4999, முஸ்லிம் 1861, 1871 போன்ற) ஹதீஸ்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். இந்த அடிப்படையில்தான் நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் இஸ்லாமிய மாதங்களை அமைத்துக் கொண்டார்கள். அவ்வழிமுறையில் அணுவளவும் பிசகாமல் உறுவாக்கப்பட்டதே இந்த இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டி ஆகும்.

ஒரு மாதத்திற்குள் இருக்கும் நாட்களின் எண்ணிக்கையில் கூட்டிக் குறைத்து நம் சுய விருப்பப்படி செயல்படக் கூடாது. அவ்வாறு சுய விருப்பப்படி மாற்றினால் அது இறை நிராகரிப்பு என்று வல்ல அல்லாஹ் தனது திருமறையில் (9:37) எச்சரித்து உள்ளான். தற்போது புழக்கத்தில் இருக்கும் கிருஸ்துவ மதப்போதகர் போப் கிரிகோரியன் தயாரித்து வெளியிட்ட ஆங்கில நாட்காட்டியில், ஒரு மாதத்தின் எண்ணிக்கையை 28 முதல் 31 வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள வேண்டுகிறோம். நமது இஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டருக்கு முரண்பட்டு உருவாக்கப்பட்டுள்ள அனைத்து காலண்டர்களும் பிழையானதும், வழி பிறழ்ந்ததுமாகும்.

பிறைகளின் அனைத்து வடிவநிலைகளையும் கவனித்தும், கணக்கிட்டும் வரவேண்டும் என்பதே அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களின் வழிமுறை ஆகும். மேலும் ஒரு மாதம் எத்தனை நாட்களில் முடியும் என்பதை அந்த மாதம் முடியும் முன்னரே நபி (ஸல்) அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதற்கு கீழ்க்காணும் நபிமொழிகள் சாட்சி பகர்கின்றன.

حدثنا أحمد بن حنبل ، حدثني عبد الرحمن بن مهدي ، حدثني معاوية بن صالح ، عن عبد الله بن أبي قيس ، قال : سمعت عائشة رضي الله عنها تقول :" كان رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره ، ثم يصوم لرؤية رمضان ، فإن غم عليه عد ثلاثين يوما ثم صام " * سنن أبي داود - كتاب الصوم باب إذا أغمي الشهر - حديث : ‏                                                                                                                                                            1993 ‏                                     

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷஃஅபானை மனப்பாடம் செய்து கொண்டே வருவார்கள். அது அல்லாத மாதங்களை மனப்பாடம் செய்வதை விட. பிறகு ரமழானுடைய காட்சியின் அடிப்படையில் நோன்பு வைப்பார்கள். அது அவர் மீது மறைக்கப்படும் போது அவர் அதை முப்பதாவது நாள் என்று எண்ணிக் (Count) கொள்வார்கள் பிறகு நோன்பு வைப்பார்கள்.

அறிவித்தவர் : ஆயிஷா (ரழி), நூல் : அபூதாவூத் (1993)حدثنا يوسف بن موسى ، حدثنا جرير ، عن الأعمش ، عن أبي صالح ، عن أبي هريرة قال : ذكرنا ليلة القدر عند رسول الله صلى الله عليه وسلم ، فقال رسول الله صلى الله عليه وسلم : " كم مضى من الشهر ؟ " قلنا : مضى اثنان وعشرون ، وبقي ثمان قال : " لا ، بل بقي سبع " قالوا : لا ، بل بقي ثمان قال : " لا ، بل بقي سبع " قالوا : لا ، بل بقي ثمان قال : " لا ، بل بقي سبع ، الشهر تسع وعشرون " . ثم قال بيده ، حتى عد تسعة وعشرين " ، ثم قال : " التمسوها الليلة " . صحيح ابن خزيمة - كتاب الصيام جماع أبواب صوم التطوع - باب ذكر الخبر المفسر للدليل الذي ذكرت حديث :                                                                                                        ‏

நாம் கத்ரு நாளை பற்றி நபியிடம் நினைவு படுத்தினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் மாதத்தின் எத்தனை நாட்கள் முடிந்தன? என்று வினவினார்கள். அதற்கு 22 நாட்கள் முடிந்துவிட்டன மேலும் 8 நாட்கள் மீதம் உள்ளன என்று நாம் கூறினோம். இல்லை மாறாக 7 நாட்களே மீதம் உள்ளன என நபி (ஸல்) கூறினார்கள். இல்லை மாறாக 8 நாட்கள் மீதம் உள்ளன என அவர்கள் கூறினர். இல்லை மாறாக 7 நாட்கள் மீதம் உள்ளன என நபி (ஸல்) கூறினார்கள். இல்லை மாறாக 8 நாட்கள் மீதம் உள்ளன என அவர்கள் கூறினர். இல்லை மாறாக 7 நாட்கள் மீதம் உள்ளன இந்த மாதம் 29 நாட்கள் உரியது என நபி (ஸல்) கூறினார்கள். பிறகு நபி அவர்கள் தன் கையில் 29 நாட்கள் வரை எண்ணிணார்கள். பிறகு இன்றைய நாளில் அந்த கத்ரு நாளை தேடுங்கள் எனக் கூறினார்கள்.

இப்னு குஜைமாஹ் - ஹதீஸ் எண் - 2024.


أخبرنا عبد الله بن محمد الأزدي ، حدثنا إسحاق بن إبراهيم ، أخبرنا جرير بن عبد الحميد ، عن الأعمش ، عن أبي صالح ، عن أبي هريرة قال : ذكرنا ليلة القدر عند رسول الله صلى الله عليه وسلم ، فقال رسول الله صلى الله عليه وسلم : " كم مضى من الشهر ؟ " فقلنا : مضى اثنان وعشرون يوما ، وبقي ثمان ، فقال صلى الله عليه وسلم : " لا ، بل مضى اثنان وعشرون يوما ، وبقي سبع ، الشهر تسع وعشرون يوما ، فالتمسوها الليلة " * صحيح ابن حبان - باب الإمامة والجماعة باب الحدث في الصلاة - ذكر الخبر الدال على صحة ما تأولنا اللفظة التي ذكرناها قبل حديث :


நாம் கத்ரு நாளை பற்றி நபியிடம் நினைவு படுத்தினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் : மாதத்தின் எத்தனை நாட்கள் முடிந்தன? 22 நாட்கள் முடிந்தன மேலும் 8 நாட்கள் மீதம் உள்ளன என நாம் கூறினோம். இல்லை மாறாக 7 நாட்கள் மீதம் உள்ளன. இந்த மாதம் 29 நாட்கள் உரியது பிறகு இன்றைய நாளில் அந்த கத்ரு நாளை தேடுங்கள் என கூறினார்கள்.

அறிவித்தவர் : அபூஹூரைரா (ரழி), நூல் : இப்னு ஹிப்பான் (2588).وأخبرنا أبو بكر أحمد بن الحسن ثنا أبو محمد دعلج بن أحمد السجستاني بمدينة السلام ثنا موسى بن هارون ، قال : قلت لأبي نعيم , أحدثكم أبو إسحاق الفزاري , عن الأعمش ، عن أبي صالح ، عن أبي هريرة ، وأراه قد ذكر ابن عمر قال : كنا عند رسول الله صلى الله عليه وسلم فذكروا ليلة القدر ، فقال رسول الله صلى الله عليه وسلم " كم مضى من الشهر ؟ " قالوا : اثنتان وعشرون وبقي ثمان قال : "مضى اثنتان وعشرون وبقي سبع الشهر تسع وعشرون فالتمسوها الليلة " فقال أبو نعيم : نعم * السنن الكبرى للبيهقي - كتاب الصيام باب الترغيب في طلبها ليلة ثلاث وعشرين - حديث :

நாம் கத்ரு நாளைப் பற்றி நபியிடம் நினைவு படுத்தினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மாதத்தின் எத்துனை நாட்கள் முடிந்தன? 22 நாட்கள் முடிந்தன மேலும் 8 நாட்கள் மீதம் உள்ளன என நாம் கூறினோம். இல்லை மாறாக 7 நாட்கள் மீதம் உள்ளன இந்த மாதம் 29 நாட்கள் உரியது பிறகு இன்றைய நாளில் அந்த கத்ரு நாளை தேடுங்கள் என கூறினார்கள்.

அறிவித்தவர் : அபூஹூரைரா (ரழி), நூல் : பைஹகீ (8018).حدثنا عبد الله بن يوسف ، أخبرنا مالك ، عن يحيى بن سعيد ، عن عمرة بنت عبد الرحمن ، قالت : سمعت عائشة رضي الله عنها تقول : خرجنا مع رسول الله صلى الله عليه وسلم ، لخمس بقين من ذي القعدة ، لا نرى إلا الحج ، فلما دنونا من مكة " أمر رسول الله صلى الله عليه وسلم من لم يكن معه هدي إذا طاف وسعى بين الصفا والمروة أن يحل " ، قالت : فدخل علينا يوم النحر بلحم بقر ، فقلت : ما هذا ؟ قال : نحر رسول الله صلى الله عليه وسلم عن أزواجه صحيح البخاري - كتاب الحج باب ذبح الرجل البقر عن نسائه من غير أمرهن - حديث :

ஹஜ்ஜை மட்டும் எண்ணத்தில் கொண்டு துல்கஅதா மாதத்தின் ஐந்து நாட்கள் மீதமிருக்கும் நிலையில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் மக்காவை நெருங்கியதும், பலிப் பிராணியைக் கொண்டு வராதவர் வலம் வந்து விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். பிறகு துல்ஹஜ் 10-ஆம் நாள் மாட்டின் இறைச்சி எங்களுக்கு வந்தது. இது என்ன? எனக் கேட்டேன். மக்கள், 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவிகளின் சார்பாகப் பலியிட்டார்கள்' என்றனர். அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்.

மேற்படி நபிமொழிகளை சற்று ஆய்ந்து படித்தால் ஒரு பேருண்மை வெளிப்படும். அதாவது நபி (ஸல்) அவர்களோ, அவர்களிடம் பாடம் பயின்ற ஸஹாபாக்களோ ஒரு வருடத்திற்கு ஷஃஅபான், மற்றும் ரமழான் மாதங்களில் மட்டும் பிறைகள் குறித்து பேசவில்லை. இன்னும் மாதத்தின் 29-வது நாள் பிறையைத் தேடிக் கொண்டு மஃரிபு நேரத்தில் மேற்குத் திசை நோக்கி பார்க்கவுமில்லை. மாறாக நபி (ஸல்) அவர்களும், நபித் தோழர்களும் ஒரு மாதம் எத்தனை நாட்களில் முடியும் என்பதை அந்த மாதம் முடியும் முன்னரே தெரிந்து வைத்துள்ளார்கள் என்பதை அறியமுடிகிறது. மேலும் பிறை படித்தரங்களை வைத்து ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற (10:5) அல்லாஹ்வின் கட்டளையை அன்று இருந்த ஒரே வழிமுறையான பிறைகளை புறக்கண்களால் கவனித்தும், ஒரு மாதம் அளவுக்குக் கணக்கிட்டும் வந்துள்ளது உள்ளங்கை நெல்லிக் கனியாக தெரிகிறது.

மேலும் நபி (ஸல்) அவர்கள் தங்களது வாழ்நாளில் ரமழான் மாதத்தில் 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். ஒரு ரமழானின் முதல் பத்து நாட்களிலும், மற்றொரு ரமழான் மாதத்தில் நடுப்பத்து நாட்களிலும், பெரும்பான்மையான ரமழான் மாதங்களில் இறுதி பத்து நாட்களிலும் இஃதிகாப் இருந்தார்கள் என்பதை (புகாரி 1930, 1940, 2036) போன்ற ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், இறுதி பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ள மாதங்களில், அந்த மாதம் 29-நாட்களைக் கொண்டதாக இருந்தால் 20-வது நாளன்று ஃபஜ்ரு வேளையில் நபி (ஸல்) அவர்கள் தங்களது இஃதிகாஃபை துவங்கியுள்ளார்கள். அதுபோல 30-நாட்களைக் கொண்ட ரமழான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் 21-வது நாளன்று ஃபஜ்ரு வேளையில் இஃதிகாஃபில் நுழைந்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்களின் அச்செயல் நமக்கு எதை உணர்த்துகிறது? நபி (ஸல்) அவர்களுக்கும், தோழர்களுக்கு அவர்கள் இஃதிகாஃப் இருந்த அந்தந்த ரமழான் மாதங்கள் எத்தனை நாட்களில் முடியும்? என்பதை முற்கூட்டியே அறிந்து வைத்திருந்ததை இச்சம்பவம் இன்னும் தெளிவாக உணர்த்துகின்றன. அப்படி தெரிந்து வைத்திருந்ததின் காரணமாகத்தான் அவர்களால் இறுதி 10-நாட்கள் என்று துல்லியமாக இஃதிகாஃப் இருக்க முடிந்தது. இந்த இஃதிகாஃப் சம்பந்தமாக இடம்பெறும் ஹதீஸ்களை வைத்தும் நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் தெளிவான கணக்கீட்டு முறையில் இருந்துள்ளதை விளங்கலாம். மேலும் 'ஃபஜ்ரு வேளையில்' நபி (ஸல்) அவர்கள் தங்களது இஃதிகாஃபை துவங்கி, பத்துநாட்களை முழுவதுமாக முடித்து 'ஃபஜ்ரு தொழுகைக்குப் பின்னர்' பெருநாள் தொழுகைக்கு விரைந்துள்ளார்கள். இதன்மூலம் ஒரு நாளின் துவக்கம் ஃபஜ்ருதான், மஃரிபு அல்ல என்பதும் நிரூபனமாகிறது.

ஒரு துல்லியமான மாதக் கணக்கீட்டு முறையை நபி (ஸல்) அவர்கள் பின்பற்றாமல் இருந்திருந்தால் 29-நட்களைக் கொண்ட ரமழான் மாதத்தில் 21-வது நாளன்று இஃதிகாஃபிற்குச் சென்றிருந்தால் அவர்களுக்கு 9 (ஒன்பது) நாட்கள் மட்டும்தான் கிடைத்திருக்கும். அதுபோல 30-நட்களைக் கொண்ட ரமழான் மாதத்தில் 20-வது நாளன்று இஃதிகாஃபிற்குச் சென்றிருந்தால் அவர்களுக்கு 11 (பதினொன்று) நாட்கள் என்று ஒருநாள் கூடுதலாக இருந்திருப்பார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களுக்கு அவ்வாறு நிகழவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இவற்றை வைத்து நபி (ஸல்) அவர்கள் மாதத்தின் 29-வது நாள் பிறையைத் தேடிக் கொண்டு மஃரிபு நேரத்தில் மேற்குத் திசை நோக்கி பார்க்கவில்லை. மாறாக நபி (ஸல்) அவர்களும், நபித் தோழர்களும் ஒரு மாதம் எத்தனை நாட்களில் முடியும் என்பதை அந்த மாதம் முடியும் முன்னரே தெரிந்து வைத்துள்ளார்கள் என்பதை மேலும் அறிய முடிகிறது.

பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் அவை மக்களுக்குக் காலம் காட்டியாகவும் (காலண்டர்), இன்னும் ஹஜ்ஜூக்கும் உள்ளன. அல்குர்ஆன் (2:189)

வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் 12 ஆகும். அதில் (துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய) நான்கு மாதங்கள் புனிதமானவையாகும். (அல்குர்ஆன் 9 : 36)

அவன்தான் சூரியனை (சுடர்விடும்) பிரகாசமானதாகவும், சந்திரனை (பிரதிபளிக்கும்) ஒளியாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அதற்கு மாறிமாறி வரும் பல தங்குமிடங்களை விதியாக்கினான். அல்லாஹ் உண்மை கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை. அறிந்து கொள்ளும் சமூகத்திற்காக அத்தாட்சிகளை விவரிக்கின்றான். (அல்குர்ஆன் 10 : 5)

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply